விமர்சனமும் -நடைமுறையும் தொடர்ச்சி

இந்த கட்டுரைக்கு முன்னோட்டமாக கீழ்கண்ட கட்டுரையை வாசித்துவிட்டு வாருங்கள்
ஏன் முரண்பாடு ?

அசுரன் புரட்சிகாரராக வலம் வருவது இருக்கட்டும்,பிரச்சனைகளை எப்படி அனுகுகிறார் என பார்ப்போம் (அதிக வேலை பளுவால் அடிக்கடி பதிவுகளை எழுதமுடியாததால் நண்பர்கள் பொறுத்தருள வேண்டும் )

"லீனா பிரச்சனையில் வினவு -" "வினவை எதிர்த்த பிரச்சனையில் வினவுக்கு சப்பை கட்டு கட்டும் அசுரன் "என அசுரனை இந்த இடத்தில் சந்திக்கலாம் .

லீனா கவிதை எழுதியவுடன் பதிவுலகத்தில் யாரும் பரபரப்பாக பேசுவதெல்லாம் இல்லை அதுபாட்டுக்கு ஒரு ஓரத்தில் கிடக்கும் அதை எடுத்து போட்டு "ஒரு மூன்று பதிவுகளில்" அவரை மறை முகமாக அவருடன் போனார் இவருடன் போனார் என ஆதாரமில்லாம்
எழுதியும் பேசியும் வந்த வினவு, ஒரு கட்டத்தில் லீன உட்பட எழுத்தாளர்கள் பலர் கூடி இந்து மக்கள் கட்சி போலீசில் கொடுத்த புகாருக்கு கண்டனம் தெரிவித்து ஒரு கூட்டம் போட்டது அதில் சென்று எட்டு கேள்விகளை கேட்ட தோழர்கள் கடைசியான ஒரு கேள்வியால் மிக தரம்தாழ்ந்து போனார்கள்.

அதை வினவில் நான் சுட்டிகாட்டியதும் அரடிக்கட்டு வந்து தியாகு இப்படித்தான் எழுதி இருப்பார் அவர் மார்க்சியவாதி இல்லையேன்னு சொல்லவும் நான் எனது பதிவில் ஒரு
கவிதை போட்டேன் அதில் கொஞ்சம் காட்டமாகவே தோழர்களை சாடி இருந்தேன் .

தனிமடலில் தொடர்புகொண்ட அசுரன் எனது நம்பகத்தன்மை மீது கேள்வி கேட்டார்

இங்கே கவனியுங்கள் சாடல் , தாக்குதல் இதெல்லாம் வந்தால் அதில் நம்பகத்தன்மை போய்விடுகிறதாம் நான் அமெரிக்க முதலாளி வர்க்கத்துடனோ அல்லது இந்திய காங்கிரஸ்
மற்றும் போலி கம்யூனிஸ்டுடனோ சோரம் போய்விட்டேனாம் என்பதாக இவர்களது அவநம்பிக்கை வருகிறது .

உடனே தியாகு ஓடிப்போன பின்னனின்னு இவர் எழுதி வைத்து இருக்கும் இந்த நம்பகத்தன்மை என உளறும் பத்தியை எல்லா இடத்திலும் பேஸ்டு செய்கிறார்

அடுத்து ஒரு இடத்தில் அசுரன் வருகிறார் அது நரசிம் முல்லை விவகாரத்தில் வினவு தலையிட்ட உடன் "ஆணாதிக்க பார்பனியத்தின் ஆதரவாளர்கள் " என
கிட்டதட்ட அனைத்து நபர்களையும் ஆணாதிக்க வாதிகள் என்கிறார்

அவரது கண்ணுக்கு வினவு -பைத்தியகாரனின் கட்டுரையை வாங்கி போட்டது தெரியவில்லை
பைத்தியகாரனோ இன்னும் பூணூல் அறுக்காத ஒரு பக்கா பார்ப்பான் என்பது தெரியவில்லை
(உள்வெளி தனிவெளின்னு கார்க்கி உளறிட்டு இருக்கார்) பைத்தியகாரன் நண்பா என விழிக்கும் சுகுணாவை சேர்த்து திட்டி எழுதிவிட்டது தெரியவில்லை அதற்கெல்லாம் மேலே இந்த கட்டுரை பயித்தியகாரன் எழுதியது என நேர்மையாக ஒத்துகொள்ளாத வினவின் நேர்மை தெரியவில்லை (என்ன செய்வது தோழனை காட்டி கொடுக்க முடியாதே)

அபி அப்பா , லதானந்து , மங்களுர் சிவாவை ஆதரமின்றி அவதூறு செய்தது தெரியவில்லை (அவர்கள் எல்லாம் அசுரன் கருத்தில் கரப்பான் பூச்சிகள் - உண்மையில் அவர்கள்அல்ல இவர்தான் கரப்பான் பூச்சி ) அவர்கள் என்ன கருத்தை எழுதினாலும்
சொந்த பெயரில் எழுதுகிறார்கள் அதனால் வரும் நன்மை தீமைகளை
அனுபவிக்கிறார்கள் .

நாமோ மறைந்து எழுதிவிட்டு அவர்களை பார்த்து கரப்பான் பூச்சி என திட்டுகிறோம்
(ஆகா புரட்சிகாரனை இப்படி கேட்கலாமா? அபிஸ்டு ) இதெல்லாம் தெரியாத பழைய நண்பர்
அசுரன் - ஆணாதிக்க வாதிகளின் கூட்டனின்னு ஒரு பெரிய பதிவு போட்டார்

இது நாள் வரைக்கும் இவரது நேர்மையின் மேல் இருந்த நம்பிக்கை இந்த இடத்தில் தகர்ந்து விழுகிறது அவருக்கு என்மேல் நம்பிக்கை எந்த இடத்தில் விழுகிறது என்பதற்கும் எனக்கு அவர்மேல் நம்பிக்கை எந்த இடத்தில் விழுகிறது என்பதற்கும் உள்ள வித்தியாசம்தான்
நான் முரண்படுகிற இடம்.

ஒரு சின்ன விமர்சனத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கும் இவர்களுடன் இன்னும் பேசி விவாதித்து என்ன பயன் என ஒதுங்கி போன தோழர்களின் மனசாட்சியை நான் கேள்வி கேட்கிறேன் ஒதுங்கி போவதால் எந்த பிரயோசனமும் இல்லை .
பல்வேறு சமூக பிரச்சனைகளில் இவர்களது நிலைபாடுகளை நாம் மேலும் பார்போம்

17 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post