வினவு - புரட்சி என்ன விலை
பாராளுமன்ற அரசியலின் நேரடி விளைவு அரசியல் பித்தலாட்டத்தின் தவிர்க்க முடியாத விளைவுதான் ஊழல் - லஞ்சம் என்பது அதன் கைக்குழந்தை .
அன்னா ஹசாரே என்கிறா காந்தியவாதி தனிநபராக அரசையும் அரசியந்திரத்தையும் நோக்கி சவால் விடுகிறார் தனது உடலை வருத்தும் உண்ணாவிரத நோன்பால் ஊழலை ஒழிக்க பார்க்கிறார் . இது முடியாது நடக்காது என கூவுகிறது வினவு என்கிற புரட்சி பேசும் கும்பல்
பேஸ்புக்கிலும் டிவிட்டரில் இயங்கும் மக்கள் ஆங்காங்கே கூடி தமது எதிர்ப்புகளை மழை போல பேரிடி போல வழங்கி வருகிறார்கள் .
இதை இவ்வாறு கேலி செய்கிறது வினவு
//வருடம் முழுவதும் பிசா, கென்டகி, எம்.டி.வி, ஐ.பி.எல், என்று வாழும் நடுத்தர வர்க்கம் அதற்கு ஊறு இல்லாமல் கொஞ்ச நேரம் காந்தியையும் போற்றுகிறது. வார இறுதி கேளிக்கைளில் கொஞ்சம் சலித்துப் போனால் கோவிலுக்கு போவதில்லையா? ஆக இந்த ஊழல் எதிர்ப்பு கூட வந்து போகும் ஒரு வீக் எண்ட்தான். இது முடிந்த பிறகு அவர்கள் ஐ.பி.எல்லுக்கு போவார்கள். சியர் லீடர்களோடு சேர்ந்து ஆரவரிப்பார்கள். கிரிக்கெட்டோ, ஊழல் எதிர்ப்போ தொடர்ந்து மக்களை ஆரவாரத்தில் வைத்திருப்பதே அவர்களது நோக்கம். அடிப்படையை மாற்றுவது நம் கையில். புரிந்தவர்கள் இந்த உண்ணாவிரதம் தோற்றுவித்திருக்கும் பொய்மையை கலைப்பதற்கு முன்வரவேண்டும்.//
வார இறுதி கேலிக்கை நடவடிக்கையாக குறுக்கி பார்க்கும் இதே வினவு துனிசிய மக்கள் புரட்சியை பற்றி என்ன சொல்கிறது பாருங்கள்
//எந்த நாட்டிலும் பாட்டாளிகளின் எழுச்சி மட்டுமே புரட்சியை வெல்ல போதுமானதல்ல. நடுத்தர வர்க்கம் எந்தப் பக்கம் சாய்கின்றது என்பதும் அவசியம். பொருளாதார நெருக்கடியினால் ஒரு சிறிய மேட்டுக்குடியினர் மட்டுமே தப்பிப் பிழைக்க, பெரும்பான்மை நடுத்தர வர்க்கமும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. நடுத்தர வர்க்கத்திற்கு ஊதியம் குறைவது பிரச்சினை. தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு பிரச்சினை. வேலையற்றவர்களுக்கோ உணவு வாங்க பணமற்ற பிரச்சினை. ஒரு நாட்டின் மொத்த சனத்தொகையில் பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் வர்க்கமும், நடுத்தர வர்க்கமும் ஒன்று சேரும் போது தான் புரட்சி சாத்தியமாகின்றது.//
நடுத்தர வர்க்கத்தின் புளிச்ச ஏப்ப போராட்டம் என்கிறது அன்னாவிற்கு பேஸ் புக டிவிட்டர்கள் தரும் ஆதரவை நடுத்த்ர வர்க்கமே கிரிக்கெட்டை போன்றுதான் இந்த போராட்டத்தை அனுகும் என்கிற வினவு ஒரு மக்கள் போராட்டம் என்பதில் நடுத்தர வர்க்கமும் , அடித்தட்டு வர்க்கமும் இணைய வேண்டும் என்கிறது
நடுத்தர மக்களின் போராட்டம் இப்படித்தான் இருக்கும் என ஒரு பக்கமும் அதே வாயால் நடுத்தர மக்கள் இருந்தால்தான் புரட்சி வெல்லும் என மறுபக்கமும் சொல்கிறது அடுத்து தனியார் மயம்தான் ஊழலுக்கு காரணம் என சொல்கிறது தனியார் மயத்தை ஒழிக்காமல் ஊழலை ஒழிக்கமுடியாது என நாம் புரிந்து கொள்ள வேண்டுமாம்
இதற்கு அதியமான் ஒரு சுட்டி எடுத்து போட்டிருக்கார் இதைவிட அதிகமாக தனியார்மயம் ஏற்படுத்திய நாட்டில் ஏன் ஊழல் இல்லை என கேள்வி கேட்டு இருந்தார் அதற்கு தக்க பதில் இல்லை .
