புலிகள் திமுகாவை நம்பி ஏமாந்தார்களா ?



புலிகள் திமுகாவை நம்பி ஏமாந்தார்களா ?




இனப்படுகொலை போரின் உச்சத்தில், உலகின் முன்னனி படை என்று சொல்லத்தக்தொரு போராளி அமைப்பின் தலைவர் கோடாலி வெட்டி கொல்லப்பட்டது போன்ற அடையாளங்களுடன்; அவரது வித்துடம்பு எடுக்கப்படுகிறது.






முப்பது ஆண்டுகால போர், மூன்று நூற்றாண்டுக்கும் முந்திய முரண்பாட்டின் முடிவு இவ்வாறு எழுதப்பட்டது என நெஞ்சில் இடி இறங்க தினசரிகளையும் டிவிகளையும் விடாமல் கவனித்துவந்த 7  கோடி மனிதர்களுள் நானும் ஒருவன்.



தமிழ் நாட்டின் ஓட்டு கட்சிகள் கக்கூஸ் பிரச்சனையை கூட (?)அரசியலாக்கும் வைகோ தலைமையில் திரண்ட அனைத்து ஓட்டு கட்சிகளின் உண்மை ஆதரவு நிலையும் இவர்களின் திராணியும் உரசிபார்க்கப்பட்டது ,மே19 2009 அன்றும் அதற்கு பிந்தைய காலங்களிலும்.
நடந்து முடிந்து ஆறு ஆண்டுகள் முடிந்தவிட்டது . தற்போது வந்துள்ள குற்றச்சாட்டு என்னவென்றால்,





//இலங்கையில் நடைபெற்ற இறுதிகட்ட போரின்போது விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்களுடன் திமுக எம்.பி. கனிமொழி பேசியதாக அந்நாட்டு வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மீண்டும் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக புதியதலைமுறைக்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், இறுதிகட்ட போரின்போது நடேசன், புலித்தேவன், ழிலன் உள்ளிட்டவர்களுடன் கனிமொழி பேசியதாக கூறியுள்ளார்.

இதனை ஒப்புக்கொண்டால், ஏராளமான மக்களும், விடுதலைப் புலிகளும் அழிந்ததற்கு காரணமாக இருந்ததற்காக வரலாறு தண்டிக்கும் என்பதாலயே கனிமொழி மறுத்துள்ளதாக அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக திமுகவினர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ள அனந்தி, 2ஜி விவகாரத்தில் தன்னுடைய வரையறைக்கு அப்பாற்பட்டு செயல்பட்டதைப் போலவே விடுதலைப் புலிகளுடனும் கனிமொழி பேசியதாக தெரிவித்துள்ளார்.

இறுதிகட்டப் போரின்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சரணடைவது குறித்து அப்போது ஆட்சியில் இருந்த பிரணாப் முகர்ஜி, சிதம்பரம் உள்ளிட்டோருக்கு தெரியாமல் இருந்திருக்குமா என்றும் அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
//
அந்த போர் நடந்த போதே ஒரு உண்ணாவிரதத்தை இனமான தலைவர் ?
அறிவித்தார் அந்த உண்ணாவிரதம் உலகமே இதுவரை கண்டிராதவகையில் ஆரம்பித்து உடனே முடிக்கப்பட்டது . தமிழர்கள் வசிக்கும் பகுதியில் கொத்து குண்டுகளை பிறகு அதிகளவில் போட்டார்கள் .
சரி விசயத்துக்கு வருவோம்
1.கனிமொழியுடன் விடுதலைபுலிகள் ஏன் பேசவேண்டும்.
2.கனிமொழி போரின் போக்கை அல்லது சரணடைதலை நிர்ணயிக்க திராணி உள்ளவரா?
3.ஒரு கொரில்லா போர் பிறகு மரபு ரீதியாக கட்டமைக்கப்பட்ட ராணுவம் என வளர்ந்துவிட்ட ஒரு அமைப்பு ஒரு முதலமைச்சரின் மகளுடைய
ஆலோசனையை கேட்டு நின்று இருக்குமா?
இதெல்லாம் கனிமொழி மீதான குற்றச்சாட்டை வைப்பவர்கள் காரணம்சொல்ல வேண்டிய விடயங்கள்.

