பெண்கள் அவர்களது வாழ்க்கை முறை சிந்தனை முறை அவர்களது மரபுரீதியான சாதகபாதகமான அம்சங்களின் மீதான அக்கறை எல்லாருக்கும் உண்டு இங்கு மக இகவுக்கும் தமிழச்சிக்கும் சில அல்லகைகளுக்கு மட்டும்தான் அந்த உரிமை இருக்குன்னு சொன்னா அது தப்பு
இணையம் எல்லாருக்குமே பாதுகாப்பு இல்லாததுதான் குறிப்பாக பெண்களுக்கு இணையத்தில் சுமார் ஐந்து வருடம் பயனாளிகளாக இருப்பவர்களுக்கு தெரியும் ஒரு போலி நபரால் ஆண்களே எவ்ளோ
மன உளைச்சலுக்கு உள்ளானார்கள் அந்த போலியின் நண்பன் ஆகிய ஒரு நபர் மூலமே இவர்தான் போலி என்பது ஊர்சிதம் ஆச்சு அந்த நண்பன் யாருன்னு கேட்டீங்கன்னா இங்கு முற்போக்கு பேசி திரியும் பெருபாலானவர்களுக்கு அவர் நண்பன் விசயம் இப்படி இருக்கையில் என்னமோ பெண்களுக்கு மட்டும் சிறப்பு கேர் எடுத்து இவர்கள் பேசுவதேல்லாம் சுத்த ஹிப்போகிரசி (இவர்கள் சொல்வது அந்த சாட்டின் பெண் பாத்திரம் மீதான ஆராய்ச்சி செய்பவர்கள் எல்லாரும் தங்களது வீட்டு பெண் இப்படி செய்தால் சரி என்பார்களா அல்லது தங்களது வீட்டு பெண்களுக்கு இப்படி கொடுமை நடந்தால் சரி என்பார்களா என பிரச்சனையை தனிநபர் பிரச்சனையாக மாற்றி அதாவது சமூகபிரச்சனை என்பதிலிருந்து தனிநபரான உனது பிரச்சனையாக இருந்தால் இந்த ஆராய்ச்சி செய்வியா என கேட்கிறார்கள்;
இவர்கள் முன்வைப்பதெல்லாம் இதுதான் நாங்கள் சொல்கிறோம் அவனை தாக்கு என்றால் தாக்க துவங்கி விடும் மெசினை போல தாக்க ஆரம்பிச்சிடனும் என்பதே -இவர்கள் மனிதர்களின் பேச்சு சுதந்திரத்தை ரத்து செய்கிறார்கள் அதன் மூலம் பாசிஸ்டாகிறார்கள் சிந்திக்க கூடாதென்கிறார்கள் அலசி ஆராய கூடாதென்கிறார்கள் சரி தவறு என்பதை மட்டும் பேசு என்கிறார்கள் - இதுதான் எல்லா போராட்டங்களிலும் நடந்த தவறு
முஸ்லீம்களை கொன்ற புலிகளுக்கு ஆதரவு அளிக்காதவர்களை புலிகள்
துரோகிகள்னு திட்டியதற்கும் இதற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை)
பெண்களின் மீதான பாலியlல் வன்முறை அவன்-இவன் என்றில்லை எவன் செய்தாலும் செருப்படி நிச்சயம்;ஆனால் இணையம் போன்ற கண்ணுக்கு தெரியாத ஒரு புறவய யதார்த்தத்தில் பெண் என்கிற தகுதியை மட்டும் வைத்து கொண்டு தன்னால் விவாதிக்க முடியாத தன்னால் ஒரு விசயத்தை புரிந்து கொள்ள முடியாத சாந்தி மாதிரியான பெண்கள் மற்றவர்கள் மேல் சேறு பூசுவது மிக கொடுமை.
சாரு நிவேதிதா விசயத்தில் அந்த பெண் யாராக இருந்தாலும் அவருக்காக பரிதாபப்படவும் அவரோடு சேர்ந்து போராடவும் தயாராக இருக்கிறோம்
ஆனால் அதே வேளையில் இந்த மொத்த விசயமுமே செட் செய்யபட்டு இருந்தாலும் அது அந்த் பெண்ணின் தவறல்ல;அப்போதும் எழுத்தாள அந்தஸ்தில் இருக்கும் இவர் மீது இத்தகைய சாட்டுகளுக்காக கண்டனமும் செய்கிறோம் ஏன் என்றால் பெண் என்கிற புரொபைல் வந்ததுமே உன் வேலையை காட்டினால் நாளைக்கு உம்மை ஒரு எழுட்தாளன் என சொல்லி உமது புத்தகத்தை வீட்டில் வைக்க முடியுமா?
