நண்பர்களே

ஒரு தண்டவாளத்தின் இரு கோடுகள் என்று நட்பை சொல்லலாமா?

எதிர்பார்ப்புகள் அற்றதுதான் நட்பு என்பது எதிர்ப்பார்க்கபடும் ஒன்றாக மாறிவருகிறது.
நட்பு ஒரு நூலைப்போல பாதுகாப்பபடவேண்டும் என சொல்லப்படுகிறது அதை அறுப்பது
ஒரு போது நாமாக இருக்க கூடாது என சொல்லப்பட்டது .

எனது நண்பர்கள் மிக சொற்பமே  (இணையம் தவிர்த்த)
.

இதயத்தின் உணர்வுகளை , அறிவை , பகிர்ந்து கொண்டவர்கள் ஏராளம்

இணைய நண்பர்களோ நிறைய இருக்கிறார்கள் இவர்கள் அனைவரையும்
சேர்த்தால் எனது நட்பு வெளி பெருகி கிடக்கிறது .

முகம் தெரியாமல் காதல்மட்டுமல்ல நட்பும் வளரும்

இணையத்தில் எனக்கு எல்லா  துறையிலும் நண்பர்கள் இருக்கிறார்கள்
அவர்களை நான் எதோ ஒரு விதத்தில் கவர்ந்து இருப்பேன்

என்னை பிடிக்காதவர்களும் சிலர் இருப்பார்கள்

இந்த நண்பர்கள் தின நாளில் இருவருக்கும் நான் எனது நட்பை
பகிர்ந்து கொள்கிறேன்

நண்பனுக்காக உருகும் ஒவ்வொரு நண்பனுக்கும் நான்
நண்பனே

என்னை கவர்ந்த வரலாற்று நண்பர்கள் என்றால் அது மார்க்சும்
எங்கல்சும்தான்

மார்க்சுக்கு எங்கெல்ஸ் தத்துவரீதியல் நண்பர் அதே நேரம்
மார்க்சுக்கு அவர் குடும்பத்துக்கு ஏராளமாக பண உதவிகள்
செய்து டாஸ் காபிடல் புத்தகத்தை எழுதி முடிக்க உதவியவர்

இவர்களது நட்பு உலகம் முழுக்கவும் ஒரு வரலாற்று நிகழ்வாக
மாறிப்போனது .

மற்றபடி நட்பு ஒன்றுதான் ஜாதி,மத , இன , மொழி எல்லைக்களை
தாண்டி வருகிறது .

அது மட்டுமே சமதர்மத்தை போதிக்கும் ஒரு எடுத்துக்காட்டு

நண்பர்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்களை
தெரிவித்து கொள்கிறேன் .
 


--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

2 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post