தேர்தல் பாதை திருடர் பாதை என்ன செய்யலாம்?
தீர்வுகளை அலசி காயப்போடுவோர் நடைமுறையில் எதுவும் செய்வதில்லை நடைமுறையில் எதுவும் செய்வோர் தீர்வுகளை பற்றி யோசிப்பதில்லை என்கிற முரண்பாடான நிலையை காண்கிறேன் .
அன்னா வின் போராட்டம் ஒரு ஏமாற்று அது ஒரு மாலைநேர பொழுது போக்குதேனீர் சுவைத்து கொண்டே சமூகத்தின் கீழ்மைகளை குறித்து பேசுவது போன்றது என சொல்வோர் அந்த போராட்டத்தில் மக்கள் ஏன் மெழுகுவர்த்திகளை எடுத்து வந்தனர் என ஆச்சரியப்படுகிறார்கள் ஏன் மெழுகுவர்த்தி ஏன் இந்த அமைதி ஏன் அடிதடி நடக்கவில்லை
என்கிறார்கள் புரட்சியை தமது அடிநாதமாக பாதசுவடாக வரித்து கொண்டவர்கள்.
அன்னாவின் பிந்தொடரும் மக்களோ முழுப்பிரச்சனைக்கும் தீர்வு என்பதற்கு பதிலாக எதாவது ஒரு இடத்தில் இருந்து ஆரம்பிக்கனும் என்பதே அவர்களது முடிவு ஊழல் ,சட்டமீறல் அதிகார துஸ்பிரயோகம் என அனைத்து பிரச்சனைகளையும் ஒரே அடியில் தகர்த்துவிட முடியும் என்பதை அவர்கள் கொஞ்சமும் நம்பவில்லை .ஊழலுக்கு எதிரான சட்டங்களும் அமைப்புகளும் சரியாக இருந்தால் அதை கட்டுபடுத்திவிடலாம் என்பதே இவர்களது வாதம் .
இந்த இடத்தில் ஊழல் மற்றும் லஞ்சத்தினை வளர்த்த மக்களே இதை சொல்கிறார்கள் இந்த பரிணாமத்தின் மூன்றாவது பகுதி ஏன் தன்னை சுயவிமர்சனம் செய்வதில்லை என்கிறா மிகப்பெரிய கேள்வி இருக்கு
ஊழல் என்பது தனியார்மயத்தின் விளைவுதான் என்பவர்களிடம் கீழ்கண்ட மொத்த ஊழலின் லிஸ்டும் கொடுக்கப்பட்டால் (இந்தியாவில் நடந்த மிகப் பெரிய ஊழல்களில் சில:
1. பங்குச் சந்தை ஊழல் 1,000 கோடி
2. சர்க்கரை ஊழல் 650 கோடி
3. போபர்ஸ் ஊழல் 65 கோடி
4. ஹவாலா ஊழல் 65 கோடி
5. எம்.பி., டிரேடிங் 32 கோடி
6. உர ஊழல் 133 கோடி
7. மருத்துவ உபகரண ஊழல் 5,000 கோடி
8. இந்தியன் வங்கி 1,336 கோடி
9. மாட்டுத் தீவன ஊழல் (பீகார்) 1,000 கோடி
10. நில ஊழல் (பீகார்) 400 கோடி
11. வேட்டி – சேலை ஊழல் (தமிழகம்) 11 கோடி
12. நிலக்கரி ஊழல் (தமிழகம்) 750 கோடி)
மேற்கண்ட ஊழல்களை பார்க்கும்போது இது தனியார் மயத்தினால் மட்டும் நடந்த ஊழல் அல்லன்னு தெரியலாம்
அதில் மிகப்பெரிய ஊழலாக ஸ்பெக்ட்ரம் அலைகற்றை இருப்பதை சுட்டிகாட்டி அதனால் தனியார்மயத்தை ஒழித்துவிட்டால் ஊழல் அகன்றுவிடும் என்கிறார்கள் .
அரசும் அரசுதுறை நிRuவனங்களும் ஊழலற்ற ஒரு சரியான பாதையில் இயங்குவதாக நினைப்பது எவ்வளவு பெரிய மாயை என்பதை இவர்களுக்கு யார் புரியவைப்பது .
அரசும் அதிகாரவர்க்கங்களும் இந்த போலி ஜனநாயகத்தில் குளிர்காய்ந்து கொண்டுள்ள ஒரு வர்க்கமாகும் இவர்களை குறித்து கேள்வி எழுப்பவோ இவர்களுக்கு எதிராக போராடவோ மக்களை விடுவதில்லை இந்த புரட்சிகாரர்கள் .
சோசலிச ருஸ்யாவிலும் தற்போதைய சீனாவிலும் எந்த வர்க்கம் அதிகாரவர்கமாக ஆனதோ அதைபோல ஒரு வர்க்கம்தான் இந்தியாவை சுரண்டி திங்கிறது .
