வால் ஸ்டிரீட் போராட்டம் சரியானது ஆனால் அதன் இலக்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்காமல் பெருமுதலாளிகளான வால் ஸ்டீரீட் மட்டுமே முதலாளித்துவ பிரச்சனைகளுக்கு காரணம் என விசயத்தை மாற்றி யோசிக்கிறது இன்னிலையில் இதை பற்றி சுட்டிகாட்டாமல் எழுதப்பட்ட கட்டுரையான இது அந்த போராட்டத்தை புகழுவதோடு நின்று பின் அதன் திசைவழியில் இருக்கும் தவறை சொல்லவில்லை
1.முதலாளித்துவத்தை காப்பாற்றுவதும் அதை வாழவைப்பது முதலாளித்துவ அரசுதான்
2.அதை போலத்தான் ஏகாதிபத்திய அரசும்
http://www.vinavu.com/2011/11/04/occupy-wall-street/
//கடன் பாக்கிக்காக வீடுகளைப் பறிமுதல் செய்து எங்களை விரட்டுகின்றன வங்கிகள். வீட்டு வாடகை அல்லது மளிகை சாமான் இரண்டில் ஒன்று என நாங்கள் நெருக்கப்படுகிறோம். சோற்றுக்காக தெருவில் கிடக்கிறோம். வேலை இல்லை. இருந்தாலும் நியாயமான கூலி இல்லை. மருத்துவ வசதி இல்லை. ஒரு சதவீதத்தினருக்கு மட்டும் எல்லாம் இருக்கின்றது. எங்களுக்கு எதுவும் இல்லை. நாங்கள் 99% பேர். நாங்கள்தான் அமெரிக்கா!" என்று முழங்குகின்றனர் மக்கள்//
அவர்களின் கோரிக்கைகள் என்ன ?
----------------------------------------------------------------------------------------------------------
வால் தெரு ஆக்கிரமிப்பு இயக்கம் என்ற இணையதளத்தில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் :
1. சம்பள உயர்வு: தடையற்ற வர்த்தகத்தை முடிவுக்குக் கொண்டு வந்து உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும். ஒரு மணிநேரத்துக்கு 20 டாலர் என்ற வீதத்தில் சம்பளத்தை உயர்த்த வேண்டும்.
2. தனியார் நிறுவனங்களுக்குத் தடை: நாடு முழுவதுமான ஒரே ஒரு அரசு காப்பீட்டு நிறுவனம் மட்டுமே நிறுவப்பட வேண்டும். தனியார் நிறுவனங்கள் இதில் அடிக்கும் கொள்ளையை வால் தெருவில் உள்ள பங்குச் சந்தையில் பதுக்குவதால், அவற்றுக்கு காப்பீட்டுத் திட்டத்துக்குள் நுழையத் தடை விதிக்க வேண்டும்.
3. நிரந்தர ஊக்கத் தொகை: வேலைவாய்ப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும், குறைந்த பட்ச ஊக்கத் தொகைக்கு உறுதியளிக்க வேண்டும்.
4. இலவசக் கல்வி: கல்லூரிக் கல்வி கட்டணங்களை அறவே நீக்க வேண்டும்.
5. புதுப்பிக்கத் தக்க எரிசக்தி: நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொருட்களைக் கைவிட்டு, மாற்று வழியில் எரிசக்தி உற்பத்திக்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட வேண்டும்.
6. உடனடிச் செலவு: குடிநீர், சாலைகள், கழிவுநீர்ப் போக்குவரத்து, ரயில், பாலங்கள், மின்கட்டமைப்பு ஆகியவற்றுக்காக உடனடியாக ஒரு டிரில்லியன் டொலர் செலவழிக்க வேண்டும்.
7. வனப் பாதுகாப்பு: அமெரிக்காவின் அனைத்து அணு உலைகளையும் மூடுதல், காடுகள் மற்றும் சதுப்பு நிலங்களை உருவாக்குதல், ஆறுகளின் இயற்கையான போக்கை தடுக்காதிருத்தல் போன்றவற்றிற்காக மேலும் ஒரு டிரில்லியன் டொலர் செலவு செய்ய வேண்டும்.
8. சம உரிமை: இனம் மற்றும் பாலியல் சம உரிமைகளுக்கான சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்.
9. எல்லைச் சிக்கல்: நாட்டின் அனைத்து மாகாண எல்லைகளையும் திறந்து விட வேண்டும். இதன் மூலம் யாரும் எங்கு வேண்டுமானாலும் போய் வேலை செய்து வாழ வழி செய்தல்.
10. வாக்குச் சீட்டு: அமெரிக்கத் தேர்தல்களில் சர்வதேச நடைமுறைப்படி, வாக்குச் சீட்டைக் கொண்டு வர வேண்டும். சுயேச்சை மற்றும் கட்சி கண்காணிப்பாளர்கள் மத்தியில் வாக்குச் சீட்டுகள் எண்ணப்பட வேண்டும்.
