விசயத்தை தலைகீழாக புரிந்துகொள்ளும் வில்லவனுக்கு பதில்

/இந்த வார தமிழக அதிர்ச்சி சிறுவன் ஆதித்யாவின் கொலை. சாதாரணமாக ஒரு கொலைக்கு
தமிழ்நாடு இவ்வளவு தூரம் முக்கியத்துவம் தருவதில்லை, இந்த முறை நமது அதிகப்படியான கோபத்துக்குக் காரணம் கொலை செய்தவர் ஒரு பெண் என்பதால்தான். தனது காதலரின் நான்கு வயது மகனை கழுத்தை நெரித்துக் கொன்று பிறகு சூட்கேசில் வைத்து பஸ் ஒன்றில் வைத்துவிட்டு தப்பிவந்தது அவரது குற்றம். கேள்விப்பட்ட மக்களும் செய்தி வாசித்தவர்களும் கொதித்துப்போய் விவாதிக்கிறார்கள். //


வில்லவன் அவர்கள் விசயத்தை புரிந்து கொண்டதே தப்பு இதில் இவர்புரிந்து கொண்டதை கொண்டு ஒரு கட்டுரை எழுதினால் இப்படித்தான் இருக்கும் அதிகபடியான கோபத்துக்கு காரணம் கொலை செய்தவர் பெண் என்பதால்  அல்ல கொலை செய்யப்பட்டவர்  ஒரு குழந்தை என்பதான் இந்த சமூக கோபம்


//மக்களின் சிந்தனையை தீர்மானிக்கிற ஊடகங்களும் பூவரசி மீது வசைமாரி பொழிகின்றன. கொலைகாரி, ராட்சசி, கள்ளக்காதலி, கீப் ஆகியன அச்சு ஊடகங்கள் பூவரசியை குறிப்பிடப் பயன்படுத்திய வார்த்தைகளில் சில.//

அதில் தவறு இருப்பதாக படவில்லை யாரோ செய்த தவறுக்கு யாருக்கோ
தண்டனை கொடுத்தவள் ராட்சசி இல்லையா?

//நான் விவாதிக்க விரும்புவது பூவரசி செய்த குற்றம் பற்றியல்ல. //
ஏன் பேச கூடாது

//ஏனெனில் இதுவரை ஒரு குழந்தையின் கொலைக்காக நாம் இத்தனைதூரம் உணர்ச்சிவயப்பட்டதில்லை என்பதால் குற்றத்தைத் தாண்டி வேறொரு காரணி நம்மை இவ்விடயத்தில் கோபம்கொள்ளவைக்கிறது என்பது தெளிவு. தன் பிள்ளைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ளும் பெற்றோர் பற்றிய செய்திகள் ஏறத்தாழ நாம் தினசரி வாசிப்பவை. பணத்துக்காக குழந்தையைக் கடத்தி கொலைசெய்த சம்பவங்களும் நாமக்கு அவ்வப்போது வாசிக்கக்கிடைப்பவை. தனக்குப் பிறந்ததுதானா என்ற சந்தேகத்திலும் ஜோசியக்காரன் சொன்னதாலும்கூட சொந்தப் பிள்ளையை கொன்ற தந்தைகள் கதையும் நமக்கு புதிதல்ல. எவ்வளவுதான் ஞாபகங்களைக் கசக்கிப் பார்த்தாலும் பூவரசி மீது நமக்கு உண்டான கடுங்கோபம் மற்ற சம்பவங்களின்போது வந்த மாதிரி தெரியவில்லை. ஏன்?//

அந்த சம்பவங்களுக்கு இப்படி பரவலாக கோபம் வராதது தவறுதான் ஆனால் இப்போ வந்த கோபம் இந்த குழந்தைகள்
கொலைக்கு முற்று புள்ளி வைக்க வேண்டும் என்பதே அதை தவறென சொல்வது தவறு வில்லவன்

//காரணம் மனிதாபிமானமோ அல்லது ஒழுக்கமான வாழ்வின்மீது நமக்குள்ள பிடிப்போ இல்லை, சமூகத்தின் சகல திசைகளிலும் வேரோடியிருக்கும் ஆணாதிக்க சிந்தனையால்தான் நாம் பூவரசியை விசாரணைக்கு முன்னாலேயே வெறுக்கிறோம்.//

ஹ ஹா ஆமாங்க உங்களமாதிரி ஆளுக இதை ஆணாதிக்க சிந்தனைன்னு சொல்லி
பூவரசிமாதிரி ஆட்களுக்கு வக்கீலாவது வருந்ததக்கது சிந்தனையின் தேக்கம் உங்களிடம் தெரிகிறது .