அதை விட்டு இந்த குற்றச்சாட்டு உண்மைதான் என ஆராய்ந்தால்
உண்மையில் கனிமொழி இப்படி சொல்லாமல் எப்படி சொல்வார் என எதிர்பார்த்தார்கள்.

சண்டையிடுங்கள் என சொல்லி இருந்தார் என்றால் , சண்டையிட்டு இறந்திருப்பார்கள் இல்லையா?

இராணுவ சாகசவாதத்தில் மிக பிரசித்திபெற்றது புலிகளின் படை
சுமார் 5000 ஆயிரம் படை வீரர்களை வைத்து கொண்டு 25000 பேர் இருந்த
யானை இரவு படைதள வெற்றி ஆகியவை.
ஆனாலும் பலகீனமான பகுதிகளை கொண்டே இருந்தனர்.

1.ஆட்கள் பற்றாகுறை படையில் புதிய ஆட்களை சேர்க்க முடியவில்லைஇலங்கை ராணுவத்துடன் ஒப்பிடும்போது ஆட்கள் எண்ணிக்கையில் புலிகள் மிக குறைவு (மொத்தம் 12%தமிழர்களில் 3 லட்சம் பேர் புலிகளை ஆதரித்தனர்)

2.முதலில் கொரில்லா யுத்தம் நடத்திய புலிகள் பிறகு மரபு ரீதியான ராணுவத்தை கொண்டதோடு இடங்களை கைப்பற்றி ஆட்சியே நடத்தினர்
(பாயிண்ட் நம்பர் 1ன் படி மரபு ரீதியான ராணுவம் என்றால் தொடர்ந்து ஆட்கள் சேர வேண்டும் ஆனால் அப்படி சேரவில்லை .
அதற்கு பல காரணங்கள் இருக்கலாம் . )
3.இராஜ தந்திர நடவடிக்கைகள் – புதிய அரசின் ராணுவ தளபதி பொன்சேக ஒரு பேட்டியில் சொன்னார் . நாங்கள் சிறு குழுக்களாகி சண்டையிட்டோம், கொரில்லா போர்முறையை கையாண்டோம் என்றார். (கொரில்லா போர் என்றால் திடீரென தாக்குதல் சிறிய குழுவை கொண்டு தாக்கிவிட்டு தப்பித்தல்)
(பாயிண்ட் நம்பர் 2 ல் இருந்து புலிகள் கைவிட்ட யுக்தியை ராணுவம் கைகொண்டது)
இலங்கை ராணுவத்தின் ராஜதந்திர நடவடிக்கைகள் காரணமாக 32 நாடுகள் புலிகள் அமைப்பை தடை செய்தன
4.இந்தியாவின் தலையீடு முன்னை காட்டிலும் அதிக அளவில் புலிகளை ஒடுக்குவதில் இருந்தது (மிக சில அமைப்புகள் தமிழ்நாட்டில் கூட இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி நடப்பதை கண்டறிந்து அறிக்கை விட்டன போராட்டம் நடத்தின)
கனடா வில் புலிகளுக்கு நிதி சேகரிக்கும் வலைபின்னல் அழிக்க சட்டம் தீட்டப்பட்டது
5.ஒரு பக்கம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த இலங்கை ராணுவம் மறுபக்கம் ஆண்டுக்கு 3000 ஆயிரம் பேரை இராணுவத்தில் சேர்த்தது
6.கருணாவை 2004 புலிகள் அமைப்பு இழந்தது இவர் எதிர்களுடன் சேர்ந்தார்
7.கடல் புலிகள் அமைப்பின் மீதான தாக்குதல்களுக்கு அமெரிக்கா உதவி உள்ளது குறிப்பிடத்தக்கது.
8.போராளிிகளுக்கிடையே சகோதர யுத்தம் ஒரு வகையாக மொத்த தமிழ் அமைப்புக்கு பலகீனத்தை கொடுத்தத





 ஜேவிபி போன்ற இடதுசாரிகள் வர்க்க புரட்சியை முன்னெடுத்தபோது புலிகள் முதலில் உதவி செய்தனர் அல்லது ஆதரவு சக்தியாக இருந்தனர் பின்னர் முறித்து கொண்டனர் 