அல்லது வீட்டில் இருக்கும் பெண்கள் உம்மை தொடர்பு கொண்டால் அவர்கள் கதி என்னாகும் என்பதே அந்த எழுத்தாளரின் முன் வைக்கப்படும் கேள்வி
எழுத்தாளரின் சார்பாக பேசிய ஒருவர் அவர்தான் பெண்ணை போகப்பொருளாக பார்கிறாரே ஏன் பேசனும் என கேட்கிறார்
சரி போகபொருளாக பார்ப்பவர் தெருவில் செல்லும் பெண்ணை கையை பிடிச்சு இழுக்கவோ தனது வீட்டை சுத்தம் செய்ய வரும் பெண்ணை கற்பழிக்கவோ அனுமதிப்பீர்களா என்பதே
ஒழுக்கம் சார்ந்த அவரது அகவயகருத்தை வைத்து அவரது செயல்பாடுகளுக்கு தீர்பளிக்க இயலாது
ஏனெனில் திருடன் என்பவன் அகவயமாக திருடுதல் நல்லனுதுன்னு கருத்தை வைத்து இருப்பான் அதை அவ்வப்போது சொல்லவும் செய்வான் அதற்காக திருட்டு சரியாகி விடுமா
அடுத்து எழுத்தாளன் இப்படித்தான் இருக்கனும் என்கிற பிம்பம்தான் அவரது செக்ஸ் சாட்டை தப்புன்னு சொல்கிறது என்கிற வாதம் தவறு
ஏனெனில் எழுத்தாளனுக்கு அவரே சொன்னமாதிரி இங்க ஒன்றும் பெரிய மரியாதையெல்லாம் இல்லை
சினிமா ஸ்டார்களுக்கு இருக்கும் பிரமையை விட மிக மிக குறைவுதான்
ஆனால் ஒழுக்க சார்ந்த சமூகத்தின் விதி எல்லாருக்கும் ஒன்றுதான்
மேலும் சம்பந்தபட்ட பெண் ஒரு அப்பாவியாக இந்த சாட்டை தவிர்க்க முடியாமல் நடத்தி இருக்கவும் வாய்ப்புகள் இருக்கு அந்த சமயத்தில் அந்த பெண்ணின் இடத்தில் இருந்து பாருங்கள்
ஒருபக்கம் பெரிய எழுத்தாளன் தான் அவர்மீது குற்றம் சொன்னால் சமூகம் என்னசொல்லுமோ என்கிற பயம் எதற்குமே பெண்ணை ப்ழிக்கும் உலகை குறித்து பயம் மரபு ரீதியாக ஒடுங்கி போன குணாம்சம் இதெல்லாம்
மேற்கொண்டு அவரை தவிர்க்கவும் எதுவும் பேசவும் செய்ய அவரை தடுட்து இருக்கலாம் இது ஒரு சாத்தியபாடுதான்
ஆனால் இது ஒன்றே சாத்தியாடு என்பதை ஏற்கவும் முடியாது
எழுத்தாளன் இப்படித்தான் செய்வேன் இப்படித்தான் எழுதுகிறேன் எனும் எழுத்தாளன் சமூகத்தின் ஒழுக்க விதிகளை எதிர்த்து கலகம் செய்யும் எழுத்தாளன் என்றால் விசயத்தை விட்டுவிடலாமே என கேட்கிறார்கள்
இல்லை அதுவும் தன்னை நாடிவந்து தனது இச்சைக்கு இணங்கிய பெண்ணுடன் அவர்து ராசலீலைகள் பற்றி நாம் பேசவில்லை
அவர்து எழுத்தில் மயங்கி வந்த அப்பாவி பெண்மீது செக்ஸ் டார்ச்சர் என்பது மன்னிக்கவே முடியாதது
சமூகத்தின் ஒழுக்க விதிகளை எதிர்த்து கலகம் செய்கிறேன்னு சொல்பவர் ஏன் ஆடைகளை கலைந்து விட்டு வரலாமே
ஏன் வருவதில்லை
ஆக பேசி பேசி மழுங்கடிக்கும் விசயமல்ல இது தீர்மானமாக கண்டிக்கவும் அதே நேரத்தில் இந்த விசயத்தை வைத்து அரசியல் புகழ் தேடுபவர்களை தவிர்க்கவும் வேண்டிய விசயமிது
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================