இதோ அந்த சுட்டி //ஊழலின் ஊற்றுகண் பற்றி உங்க புரிதலை நீங்க தான் மெச்சிகனும். தனியார்மயம் தான் இதன் ஊற்றுகண் என்றால், பின் முற்றிலும் தனியார் மயமான நாடுகளில் ஏன் இத்தனை ஊழல் இல்லை. ஊழலை பற்றி கண்காணித்து அறிக்கை அளிக்கும் Transparancy International ஊழலில் மிக மிக குறைந்த் நாடாக டென்மார்க்கை தான் சொன்னது. ஆனால் டென்மார்க்கில் இந்தியாவை விட தனியார்மயம், தாரளமயம் மிக மிக அதிகம், ஆழம். பின் எப்படி அவர்களால் இத்தனை தூரம் ஊழலை குறைக்க முடிந்தது ? //
இதை குறித்து எந்த பதிலும் இல்லை வினவுகிட்ட டென்மார்க்கின் சமூக பொருளாதார கூறுகளை ஆராயவேண்டும் என கிளம்பி விடுகிறார்கள் .
தனியார் மயம் மட்டுமல்ல அரசு துறை நிறுவனங்களே ஒரு விசயத்தை செய்தாலும் அங்கே ஊழல் என்பது லஞ்சம் எனும் வடிவில் நடக்கும் --ஒரு கலெக்ட்ராபிஸ் பணியாளர் அரசிடம் சம்பளம் வாங்கினார் ஆனாலும் லஞ்சமாக குறிப்பிட்ட அளவு பெறுகிறார் அவரின் அதிகாரத்தை பொறுத்து லஞ்சத்தின் அளவு என்பது கூடவோ குறையவோ செய்கிறது .
ஆக தனியார் துறைகளிலும் லஞ்சம் இருக்கலாம் நாளை புரட்சிகர கட்சி அமைத்தாலும் லஞ்சம் இருக்கத்தான் செய்யும் கடுமையான சட்டங்கள் இன்றி என்ன செய்ய இயலும் .
அத்தகைய ஒரு சட்டத்துக்கு போராடுகிறார் அன்னா
முதலாளித்துவ ஜனநாயகம் தரும் அனைத்து வசதிகளையும் உரிமைகளையும் பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்கிறார் லெனின் ஆனால் இவர்களோ இந்த மசோத பற்றி இப்படி சொல்லி விட்டு இதை ஒபாமாவுக்கு அனுப்ப வேண்டும் ஆனால் இதை முன்னிறுத்தி போராட கூடாது என்கிறார்கள்
//இதற்கு மாற்றாக 'ஊழலுக்கு எதிரான இந்தியா' அமைப்பினால் முன்வைக்கப்படும் ஜன்லோக்பால் மசோதா, ஊழல் புகார்களின் பேரில் முதல் தகவல் அறிக்கை (FIR) தாக்கல் செய்யும் உரிமை, சுயேச்சையாய் விசாரிக்கும் அதிகாரம், பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களை ஏற்று விசாரிப்பது, அரசியல் தலைவர்களை மாத்திரமல்லாமல் அரசு உயரதிகாரிகளையும் விசாரிக்கும் உரிமை போன்றவற்றை வலியுறுத்துகிறது. இது மட்டுமல்லாமல், சி.பி.ஐயின் ஊழல் தடுப்புப் பிரிவோடு சேர்ந்து லோக்பால் அமைப்பு தேர்தல் கமிஷனைப் போன்றதொரு சுயேச்சையானதொரு அமைப்பாகச் செயல்பட வேண்டும் என்பதும் இவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளாகும்.//
உண்மையில் இந்த மசோதாவை நாம் பார்ப்போம் "
"ஜன் லோக்பால்" என்ற இந்த மசோதா என்ன சொல்கிறது
--------------------------------- ------------------------------------
இந்த மசோதாவின் சூத்ரதாரி கர்நாடகத்தில் மிகவும் சிறப்பாகச்