இப்படி பல்வேறு காரணங்கள் புலிகள் தோல்விக்கு காரணமாக இருக்கும் போது அதை பற்றிய ஆய்வும்இந்திய இடதுசாரிகளின் விமர்சனம் மீது ஆய்வும் நடத்தபடவே இல்லை. கட்டுகதைகளை அவிழ்த்துவிடும் இணையதளங்கள் சரியான தகவல்களை அளிக்கவே இல்ல
.
மீண்டும் கொரில்லா யுத்தம் துவங்கியதாக தவறான தகவலை அளித்தனர் 2007ல் 
இந்நிலையில் கனிமொழி சொன்னார் சரணடைந்தோம் என சொல்வது ஒரு பரபரப்புக்கு உதவலாம் ஆனால் மீண்டும் மீண்டும் இந்திய தமிழக ஆதரவு சக்திகளை  இலங்கை தமிழர்கள் இழக்கும் நிலைக்கே இது கொண்டு செல்லும்.




 Karuna (right) speaking to women LTTE fighters in Batticaloa district on Women’s Day in March 2004. Prabakaran failed to take into account the impact of Karuna’s defection from the LTTE on its overall military capability.

இதே அமைதிமயமான நிலை தொடர்ந்து நிலைக்கும் என்றும் பேரினவாத சக்திகள் அமைதி அடைந்து விட்டன என்றும் கருதுவது முட்டாள்தனம்.
மீண்டும் இலங்கையில் ஒரு போருக்கான தேவை ஏற்படலாம் (ஏனெனில் முரண்பாடு இன்னும் தீர்க்கப்படவில்லை)அப்போது தமிழகத்தின் ஆதரவு சக்திகளின் உதவி தேவைபடலாம்.தற்போது ஈழத்தாய் என அழைக்கப்படும் ஜெவை காட்டிலும் பல்வேறுவிதத்தில் உதவியவர்கள் திமுகவினர்.தனது சொந்த நலனுக்காகவேண்டினும் ஈழத்துக்காக பேசியவர் கருணாநிதி

ஆகவே அவர் செய்த மாபெரும் துரோகத்தை? மன்னிக்கவும் (இந்த துரோகம் என்பதே கருணாநிதியின் அரசியலுக்கு எதிரான தமிழ்நாட்டின் அரசியலுக்கு உகந்த பேச்சாகும் ஈழத்துக்கு உதவாது இது)தொடர்ந்து இறுதி லட்சியத்துக்கு செல்லவும்,தந்திரமாக செயல்படவேண்டும் .
அதை விடுத்து இந்தியாவில் இருக்கும் ஆதரவு சக்திகளை பகைத்து கொள்வது மேலும் மேலும் ஈழத்தவர்களை தனிமை படுத்தவே செய்யும்.

ஓரடி முன்னால் ஈரடி பின்னால் என லெனின் சொன்னதை போன்று
நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் பின்னால் இரண்டு அடிகள் செல்ல நேரிடும் என்பதை அவதானிக்க வேண்டும்.

குறிப்பு:
தமிழகத்தின் அரசியல் கட்சிகள் தங்கள் நலனுக்கு உகந்த வாறு இருக்கும் ஈழ பிரச்சனையை மட்டுமே கருத்தில் கொள்வார்கள் . தங்கள் நலனுக்கு எதிராக திரும்பும் அதே நிமிடம் அந்த பிரச்சனை எத்தனை பெரிதாகினும் கைவிடுவார்கள் .

செய்யவேண்டியது என்னவெனில் தீர்மான கரமான தீர்வுகளுக்கு இந்த அரசியல் கட்சிகளை நம்பாமல் அவற்றின் இயக்கவியல் போக்கை ஆய்வு செய்து கொண்டு, அவற்றுடன் முரண்படாமல் தொடர்ச்சியாக நம்பவும் செய்யாமல் ஒரு ஆதரவு சக்தி என்ற அளவிலே மட்டும் நம்ப வேண்டும்.

