விஞ்ஞானத்தை எதிர்ப்பதன் மூலம் என்ன சொல்ல விரும்புகிறோம் –பிற்போக்கு தனத்தையா?

விஞ்ஞானத்தை எதிர்ப்பதன் மூலம் என்ன சொல்ல விரும்புகிறோம் பிற்போக்கு தனத்தையா?

 

    உலகின் அனைத்து கண்டுபிடிப்புகள் தோன்றும்போதும் அல்லது குறிப்பிட்ட ஒரு சில விஞ்ஞான கருதுகோள் தோன்றும் போதும் மனித இனம் சிலிர்த்து எழுகிறது .

 

உயிரியலில் ஒரு டார்வின் தனது கருதுகோள்களை வைக்கும் முன் நமக்கு கடவுள் ஒரு நாள் உக்கார்ந்து மனிதனை படைத்து விட்டார் எனும் மதவாதிகளின் கருத்துக்கும் ஆதாரபூர்வமான எதிர்வாதம் இல்லை . இதை போல எத்தனையோ விசயங்களை விஞ்ஞானம் தனது பாதையில் நடந்து வரும் போது போட்டு மிதித்து சென்று விடுகிறது அநாயசயமாக.

 

//பதினேழாவது பதினெட்டாவது நூற்றாண்டுகளில் நீராவி எஞ்சினை சிருஸ்டிக்க உழைத்த மனிதர்களுக்கு,உலகம் முழுவதிலும் வேறு எதைக்காட்டிலும் சமூக உறவுகளை புரட்சிகரமானதாக்குகிற ஒரு சாதனத்தை அவர்கள் உருவாக்கி கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்கள் உணரவே இல்லை //

-இயற்கையின் இயக்கவ்வியல் என்ற நூழில் எங்கெல்ஸ் பக்கம் 297 (முன்னெற்ற பதிப்பகம் மாஸ்கோ 1975)

இப்படி விஞ்ஞானத்தின் ஒவ்வொரு கண்டுபிடிப்பும் உணர்வுடனோ உணர்வின்றியோ மனித சமூகத்தின் மாற்றத்தில் ஒரு படிக்கல்லாக அமைந்திருக்கின்றன.

 

  தற்போதைய முதலாளித்துவ பொருளுற்பத்தி சமூகத்தில் அணுசக்தி விஞ்ஞானமென்பது மின்சாரம் தயாரிக்க உதவும் மற்ற எல்லா முறைகளையும் காட்டிலும் எளிதானதாக அதே நேரத்தில் ஒவ்வொறு படியிலும் ஆபத்து நிறைந்ததாக அமைந்துள்ளது  (அணுகுண்டு தயாரிக்க மட்டுமே பயன்படுகிறது என்கிற பார்வை தவறானதாகும் அந்த விஞ்ஞானத்தை சந்தை போட்டிக்கு பயன்படுத்தி நாடுகளை மிரட்டி பணிய வைக்க முதலாளித்துவம் கைக்கொண்ட முறையே அது தவிர, விஞ்ஞானத்தின் மேல் எந்த குற்றமும் இல்லை தீபத்தின் மேல் குற்றமிருக்கா அதை கொண்டு திருக்குறள் படிக்கையிலோ வீட்டை தீயிட்டு எரிக்கையிலோ )

 

விஞ்ஞானமும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியும் :

----------------------------------------------

விஞ்ஞானத்தின் ஒவ்வொறு கண்டுபிடிப்பும் உற்பத்தி சக்திகளில் வளர்ச்சியிலும் அதன் மூலம் உற்பத்தி உறவுகளின் மாற்றத்திலும் அடிப்ப்டையான சமூக அமைப்புடைய மாற்றத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை அறியலாம்

1.      நீராவி எஞ்சின்

 2. மின்சாரம்

இந்த விஞ்ஞானம் மின்சாரத்தை கண்டுபிடித்துள்ளது அதன் மூலம் உற்பத்தி சக்தி வளர்ச்சி என்பது அபிரிமிதமான அளவு வளர்ந்துள்ளது இப்போது வந்தடைந்துள்ள உறவு முதலாளித்துவ உற்பத்தி உறவு இந்த முதலாளித்துவ உற்பத்தி உறவானது

ஒரு கட்டத்தில் விஞ்ஞானத்தை அதன் சொந்த லாபத்துக்காக

(அணுகுண்டின் மூலம் நாடுகளை மிரட்டுதல் )பயன்படுத்தும் போது இந்த உற்பத்தி சக்தியின் வளர்ச்சியை அது மட்டுபடுத்துகிறது என்று அர்த்தம் அப்போது என்ன செய்யவேண்டும் என்றால் இந்த உற்பத்தி உறவை தூக்கி எறிய வேண்டும் அதாவது முதலாளித்துவ உற்பத்தி உறவை தூக்கி எறிந்து சோசலிச உற்பத்தி முறைக்கு செல்லவேண்டும்

