கூடங்குளம் எதிர்ப்பு அதனளவில் என்ன குறைபாடு உடையது
சிலவிசயங்களை சிலர் எதிர்க்கிறார்கள் என்றால் அவர்களது அரசியல்காரணமாக இருக்கலாம் ஆனால் கம்யூனிஸ்டுகள் எதிர்கிறார்கள் எனில் அதே காரணம் இருப்பின் அதை நாம் அம்பலப்படுத்தாமல் விட கூடாது
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடு என்கிற கோசம் விண்ணை பிளக்கையில்
சரி இந்தியாவின் மொத்த மின்சார தேவை எவ்வளவு என தெரியுமா என்கிற கேள்வியை நாம் வைக்கவேண்டியதாக இருக்கிறது
1.இந்தியாவின் தற்போதைய உள்நாட்டு உற்பத்தி 90,000 மெகா வாட் மின்சாரம்
2.பற்றாகுறை 11.5 சதவீதம்
(இந்தியா சுதந்திரமடையும்போது 1300 மெகாவாட் மின்சாரமே உற்பத்தி செய்தது.)
இதை எப்படி ஈடு செய்ய போகிறோம் சரி அணு மின் நிலையம் வேண்டாம் வேறு என்ன மாற்று யோசனை இருக்கு உங்க கிட்ட என்றால் நம்மை கடித்து குதறி விடுவார்கள் .
அணுமின்நிலையத்தை மூட சொல்வது மார்க்சியபடி சரியானதா?
எல்லாவற்றையும் இயக்கவியல் பொருள்முதல்வாத சிந்தனை படி ஆராயும் கம்யூனிஸ்டுகள் இந்த விசயத்தை
ஏன் கருத்தியல் ரீதியாக பார்க்கிறார்கள் எனபார்க்கனும்
வெடிச்சிட்டா என்னாகும்
அணுமின்சாரம் தயாரிக்க பயன்படும் அறிவியல் அதிலிருந்து பாதுகாப்பளிக்க பயன்படாதா?
ஏன் முடியாது என கேட்டால்
இல்லை நான் என்ன சொல்றேன்னான்னு இழுப்பார்கள்
அணுமின்சார உற்பத்தி அதன் பாதுகாப்பில் பலத்தை அறிவியல் முறைபடி அதிகரித்து மக்களுக்கு பாதுகாப்பளிக்க முடியும் அதை செய்ய சொல்லி கோருபவனே உண்மையான கம்யூனிஸ்டு
இந்தியாவின் பொருளாதாரம்:
-----------------
இந்தியா ஒரு வளரும் பொருளாதார நாடு என்பதை நாம் கணக்கில் எடுத்து கொள்ளவேண்டும் இந்த நாட்டின் உற்பத்தி சக்திகள் வளர்கிறது போக்கு வரத்து மட்டுமின்றி அனைத்து துறைகளும் மின்சாரத்தை நாடி உள்ளது இந்நிலையில் மொத்த மின் தேவையை இந்த நேரத்தில் வழங்குவதன் மூலம் மட்டுமே இந்தியாவை வளர்ச்சி பாதையை நோக்கி செலுத்த இயலும்
இதற்கு எதிராக செல்வது எல்லாமே இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிரானதாகவும் முடிவாக மக்களுக்கு விரோதமானதாகவும் அமையும்
வளரும் பொருளாதாரத்தில் பெட்ரோல்:
---------------------------
நாம் அதிகளவில் உபயோகிக்கிறோம் ஆனால் இந்தியாவிலோ பெட்ரோல் கிடையாது அப்போ பெட்ரோலை இறக்குமதி செய்தாக வேண்டும் மொத்த தேவையில் கச்சா பெட்ரோல் மட்டும் 1980 களில் 30 சதவீதமாக இருந்தது 2010 அது 90 சதவீதமாகிவிட்டது
இதில் பெட்ரோல் வாங்க டாலரை மட்டுமே பயனபடுத்த வேண்டும் என்பதால் முதலில் டாலரை வாங்கி பெட்ரோல் வாங்குகிறோம்
1.ஒரு பக்கம் எரிபொருள் வளமில்லாத அல்லது குறைந்தளவு கொண்ட இந்தியா
2.இன்னொரு பக்கம் நாளுக்கு நாள் எரிபொருள் தேவை அதிகரிக்கும் இந்தியா என சிக்கலில் இருக்கிறோம்
-----
இங்கிருந்த தவறான தகவல் நீக்கப்பட்டது
சரியான தகவல்:
