ஊழல்தான் பெரிய
பிரச்சனையா?
இந்தியாவில் ஊழலை
ஒழிக்கிறேன் பேர்வழி என கிளம்பியர்வர்கள் எல்லாமே அரசியல் பாதை நெடுக ஊழல் புரிந்தவர்கள்
தாம்.
எம் ஜி ஆர் பாட்டில்
ஏழைகள் உயரனும்னு வரிகள் வரும் ஆனால் அந்த ஏழைகள் யார், எப்ப உயர்வாங்கன்னு எதுவும்
வராது.
அது போலத்தான்
ஊழல் ஒழியனும் என்கிற கோசமும்.
ஊழல் என்பது காரணமா?
விளைவா?
ஊழல் என்பது விளைவு
ஆகவே நெருப்பில்லாமல்
புகையாது காரணம் இல்லாமல் விளைவு இல்லை அதை தடுக்கும் காரியம் இல்லை.
இந்திய ஊழல்களின்
ஊற்றுகண் எது?
அதுதான் முதலாளித்துவம்
. இல்லை தனியார் மயம் என்கின்றன சில கம்யூனிஸ்ட் கட்சிகள்
அடிப்படையிலேயே
தவறு இழைத்தால் எப்படி போரை நடத்துவது.
போர் போர் என
23ம் புலிகேசிபடத்தில் வடிவேலு கத்துவார் உடனே கூட இருக்கும் அமைச்சனும் ஆமாம் போர்
என்பான்.
ரசிக்கதக்க அந்த
காமெடி மூலம் இந்திய சமூக பகுப்பாய்வை பார்க்க சொல்லவில்லை ஆனால் , இந்தியா இன்னும்
அரை நிலபிரபுத்துவ அரைகாலனிய நாடு என சொல்லி மக்களை ஏமாற்றும் போலி கம்யூனிஸ்டுகளும்
– மாவோயிஸ்டுகளும் இந்தியாவின் ஆக பெரிய விசயம்
ஊழல்தான் என கொதிக்கும்
அன்னா ஹசாராவை விட பெரிய வித்தியாசம் ஏதுமின்றி இருப்பவர்கள் தாம்.
சரி விசயத்துக்கும்
வருவோம் ஊழல் தனது வளர்ச்சிக்கு உரமாக முதலாளித்துவத்தை கோருகிறது .
முதலாளித்துவம்
என்பது எந்தவிதமான ஊழலையும் செய்துதான் வளர்ந்து வந்துள்ளது.
ஏனெனில் முதல்
என்பது அது கால் பரப்பும் பிரதேசங்கள் எங்கும் ஊழல் எனும் முன் கருவியை கொண்டே பின்
செல்கிறது.
இந்தியாவின் பாட்டாளிவர்க்கத்துக்கு
எந்த முதலாளி என்ன ஊழலை செய்து கொண்டுள்ளான் என்பது குறித்து எந்த அக்கறையும் இல்லை
ஆனால் இந்தியாவின் ஓட்டு கட்சிகளுக்கு ஊழல் செய்யவும் அடுத்த கட்சியின் ஊழலை வெளியிடவும்
ஆன வேலை மிக முக்கிய தேவையாகும்.
மிக சாதாரணமா சொல்ல
போனால் ஊழல் இந்தியாவின் மிக ஆதாரமான பிரச்சனை இல்லை.
இந்திய முதலாளித்துவம்தான்
ஆகபெரிய பிரச்சனை ஆகும்.
முதலாளித்துவம்
இருக்கும் வரை ஊழல் இருக்கும் , மூக்கிருக்கும் வரை சளி இருக்கும்.
சரி விசயம் என்னவென்றால்
லலித் மோடிக்கு
சுஸ்மா சுவராஜ் உதவி செய்தார் என சொல்லி இப்போ காங்கிரஸ் தையா தக்கான்ன்னு குதிக்கிது
//லித் மோடி மீதான குற்றச்சாட்டின்
பின்னணியில் முன்னாள் மந்திரிகள் இருப்பதாக அவரது வக்கீல் குற்றம்
சாட்டினார்.ஐ.பி.எல். கிரிக்கெட் முன்னாள் தலைவரான லலித் மோடி மீது சட்ட விரோத பண பரிமாற்றம், வரி ஏய்ப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் தேடப்படும் குற்றவாளியாக மத்திய அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. அவர் லண்டனில் தங்கி இருக்கிறார்.