 

     இப்போது நாம் எதிர்க்க வேண்டியது உற்பத்தி சக்தியை(அணு உற்பத்தியை ) அல்ல என்றும் உற்பத்தி உறவை

முதலாளித்துவ உற்பத்தி உறவை மட்டுமே என்றும் விளங்களாம்

 

உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியும் பாதுகாப்பும்:

   முதன் முதலாக இரயில் வண்டிகள் இந்தியாவில் ஓடியபோது

"கோழிகள் முட்டை " இடுவதில்லை என்பதே பிரதானமான குற்றச்சாட்டாக அந்த விஞ்ஞான கண்டுபிடிப்பின் மீது வைக்கப்பட்டது .அந்த குற்றச்சாட்டை இன்று படிப்பவர்கள் பாமரத்தனமாக இருப்பதாக உணர்ந்தால் இன்று அணு உலைகளுக்கு எதிராக வைக்கப்படுவதும் இதே அளவு நகைசுவையான அதிபாமரத்தனமானது என்பதை உணரலாம்.

 

பாது காப்பு என்பது அறிவியல்பூர்வமாக இயலாத ஒன்றல்ல என்றும் பல அடுக்கு பாதுகாப்பு என்பதை விஞ்ஞானத்தால் தரமுடியும் என்பதையும் மிக உறுதியாக சொல்கிறது இந்த இணையதளம் உண்மையில் இந்த பாதுகாப்பு அம்சங்களில் காணப்படும் குறைபாடுகளை சுட்டி விளக்கம் அளிக்காமல்

கடந்து செல்பவர்களும் அதற்காக மொத்தமாக இந்த விஞ்ஞான

முன்னேற்றத்தையே தவிர்ப்பவர்களும் பாமரர்களும் சமூக பொறுப்பற்றவர்களுமே ஆவர்.

    அணு மீள் சுழற்சியின் மூலமே அணுகுண்டு தயாரிக்கப்படுகிறது அதற்காகவே அணு உலைகள் நிருவப்படுகிறது என்கிற வாதம் அதன் தொடர்ச்சியாக அணுகுண்டை மார்க்சியம் ஏற்று கொள்கிறதா? என கேட்கிறார்

 

அணு சக்தியின் மூலம் கிடைக்கும் சக்தியை நிராகரிப்பவர்கள்

மாற்றுசக்தி என்ன என்கிற பதிலை வைக்காமல் அணுகுண்டு சரியா தப்பா எனவினவுவது சரியானதல்ல என்றாலும் அவர்களில் கேள்வியின் நியாயம் இருக்கவே செய்கிறது அணு உலைகளின் மீள் சுழற்சியில் அணு ஆயுதங்கள் தாயாரிக்கப்படும் சாத்தியங்கள் இருக்கிறது .  (அணு குண்டு எதிர்ப்பு என்பது வர்க்கமாக பிரிந்து கிடக்கும் இந்த சமூகத்தில் சாத்தியமில்லாத பத்தாம் பசலி கருத்தாக்கமே  பக்கத்து வீட்டுகாரன் வன்முறையாளன் என்றால் நானும் வன்முறையாளனேஎன்பதே சரியானதாக இருக்கமுடியும் )

 

முதல் கட்டுரையில் சொன்னதுபோல் நமது மொத்த தேவையில் 11.5 சதவீதம் பற்றாகுறை நிலவுகிறது அதை சரிகட்ட வேறு என்ன மாற்று வ்ழிமுறைகளை சொல்கிறீர்கள் அதை சொல்லுங்கள் என்கிறோம் பதிலாக அவர்கள் கேட்பதோ அணுகுண்டு சரியா என்கிற கேள்வியே

 

அணுகுண்டு மனிதகுல விரோத ஆயுதமே ஆனால் அதை எதிரி வைத்திருக்கிறானே மாவோ தெளிவாக சொல்கிறாரே எனது ஆயுதத்தை தீர்மானிப்பவன் எதிரியேன்னு.(அணு குண்டுகள் எப்போது உண்மையில் ஒழிக்கப்படும் என்றால் சுரண்டவும் சுரண்டப்படவும் எந்த வர்க்கமும் இல்லாத ஒரு சமூகத்தில் மட்டுமே)

   அணு கழிவுகள் அழிக்க எந்த ஒரு விஞ்ஞானியும் இதுவரை எந்த தீர்வும் கண்டுபிடிக்கவில்லை ஆகவே அணு உலை வேண்டாம் என்கிற வாதம் பற்றி பேசினால்

     இம்மாதிரி பிளாஸ்டிக்கும் அழிக்க முடியாத கழிவுதான் ஆனால் விஞ்ஞானம் அதை அழிக்க வழிகளை ஆராய்ந்து வருகிறது என்பதை அறிவோம் ஆகவே நடைமுறையில் நாம்

