இந்தியாவில் புரட்சியை இவர்கள் நடத்துவார்களா ?

நம்ம கம்யூனிஸ்டுகள் இருக்காங்களே எந்த ஒரு விசயத்தையும் டாண் டாண்டு சொல்லி புடுவாக
அத்தகைய ஒரு புரட்சி காரரிடம் நமது கேள்விகளைவைப்போம்
நாம்: இந்தியாவில் ஊழல் மலிந்தது ஏன் கீழ்கண்ட வாறு ஊழல் பெருத்து போச்சே என்ன செய்யலாம்
பு.கா: ஊழலின் ஊற்றுகண் தனியார்மயம் தாராளமயம் உலகமயம் அதை தடுக்காமல் ஒன்றும் செய்ய முடியாது.
நாம்:அதற்கு என்ன செய்யலாம்
பு.கா:நிலவும் போலி ஜனநாயகத்தில் ஒன்றும் செய்ய முடியாது புரட்சி நடத்தி போராட்டம் நடத்தி அனைத்தையும் துடைத்து அழிக்கனும் அதுக்கு மக்கள் ஆதரவு வேணும்
நாம் :மக்கள் ஒரு பிரச்சனையை ஒட்டி கிளர்ந்து எழுந்தாங்களே அதுக்கு என்ன சொல்றீக
பு.கா:இப்படி கிளர்ந்து எழ கூடாது இந்த மக்களுக்கு இந்த மசோதாவால் ஒன்றும் நடக்காதுன்னு புரியவைக்கனும் .
நாம்: சரி எப்போ புரியவைக்க போறீங்க
பு.கா:அது எங்க கட்சி செயல்திட்டபடிதான் நடக்கனும்
நாம்:உங்க கட்சி இந்தியா பூரா இருக்கா
பு.காஇல்லை நாங்க இந்த மாநிலத்திலும் மற்ற மாநிலத்தில் வேற கட்சியும் இருக்கு
நாம்:அவங்களோட உங்களுக்கு பிரச்சனை அடிப்படையிலாவது ஒற்றுமை இருக்கா
பு.கா:இல்லை அவர்களது போக்கில் சில மாறுபாடுகள் இருப்பதால் அவர்களுடன் நாங்கள் இணைவதில்லை
நாம்:சரி ஊழல் பிரச்சனைக்கு வருவோம் என்ன செய்யபோறீங்க

பு.கா:காரணம் முன்ன சொன்னதுதான் மக்களை திரட்டி போராட போகிறோம்
நாம்:எப்போது போராடுவீர்கள்
பு.கா:எங்க கட்சியை முதலில் எல்லாரும் ஏத்துக்கும் போது
நாம்:இதற்கு மேல நம்மால கேள்வி கேட்க முடியலைங்க
(இந்த பேட்டியின் சாராம்சம் இதுதான் மக்கள் பிரச்சனையை ஒட்டி கிளர்ந்தாலும் அதை மேற்கொண்டு வளர்த்து செல்ல மாட்டார்கள் , அடுத்து இவர்களாக மக்களை திரட்டவும் இவர்களுக்குள் ஒற்றுமை இல்லை நாய் தேங்காயை கவ்விய கதை இவர்களுக்கே பொருந்தும்)

6 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post