தொடர்பற்றவற்றின் தொடர்ச்சி
சமூகம் முழுக்க இயக்கமென்பது தொடர்பற்றதாக்கி
நம்மால் பார்க்கப்படுகிறது .
ஒரு சினிமா என்பது நமது அரசியல் சமூக பொருளாதார
வாழ்நிலைக்கு அப்பால் வானத்தில்
தொங்கி கொண்டு இருக்கும் ஒரு விசயமா?
ஏன் எந்திரன் படத்தை எதிர்கிறீர்கள் என்கிறார்கள்
காசுபோட்டு படம் எடுக்கிறான் முதலாளி
மக்கள் காசுபோட்டு படம் பார்கிறார்கள்
இடையில் நீங்கள் என்ன புறக்கணிக்க
சொல்கிறீர்கள் - இது கேள்வி
சாதாரண ஒரு கேள்வியாக இருப்பினும்
இதில் உள்ள சமூக அசட்டுத்தனத்தை
பாருங்கள்.
இந்த படத்துக்கு கொட்டப்படும் பணம்
அதன் விளம்பரம் , செய்திகள் பத்திரிக்கைகள்,
மற்றும் சன் நெட் ஒர்க் முழுக்க ஈடுபட்டு
ஏற்கனவே கைப்பற்றி இருக்கும் ஊடகத்தின் மூல
அளிக்கப்படும் விளம்பரம்
ஒரு தடவையாவது இந்த படத்தை பார்க்க
வைக்க செய்யப்படும் பிரயத்தனங்கள்
ஒரு வியாபாரம் என்பதை மீறி ஆக்கிரமிப்பாக
இவர்களுக்கு தோணுவதில்லை
ஏன்னா சினிமா வேற அரசியல் வேற
சமூக பொருளாதாரத்தில் ஆதிக்கம் என்பது வேற
இவர்களை பொருத்தமட்டில்
ஈழத்தில் கொத்து கொத்தாக மனித உயிர்களை
கொன்றபின் "செம்மொழி மாநாடு எடுத்தார்
கருணாநிதி"
ஒரு இனம் பூண்டோடு அழிக்கப்பட்டபோது
அதற்கு எதிப்பு தெரிவித்த போராட்டங்கள் நசுக்கப்பட்ட
போது அதை செய்தவர் நாந்தா தமிழ் இன
காவலன் என பாசாங்கு செய்து ஒரு மாநாடு
நடத்துகிறார் எனில் நியாயமாக புறகணிக்கப்பட
வேண்டும்
ஆனால் என்ன சொன்னார்கள் இலங்கை பிரச்சனை
வேறு தமிழ் மொழி வேறுன்னு.
இவர்கள்தான் இன்று எந்திரன் படம்வேறு
சன் குழுமத்தின் ஆக்கிரமிப்பு வேறு என்கிறார்கள்
கலை, மொழி, அனைத்து சமூக வாழ்நிலையில்
இருந்து பிரித்து ஏன் பார்கிறார்கள்.
ஏன் மொத்தமாக ஒன்றுடன் ஒன்று பிணைந்த இயக்கமாக
பார்க்க இயலவில்லை .
சினிமாவில் பணம் சம்பாதித்து அதை அரசியலில் முதலிடாக்கலாம்
அரசியல் , சினிமா, மொழி என்பன முதலீடு செய்யும்
வியாபாரங்களாக மாறிவிட்ட பின் தூய கலை
மொழி இவற்றை பற்றி பேசுவது.
மனிதன் தலைவேறு உடல்வேறு என பேசுவது போலத்தான்
அடுத்து மக்கள் கருத்து என சொல்வார்கள்
மக்கள் கருத்து என்பது ஊடகத்தை சார்ந்து இயங்குவதை
கவனிக்க மறுக்கிறார்கள்.
ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற இயக்கம் என்பது
எங்கும் இல்லை சமூகத்தில் .அப்படி இருப்பதாக
நினைப்பது கற்பனையே/
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================