செயல்பட்டுவரும் லோகாயுக்தா அமைப்பின் நிறுவனரும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே மற்றும் பிரபல உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ப்ரசாந்த் பூஷன் போன்றோர் ஆவர். இம்மசோதாவின் நோக்கம், ஜன் லோக்பால் அமைப்பின் மூலம் ஊழல் புகார்களை உடனுக்குடன் (ஒரு வருடத்தில்) விசாரித்து முடித்து, சம்பத்தப்பட்ட நபருக்கு தண்டனை வாங்கித் தருவது, ஊழலின் மூலம் ஈட்டிய சொத்துக்களை முடக்குவது,
போன்றவை ஆகும். தவிர, ஊழலில் ஈடுபட்டவர் மந்திரியாகவோ அல்லது முக்கிய அரசாங்க அதிகாரியாகவோ இருப்பின், அவர் மீது வழக்குத் தொடர அரசாங்க அனுமதி தேவையில்லை
என்பதுவும் இம்மசோதாவின் முக்கிய அம்சமாகும். இம்மசோதாவை பாராளுமன்றத்தில் ஏற்று நிறைவேற்ற வேண்டுமென்பதுதான் இப்போதைய அன்னா ஹஸாரே தலைமையிலான உண்ணா நோன்பிருப்பவர்களின் முக்கியக் கோரிக்கை.
ஊழலுக்கெதிராகப் பிறப்பெடுத்துள்ள தற்போதைய காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் ஏற்கனவே ஊழலை ஒழிக்க லோக்பால் என்ற மசோதாவை பாராளுமன்றத்தில் கொணர்ந்து
நிறைவேற்றியும் உள்ளது. ஆனால் அதிலுள்ள ஓட்டைகளின் காரணமாக அது செயல்படுத்த முடியாத ஒரு சட்டம் என்பது அதை எதிர்க்கும் ஹஸாரே போன்றோர் கூறும் காரணம்.
அரசாங்கத்தில் லோக்பால் மசோதா மூலம் ஒரு மந்திரியோ அல்லது அரசாங்க அதிகாரி தொடர்புடைய ஊழலையோ வெளிக் கொணர்ந்து, விசாரித்து தண்டனை பெற்றுத் தர வேண்டுமானால், பொதுமக்கள் முதலில் லோக்சபா அல்லது ராஜ்யசபாவின் சபாநாயகரிடம் ஊழல் தொடர்பான புகார் மனுவை அளிக்க வேண்டும். சபாநாயகர் அம்மனுவைப் பரிசீலித்து, அது ஏற்புடையது என்றால் லோக்பால் கமிட்டிக்கு அனுப்புவார். பின்பு
அது விசாரிக்கப்பட்டு, தண்டனையளிக்கப்படும்(???). இயல்பாகவே சபாநாயகர் ஆளுங்கட்சியையோ அல்லது கூட்டணியையோ சார்ந்த நபராக இருப்பதால், ஆளுங்கட்சி அல்லது அதற்கு வேண்டிய அதிகாரி தொடர்பான புகார்களை விசாரிப்பதற்கு சபாநாயகர் எடுத்துக் கொள்வது சந்தேகமே. அதற்கு மீறி கமிட்டிக்கு அனுப்பப்பட்டாலும் விசாரணை ஆண்டுகள் கணக்கில் எடுத்து, மறக்கப்பட்டு, பொதுமக்களின் பணமும் விசாரணை
என்ற பெயரால் வீணடிக்கப்படும். எனவே அந்த லோக்பால் சட்டம் ஏற்புடையதல்ல என்பதே ஹஸாரே மற்றும் குழுவினரின் வாதம்.
ஜன் லோக்பால் மசோதாவின் அம்சங்கள்:
* மத்தியில் லோக்பால் என்ற அமைப்பும், ஒவ்வொரு மாநிலத்திலும் லோகாயுக்தா அமைப்பும் நிறுவப்படும்.
* உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் போன்று இவ்வமைப்பும் சுதந்திரமான அமைப்பாகும். இதன் விசாரணையில் அரசாங்கமோ அல்லது அதிகாரிகளின் குறுக்கீடோ இருக்காது.