பிளாஸ்டிக் பொருட்களை வைத்து கொண்டுதான் வாழ்கிறோம்

பூமிக்கடியில் காங்கிரீட் கட்டிடங்களுக்குள் பல அடுக்குகளாக பாதுகாப்பாக புதைக்கப்படும் அணு கழிவு மிக மிக குறைந்த் அளவு கதிரியக்கத்தை வெளியிடுவது பற்றிய கவலை என்பது

கோடானு கோடி மக்களின் தேவைக்கான உற்பத்தி சம்பந்த பட்ட விசயத்தில் மிக மிக மிக அற்பமான முக்கியத்துவம் உடையதே

 

 ஆக இந்த உற்பத்தி சக்தியின் வளர்ச்சியில் அதன் பாதுகாப்பு அம்சமே அதன் வளர்ச்சிக்கு தடையாக உருவாக முடியாது உற்பத்தி உறவுகள்தான் உண்மையான தடையாக விளங்க முடியும் அதுதான் முதலாளித்துவ உற்பத்தி உறவு செய்யும் இடைஞ்சல் .

 

மாற்று எரிசக்திகள் ,தொடரும் ஆராய்ச்சி:

    அனல் ,புனல் , காற்று , அலை என ஒரு கவிதை மாதிரி எழுதப்பட்ட இந்த மாற்று எரிசக்திகள் அனைத்துமே இருவகைப்படும்   அனல் சக்தி என்பது நிலக்கரியை சார்ந்தது நிலக்கரி என்பதோ ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு மண்ணில் புதைந்த மரங்களாகும் அது இன்னும் 200 வருடத்தில் தீர்ந்துவிடும் தீந்து விட்ட பிறகு நீங்கள் இன்னும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் காத்திருந்தான் இந்த ரிசோர்சை பெற முடியும்  அடுத்து புனல் எனப்படும் நீர் மின்சக்தி இதுவும் மிக குறைந்த அளவு மட்டுமே எடுக்கமுடியும்  காற்று சக்தி என்பது தமிழ்நாட்டை பொறுத்தவரை 95 சதவீதம் எந்த இடத்தில் எல்லாம் காற்று வீசுதோ அங்கெல்லாம் ஆலைகள் வச்சாச்சு இப்படி இவங்க சொல்லும் மாற்று எரிசக்தியை பயன்படுத்துவதிலும் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது மொத்த மின்சார உற்பத்தியில் 1-2 சதவீதம் இப்படி பெறப்படுகிறது என்பது உண்மைதான் ஆனால் மொத்த தேவைக்கு இது மிக குறைச்சலாச்சே . இருந்தாலும் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்க குறைந்த செலவில் ஆக்கபூர்வமான ஒரு விஞ்ஞான கண்டுபிடிப்பு வருவதை நாம் எதிர்க்க போவதில்லை ஆனால் தற்சமயத்தில் இவற்றால் எந்த மாபெரும் சக்தியையும் தரமுடியாது .

 

கூடங்குளத்தில் என்ன கோரிக்கை சரியானது:

   இந்த அரசானது மக்கள் நலனை கண்டுகொள்ளாது அவர்களின் உயிரை துச்சமென மதிப்பது என்கிற வாதங்கள் சரியே இந்த இடத்தில் எதிக்க வேண்டுவதும் கேள்வி கேட்கப்பட வேண்டியது அரசும் முதலாளி வர்க்கமுமே அன்றி விஞ்ஞான கண்டுபிடிப்பல்ல (உற்பத்தி உறவுகளும் அரசு என்கிற வர்க்க சார்பு இய்ந்திரமுமே) .

   1.கூடங்குளத்தில் தனித்த அதிகாரமுள்ள அமைப்பின் மூலம்

பாதுகாப்பை உறுதி செய்வது

   2.மக்களை பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் வாழ மாற்று வழி செய்து தருவது

   என்கிற கோரிக்கையே சரியானதாகும்.

 

நம்து பொறுப்பை உணர்ந்தவர்களா ?

   கோடானு கோடி மக்கள் வாழும் இந்த நாட்டில் படித்தவர்களின் எண்ணிக்கை குறைவானது அதிலும் சமூகம் சார்ந்து சிந்திப்பவர்கள் மிக மிக குறைவு இதில் படித்து சமூகத்தை பற்றி சிந்திக்க வாய்ப்பு பெறற நாம் பொறுப்புணர்வுடனும் நேர்மையாகவும் கருத்துக்களை வெளியிட வேண்டும்

      1.அதாவது விஞ்ஞான ரீதியான அணு உலை கூடாதென்றால் மாற்று ஏற்பாடு என்ன என சொல்லவேண்டும்

      2.அப்படி சொல்லாமல் வேண்டாம் என சொல்வது மட்டுமே என வேலை என்பது நேர்மையற்ற பொறுப்பற்ற தனமாகும்.

 

    இதை சிந்தித்து பார்க்கவேண்டுகிறேன்.

-----------

தியாகு

 



--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

99 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post