11. கடன் தள்ளுபடி: வர்த்தகம், கல்வி, வீட்டு அடமானம் உள்ளிட்ட அனைத்துக் கடன்களையும் உடனடியாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். அதேபோல், உலக வங்கி அனைத்து நாடுகளுக்கும் வழங்கிய கடன், வங்கிகள் வங்கிகளுக்கு வழங்கிய கடன், அனைத்து கடன் பத்திரங்கள் மீதான கடன் என அனைத்தையும் உலகளவில் தள்ளுபடி செய்ய வேண்டும்.
12. விலக்கம்: அனைத்து கடன் மதிப்பீட்டு குறியீட்டு நிறுவனங்களுக்கும் சட்டப் பாதுகாப்பை விலக்க வேண்டும்.
13. தொழிலாளர் அமைப்பு: தொழிலாளர் அமைப்புகளின் தலைமையைத் தேர்ந்தெடுப்பதில், அனைத்து தொழிலாளர்களும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
அண்ணன் ஒபாமா என்ன சொல்றார்னா:
அதிபர் ஒபாமா கருத்து
போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிபர் ஒபாமா, மக்களின் கோபத்தின் மூலம் நமது நிதி அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பது தெரியவந்துள்ளது. என்று கூறியுள்ளார்
(ஹி ஹி அரசு வேறு முதலாளித்துவ கொள்ளை வேறுன்னு தனியா நின்னு போராடுகிறவர்கள் போலவே அண்ண்ன் ஒபாமாவும் தனியா நின்னுகிட்டு பதில் சொல்றார் )
//"ஒரு முனையில் செல்வம் குவிவதன் விளைவாக, அதே நேரத்தில் இன்னொரு முனையில் வறுமைத்துயர் குவிகிறது" என்றார் மார்க்ஸ். அந்த இன்னொரு முனைதான் வால் ஸ்டிரீட்டில் குவிந்து கொண்டிருக்கிறது. செல்வம் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்குப் பொசியும் என்ற முதலாளித்துவப் பித்தலாட்டம் அதன் தலைமையகத்திலேயே எள்ளி நகையாடப் படுகிறது.//
ஒரு முனையில் செல்வம் குவிந்தால் மறுமுனையில் வறுமை அதிகரிக்கும் எல்லாம் சரி அதில் ஏகாதிபத்தியத்தின் பங்கென்ன விளக்கமா கேட்டால் அமெரிக்க அரசின் பங்கென்ன ?
இதை சொல்ல வேண்டாமா? மார்க்ஸ் சொன்னமாதிரி போராட்டம் நடக்குது சரி எதிரி யார்னு லெனின் சொன்னாரே அவர்களுக்கு எதிராக அமெரிக்க மக்கள் கொந்தளிக்கவில்லை ஏன் ?
ஊழல் எதிர்ப்பு போராட்டம் இந்தியாவில் காங்கிரசுக்கு எதிராக என பலர் நினைத்து புரிந்து கொள்வதை போலத்தானே இது
விசயம் இங்கேதான் குறுகுகிறது
//தங்களுடைய உடைமைகளையும், உரிமைகளையும் பறித்துக் கொண்டது கார்ப்பரேட் முதலாளித்துவம்தான் என்ற கருத்து எங்கும் பரவி நிற்கிறது. //
அந்த முதலாளித்துவ அரசும்தான் என அவர்கள் நினைக்கவில்லை
அதை நீங்களும் சொல்லவில்லை( இங்கே கட்டுரையில் )
விசயம் இதுதான்
அன்னா ஹசாரே போன்று இந்தியாவில் ஊழலை ஒழிக்க போராட கிளம்புபவர்களின் மீது என் ஜி ஓ என்கிற முத்திரையும்
அவருக்கு ஆதரவாக கிளம்பிய இந்திய மத்திய தரவர்க்கத்தை சோம்பேறிகள் என்றும்
அமெரிக்காவில் போராடும் மத்திய தரவர்க்கத்தின் தெளிவற்ற பார்வையை சரியானது என்றும் போற்றி புகழ்வதன் மூலம்
திரு மருதையன் அவர்கள் தெளிவற்ற ஒரு பிரசாரத்தை மேற்கொள்கிறார்?
1.அமெரிக்காவில் 99% வீதம் பேர் வீடுகளை இழந்ததற்கு காரணம் ஏகாதிபத்திய அரசுதான் காரணம்ஏகாதிபத்தியத்தை முதல் எதிரியாக கொண்டு இந்த போராட்டம் நடத்தப்பட வேண்டும் என சொல்வதுதான் சரி
2.இந்தியா என்கிற ஏகாதிபத்தியத்துக்கு எதிரான ஒவ்வொரு போராட்டமும்
அது எந்த அளவு பிற்போக்கானவர்களால் நடத்தபட்டாலும் அதை கம்யூனிஸ்டுகள் கைபற்றி முன்னெடுத்து செல்ல தவறுவது வரலாற்று பிழை
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================