பெட்ரோல் என்கிற மூலப்பொருள் அதன் கிடைக்கும் தன்மை நாளுக்கு நாள் குறைந்து வரும் சூழலில் மாற்று சக்தியாக அணுமின்சாரம் மட்டுமே கண்முன் தெரிகிறது
---------------------------
வளர்ந்த நாடுகள் அணு உலையை மூடுவது ஏன்:
உலகின் முக்கிய உற்பத்தி கேந்திரங்களாக முன்பு ஐரோப்பிய மேலை நாடுகள் இருந்திருக்கலாம் ஆனால் அந்த நாடுகளில் இருந்து தொழிலாளது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் மாறிவிட்டது என்பதை பார்க்கவேண்டும்
எனவே உற்பத்தியே செய்யாமல் நுகர்ந்து வரும் அந்த நாடுகளுக்கு அளவுக்கதிகமான மின்சாரம் தேவை இல்லை எனவே அவை ஈணுலைகளை மூடுவதற்கும் வளர்ந்துவரும் நமது நாடு ஈணுலைகளை மூடுவதற்கும் பாரிய வேறுபாடுகள் உள்ளன
பிரான்ஸ் மூட போவதாக அறிவித்துள்ளதை பேசிவருபவர்கள் கவனிக்கவேண்டும்
பாதுகாப்பு காரணங்களுக்காக வேண்டாம் என சொல்பவர்கள் :
உலகளாவிய அணுமின் நிலையங்களுக்கான பாதுகாப்பு வளையங்களை பற்றி சொல்லும் iAEA வின் யோசனைகளில் இருக்கும் ஓட்டைகளை பற்றி விரிவாக பேச தயாரா ? (http://www.iaea.org/)
இல்லையே
அது அப்படி நடந்து விட்டால் வெடித்து விட்டால் என பேசுபவர்கள் ஜோசியகாரர்களின் மனநிலையில் இருந்தே பேசுகிறார்கள் தவிர ஒரு அறிவியல் பார்வையும் கிடையாது
இந்தியாவில் தற்போது இருக்கும் அணுமின்சார உற்பத்தி மொத்தத்தில் 2.2 சதவீதமாக இருக்கிறது இதை உயர்த்தவேண்டும் என நினைக்கும் இந்த முதலாளித்துவ அமைப்புக்கு இருக்கும் லாபநோக்க அறிவியல் ஞானம் கூட நமக்கில்லை என்றால் என்னாகும்.
1.எல்லா போராட்டங்களையும் இரும்புகரம் கொண்டு ஒடுக்கும் ஜெயா அரசு இந்த போராட்டத்தை கண்டும் காணாமல் இருப்பது அதன் சுயலாபத்துக்கே
முக்கியமாக திமுகவை காங்கிரஸ் கழட்டி விடனும் அதை பணிய வைக்க இதை ஜெயா ஒரு கருவியாக கையாள்கிறார் மேலும் அவருக்கு தனிபட்ட முறையில் இருக்கிற கேஸ்களில் இருந்து வெளிவரனும் என்ற
காரணமும் இருக்கிறது
2.கூடங்குளம் எதிர்ப்பு குழுவே ஒரு கட்டத்தில் விஞ்ஞானிகளை வழிமறிக்க போலீசிடம் அனுமதி கோரும் சடங்கும் நடப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது
3.1980 துவங்கபட்ட திட்டத்துக்கு 2010ல் எதிர்ப்பு என்பது திடீரென தூங்கி எந்திரிச்சு எதிர்ப்பு காட்டுவது போல இருக்கிறது
4.சுற்று சூழல் ஆர்வலர்களின் காசினால் நடக்கும் இந்த போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும்
5.அரசிடம் மைய்யமாக வைக்கவேண்டிய கோரிக்கை
20 கிலோமீட்டருக்கு அப்புறப்படுத்தும் மக்களுக்கு மாற்று இடம் தருவது பற்றிய உறுதிபாடு மற்றும்
அணு உலைகளுக்கான பாதுக்காப்பு குறித்த தனிஒரு
அமைப்பின் அறிக்கை இவற்றை கேட்டு போராடுவதே சிறந்தது
6.குறுகிய அரசியல் லாபங்களுக்காக நீண்ட கால பயன்களை துரப்பது தற்கொலைக்கு ஒப்பாகும்
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================