லலித் மோடி இங்கிலாந்தில் இருந்து போர்ச்சுக்கல் செல்ல பயண ஆவணங்கள் வழங்க சுஷ்மா சுவராஜ் உதவியதாக தகவல் வெளியானது. இதையடுத்து சுஷ்மா சுவராஜுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளன. இதனால் மத்தியில் பா.ஜனதா அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு பின்னணியில் காங்கிரஸ் முன்னாள் மந்திரிகள் இருப்பதாக லலித் மோடியின் வக்கீல் மெகமூத் அப்டி குற்றம் சாட்டியுள்ளார். இதுபற்றி அவர் மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:–
லலித் மோடி மீதான எந்த வழக்கிலும் அவருக்கு எதிராக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. அரசியல் காரணங்களுக்காகவே அவரை குறிவைத்து குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையிலான பா. ஜனதா அரசின் உறுதித்தன்மையை சீர் குலைக்கும் நோக்குடன் இந்த பிரச்சினை கிளப்பப்பட்டு உள்ளது..
தற்போதைய இந்த குற்றச் சாட்டு பின்னணியில் முன்னாள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மந்திரியான சல்மான்குர்ஷித், ப.சிதம்பரம், சசிதரூர் ஆகியோர் உள்ளனர். அவர்கள்தான் காங்கிரஸ் ஆட்சியின் போது இங்கிலாந்தில் இருந்த லலித்மோடி விசா பெற முயன்ற போது அவருக்கு கிடைக்கவிடாமல் தடுத்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விவகாரம் பற்றி லலித் மோடி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:–
இது ஒரு போர். அது இப்போது நடந்து வருகிறது. இந்த போரில் நின்று சண்டையிடும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. இந்த போரில் வெற்றி பெறுபவர்கள் யாரும் இல்லை. ஆனால் நான் எப்போதும் நிலைத்து நிற்பேன். போட்டி இப்போதுதான் தொடங்கி இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.//
/இந்தியாவின் மிகப்பெரிய
ஊழல் கட்சியான காங்கிரசை ஒழித்து வெற்றி பெற்ற பிஜேபியும் ஊழல் கட்சிதான் .
ஆக இங்கே எல்லாம்
ஊழல் மயமானது முதலாளித்துவ பொருளுற்பத்தி நடைமுறையாலேயே.
1.இந்தியாவில்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிறுவனம்தனது வரி ஏய்ப்பை செய்தே வருகின்றன
//இந்தியாவில்
திரான்சிபரன்சி இன்டர்நேஷனல்(Transparency
International) நடத்திய
2005ஆம் ஆண்டின் ஆய்வின் படி
62 சதவிகிதத்திற்க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு இலஞ்சம் கொடுப்பது, அல்லது
செல்வாக்கு பயன்படுத்தி பொது அலுவலகங்களில் வெற்றிகரமாக
வேலைகளை முடித்துக் கொள்வதில் முதல் கை அனுபவம்
இருந்ததாக தெரியவந்துள்ளது. அதன் 2008 ஆய்வில், 40% இந்தியர்கள் இலஞ்சம் கொடுப்பது அல்லது
ஒரு தொடர்பை பயன்படுத்தி பொது
அலுவலகத்தில் வேலையை செய்து முடிப்பதில்
முதல் கை அனுபவம் பெற்றுள்ளனர்,
என குறிப்பிடப்பட்டுள்ளது//
2.இந்த வரி ஏய்ப்பு
அதன் மூலம் கிடைக்கும் வருவாய் ஆகியவற்றை கொண்டு கொடுக்கும் பணத்தை வாங்காத கட்சிகள்
யாரும் இல்லை (இந்திய கம்யூனிஸ்டு , மார்க்சிஸ்ட் ) எல்லா கட்சியும் அடக்கம் (கம்யூனிஸ்ட்
கட்சிகள் உண்டியல் குலுக்கி பல வருசம் ஆட்சி)
3.ஒவ்வொரு புதிய
தொழில் அல்லது தொழில் விரிவுக்கும் லஞ்சமாக பணம் பெறப்படுகிறது அது இன்றி அனுவும் அசையாது
4.நடு-மேல்தட்டு
மத்தியதர வர்க்கம் முழுக்க வரி ஏய்ப்பை செய்கிறது.
