இதுவரை எடுக்கப்பட்ட சினிமாக்களை மொத்தமாக சேர்த்து பார்த்தால் சண்டை காட்சிகள் இல்லாத சினிமாவே இல்லை எனலாம் அந்த சண்டை காட்சிகள் என்பது எம்ஜியார் காலத்தில் டிஸ்யூம் டிஸ்யூம் குத்துகளில் இருந்து தற்போதைய நிலமைக்கு வந்துள்ளது
பாலா விசயத்துக்கு வருவோம் அவர் எடுத்த எந்த ஒரு படமும் வன்முறையை வழிபடுகிறது பரப்புகிறது அதை வணங்குகிறது .
சேதுவில் பெரிய சண்டைகாரன் என்கிற ஒரே தகுதியை கொண்ட நாயகனின் காதல் அதன் இழப்பு அதில் சொல்லப்படக்கூடிய வன்முறைக்கு களமே அந்த காதல்
நந்தாவில் அப்பனை கோபத்தால் கொல்லும் மகன் அந்த வன்முறை ஈழத்தமிழர்களுக்கு உதவுபவருக்கு உதவுவதாக ஒரு சித்தரிப்பு உண்மையில் ஈழ தமிழர்க்கு அதில் எந்த சேதியும் இல்லை வன்முறைதான் தீர்வு கொன்றவனை கொல் என்பதே மந்திரம்
அப்போ சமூகத்தின் சிக்கல்கள் காதல், ஈழ பிரச்சனை ,பிச்சைகாரர்களின் மீதான சுரண்டல்கள் இவற்றுக்கு என்ன தீர்வு அதான் வன்முறை என்கிறார் பாலா ஆனால் அவர் தேர்ந்தெடுக்கும் களம் எல்லாம் சிறப்பானவை அதை ஓட்டையாக்கி கோணலாக பார்க்க வைக்கிறார்
வாழ்க்கையின் சிக்குகளையும் சிடுக்குகளையும் பாலா வன்முறை மூலமே தீர்த்து வைக்கிறார் இதற்கு சாதாரண மக்களின் மீது ஏவப்படும் அதீத வன்முறையும் அதை எதிர்கொள்ளும் ஹிரோயிச வன்முறையும் தேவை படுகிறது .
இதற்காகவே கதை களத்தில் அவருக்கு விழிம்பு நிலை மக்கள் தேவை படுகிறார்கள் - சாமியார்களில் (அதுவும் அகோரிகள் ) தேவை படுகிறார்கள் .
நீண்ட நாள் கழித்து அவன் இவன் பார்த்தவுடன் ஏற்பட்ட சலிப்பை சொல்லி மாளாது கருத்து மக்களை பற்றி கொண்டால் அது மாபெரும் சக்தியாக உருவெடுக்கிறது என்கிறார் மார்க்ஸ் இம்மாதிரி கருத்துக்கள் பற்றி கொண்டால் என்னாகும் .
பிரச்சனைக்கு தீர்வு பிரச்சனைக்குள்ளேயே இருக்கிறது அதை அறிந்து கொள்ளவும் வெளிப்படுத்தவும் நம்மிடையே போதிய இயக்குனர்கள் இல்லை .
சினிமா தியேட்டரை விட்டு வெளியே வந்து பாருங்கள் இயல்புவாழ்க்கை முழுக்க சண்டை அடிதடி இருப்பதில்லை அதன் மூலம் பிரச்சனையை தீர்க்க முடியாது .அப்படி ஆரம்பித்தான் தினம் ஒரு கொலை செய்ய வேண்டும் நீங்கள் .
அதனால் சினிமாவை இயல்புவாழ்க்கையுடன் ஒன்றித்து பார்க்காதே என எளிதாக சொல்லிவிடலாம்
ஆனால் சினிமாவுக்கு போகும் ஒவ்வொரு நபரும் பார்க்கும் ஒவ்வொரு சீனிலும் ஒன்றித்துபார்த்தால்தான்
படம் புரியும் .அப்போது வன்முறை தீர்வல்லன்னு நமக்கு தெரியும்
இயல்பானதை மட்டும் சினிமாவில் எடுங்கள் என சொல்லவில்லை இயல்பற்றதை புரிந்து கொள்ள வைக்க முடியுமென்றால் இத்தகைய சினிமாக்கள் பார்க்கலாம் .
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================