அநாகரீக வார்த்தைகள் புரட்சியை குறிக்காது மாறாக வெறுப்பை குறிக்கும்



வார்த்தைகளில் வகைப்பாடும் நாகரீகமான உரையாடலும் ரசிக்க தக்க பதங்களும் மெல்லிய விவாத நகர்தலும் ஒரு மேல்தட்டு வர்க்க குட்டிபூர்சுவா கண்ணோட்டமே என கருதினார்களோ என்னவோ

பீ , மூத்திரம் , டவுசர் கழண்டது என்பது போன்ற சொற்பதங்களை // அவனவன் எடுக்குற முடிவு - வாயில போனா எனக்கென்ன பீ போனா எனக்கென்ன? //http://poar-parai.blogspot.com/2011/08/blog-post_04.html ஏன் இப்படி முகம் சுளிக்க வைக்கும் வார்த்தைகளை பேசுகிறீர்கள்னு கேட்டு பார்த்தால்

1.உழைக்கும் மக்களின் மொழி இது என்பார்கள்

பதில்: அப்படி எனில் ருஸ்யாவில் வாழ்ந்த உழைக்கும் மக்கள் கெட்ட(?) வார்த்தை பேசவில்லையா அப்படி பேசி இருந்தால் அதை ஏன் லெனின் பயன்படுத்தவில்லை அல்லது ஸ்டாலின் அல்லது மார்க்ஸ் பயன்படுத்தவில்லை

போராட்டங்களின் போதும் இவர்களிடம் இருந்து தெரிக்கும் வெறுப்பின் கனலை விவாதங்களின் போது காணலாம் இந்த குட்டிபூர்சுவா மனநிலையே

எஸ்மா சட்டத்தால் தூக்கியெறிய பட்ட அரசு ஊழியர்களின் வேலைக்கு போட்டி போட்டு அப்ளிகேசன் போட்டவர்களின் மேல் அக்கா புருசன் செத்ததும் அக்காவை கல்யாணம் செய்துகலாம்னு நினைக்கிறவனுக” என விமர்சிக்க வைத்தது .

இயல்பாகவே சமூகம் பெற்றுள்ள நாகரீகத்தின் காரணமாக அநாகரீக வார்த்தையை அது ஏற்றுகொள்ளாத போது அதை வலிந்து பேசுவதால் என்ன

மாற்றத்தை நிகழ்த்த முடியும் வெறுமனே தனது சொந்த ஈகோவை திருப்தி படுத்தல் தவிர அதில் எந்தவிதமான முற்போக்கான பாத்திரமும் இல்லை .

இதற்கும் மேலாக இப்படி பேசுவது சரிதான் என்கிற பிற்போக்கு தனத்தை விட்டு செல்வகிறோம் என்பதை மறந்த்து தற்செயலானது எனில் ஏற்கலாம் திட்டமிட்டது எனில் விமர்சனம் செய்தே ஆகவேண்டும். மேலும் இப்படியான குப்பைகளை இட்துசாரிகளுன் எழுத்துக்கள் என்கிற வரலாற்றில் சேர்க்கிறோம் என்பதையும் உணரவேண்டும் “ஒரு கம்யூனிஸ்டு”

சாராம்சமாக :

1. ஒரு தொழிலாளி முதலாளியை எதிர்ப்பது வெறுப்பினாலும் , பொறாமையாலும் அல்ல அவனது சமூகபொருளாதார சூழல் அவனை முதலாளியை எதிர்த்து நிற்க வைக்கிறது என்கிற மார்க்சிய மெய்ஞானம் விளங்காமல் இவர்களுக்கு வார்த்தை பிரயோகம் மட்டுபடாது முடிந்தால் ஸ்டாலின் மொழி குறித்து கூறிய வரையறையை படிச்சு பார்க்கட்டும்

2. வட்டார வழக்கு என்பது வர்க்கத்தின் மொழி அல்லன்னு அதில் தெளிவான வரையறை இருக்கும் .

3. இவர்கள் தான் மொத்த கம்யூனிசத்தின் பிரமுகர்கள் என காட்டி வருவதே கம்யூனிசத்துக்கு செய்யும் இழுக்காகும்

4.நாம் பேசுவதும் எழுதுவது பிறரை ஈர்க்க வேண்டும் அதன் உள்ளடக்கதாலும் வடிவத்தாலுமே அன்றி எதிர்க்க செய்ய கூடாது .

ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி என்கிற பட்டுகோட்டையில் பாடல் வரிகள் இந்த குட்டிபூர்சுவாக்களுக்கு பொருந்தும்

எனது சுயமுரண்பாடு:

இவர்களுடன் சில ஆண்டுகள் இருந்த்தால் என்னுள்ளே ஏற்பட்டுள்ள முரண்பாட்டை ஏற்றுகொள்வதுடன் இதே பாணியில் நானும் எழுதியும் பேசியும் இருக்கலாம்


--
தியாகு

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post