5.95 சதவீதம் அனைத்து
அரசுசார்பு நிறுவனங்களும் ஊழல் மலிந்தவைகளாகி விட்டன
//2011
ல் இந்தியா திரான்சிபரன்சி இன்டர்நேஷனலின்
ஊழல்
மலிவுச் சுட்டெண்ணில் (Corruption
Perceptions Index) 178 நாடுகளுள்
95 வது இடத்தில் இந்தியா இருந்தது.//
6.சட்டம் ஒழுங்கு
என்பதும் இந்த ஊழலால் காசில்லாதவர்களுக்கு எட்டா கனியாக மாறியது
7.அரசியல் வாதிகளின்
ஊழல் என்பது வானளாவ உயர்ந்தது
////டிசம்பர்
2008 இல், 523 இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களில்
120 நபர்களுக்கு மேல் குற்றவியல் குற்றச்சாட்டு
இருந்தது. 2010 இல் இருந்து நடந்த
மிக பெரிய ஊழல்களுக்கும், அமைச்சர்கள்
மற்றும் முதலமைச்சர்கள் போன்ற மிக உயர்
அரசு நிலைகளுக்கும் தொடர்புகள் இருந்தது.//(
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D)
மேற்கண்டவைகளை
தவிர்த்து இந்த பட்டியல் சின்னது
1. 1987 போர்ஃபர்ஸ் ஊழல் , பேர்பாக்ஸ் ஊழல்
- ரூ. 260 கோடி
2. 1992 ஹர்சத் மேத்தா பங்குச்சந்தை
ஊழல் - ரூ. 5000 கோடி
3. 1994 சர்க்கரை இறக்குமதி ஊழல் - ரூ. 650 கோடி
4. 1995 பிரபரன்சியல் அபார்ட்மென்ட் ஊழல் ரூ. 5000 கோடி
5. 1995 யூகோய்லேவ் டைனர் ஊழல் - ரூ.
400 கோடி
6. 1995 - காஸ்லாவ் விருந்து ஊழல் - ரூ. 400 கோடி
7. 1995 - மேகாலயா வன ஊழல்
- ரூ. 300 கோடி
8. 1996 உர இறக்குமதி ஊழல்
- ரூ. 1300 கோடி
9. 1996 யூரியா ஊழல் - ரூ.
133 கோடி
10. 1996 பீகார் மாட்டுத் தீவன
ஊழல் - ரூ. 990 கோடி
11. 1997 சுக்ராம் டெலிகாம் ஊழல் - ரூ. 1500 கோடி
12. 1997 - எஸ்.என்.சி.
லாவலைன் மின்சாரத் திட்ட ஊழல் - ரூ.
374 கோடி
13. 1997 பீகார் நில ஊழல்
- ரூ. 400 கோடி
14. 1997 சி.ஆர். பான்சால்
பங்கு மார்க்கெட் ஊழல் - ரூ. 1200 கோடி
15. 1998 தேக்கு மர வளர்ப்பு
ஊழல் - ரூ. 8000 கோடி
16. 2001 யு.டி.ஐ.
ஊழல் - ரூ. 4800 கோடி
17. 2001 தினேஸ் டால்மியா பங்கு
மார்க்கெட் ஊழல் - ரூ.595 கோடி
18. 2001 கேதான் பரேக் செக்யூரிட்டி
ஊழல் - ரூ. 1250 கோடி
19. 2001 வீரேத்திர ரஸ்ட்டதி உலக அளவில் ஊழல்
- ரூ. 1 பில்லியன் வரை
20. 2002 சஞ்சய் அகர்வால் ஹோமிராடு
ஊழல் - ரூ. 600 கோடி
21. 2003 டெல்க்கி பத்திரபபேர ஊழல் - ரூ. 172 கோடி
22. 2003 பிரமோத் மகாஜன் - டாடா
விஎஸ்என்எல் ஊழல் - ரூ. 1200 கோடி
23. 2005 ஐ.பி.ஓ.டி. மாட் ஊழல்
- ரூ. 146 கோடி
24. 2005 பீகார் வெள்ள நிவாரண
ஊழல் - ரூ. 17 கோடி
25. 2005 - ஸ்கார்பென் சப்மைரின் ஊழல் - ரூ. 18, 979 கோடி
26. 2006 பஞ்சாப் சிட்டி சென்ட்டர்
ஊழல் - ரூ. 1500 கோடி
27. 2006 தாஸ்காரிடார் ஊழல் ரூ. 175 கோடி
28. 2008 பூனே பில்லியனர் ஜெகன்
அலிகான் வரி ஏய்ப்பு ஊழல்
- ரூ. 50,000 கோடி
29. 2008 சத்யம் ஊழல் - ரூ.