குழந்தை கொலையை ஆண் செய்தாலும் தப்புதான் பெண் செய்தாலும் தப்புதான்
ஆனால் அந்த தப்பு திட்டமிட்டு செய்யப்பட்டு இருக்கு அதனால் இப்படி
மொத்த சமூகமும் கோபப்படுது

// அவர் மனநிலை சரியில்லாதவரா அல்லது அவரது காதலர் ஜெயக்குமாரால் மோசமாக ஏமாற்றப்பட்டவரா என்றெல்லாம் நாம் பரிசீலிக்கத் தயாரில்லை (ஒரு தகவல்: மனநிலை பாதிக்கப்பட்டு தன் சொந்தக்குழந்தையைக் கொன்ற தாய்மார்கள் இருந்திருக்கிறார்கள், தமிழ்நாட்டில்கூட ஒரு பெண் தன் கைக்குழந்தையை அரிவாள்மனையில் வெட்டிக் கொன்றிருக்கிறார்). ஏமாற்றப்பட்ட ஒரு கள்ளக்காதலி காதலனின் குழந்தையைக் கொல்வதா என்ற எண்ணம்தான் நம்மை செலுத்துவதாகத் தோண்றுகிறது.//

அய்யா புண்ணியவானே ஒரு தற்செயலான கோபத்தில் இது நடக்கவில்லை திட்டமிட்டு
கொன்று சூட்கேசில் எடுத்து சென்று போட்டுள்ளார் .

இதையெல்லாம் குற்றமல்ல என சொல்லும் நீங்கள் அல்லது உங்களை போன்றோர்
மறுபரிசீலனை செய்யுங்கள்

பூவரசி, ஒரு வறிய குடும்பத்தில் பிறந்து முதுகலை பட்டப்படிப்பு வரை படித்திருக்கிறார், சிறந்த மாணவி எனும் தகுதியுடன். வேலைக்கு வந்த வங்கியில் ஜெயக்குமாரை சந்தித்து காதல்வயப்பட்டிருக்கிறார். பத்திரிக்கைகள் பிரயோகிக்கும் கள்ளக்காதலி என்ற சொல்லே நியாயமற்றது. ஏனெனில் ஜெயக்குமார் தனக்குத் திருமணமான விசயத்தையே பூவரசியிடம் மறைத்திருக்கிறார். அவரது உடல் இச்சைகளுக்கு  பயன்படுத்தப்பட்டு இருமுறை கருக்கலைப்பு செய்துகொண்டிருக்கிறார் பூவரசி. இதன்பிறகும் அவர் ஜெயக்குமாரிடம் வைத்த கோரிக்கை தன்னைத் திருமணம் செய்துகொள்ளச் சொன்னதுதான்.  ஒரு பெண்ணின் சாதாரண கோரிக்கை நிராகரிக்கப்படும்போது அதுக்கு நானென்ன பண்ணுறது என்று சுலபமாக கடந்து போகும் நாம் அவர்கள் அசாதாரண காரியம் ஏதேனும் செய்துவிட்டால் பாய்ந்து பிறாண்ட மட்டும் மறப்பதில்லை.

சித்தீ என்று தலைப்பிட்டு இதுபற்றிய செய்தியை பிரசுரித்திருக்கும் குமுதம் ரிப்போர்ட்டர் பூவரசி பற்றிய இரண்டு தகவல்களைத் தந்திருக்கிறது.

" பார்ப்பதற்கு சுமார்தான். இருந்தாலும் தன் வசீகரப்பேச்சால் அனைவரையும் கவர்ந்துவிடுவார். ஜெயக்குமாரையும் தன் வசீகர வலையில் வீழ்த்தினார் பூவரசி."

"பூவரசிக்கு ஏற்கனவே ஒரு காதல் இருந்திருக்கிறது. 2002 ல் ஒரு வாலிபர் தன்னை காதலித்து (உடலுறவுக்குப் பிறகு) ஏமாற்றிவிட்டதாக போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்."


இவ்விரு செய்திகளின் வாயிலாக குமுதம் சொல்ல வருவது என்ன? ஏற்கனவே இருந்த காதல் வாயிலாக அவரது ஒழுக்கம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அவர் பேசி மயக்குவார் என்று சொல்வதன் மூலம் மனைவிக்குத் தெரியாமல் பூவரசியுடன்

ஜெயில்ல இருக்கிற கைதிகள் எல்லாம் குமுதம் படிச்சுட்டா அடிச்சாங்க

//உறவு வைத்திருந்த ஜெயக்குமார் சுலபமாக அப்பாவியாக மாற்றப்பட்டுவிட்டார். இதே குமுதம் பிரகாஷ்ராஜின் புதிய காதல் பற்றிக் குறிப்பிடும் போது " அவரது ஒரே மகன் இறந்த துக்கத்தில் இருந்தபோது அவருக்கு ஆறுதலாக இருந்த போனி வர்மாவிடம் காதல் கொண்டார்" என்கிறது. கவனியுங்கள் அப்போது லலிதகுமாரி பிரகாஷ்ராஜின் மனைவியாகத்தான் இருந்தார். பிரகாஷ்ராஜுக்கு இரண்டாவது காதல் வந்தால் அது ஆறுதல் தேடி வருவது. பூவரசிக்கு வந்தால் அது ஆண்களை மயக்கும் சுபாவமா ? படிக்கையிலேயே உங்களுக்கு காறித்துப்பத் தோண்றவில்லை? பூவரசியின் முதல் காதல் பிரச்சனையில் போலீசும் அவரது சுற்றமும் நியாயமாகவும் அனுதாபத்துடனும் நடந்து கொண்டிருந்தால் அவருக்கு இரண்டாவது காதல் வருவதற்கான சாத்தியமே இல்லாது போயிருக்கும். ஏன் இது இந்த மானங்கெட்ட குமுதத்துக்கும் அதன் கருத்துடன் ஒத்துப் போவோருக்கும் தோண்றுவதில்லை? (குறிப்பு : ஒரு ஒப்பீட்டுக்காவே பிரகாஷ்ராஜின் விவகாரம் குறிப்பிடப்பட்டிருக்கிறது, நான் விமர்சிக்க விரும்பியது குமுதத்தைத்தானேயன்றி பிரகாஷ்ராஜை அல்ல)//