குறிப்பாக ஈழமக்களை அரசியல் படுத்த வேண்டும் .அவர்களுக்கு அரசியல் பாடங்கள் சொல்லி கொடுக்கவும் விவாதிக்கவும் திறணை ஏற்படுத்த வேண்டும்.

மக்களை அரசியல் படுத்திவிட்டால் நீங்கள் அரசியல் ரீதியான தீர்வுக்கு வெளி நபர்களை சார்ந்திருக்க வேண்டியதில்லை.

மக்களிடம் செல்லுங்கள் என்றார் மாவோ . 

ஆகவே மக்களே தீர்மானிக்கும் சக்திகள்.

மேலும் படிக்க:

http://www.frontline.in/static/html/fl2610/stories/20090522261001200.htm
http://www.firstpost.com/politics/ltte-lost-the-war-by-refusing-to-see-post-cold-war-realities-13921.html
http://news.rediff.com/slide-show/2009/aug/20/slide-show-1-how-india-helped-lanka-destroy-the-ltte.htm

http://madawalanews.com/47593
கீழ்கண்ட சவுக்கு கட்டுரை எப்படி வினாவையும் எழுப்பி விடையும் பகர்கிறது பாருங்கள் .
ஈழப்போரை நிறுத்து என கருணாநிதி பதவி விலகி இருந்தால் தமிழ் இனம் காப்பாற்ற பட்டிருக்குமாம் ?

மேலே நமது கட்டுரையில் அனு அனுவாக திட்டமிட்டு எப்படி சிங்கள படைகள் முன்நகர்ந்தார்கள் என விளக்கி இருந்தேன் .

இம்மாதிரி சவுக்கு போன்றோர்களின் அரைவேக்காட்டுதனமான கட்டுரைகள்
மக்களை மயக்கி எதோ கருணாநிதியால் இந்த ஈழபடுகொலை நடந்தது என நம்பவைக்கப்படுகிறது https://www.savukkuonline.com/4540/

/
தமிழினத் தலைவன், தமிழினத் தலைவன் என்று சொல்லிக் கொண்டே இனத்தை கறுவறுத்திருக்கிறார் கருணாநிதி.   திருக்குவளையிலிருந்து ஒரு சாதாரண மனிதராக சென்னை வந்து, தன் பேச்சு மற்றும் எழுத்துத் திறமையினால் சமூகத்தில் முக்கிய நபராக உருவாகி, இன்று பல ஆயிரக்கணக்கான கோடிகளை அவர் பரிவாரங்கள் சம்பாதித்து, தமிழகத்தை சூறையாட வழிகோலியதைத் தவிர தமிழ்ச்சமூகத்துக்கு ஏதாவது உருப்படியாக செய்திருக்கிறாரா என்றால் இல்லை.
தமிழினத்தின் தலைவன் என்று தன்னை அழைத்துக் கொள்வதில் தீராத இன்பம் காணும் கருணாநிதி என்ற ஒரே நபர்தான் ஈழப்போர் இறுதிக் கட்டத்தை எட்டியதற்கும் முள்ளி வாய்க்கால் படுகொலைகள் நடைபெற்றதற்கும் ஒரே பொறுப்பு.   ஈழத்தில் போரை நிறுத்து என்ற ஒற்றை முழக்கத்தோடு தமிழகமே பொங்கியெழுந்து போராட்டங்களில் ஈடுபட்டபோது, ஒரு புறம் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மீது காவல்துறையை விட்டு மிருக்கத்தனமாக ஒடுக்குமுறையில் ஈடுபட்டார்.  மற்றொரு புறம், அந்தப் போராட்டங்களை நீர்த்துப் போகச்செய்ய என்னென்ன தகிடுதத்தங்களெல்லாம் முடியுமோ அத்தனை தகிடுதத்தங்களிலும் ஈடுபட்டார்.
ஈழப்போர் உச்சத்தில் இருந்தபோது அவர் இழைத்த துரோகங்களுக்கான பல்வேறு விளக்கங்களை அவ்வப்போது அளித்து வருகிறார் கருணாநிதி. ஆனால், கருணாநிதி நினைத்திருந்தால், அந்த யுத்தத்தை நிறுத்தியிருக்க முடியும் என்பது மட்டுமே உண்மை.   போர் நிற்கிறதோ இல்லையோ….  என் இனத்தை அழிக்கும் அரசுக்கு துணை நிற்கமாட்டேன் என்று கருணாநிதி ஆதரவை வாபஸ் வாங்கியிருந்தாரென்றால் அதற்குப் பிறகு எப்படி மத்திய அரசு தாக்குப்பிடித்திருக்கும் ?   2009 ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும், 2004 ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உண்டு.  2004 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் கருணாநிதி மற்றும் திமுகவை மட்டுமே நம்பியிருந்தது.   அன்று திமுக ஆதரவை வாபஸ் வாங்கியிருந்தால், அரசு கவிழ்ந்திருக்கும்.  ஆனால், ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை குடும்பத்தோடு எண்ணிக்கொண்டிருந்தார் கருணாநிதி. 2008 ஆண்டில் ஸ்பெக்ட்ரம் ஊழல் நடைபெற்று முடிந்ததும், பல ஆயிரக்கணக்கான கோடிகள் தமிழகத்தை நோக்கிப் படையெடுத்தது.  அந்த நேரத்தில்தான் ஈழத்தில் போர் உச்சகட்டத்தை அளித்தது.//