10, 000 கோடி
30. 2008 ரிலையன்ஸ் பங்கு விற்பனை ஊழல்
- ரூ. 513 கோடி
31. 2008 ராணுவ ரேசன் ஊழல்
- ரூ. 5000 கோடி
32. 2008 - ஸ்டேட் பாங்க் ஆப்
சௌராஸ்ட்ரா ஊழல் - ரூ. 95 கோடி
33. 2009 - ஜார்க்கண்ட் மருத்துவ சாதனங்கள் ஊழல் - ரூ. 130 கோடி
34. 2009 அரிசி ஏற்றுமதி ஊழல்
- ரூ. 2500 கோடி
35. 2009 ஒரிசா சுரங்க ஊழல்
- ரூ. 7000 கோடி
36. 2009 மதுகோடா சுரங்க ஊழல்
- ரூ. 37000 கோடி
37. 2010 எல்.ஐ.சி.
வீட்டுக் கடன் வழங்குவதில் ஊழல்
38. 2010 மும்பையில் ராணுவ வீரர்களுக்கு அடுக்குமாடி
குடியிருப்பு ஆதர்ஷ் ஊழல்
39. 2010 புதுடெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் நடைபெற்ற ஊழல்.
40. 2010 ஐ.பி.எல்
கிரிக்கெட் ஊழல்
41. 2011 - 2 ஜி ஸ்பெக்டராம் ஊழல்
- ரூ. 1,76,000 கோடி.
42. 2012- வக்பு வாரிய நிலமோசடி
ஊழல் - ரூ. 200000 கோடி
43. 2012 இந்திய
நிலக்கரி சுரங்க ஓக்கீட்டு முறைகேடு
ஊழல் - ரூ. 185591 கோடி
44. 2012 உத்தரப்பிரதேசம்
தேசிய ஊரக சுகாதாரத் திட்டம்
- ரூ. 10000 கோடி
45. ஹவாலா
நிதி முறைகேட்டில் 18 மில்லியன் டாலர் ஊழல்.
46. தங்க
நாற்கரச் சாலை அமைக்கும் திட்டத்தில்
நில மோசடியில் 100 மில்லியன் டாலர் ஊழல்.
47. கார்கில்
போரில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு சவப்பெட்டி
வாங்கியதில் ஊழல் மகாராஷ்டிரா மாநிலத்தில்
பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள்
தேசியத் தலைவர் நிதின் கட்காரியும்,
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மத்திய வேளாண் அமைச்சருமான
சரத்பவாரும் சம்பந்தப்பட்ட பாசனக் கால்வாய் திட்ட
மோசடியில் ரூ 75,000/- கோடி ஊழல்.
48. கர்நாடகத்தில்
பாரதீய ஜனதா கட்சியின் முதல்வராக
இருந்த எடியூரப்பா இரும்புத் தாது வெட்டி எடுப்பதில்
ரூ 50 கோடி ஊழல்.
49. கோவாவில்
பாரதீய ஜனதா கட்சி முதல்வர்
பணிக்கர் அரசின் இரும்புத் தாது
ஊழல் ரூ 25 கோடி ஊழல்
50. ஜார்க்கண்ட்
மாநிலத்தில் அர்ஜூன் முண்டா மற்றும்
மதுகோடாவின் கனிம ஊழல் ரூ
37 ஆயிரம் கோடி ஊழல்.
51. சத்தீஸ்கரில்
கனிம வளங்களை வெட்டி எடுக்க
ஒப்பந்தம் வழங்குவதில் மற்றும் மின் திட்டங்களில்
ராமன்சிங் அரசு செய்த முறைகேடு
ரூ 40 ஆயிரம் கோடி ஊழல்.