* மற்ற வழக்குகள் போல் பல மாமாங்கங்களாக விசாரணை நடைபெறாமல், ஜன் லோக்பால் அமைப்பின் மூலம் எந்தவொரு வழக்கு விசாரணையும் ஒரு வருடத்தில் முடிக்கப்பட்டு,
அடுத்த ஓராண்டில் வழக்கும் முடிக்கப்பட்டு, இரண்டாண்டுகளுக்குள் தொடர்புடைய நபருக்கு தண்டனையும் அளிக்கப்பட்டு விடும்.
* ஊழல் மூலம் ஈட்டப்பட்ட, அரசாங்கத்திற்கு நட்டமேற்படுத்தப்பட்ட தொகை தண்டனைக்காலத்தில் மீட்கப்படும்.
* பொது மக்களுக்கு எந்தவொரு அரசாங்க அலுவலகத்தில் குறிப்பிட்ட பணி முடித்துக் கொடுக்கப்படா விட்டாலோ அல்லது தாமதப்படுத்தப்பட்டாலோ, தொடர்புடைய அதிகாரிக்கு அபராதம் விதிக்கப்பட்டு, அவ்வபராதம் மனுதாரருக்கு நிவாரணமாக அளிக்கப்படும்.
* ஆக உங்களுடைய ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் போன்றவை பெறுவதில் மெத்தனமோ, தாமதமோ ஏற்படுத்தப்பட்டாலோ, நீங்கள் இவ்வமைப்பை அணுகலாம். இதன் மூலம் ஒரு மாதத்திற்குள் உங்களுக்கு அது கிடைப்பதோடு மட்டுமல்லாமல், நிவாரணமும் பெற்றுத் தரப்படும். தவிர தரமற்ற சாலைகள், பஞ்சாயத்து அளவில் நடைபெறும் ஊழல்கள், முறைகேடுகள் போன்றவற்றையும் நீங்கள் இவ்வமைப்பின் கவனத்திற்கு எடுத்துச் செல்லலாம். இரண்டாண்டுகளுக்குள் தொடர்புடைய குற்றவாளி தண்டனை பெறுவார்.
* லோக்பால் அமைப்பின் உறுப்பினர்கள் அரசாங்கம் மூலம் நியமிக்கப்பட மாட்டார்கள். நீதிபதிகள், பொதுமக்கள் போன்றவர்கள் மூலம் மிகவும் வெளிப்படையான நியமனம்
இருக்கும். ஆகவே ஊழல் பேர்வழிகளே ஊழலை ஒழிக்கப் புறப்படும் அவலங்கள் தவிர்க்கப்படும்.
* ஜன் லோக்பால் உறுப்பினர்களே ஊழல்வாதிகளாக இருப்பின், அவர்கள் மீதான புகார்கள் உடனுக்குடன் விசாரிக்கப்பட்டு, இரண்டு மாதங்களுக்குள் டிஸ்மிஸ் செய்யப்பட்டு, தண்டனை பெற்றுத் தரப்படுவர்.
* புகார் அளிப்பவர்கள் மற்றும் புகாரில் தொடர்புடையவர்களுக்கு முழு பாதுகாப்பு
அளிக்கப்படும்.
---------------------------
வினவு வைக்கும் சொத்தை வாதங்கள்
1. இந்த போராட்டம் மூலம் ஊழலை ஒழிக்க முடியாது என்பதும்
இதற்கு நாம் சொல்லும் பதில் சும்மா உக்கார்ந்திருந்தா ஒன்றும் நடக்காது என்பதே
2. மத்திய வர்க்கம் செய்யும் பொழுது போக்கு என்கிறார்கள்
பதில் மத்தியதர வர்க்கம் கோபம் கொள்ள காரணமும் மத்தியவர்க்கம் இல்லாமல் புரட்சி நடக்காது என்பதையும் வினவிலேயே சொல்லப்பட்டும் உள்ளது
3. ஊடகங்கள் ஏன் பெரிது படுத்து கின்றன என்கிற இவர்களது கேள்வி
ராசா கைதை கூட ஊடகங்கள் பெரிது படுத்தின அதனால் ராவின் கைதை நாம் ஒன்றுமில்லாதது என ஒதுக்க முடியாது என்பதே பதி ல்
ஆக மக்களின் பிரச்சனைகளுக்கு இவர்களின் புரிதலுக்கும்மான இடைவெளி அதிகமாகி வருவதை இது காட்டுகிறது\
ஆக நாம் வினவிடம் கேட்க வேண்டியது இதைத்தான் புரட்சின்னா கிலோ என்ன விலை?
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================