அரசியல்வாதிகளின் ஊழல் மட்டுமே இங்கு பிரமாதமாக பேசவும் விவாதிக்கவும் படுகிறது தினமும் ரேசன் கார்டுக்காக நிற்க்கும் ஒரு ஏழை பெண்ணிடம் லஞ்சம் வாங்கும் அதிகாரியும் ஒரு கம்பெனியின் கணக்கு வழக்குகளை போலியாக மாற்றி அதை சரி செய்ததாக சொல்லி பணம் வாங்கி கொண்டும் அப்புரூவல் தரும் ஒரு பெரிய அதிகாரியும் இவர்களுக்கு கண்ணுக்கு ஏன் தெரியாமல் போனார்கள்
ஊழல் கறைபடாத ஒரு அதிகாரியை காண்பது உயிர்பெற்றுவந்த காரல் மார்க்சை பார்ப்பது போன்று மிக அற்புதமாக மாறியமைக் கண்டு வியக்காதவரில்லை .
ஆக லஞ்சம் என்கிற சின்ன அலகுதான் ஊழல் என்கிற பெரிய மீனாக சமூகத்தில் வலம்வருகிறது . லஞ்சம் என்பது தவிர்க்க முடியாதது என்கிற மாயையை இந்த அதிகாரிகள் தாம் உருவாக்கி வைத்துள்ளார்கள் இதற்கேற்ப சட்டமும் எந்த அமெண்மெண்டும் இல்லாமல் அம்பேத்கர் காலத்தில் இருப்பதுபோல இன்றும் நீடிக்கிறது .
விண்டோஸ் வந்தால் அடுத்த வெர்சன் வருது ஆனால் சட்டம் வந்தால் அது மாறாமல் காலத்து சூழலுக்கு ஏற்ப மாறாமல் நிலவுகிறது இந்த ஒன்றே போதும் அதிகாரிகள் இதை காட்டி லஞ்சம் வாங்க ?
உதாரணமாக ஒரு ஜாதிசான்றிதழ் வழங்க 500 ரூபாய் லஞ்சம் வாங்கும் அதிகாரியும் ஸ்பெக்ட்ரம் ராசாவும் ஊழலில் மற்றும் லஞ்சத்தின் அளவுகளில் வேண்டுமானால் வித்தியாசபடலாம் ஆனால் செயல் என்னவோ கரப்சந்தான் காரணம் என்னவோ பணத்தாசைதான்
ஒரு கொலைகாரனை தண்டிக்க என்னவிதமான சட்டங்கள் இருக்கிறதோ அதைவிட மிக குறைந்த கண்டிப்புள்ள சட்டங்களே இந்தியாவில் உள்ளது மேலும் தார்மீக ரீதியாக லஞ்சமும் ஊழலும் சரிதானோ என எண்ணுமளவுக்கு மக்களின் மனநிலையும் மாறிப்போனது.
ஒரு பக்கம் தனக்கு காரியம் ஆகவேண்டுமென்றால் லஞ்சம் கொடுக்கும் மக்கள் மறுபக்கம் லஞ்ச ஊழலை ஒழித்துவிட போராடினால் என்படி சரியாக இருக்கும் .
தனிநபர்களின் ஒழுக்கத்தில் இருந்து சமூகம் கட்டமைக்கப்பட்டால் மட்டுமே சட்டங்கள் செல்லுபடியாகும் “காப்பான் பெரிசா கள்ளன் பெரிசான்னா “ கள்ளந்தான் பெரிசின்னு இப்போ பதில் வரும் ஏன்னா .
லஞ்ச ஒழிப்பு துறை புதுசு புதுசா டெக்னிக் கண்டு புடிச்சும் இப்பலேம் லஞ்சம் ஒழிஞ்சுடுச்சான்னா இல்லைன்னுதான் சொல்லனும் அது நாளொரு மேனி பொழுதொரு வண்னமுமாக வளர்ந்து வருகிறது .
மக்கள் லஞ்சத்துக்கு எதிரா ஒருங்கிணைந்து நிற்காம லஞ்சத்தை ஒழிக்க இயலாது இது மக்கள் கூட்டமைப்பை ஏற்படுத்தி மக்களிடம் கொண்டு செல்வதன் மூலமே முடியும் அடுத்து ஊழல்
இதை சாதாரணமக்கள் புரிந்து கொண்டும் கேள்வி கேட்கும் நிலையில் அதிகாரவர்க்கம் இல்லை
இருக்கிற அமைப்போ சிவில் சமூகம் தலையிட்டு கேள்வி கேட்கும் படி இல்லை அதை மாற்றத்தான் அன்னா போராடினார் .
நாம் அதை ஆதரிக்கிறோம் ஆனால் அன்றாட வாழ்வில் லஞ்சம் கொடுப்பவர்களாக இருக்கிறோம் என்பது ஒரு முரண்பாடே.
நமது அனைவரின் சுய ஒழுக்கத்தை கட்டமைக்காமல் ஆளும் வர்க்கத்தின் நலத்தை மட்டுமே கட்டுபடுத்த முடியும் என்பது நகைப்புக்கு உரியது .