புலிகளின் வீழ்ச்சியை பற்றி பேசும் நிறைய தமிழர்களுக்கு ஜேவிபி என்கிற இடதுசாரி ஆயுதந்தாங்கிய புரட்சி ஏற்கனவே நடைபெற்றது என்பதையும் அதற்கு இந்தியா உதவி செய்ததும் தெரியாது 

நன்றி கலையகம் http://kalaiy.blogspot.in/2014/06/blog-post_7.html
//
ஜேவிபி கிளர்ச்சியை ஒடுக்குவதற்காக, பாகிஸ்தான் இரண்டு ஹெலிகாப்டர்களை அனுப்பி இருந்தது. இலங்கையை சுற்றிய கடற் பகுதியில், இந்திய கடற்படைக் கப்பல்கள் ரோந்து சுற்றின. அப்போது, ஆயுதங்களை ஏற்றிக் கொண்டு வந்த வட கொரிய ட்ரோலர் படகுகள், இந்திய கடற்படையினரிடம் அகப்பட்டன. இதனால், ஜேவிபிக்கு வட கொரியா அனுப்பிய  ஆயுத விநியோகம் வந்து சேரவில்லை. பொலிஸ் நிலையங்களை தாக்கி கைப்பற்றிய, ஆயுதங்களை வைத்துக் கொண்டு மட்டுமே, ஜேவிபி அரச படைகளை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தது.



ஜேவிபி உறுப்பினர்களை தேடி அழிப்பதற்கு, இந்தியப் படைகளும் களத்தில் நின்று உதவி செய்தன. அந்த அழித்தொழிப்பில், குறைந்தது பத்தாயிரம் இளைஞர்கள் கொல்லப் பட்டனர். (25000 என்று ஜேவிபி கூறுகின்றது.) சுமார் இருபதாயிரம் இளைஞர்கள் கைது செய்யப் பட்டு சிறைகளில் அடைக்கப் பட்டனர். உண்மையில், அன்றிருந்த ஆயுதமேந்திய ஜேவிபி உறுப்பினர்கள், மொத்தம் இரண்டாயிரம் தான் இருக்கும்.



71 ம் ஆண்டு, ஜேவிபி கிளர்ச்சி தோல்வியடைந்தமைக்கு, போதியளவு மக்கள் ஆதரவு இல்லாதிருந்தமை காரணம் என்று நம்பப் படுகின்றது. இலங்கையின் இரண்டு பெரிய ஆளும் கட்சிகளான, ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள், தமக்குத் தெரிந்த ஜேவிபி உறுப்பினர்கள், ஆதரவாளர்களை காட்டிக் கொடுத்தனர். தேர்தல் காலத்தில், இந்த இரண்டு கட்சிகளும் மிகத் தீவிரமாக ஒன்றையொன்று எதிர்த்து தாக்கிக் கொண்டிருப்பார்கள். ஆனால், இலங்கையில் ஒரு இடதுசாரி கிளர்ச்சி நடக்கிறது என்றதும், இரண்டு எதிர்க் கட்சிகளும் ஒன்று சேர்ந்து விட்டமை இங்கே குறிப்பிடத் தக்கது. அதற்குக் காரணம், அந்தக் கட்சிகளின் வர்க்க அபிமானம்.
//

