ஞானிக்கு ஓ போட ஏன் முடியவில்லை

எங்குமே சில அறிவுஜீவிகள் தங்களை அறிவு ஜீவிகள் என நம்பவைக்க படாதபாடு படுகிறார்கள் அத்தகையோரில் இந்த ஞானியும் ஒருவர் இவரோ இந்த போராட்டம் சரியல்ல அந்த போராட்டம் சரியல்ல என பேசி திரிகிறார் கொஞ்சநாளைக்கு முன்னால 49 ஓ போட சொன்னார் அதனால் மறுவாக்கு பதிவோ எந்த மாற்றாமோ வராது என்பதை மட்டும் மறைத்து விட்டார்.(இதை பற்றி விரிவா எழுதி இருக்காங்க அதை இடுகிறேன் )

சமூக மாற்றத்திற்காக சிந்திப்பவர்கள் வேறு சிந்திக்கனுமே எழுதனுமேன்னு சிந்திக்கிறவன் வேறு எல்லா விசயத்திலும் நொட்டை சொல்பவர்கள் இரண்டாவது வகைமாதிரி

அன்னாவின் போராட்டமே ஒரு டுபாகூர்னு சொல்வனுக்கு ஒரு இந்திய அளவிலான மக்கள் ஆதரவு இல்லை மேலும் இவர்களா மக்களை ஈர்க்கும் ஒரு போராட்டத்தை ஏனோ செய்யவே முடியல ஞானி எழுதிய ஒரு கட்டுரையை நான் படிக்க நேர்ந்தது அதற்கான எனது எதிர்வினை கீழே:


ஞானிக்கு இந்த பெயரை வைத்தவன் என் கையில் கிடைக்காமல் இருக்கவேண்டும் என நான் வேண்டிகொள்கிறேன்

ஞானி வைக்கும் கேள்விகளின் உளுத்துபோனபகுதிகளை பற்றி பார்ப்போம்

//உண்ணாவிரதம் முடிந்தது.இது ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கத்துக்குக் கிடைத்த பெரிய வெற்றி என்று மீடியாக்கள் கொண்டாடுகின்றன.இங்கேதான் என் சில கவலைகளை முன்வைக்க விரும்புகிறேன்.

இதேபோல மற்றவர்கள் உண்ணாவிரதம் இருந்து ஒரு கோரிக்கையை அரசின் முன் வைத்தால், அரசு ஏற்றுக்கொண்டு விடுமா?///

இந்த கேள்வியை கேட்க ஞானி எப்பவாவது ஒரு நாள் உண்ணாவிரதமாவது இருந்து இருக்கனும்  ஒன்று இன்னொன்று ஞானி ஊழலை ஒழிக்க என்ன செய்யலாம்னு கொஞ்சம் மண்டையை கசக்கி இருக்கனும்

/
நான்கு நாள் உண்ணாவிரதத்துக்கு அடி பணிந்த இந்திய அரசு, பத்து வருடமாக மணிப்பூரில் ஐரம் ஷர்மிளா இருந்து வரும் (இப்போதும்..) உண்ணாவிரதத்தைப் பொருட்படுத்தாதது ஏன்? நவம்பர் 2000த்தில் அசாம் ரைபிள்ஸ் என்ற இந்திய ராணுவப் பிரிவு இம்பாலில் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த பொதுமக்களை ஒரு கிழவி உட்பட, தீவிரவாதிகள் என்று சுட்டுக் கொன்றது. இதைக் கண்டித்தும், மணிப்பூரில் அமலில் இருக்கும் ராணுவச் சட்டத்தை விலக்கக் கோரியும் ஷர்மிளா உண்ணாவிரதம் தொடங்கினார். தற்கொலை முயற்சி என்று அவரைக் கைது செய்து மூக்குக்குழாய் வழியே கட்டாய உணவு செலுத்தி வருகிறது அரசு. தற்கொலை முயற்சிக் குற்றத்துக்கு அதிகபட்ச தண்டனையே ஒரு வருடம்தான் என்பதால், ஒவ்வொரு வருடம் முடிவதற்கு சில நாட்கள் முன்பு ஷர்மிளாவை விடுதலை செய்துவிட்டு, திரும்பக் கைது செய்யும் சடங்கை 10 வருடமாக அரசு செய்கிறது. 2004ல் ராணுவத்தால் கொடூரமாக மனோரமா என்ற பெண் கொல்லப்பட்டதும் நூற்றுக்கணக்கான மணிப்பூர் பெண்கள் ராணுவ அலுவலகம் முன்பு வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அதில் சிறுமிகள் முதல் முதியவர்கள் வரையிலான 40 பேர் முழு நிர்வாணமாக ராணுவ அலுவலகம் முன்பு நின்று 'எங்களையும் பாலியல் வன்முறை செய்து கொல்' என்று முழக்கமிட்டனர்.
மணிப்பூரும் இந்தியாதான்; ஷர்மிளாவும் இந்தியர்தான். ஆனால், ஒரு சட்ட மசோதாவை எழுதப் போகும் கமிட்டி பற்றிக் கொதித்துப் போகும் அறிவுஜீவிகளுக்கு, சொந்த நாட்டில் நடக்கும் ராணுவக் கொடுமையோ, கல்பாக்கம், கூடன்குளம் போன்ற அணு உலைகள் எவ்வளவு பாதுகாப்பானவை என்பது பற்றியோ ரத்தம் கொதிப்பதே இல்லை. லஞ்சம் ஊழலைத் திட்டுவதுதான் இருப்பதிலேயே எளிமையானது; அரசியல்வாதியைத் திட்டுவது அதைவிட எளிமையானது.
//

