முதலாளித்துவத்துக்கும் மதத்திற்கும் என்ன சம்பந்தம்

முதலாளித்துவத்துக்கும் மதத்திற்கும் என்ன சம்பந்தம்


மதம் சார்பான கருத்தாடல்களின் போது நண்பர்கள் கேட்கும் முக்கியகேள்வி மதத்திற்கும் நிலவும் முதலாளித்துவத்திற்கும் என்ன சம்பந்தம் என்பதே

சமூகத்தை பற்றிய வெள்ளந்தியான பார்வையே மதம் 
மற்றும் உற்பத்தி முறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிற புரிதலை தருகிறது .

"  மதத்திற்கும் இன்றைய முதலாளித்துவத்திற்கும் என்ன சம்பந்தம் , வேலைக்கு போறோம் கூலி தருகிறார்கள் - கோவிலுக்கும் போறோம் விபூதி தருகிறார்கள் " இதிலென்ன சம்பந்தம் வெங்காயம் இருக்க முடியும்  என நினைக்கிறார்கள் மட்டுமல்ல கேட்கிறார்கள்

மார்க்சியம் சமூகத்தின் அடித்தளமாக உற்பத்தி சக்திகளையும் உற்பத்தி உறவுகளையும் சொல்கிறது

மேல்கட்டுமானமாக அரசியலமைப்பு,சட்டம், கலை இலக்கியம், மதக்கருத்துக்கள் உருவாகின்றன்

மேல்கட்டுமானத்தை பாதுகாப்பது அரசு இயந்திரமே

அரசு என்பது ஒடுக்குமுறை வடிவம் என்கிறார் லெனின்

ஆனால் இந்த கருத்தியல் என்பது வன்முறையாக தெரிவதில்லை மேலோட்டமாக

ஆனால் அரசின் உறுப்பு யாதெனில் அது குடும்பம்

குடும்பத்திற்கு அடுத்து சாதி அதற்கடுத்து மதம் அதற்கடுத்து அரசு என இந்த கட்டுமானம் அமைந்துள்ளது

அரசு என்றது துப்பாக்கி ஏந்திய போலீஸ் காரர்
ஒரு தாசில்தார் , ஒரு இராணுவ வீரன் மற்றும் உயர்ந்த கல் கட்டிடங்களை நினைத்து கொள்கிறோம்

ஆனால் அதுமட்டுமன்று அரசு என்பது கருத்துகளால் ஆனது என்கிறார் அல்தூசர்

அந்த கருத்துக்கள் தங்களை நிலைநாட்ட பலநூறு கொலைகளையும் துணிந்து செய்யும்

இது கருத்தியல் சார்ந்த அரசு இயந்திரம்

(குடும்பம், மதம், சாதி, கல்வி, கலை இலக்கியங்கள், சட்டவிதிகள், இன, நிற, பால் பேதங்கள்)

1.குடும்பம் என்ற உறவுக்குள் ஆதிக்க தன்மைவாய்ந்த உறவுகளும்
  அப்பா , அதற்கடுத்து அண்ணன் இப்படி படிப்படியான
அதிகார அமைப்பு  அதையொட்டிய வன்முறையை காணலாம் இதற்குள் சுதந்திரம் பெற்றவர் யார் என சொல்ல முடியாது

2.குடும்பத்தில் யார் பெயரும் தனித்து இல்லை என்பதை அறியலாம் அப்பாபெயருடன் கணவன் பெயருடன் சம்பந்த படுத்தி அத்தோடு குடும்பம் என்பது அரசுடன் தொடர்பு படுத்தியே அமைக்கப்பட்டுள்ளது

3.மதம் குடும்பத்துடனேயே தொடர்கிறது. மதம் ஆதிக்கம் மிக்க கருத்தியல், அபினி போல. குடும்பம், அரசு, சமூக உறவுகளுடன் ஆத்மாவையே மதம் பிணைத்து வைத்துள்ளது.

4.குடும்பத்தின் சொத்துரிமையை பாதுகாக்கவும் செயல்படவும் அரசானது நிலவுகிறது

5.மதம் என்பது குடும்பத்துடனும் அதன் ஊடாக அரசுடனும் சேர்ந்து இயங்குகிறது

6.மதம் சார்ந்த குடும்பங்களின் தொகுதியே சமூகம் என கட்டமைக்கப்பட்டுள்ளது எனவே மதத்தின் இருந்து வெளியேறுதல் குடும்பத்திலிருந்து வெளியேறுதல் அரசில் இருந்து வெளியேறுதலுக்கு ஒப்பாகும்

7.வெவ்வேறு மதங்கள் இருந்தாலும் மதங்களின் நிறுவனங்கள் தம்முள் ஒரு சமநிலையை பேணினாலும் அரசி எந்திரத்தை ஏற்று கொண்டும் அதை இயக்கியம் வருகின்றன

8.மறுபுறம் அரசானது வர்க்க சார்பாக நிலவுகிறது
எப்படி  ஒரு பக்கம் உழைக்கும் வர்க்கமும் இன்னொரு பக்கம் ஒடுக்கும் வர்க்கமும் சேர்ந்ததுதான் சமூகம்

9.அரசு என்பது எப்போது வர்க்க சார்பானதே நிலவுகின்ற அனைத்து ஒடுக்கும் சமூகத்தையும் அரசானது பாதுகாக்கிறது அதன் ஊடாக அதன் மதம் மற்றும் கருத்தியலை பாதுக்காக்கிறது

  சாராம்சமாக

   1.அடிகட்டுமானத்தை பொறுத்து (உற்பத்தி நடைமுறையை பொறுத்து ) மேல் கட்டுமானம் அமைகிறது  - ஆண்டான் அடிமை சமூகத்தின் வெளி தோண்டுதலாக அதை ஒழிக்க இயேசு தோன்றுதல்
    2.அடிகட்டுமானம் மாறும் போது அதன் கருத்தியல் மேல்கட்டுமானம் மாறும் அதில் சீர்குழைவு ஏற்பட்டு மாற்றங்களை கோரும்
   (நிலவுடமை சமூகத்தின் கற்பு நெறி இப்போது ஆட்டம் காணுதல் )
   
   மதத்தில் இருந்து அதன் மூடநம்பிக்கையில் இருந்து நேராக மக்களை விடுவிக்கலாம் என கிளம்பிய பெரியார் போன்றோர் எந்த விசயத்தையும் அசைக்க முடியாமல் போனது இந்த கட்டமைப்பை புரிந்து கொள்ளாமையே

  வர்க்க போராட்டத்தின் ஊடாக சமூக மாற்றத்தில் மட்டுமே ஒரு மனிதனின் மதக்கருத்துக்களில் இருந்து விடுவிக்க முடியும் அதற்கான அடிப்ப்டை தேஎவை
போராட்டமே    

--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post