யாருப்பா அது நான் இந்துன்னு சொன்னது ?

http://www.jeyamohan.in/?p=21656
இத்த படிச்சிட்டு வந்தீங்கன்னா நம்ம கட்டுரை புரியும் :)


யோவ் உனக்கு மதம்னா என்னான்னு தெரியுமா வகை மதம் தொகை மதம்னு இருக்கு அதாவது கொண்டை போட்டவன் எல்லாம் ஒரு மதம் மொட்டை போட்டவனெல்லாம்


இன்னொரு மதம்னு கீது அதில என்னா மதம்னு சரியா தெரிஞ்சிக்கனும் அதாவது ஆடுவெட்டி சாமி கும்பிட்டு அத்தை கருப்பசாமிக்கு படைச்சா அதை தொகை மதம்


ஆடே வெட்டபடாதுன்னு சொல்வது இன்னொரு மதம் இரண்டையும் ஜாயிண்டு அடிச்சி விட்டோம்னாக்க அது தொகை மதம் மறுபடியும் குழப்புதா?



இந்தபக்கம் ஒரு வகை மதமா பாத்து பழகிக்கினும் வந்தவுக சோற்றை சாதம்பாங்க பூணூல் போடுவாங்க கருவறைக்குள்ள போவாங்க ஆனால் அந்த பக்கம் பூணூல் கிடையாது கருவறைக்குள்ள எல்லாரும் போவலாம் அது ஒரு மதம்னு வச்சிக்க முன்னத்தையும் பின்னத்தையும் இணைக்கிற வேலை கீதே அது படா பேஜாரு பிடிச்ச வேலை



பின்ன என்னா நினைச்சிகின கருப்பசாமியும் உன்சாமிதான்னு அவனை சும்மாகாச்சும் சொல்லி இட்டார முடியுமா அதுக்கு நாங்க ஒரு வழி வச்சிகீறோம் கருப்புசாமி சிவனோட அவதாரம் அப்பீடீன்னு



//ஒன்று, படையல் மற்றும் பலி. இரண்டு, பூஜை மற்றும் ஆராதனை. மூன்று, வேதவேள்விகள். நான்கு, தியானம் யோகம். எந்த நாட்டார் தெய்வமும் முதலிரு வழிபாட்டுமுறைக்குள்தான் இருக்கும்//



மொட்த்தம் நாலுகீது அதில படையலை மட்டும் செய்திட்டு நீ பாட்டுக்கு சாப்பிட்டு போனா நீ கீழானவன் அல்லாங்காட்டி பூசை புணஸ்காரம் செய்து நீ எங்கள மாதிரி ஆவனுன்ம்னா கொஞ்சம் மூளையை தட்டி விடனும் கதைகளை புனையனும் இன்னான்ற அதே லெவல்ல கீறியா இல்லாட்டா வளர விரும்புறியா?



ஒரே ஒரு ஒற்றுமையை சொல்றேன் கேட்டுகோ கருப்பசாமிக்கு சூடம் கொளுத்துறாங்கல்ல சிவனுக்கும் அதானே கொளுத்துறாங்க பின்ன என்னா கேளுவி


ரெண்டும் ஒன்றுதான் ஆனால் சிவன் கோவில் பூசாரி ஏன் கறி திங்கமாட்டாருன்னு கேட்காத



இதெல்லாம் ஒரு மிசனரிகாரனுக செய்துவிட்ட வேலை இல்லாட்டினா ராசா உனக்கு புத்தி வரும்ர வராது அதானே உன்னையும் உன்னோட சாமியும் வாசல்லயே வச்சிகீறோம்



