வினவு புதிய தளத்திற்கு வாழ்த்துக்களும் சில விமர்சனங்களும்
புதிய தளத்தை பற்றி விளக்கிய வினவு பிரச்சனைகளை தாங்கள்எவ்வாறு அனுகுகிறோம் என்பதை விளக்கி இருக்கிறார்கள் நல்லது வினவு .
இத்தனை வருடமாக தளம் நடத்தில் எந்த வகையிலுமே உங்கள் போக்கு மாறவில்லை என்பது வருத்தமளிக்கிறது
எதை மாற்றி கொள்ள வேண்டும்:
சமூகமாற்றத்தை சிந்திக்கிறவர்கள் சமூக அக்கறை கொண்டவர்கள் நிச்சயம் வினவுக்கு வந்து வாசிக்கிறார்கள் எதேனும் ஒரு கருத்தைஅவர்கள் சொல்லவே செய்கிறார்கள் என்றால் மாற்று கருத்து கொண்டவர்களிடம் வினவும் அவர்கள் சார்பாக பின்னூட்டமிடும்சில அரைகுறைகளும் மிக கீழ்தரமானவர்கள்.
உதாரணம் மன்னார்சாமி என்ற பெயரில் பின்னூட்டமிட்டவர் கடைசியாக நான் நடத்திய விவாதத்தில் பைத்தியம் என திட்டுவதையே தனது விவாதமாக கொண்டார் . இந்த மாதிரி மெண்டல்கள்தான் வினவை கட்டி காப்பவர்கள் என்றால் வினவு ஆயிரக்கணக்கான பதிவுகள் எழுதினாலும் சமூகத்தில் ஒன்றும் செய்ய முடியாது .(link :
அடுத்து இன்னொரு அனானி நலம்விரும்பி என்கிற பெயரில் வந்த அயோக்கியன் என்னை பற்றிய ஒரு அவதூறை எழுதினார் அதற்கு ஆதாரம் கொடு என்றது கேவலமாக திட்டுதலை ஆரம்பித்து விட்டார் .
கமெண்டு மாடரேசன் எல்லாம் இருந்தும் இத்தகைய கமெண்டுகள்அனுமதித்து சுமார் 2 மணிநேரம் கழித்தே வினவால் அழிக்கப்பட்டன. மொத்தமாக ஒரு குழு வன்முறை நிகழும் இடம் என்பதே மூத்த பதிவர்கள் மற்றும் சிந்தனையாளர்களின் கருத்து .
பொதுபுத்தி எதிரானதாக சொல்வது :
பொதுபுத்தி என்ன சொன்னாலும் அதற்கெதிராக பேசுவது என்பதே
வினவுடைய புரட்சிகர செயல்திட்டமாக இருக்கிறது ஆனால் எல்லா விசயங்களையும் அப்படி பொது புத்தின்னு கேட்டகிரீஸ் செய்ய முடியாது உதாரணமாக அன்னாவின் பின்னால் போகும் மத்தியதரவர்க்கம் இழக்க பயப்படும் வர்க்கம் என்பதே இவர்களது கருத்து அதே நேரத்தில் இந்த மத்தியதரவர்க்கமில்லாமல் புரட்சி நடத்தமுடியாது என்பதாகவே இவர்கள் இன்னொரு பதிவில் எழுதுகிறார்கள்
ஒரு போராட்டத்தின் நோக்கத்தை குறை சொல்வது - அதனூடாக கேள்விகள் எழுந்தால் தனிமனித தாக்குதல் செய்வது என்பதாகவே இவர்களது நடைமுறை இருக்கிறது
அனைவருக்கும் எல்லா விசயங்களையும் விளக்கி புரியவைக்க முடியாது
என்பதால் கட்சிக்கு ஆள் சேர்த்து கட்சி சொல்வதை கேட்டால் போதும்
புரட்சி வந்துவிடும் என்று நினைக்கிறார்கள்
இது மேலும் அதிகாரத்தை மைய்யப்படுத்தும் செயலையே செய்யும்
ஏற்கனவே நடந்து முடிந்த புரட்சிகர அரசாங்கங்கள் எல்லாமே அதிகார மையங்களாலும் அதிகாரத்தில் இருப்பவர்களாலுமே பிரச்சனைக்கு உள்ளான சூழலில் கேள்வி கேட்பவர் விவாதிப்பவர்கள் சிந்திப்பவர்கள் தேவை இல்லை வெறும் பின்பற்றுபவர்களும் களப்பணியாளர்களுமே தேவை என்றும் அதை தேர்ந்தெடுக்கும் களமாகவே இணையத்தில் வினவு தளத்தை பயன்படுத்துவதை காண முடிகிறது .
ஆக இந்த விவாதங்கள் எல்லாம் எந்த திசையை நோக்கி செல்கிறது என்பதை தெளிவாக உணரமுடிகிறது .
ஏற்கனவே ஏற்படுத்தபட்ட முன்முடிவுகளோடு இருக்கும் விவாதங்களை
தீர்ப்பு கூறப்பட்ட தலைப்புகளில் விவாதிப்பது பலனில்லை என்பதே
அவர்கள் தனிமனித தாக்குதலை ஊக்கபடுத்துவதன் ரகசியம் என்பதும்
புரிகிறது
இத்தனை பேர் வாசிக்கிறார்கள் இத்தனை பதிவுகள் எழுதிட்டோம்
என்பதால் பெருமை இல்லை எப்படி எழுதுகிறோம் என்பதே வரலாற்று பதிவு குமுதம் கூடத்தான் அதிகம் விற்கிறது அதற்காக அதை சிறந்த பத்திரிக்கைன்னு சொல்ல முடியாது அப்படித்தான் வினவு
எனது விமர்சனங்கள் தொடரும் நீங்கள் திருந்தும் வரை
ஆலோசனை :
அனானிகளாக வருபவர்கள் குறைந்த பட்சம் தமது மெயில் விலாசத்துடன் வரவேண்டும் என்பதை வலியுறுத்தாத வரை வினவில் இந்த கும்பல் வன்முறை
தொடரும் என அஞ்சுகிறேன்
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================