ஊழல் என ஒன்று நடந்தால் அது அரசியல் வாதிகள் மற்றும் அதிகாரிகளின் கள்ளா கூட்டிலேயே நடக்கிறது
கீழ்மட்டத்தில் ஒரு இ எஸ் ஐ கார்டுக்கு ஐந்து ரூபாய் வீதம் லஞ்சம் வாங்கும் அடிமட்ட பணியாளும் மேல்மட்டத்தில் ஆடிட்டுக்கு 20 ஆயிரம் வாங்கும் அதிகாரியும் இருக்கும் வரை லஞ்சம் என்பது ஊடாடி விளையாடுவதை தடுக்காத வரை நாம் ஊழலையும் ஒழிக்க இயலாது ஏன்னா இது நாணயத்தின் ஒரு பக்கத்தை மட்டும் அழிப்பது போன்றது
ஊழல் என்பது மிகப்பெரிய தீமையாக கண்முன்னே நின்று ஆட்டம் காட்டியதுதான் மக்கள் முழிச்சு பார்த்து அடடே இதை விடக்கூடாதுன்னு போராட்டம் துவங்கிட்டாங்க .
இந்த மக்களை கேலி பேசி இவர்கள் ஏதும் இழப்பதற்கு இல்லாதவர்கள் அல்லது சுத்த சோம்பேறிகள் எனும் புரட்சி காரர்களோ ஊழல் என்பதே தனியார் மயம்தான் காரணமுனு சொல்லி இந்த அதிகார வர்க்கத்தை மீண்டும் தப்பிக்கை வைக்கிறாங்க .
ஆக எந்த மாற்றமும் சமூகத்தில் நடக்கனும்னா தன்னளவில் நடக்கனும் என்கிற வேட்கை ஆரம்பமாகனும் .
நாம் மாறாதவரை எந்த சட்டமும் எந்த அமைப்பும் லஞ்ச ஊழலை ஒழிக்காது அதே போல் நாம் போராடதவரை நிரந்தரமாக நமக்கு நன்மை செய்யும் அமைப்பு நிலவாது.
கண்ணை மூடிட்டு இந்த அமைப்பை தூக்கி எறிஞ்சுட்டு இன்னொரு அமைப்பை ஏற்படுத்தினாலும் தொடர்ச்சியா கவனிப்பும் போராட்டமும் இருக்கனும் இல்லைன்னா அதிகாரவர்க்கம் என்பது உருவாகி நம்மை சுரண்டி ஒடுக்குவதை நம்மால் தடுக்க முடியாது.
மேலும் மக்கள் திரள் பாதைசரி அகிம்சை பாதை தவறு என்பவர்கள் கூட திரண்ட மக்களை கேலி பேசி மக்களின் உள்ளார்ந்த போராட்ட உணர்வை மழுங்கடிக்கிறார்கள் இதன் மூலம் மக்களுக்கு துரோகம் செய்கிறார்கள் ‘
மக்களை நேசி மக்களிடம் இருந்து கற்றுக்கொள் மக்களுக்கு அதை சொல்லி கொடு என்கிற மாவோவின் வார்த்தைகளை மறந்தவர்களே இப்படி செய்வார்கள்
சாராம்சமாக :
1.ஊழல் என்பது முதலாளித்துவ போட்டியின் விளை பொருள்
முதலாளித்துவத்தின் தீமையோடு பின்னி பிணைந்திருக்கும் இந்த ஊழலும் லஞ்சமும் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தினாலேயே முடிவு கொண்டு வரப்படும்
2.ஊழலை எதிர்க்கும் எந்த போராட்டம் ஆனாலும் அது ஆதரிக்கப்படனும் வழிமுறை , நோக்கம் இவற்றை குறை சொல்வது ஆளும் வர்க்கத்துக்கு தொண்டு செய்வதாகும்
3. நிகழும் சுரண்டும் அமைப்பு தொடர்ந்தால் எந்த சட்டங்களும் ஊழலுக்கு மருந்து செய்ய முடியாது அதாவது சுரண்டலை ஒழிக்காமல் ஊழலை ஒழிக்க நினைப்பது தீயை அணைக்காமல் புகையை அணைக்க நினைப்பதாகும்
4.மக்கள் எழுச்சியை போராட்டமாக்கி மக்களுக்கு போதித்து மாபெரும் போராட்டங்களை நடத்துவதுன் ஊடாகவே புரட்சி வெடித்து சமூகமாற்றம் நிகழும்
5. எந்த சமூக மாற்றத்தின் பின்னாலும் தொடர்ச்சியான கவனிப்பும் போராட்டமும் இருந்தால் மட்டுமே அதிகாரவர்க்கம் என ஒன்று உருவாகாமல் இருக்கும்
அந்த அதிகாரவர்க்கம் மற்ற அனைத்தையும் ஒடுக்கும் நிலை வராது .

Tags
debate on corruption