52. கர்நாடகத்தில்
ரெட்டி சகோதரர்கள் கனிம வளங்கள் வெட்டி
எடுப்பதற்கு ஆதரவாக செயல்பட்ட முன்னாள்
மத்திய அமைச்சர் சுஸ்மாசுவராஜ் பெற்றது ரூ 1500 கோடி
ஊழல்.
இது போக கீழ்கண்ட
விசயங்களில் ஊழல் நடக்கிறது
பிரதம மந்திரி கிராமப்புற சாலை
மேம்பாட்டு திட்டம், நபார்டு சாலை மேம்பாட்டு
திட்டம், தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாட்டு
திட்டம், மாநில நெடுஞ்சாலைகள் மேம்பாட்டு
திட்டம் முதலியவைகளிலும் மேற்கண்ட நபர்கள் லஞ்சம் பெறுகின்றனர்.
ஆகவே இந்திய உடம்பில்
சதையும் ரத்தமுமாக கலந்துவிட்ட ஊழல்
என்பதை வேரடி மண்ணோடு
ஒழிக்க அன்னா ஹசரே போன்று உண்ணாவிரதம் இருந்தால் முடியாது.
மொத்தம் அமைப்பும்
ஊழல் குற்றச்சாட்டில் குளித்தபின் மொத்த அமைப்பையும் மாற்றாமல் ஒன்றும் உதவாது.
எப்படி ஏமாத்துறாங்க பாருங்க ,
//ஊழலுக்கு காரணம் என்ன: அத்வானி புது விளக்கம்
புனே : ""அரசியல்வாதிகளிடம் உள்ள அகந்தை தான், ஊழலுக்கான அடிப்படை காரணம்,'' என, பா.ஜ., மூத்த தலைவர், அத்வானி பேசினார். மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் நடந்த பொதுக் கூட்டத்தில், பா.ஜ., மூத்த தலைவர், அத்வானி பேசியதாவது: நம் நாட்டில், அனைத்து துறைகளிலும் ஊழல் பெருத்து விட்டது. நாட்டின் வளர்ச்சிக்கு, மிகப் பெரும் அச்சுறுத்தலாக, ஊழல் உருவெடுத்துள்ளது. அரசியல்வாதிகளிடம் உள்ள, அகந்தையும், தற்பெருமையும் தான், ஊழலுக்கான அடிப்படை காரணம். தாங்களே சக்தி வாய்ந்தவர்கள். தங்களை மிஞ்சுவதற்கு வேறு யாரும் இல்லை என, சில அரசியல்வாதிகள் கருதுகின்றனர். இவர்களால் தான், ஊழல் அதிகரிக்கிறது. தனி நபர்களை, ஆன்மிகத்தை நோக்கி திருப்பச் செய்தால், ஊழல் குறைந்து விடும். ஊழலை ஒழிப்பதற்கு, இது மிகவும் உதவும். இவ்வாறு, அத்வானி பேசினார்.//
படிக்க வேண்டிய சுட்டிகள்
இந்திய பொருளாதாரத்தில் 50% கருப்பு பணமே
https://leftwrite.wordpress.com/2007/05/24/corruption-towards-a-marxist-understanding/
http://samirchopra.com/2012/03/05/black-money-parallel-economies-marxism-corruption-and-all-that/
http://www.realpolitik.in/index.php%3Foption%3Dcom_content%26view%3Darticle%26id%3D155:paid-news-how-corruption-in-the-indian-media-is-undermining-democracy%26catid%3D70:other-stories
http://www.thehindu.com/news/national/corruption-in-india-a-fact-of-life-say-us-diplomats/article4603544.ece
இந்திய பொருளாதாரத்தில் 50% கருப்பு பணமே
https://leftwrite.wordpress.com/2007/05/24/corruption-towards-a-marxist-understanding/
http://samirchopra.com/2012/03/05/black-money-parallel-economies-marxism-corruption-and-all-that/
http://www.realpolitik.in/index.php%3Foption%3Dcom_content%26view%3Darticle%26id%3D155:paid-news-how-corruption-in-the-indian-media-is-undermining-democracy%26catid%3D70:other-stories
http://www.thehindu.com/news/national/corruption-in-india-a-fact-of-life-say-us-diplomats/article4603544.ece