மேலும் ஜாப்னாவில் பிறந்த குறிப்பிடத்தக்க கம்யூனிஸ்ட்
https://www.marxists.org/history/erol/sri-lanka/index.htm சண்முக தாசன் நூட்களையும்
அனைவரும் வாசிக்க வேண்டும்

திமுக மறைமுகமாக புலி ஆதரவை எப்போதும் செய்தே வந்தது  .

ஆகவே கடைசியாக முள்ளிவாய்க்காலில் போய் நிறுத்துங்கள் என திமுக சொல்லவில்லை .
அப்படி நின்று கொண்டு போன் செய்து என்ன செய்யலாம் என கேட்பது சரியல்ல
அப்போது அந்த சூழலில் கனிமொழி என்ன சொல்லி இருந்தாலும் அதையெல்லாம் பெரிது படுத்தி உறவு சிக்கலை மேலும் மேலும் வளர்க்க தேவை இல்லை.

//1983 ஆகஸ்ட் 10-ல் தமிழீழத் தமிழர் பிரச்சினையில் இந்திய, தமிழ்நாடு அரசுகளின் நிலைப்பாட்டைக் கண்டித்து தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி, பொதுச் செயலர் பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் தங்களது சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தனர்.//

//
1989 டிசம்பர் 29-ல் பெண்களுக்கும் சொத்துரிமை வழங்கும் சட்டத்தை தி.மு.க. அரசு நிறைவேற்றியது. இந்திய அரசின் ரகசியங்களை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு திமுக அரசு தெரிவிப்பதாகக் கூறி தி.மு.க. அரசு 1991-ல் பதவி நீக்கம் செய்யப்பட்டது.
1991 மே 21-ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் இறந்தபோது நடைபெற்ற தேர்தலில் 174 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. 2 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. 1991 முதல் 1996 வரை நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியில் (அக்கட்சியின்) ‘முரசொலி’ ஏடு ஒடுக்குமுறைக்குள்ளானது.//

இதையெல்லாம் சொல்வதன் மூலம் திமுக மிக சரியான பாதையிலேயே சென்றது என சொல்ல வரவில்லை .

புலிகளின் மீதான விமர்சனம் இன்றி தனது சுயலாபத்துக்காக ஆடிய கட்சிகளில் திமுக தனது ஆதரவு நிலைபாட்டையே செய்து வந்தது.

ஆனால் இறுதி யுத்தத்தின் போது ஏன் பதவி விலகவில்லை என்று கேள்வி புலி ஆதரவாளர்களால் வைக்கப்படுகிறது .

ஆனால் இராணுவ ரீதியாக தோல்வியுறும் போது அரசியல் ரீதியா வெற்றி பெறலாம் என்பது தவறான வாதம்.

அதை விட்டால் இது இதை விட்டால் அது என கடந்த காலத்தில் சரியாக அமைந்த இயக்கவியல் போக்கு புலிகளுக்கு நான்காம் கட்ட போரின் போது கை கொடுக்கவில்லை.

இந்தியாவின் அரசியல் நிலைமைகள் கலைஞரின் கைக்குள் இருக்கவில்லை என்பதில் இரண்டு கருத்து இருக்கலாம் ஆனால் போரியல் நிலைமைகளில் மிகவும் பின் தங்கிய நிலையில் புலிகள் இருந்த போது;கலைஞர் தனது ஆட்சியை ராஜினாமா செய்தாலும் சரி , ஐக்கிய முன்னனி அரசிற்கு ஆதரவு வாபஸ் வாங்கினாலும் சரி எதுவும் வேறு மாதிரி நடந்து இருக்காது.


கொரில்லா போர் குறித்த முக்கிய நூல்கள்

1.மாவோ  எழுதியது
2.லெனின் எழுதியது
3.சேகுவேரா எழுதியது

2 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post