ஒட்டு மொத்தமாக பத்திரிக்கைகள் அடிக்கும் கதைகளை மக்கள் நம்பி கோபம் கொள்ளவில்லை ஆனால் பத்திரிக்கைகள் ஒரு பெரிய கருத்தை தானாக உருவாக்கிவிடவும்
இல்லை எனவே பத்திரிக்கையில் எழுதியதெல்லாம் சரியும் அல்ல அதை படித்து
மக்கள் தங்கள் கருத்தை உருவாக்கி கொள்ளவும் இல்லை .

எனவே பத்திரிக்கைகளின் புழுகுக்கு நாம் புண்ணு மருந்து போடபோவதில்லை
ஆனால் நீங்கள் பூவரசிக்கு மருந்து போடுவது சகிக்க முடியவில்லை


//சூழ்நிலையால் குற்றம் செய்பவர்கள் மீது வெறுப்பை உமிழத்தயாராக இருக்கும் நாம் தன் தனிப்பட்ட தேவைகளுக்காக சூழலையே குற்றத்திற்குத் தக்கதாக மாற்றும் நபர்களை ஏன் கண்டுகொள்வதில்லை? ஈழத்துப் படுகொலைகளுக்குப் பின்னால் சோனியாவின் பழிவெறியும் தனிப்பட்ட தேவைகளும் இல்லையா? அவர் அன்னை சோனியா என்று அழைக்கப்படும்போது அதை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம் ஆனால் பூவரசியை மட்டும் நீ ஒரு பெண்ணா என்று கேட்கிறோம். அநியாயமில்லையா இது?


முதலில் அந்த பெண் செய்த குற்ற செயலுக்குள் போகவிரும்பாமல் இருந்த நீங்கள்
சரியாக இந்த இடத்தில் அந்த குற்றத்தை மறைக்கிறீர்கள்
அல்லது அதற்கு ஒரு தார்மீக காரணம் கற்பிக்கிறீர்கள் உண்மையில்
நீங்கள்தான் தவறான காரணம் கற்பித்து குற்றவாளிக்கு ஆதரவு தெரிவித்து
குற்றவாளி ஆகிறீர்கள்

//காதலன் வீட்டு வாசலில் காதலி உண்ணாவிரதம் என்ற செய்திகளைப் படித்தபோது என்ன செய்தீர்கள்? காதல் தோல்வியில் பெண் தற்கொலை என்ற செய்தி கேட்கையில் என்ன செய்தீர்கள்? உங்கள் பணியிடத்தில் யாரேனும் அவுசாரியென பட்டம் கட்டப்பட்டிருந்த தருணத்தில் (இது ஒன்றுக்கு மேற்பட்ட காதல்களில் தோல்வியடைந்த பெண்களுக்குத் தரப்படுவது) நீங்கள் யார் பக்கம் நின்றீர்கள்? காதலித்த பெண்னை ஏமாற்றிவிட்டு நான் எதையும் இழந்துவிடவில்லை என்று என்று இருபொருள்பட சொன்ன இளைஞனுடனான பழக்கத்தை நான் சொரணையில்லாமல் தொடர்ந்திருக்கிறேன். நீங்கள் என் நிலையில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? பிள்ளைகளுடன் உள்ள மனைவியை இழந்தவருக்கு 'குழந்தை இல்லாத விதவை அல்லது விவாகரத்தான' மணமகள் தேவை எனும் விளம்பரம் உங்கள் மனதை எப்போதேனும் உறுத்தியிருக்கிறதா? இந்தக் கேள்விகளுக்கு நியாயமாக பதில் தேடினால் நாம் எந்த அளவுக்கு பெண்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கிறேம் என்பது புரியும்.

அடேங்கப்பா

an style="font-style:italic;">மொத்தமாக உங்கள் ஆணாதிக்க குற்றச்சாட்டு எவ்வளவு வளர்ந்தாலும்
விதை தவறான புரிதலில் இருப்பதால் மொத்த கட்டிடமும் தகர்கிறது

மொத்தமாக நீங்களும் உங்கள் கட்டுரையை ஆதரிக்கும் மற்றவர்களும்
வைக்கும் மொத்த வாதங்களும் உழுத்து போனவை


தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post