//தமிழ்நாட்டின் எல்லா நாட்டார்கலைகளுக்கும் முழுக்கமுழுக்க புராணங்களும் இதிகாசங்களுமே ஆதாரமானவை என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தெருக்கூத்து, தோல்பாவைக்கூத்து, புள்ளுவன் பாட்டு, வில்லுப்பாட்டு என ஒரு இருநூறு நாட்டுப்புறக் கலைகள் நெல்லைவட்டாரத்தில் உள்ளன. எல்லாமே புராண இதிகாசக் கதைகளைத்தான் சொல்லிக்கொண்டிருந்தன. இன்றும்கூட அவற்றில் நூற்றுக்குமேல் அழியாமல் நிகழ்ந்தபடி உள்ளன. எல்லா நாட்டார்தெய்வ கொடைவிழாக்களுக்கும் இருநூறாண்டுகளாக அவற்றைத்தான் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள்.அவற்றில் வேடமிட்டு நடிப்பவர்களும் அவற்றைப் பார்ப்பவர்களும் அடித்தட்டு மக்கள்தான்//



இதெல்லாம் நாங்க செய்துக்கிறோம் பார்க்கமாட்டியே ஒரு புராணகதையே செய்து அதை மக்கள்ட கொண்டு போகனும்னா என்னா மெனக்கெடனும்னு தெரியுமா சும்மா நாட்டார் சாமின்னு வந்துட்ட



கருப்பசாமிய பெருமாளாகவோ அல்லாங்காட்டி சிவனாகவோ மாத்தன்னுமா பல வேலைகள் செய்யனும் ஆனால் எந்த புராணம் செய்தாலும் சிவனுக்கு சைவம் கருப்பனுக்கு அசைவம் அதை மாத்தபூடாது ஏன்னா அப்புறம் அய்யரு கறிதிங்கனுமே



//கருப்பசாமி கோயிலில் உயிர்ப்பலியும் புலால் உணவும் இருக்கும். பெருந்தெய்வக் கோயிலில் சைவ உணவு படைக்கப்படும். பொருட்களில், சொற்களில் சில வேறுபாடுகள் இருக்கும் அவ்வளவுதான்.ஏனென்றால் திருச்செந்தூர் முருகன் சிலநூற்றாண்டுகளுக்கு முன்னர் இன்னும் அதிகமான மக்களுக்கான தெய்வமாக ஆனவர். ஆகவே அனைவருக்கும் பொதுவான வழிபாட்டுமுறைகளை நோக்கிச் சென்றவர். இன்றுள்ள பல இந்து பெருந்தெய்வ கோயில்களில் நூறு வருடம் முன்புவரை உயிர்ப்பலி இருந்திருக்கிறது.//



இப்பததான் முருகனை மாத்திகீறோம் மனுசன் இப்ப எங்களாட்டமா மீசை கீசை இல்லாமல் புராணத்துகுள்ள வந்துகிணாரு



போக போக கருப்பசாமிக்கு கறியை காட்டாமல் மாத்திபுடுவோம்


அப்புறம் என்னாவோ தமிழ் தமிழ்ன்னு அடிச்சிகிட்டு கீற தமிழ்ல கூப்பிட்டா கருப்பன் தான் வருவாரு அவரே சிவனாகிட்ட வரமாட்டாரு எல்லாமே எங்க ஏற்பாடுதான் "ஏன்னா" புதிய ஏற்பாடா இல்லபா இது நெம்ப பழைய ஏற்பாடு அக்காங்க்



//அதாவது இந்து மதம் உங்கள்மேல் திணிக்கப்படுவதில்லை. அப்படித் திணிக்க யார் இருக்கிறார்கள்? யாராவது வீடு வீடாக வந்து மதம் மாற்றுகிறார்களா என்ன? துண்டுப்பிரசுரம் கொடுக்கிறார்களா, மைக் வைத்துப் பிரச்சாரம் செய்கிறார்களா? இந்துமதத்துக்கு என பிரச்சாரகர்களே கிடையாது. எதிர்ப்பிரச்சாரம் அதி உக்கிரமாக எல்லாத் தரப்பிலிருந்தும் நிகழ்கிறது/



நாங்க உன்னைய கூப்பிட்டமா என்னோட கோவிலுக்கு வான்னு பின்ன வந்து நொய் நொய்ன்னு கேள்வி கேட்டுகிட்டு ஒன்னு மட்டும் ஞாபகத்தில வச்சிக்கோ



வகை தொகை அம்புட்டுதான்



ஜெய் சக்கம்மா நீ கடைதேறிடுவ


--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

4 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post