ஜெயமோகனின் தீர்வும் அதிலுள்ள முரண்பாடும் (ஓரின புணர்ச்சி குறித்து)

ஜெயமோகனின் தீர்வும் அதிலுள்ள முரண்பாடும்
-----------------------------------------------------------------------
சுட்டி:

ஜெயமோகன் பதில்

ஓரினச்சேர்க்கை | jeyamohan.in



ஒரு விசயத்துக்கு தீர்வு சொல்லும் போதுதான் தனது சுயமுரண்பாட்டை அம்பலபடுத்துகிறார் ஜெமோ

1.ஒரு சமூகத்தை ஆய்வு செய்ய வரலாற்று பொருள்முதல் வாதத்தை எடுத்துகொள்ளலாம் என்கிறது மார்க்சியம் என்றால் இவர் மார்க்சியத்தின் ஒரு கூற்றை எடுத்து கொண்டு மற்றொரு கூற்றுக்கு மதத்தை தேடி ஓடுகிறார் அந்தோ பரிதாபமாக தீர்வு கிடைக்கவில்லை

2.சமூகத்தின் பாலியல் மாற்றங்கள்,அதன் குடும்ப அமைப்பு தோன்றுவது என்பதில் சமூக பொருளாதார காரணங்கள் குடும்பம் தற்போதைய நிலமைக்கு வருவதற்கு அடிப்படை என்பதை சொல்லாமல் மதத்திலும் சமூகத்தின் ஒழுக்கவிதிகளிலும் அந்தரத்தில் தேடி தோற்கிறார்.

3.எனவே சமூகமாற்றம் நடக்காமல் பாலியல் விடுதலை பாலியல் சுதந்திரம் மட்டும் கிடைக்க போராட சொல்கிறார் ஒரு அப்பாவியை ?

ஒரு தனிநபரின் பாலியல் வேட்கை அல்லது பாலியல் விருப்பம் சமூகத்தை சாராதது அல்ல சமூகத்தின் வரலாற்று வளர்ச்சியை கணக்கில் எடுக்காமல் அதை ஒடுக்கும் கருவியாகவும் தனிநபரின் பாலியல் இச்சையை அதி முக்கியமானதாகவும் கூற முடியாது மார்கனின் ஆய்வு படி தற்போதுள்ள குடும்பம் எனும் அமைப்புக்கு வர ஏற்கனவே நாலு படி நிலைகளை கடந்து வந்துள்ளது சமூகம் முதல் கணவன் மனைவி என்பவர்கள் அண்ணன் தங்கையே என சொன்ன மார்கன் சமூக வளர்ச்சி படியில் எப்படி ரத்த சம்பந்த உறவுக்குகிடையே பாலுறவு தவிர்க்கப்பட்டது ஏன் ஒரு குடும்பம் என்றால் ஆணும் பெண்ணும் என்கிற வளர்ச்சி படிநிலைக்கும் எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் பாலுறவு இருக்கலாம் என்கிற தீர்வுக்கும் வந்துள்ளது .

ஆதிகாலத்தில் இருந்தே சமூகம் ஒருபால் உறவை ஏற்கவில்லை அது சரி என்று நாம் இப்போது சொல்லவில்லை ஒருவேளை சமூகத்தின் வளர்ச்சி படியில் தற்போதுள்ள குடும்ப அமைப்பு மாறும் போதே ஒரு பால் உறவுக்கு அங்கீகாரம் கிடைக்கலாம் அல்லது கிடைக்காமல் போகலாம் இந்த விசயத்தை சமூகத்தின் பொருளாதார வளர்ச்சி கட்டத்துடன் வைத்து பார்க்க தவறும்


ஜெயமோகன் தீர்வுக்காக போராட சொல்வது அவரது அறியாமையை காட்டுகிறது

இது சம்பந்தமாக கூகுள் பஸ்ஸில் நடந்த விவாதம் இங்கே


தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post