வேண்டாம் ஈழத்துக்கு தற்கொலைகள்





ஈழ படுகொலைக்கு இன்னும் எத்தனை தற்கொலைகள்

முத்துகுமார் ஆரம்பித்து வைத்தது ஒரு போராட்டம் என்ற வகையில் எடுத்து கொண்டால் அவர் நினைத்தது அவரது பிணைத்தை வைத்து போராட்டத்தை தொடருவார்கள் என்று ஆனால் நடந்ததோ வேறு முத்துகுமார் இறந்ததும்

இன்னும் சில அவர் பாணியில் உயிர் கொடுத்தனர் .

இதனால் என்ன பிரயோசனம் என்பது இருக்கட்டும் இவ்வாறு உயிர்கொடுப்பது ஒரு பிரச்சனையை தீர்க்க உதவாது .

ஏன் உயிர் தியாகம் சரியல்ல என்கிறோம்

1.இனப்பிரச்சனை என்பது இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாக நடந்து வருகிறது இதற்கு தீர்வு போராட்டம் எல்லாவகையான போராட்டமும் ஆகும்

2. உயிர் தியாகம் ஒரு போராட்ட வகை என்று முத்துகுமார் விசயத்தில் ஆதரித்தாலும் முத்துகுமாரே தொடர்ச்சியாக தன்னை பின்பற்றி அனைவரையும் உயிர் தியாகம் செய்ய சொல்லவில்லை

3.நாட்டில் ஒவ்வொரு பிரச்சனைக்கும் உயிர்தியாகம் செய்ய ஆரம்பித்தால் என்னாகும் நாளைக்கு பிரச்சனையை பற்றி யோசிக்க வெறும் சுடுகாடுதான் இருக்கும்

4.இந்தவகையான உயிர்தியாகங்களை சில கட்சிகள் ஆதரிக்கலாம் ஏனெனில் கட்சியை வளர்க்க அவர்களுக்கு உயிர் தேவை படலாம் ஆனால் மனித நேயமிக்கவர்கள் இதை ஆதரிக்க மாட்டார்கள்


ஈழத்தில் கொலை செய்து விட்டு திருப்பதியில் கும்பிகும்பிடுகிறான்
ராசபக்சே ,

என் இனமே என இனமேன்னு சொல்லி ஈழத்துக்கு நாலுமணிநேரம்
மட்டும் இன்ஸ்டண்டு உண்ணாவிரதம் இருந்து தனது கடமையை முடித்து கொண்டார் "மு."

ஆனால் இந்த இளைஞர்கள் இன்னும் ஈழத்துக்காக தற்கொலை செய்வது சரியல்ல

ஈழத்துக்கு உங்கள் பிணங்கள் தேவை இல்லை தேவை ஒரு தீர்வு அது போராட்டத்தின் மூலமே கிடைக்கும் .

மீண்டும் மீண்டும் முத்துகுமாரன்கள் வேண்டாம் பிரபாகரன்கள்
உருவாகட்டும் .

//
மற்றும் ஈழத்தில் இன்னும் தமிழர்களுக்கு எதிராகத் தொடரும் கொடுமைகளால் மனம் வெதும்பி இளம் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி (25) தீக்குளித்து மரணமடைந்தார்.

நெஞ்சைப் பதற வைக்கும் இந்த கொடிய சோகம் நேற்று இரவு நடந்துள்ளது.

நெல்லை மாவட்டம் சங்கரன் கோயில் அருகே உள்ளது சீகம்பட்டி கிராமம். இங்குள்ள ராமசுப்பு என்பவரின் மகன் கிருஷ்ணமூர்த்தி (25). பிஇ பட்டப்படிப்பு முடித்து ராஜஸ்தானில் எஞ்ஜினீயராகப் பணியாற்றி வந்தார்.

விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார் இந்த இளைஞர். சிறு வயதிலிருந்தே, ஈழத் தமிழர் விவகாரங்களில் பெரும் அக்கறை காட்டி வந்தாராம். இந்த நிலையில் ராஜஸ்தானில் இவருக்கு எஞ்ஜினீயர் பணி கிடைத்ததும் அங்கு போய்விட்டார்.

விடுமுறையில் ஊருக்குத் திரும்பிய கிருஷ்ணமூர்த்தி, தொடர்ந்து ஈழப் பிரச்சினை குறித்தும், அங்கு இப்போது தொடரும் கொடுமைகள் குறித்தும் நண்பர்களுடன் பேசி வந்துள்ளார். ஆனால் பெற்றோரிடம் எதுவும் சொல்வில்லையாம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம், இலங்கையில் நடந்த தமிழர் படுகொலைகள் குறித்த ஐநா அறிக்கை வெளியானது. அதில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள், ராஜபக்சே அரசு நடத்திய கொலைவெறி தாக்குதல்களைப் படித்து கலங்கிப்போய்விட்டாராம்.//
--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-
வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post