ஷர்மிளாவின் போராட்டத்தை ஒடுக்கியது போலீஸ் ஏன் இவரின் போராட்டத்தை ஒடுக்கவில்லை என கேட்பதெல்லாம் ஒரு கேள்வியான்னு ஞானியை பார்த்து நாம் கேட்கவேண்டும் .
சொந்த நாட்டில் நடக்கும் எல்லா கொடுமைகளையும் என்னவோ ஞானியும் இந்த புதிய புரட்சிகாரர்களம் மாத்திரம்தான் முகம் கொடுப்பது போலவும்
மற்ற மத்தியதர உழைக்கும் மக்களோ ஏழை உழைக்கும் மக்களோ பேசுவதே இல்லை என்பது போலவும் அதெற்கெல்லாம் ஏன் பொங்கலை என்கிற கேள்வியை வைக்கிறார் ஞானி

இங்கே பொங்கியது சரியா தப்பான்னு கேட்டால் அதுக்கு ஏன் பொங்கலைன்னு கேட்பது எப்படி நியாயம் . இப்படி ஒவ்வொரு போராட்டத்தையும் கூர்மழுங்கடிப்பவர்களோ எதற்கும் பொங்கவில்லை .

/கேட்கும் ரிஜிஸ்திரார், தாசில்தார், ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் எதிர்க்கவும், போராடவும் அவர்களுக்கு முதுகெலும்பு கிடையாது. ஊழல் எதிர்ப்பை திருவிழாவாக, கூட்டு பஜனையாகக் கொண்டாடுவது ஆபத்தில்லாதது.
//

ஞானியும் எதாவது ஒரு கலெக்டர் ஆபீஸ்முன் போராட்டம் அறிவித்து நாமெல்லாம் போகலைன்னா இந்த குற்றச்சாட்டை சொல்வதில் நியாயம் இருக்கும் ஆனால் இவரோ நாடகம் போடுவது சமூகத்தின் மீது நாட்டாமை
செய்வதும்தான் வேலை எங்க இருக்கு நேரம்


//அவர்களிடம் மற்றவர்கள் கோரிக்கை எழுப்பலாம்; பரிந்துரைக்கலாம். இயற்றப்பட்ட சட்டம் தவறானதென்றால், நீதிமன்றம் சென்று போராடலாம். தடியெடுத்தவன் தண்டல்காரன் என்ற அணுகுமுறை - அது காந்தியத் தடியாக இருந்தாலும், தவறுதான்.
// க்டைசியாக சொல்லிவிட்டார்

ஆளும்வர்க்கத்துக்கு மட்டும்தான் இங்கு சட்டம் போட உரிமை இருக்குன்னு
தெளிவாக வர்க்க சார்பை ஞானி காட்டிவிட்டார் இதுக்கு மேல பேச என்ன இருக்கு இவர் ஆளுவர்க்க ஜால்ரா



சாராம்சமாகவும் சில வார்த்தைகள்



ஞானி வைக்கும் வாதங்கள் இவைதான்

1.ஊழலை ஒரு மசோதாவால் ஒழிக்க முடியுமா?
அப்படி ஒழிக்கமுடியாது என அவருக்கும் தெரியும் நமக்கு தெரியும்
நாம் சொல்வது முடியாது என்கிற விசயத்தை நோக்கி முடியும்
என சொல்லி வைக்கும் ஒவ்வொரு அடியும் ஏன் விமர்சிக்க வேண்டும்

2.நான்கு நாள் உண்ணாவிரதம் இருந்தால் எல்லா பிரச்சனையும்
அரசு தீர்த்து வைக்குமா ?
எந்த விசயத்துக்காவது ஞானி சாகும் வரை உண்னாவிரதம்
இருந்து இருக்கிறாரா என்னமோ அன்னாவும் மத்திய அரசும்
ஒரு ஒப்பந்தம் போட்டு நான்கு நாட்களுக்குள் உண்ணாவிரதம்
முடிந்து மசோதாவுக்கு அப்புரூவல் கொடுத்த மாதிரி
பேசுவது சுத்த முட்டால் தனம்

3.ஜ்ரோம் சர்மிள் இருக்கும் உண்ணாவிரதத்தை ஏன்
மற்றவர்கள் கண்டு கொள்ளவில்லை ?

ஜ்ரோம் சர்மிள் 10 வருடம் எப்படி உண்ணாவிரதம் இருக்கமுடியும்
என்பதை இந்த ஞானி விளக்கனும் முதலில் அடுத்து
அதை கண்டுகிடவில்லை என்பது எதேச்சையானது திட்டமிட்டது அல்ல
ஜ்ரோம் சர்மிளை ஆதரித்து ஞானி ஏன் உண்ணாவிரதம் இருக்கவில்லை

4.ஆளும் வர்க்கம் மட்டுமே மசோதா போடனும் ?

இதாய்யா உங்களை அம்பலபடுத்திய விசயம் நீர் ஆளுவர்க்க
கூசா


--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

5 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post