கோவிந்தசாமியின் விலகலும் போலி கம்யூனிஸ்டுகளின் வேடமும்

ஒரு கம்யூனிஸ்டு என்பதன் அடையாளமே அவரது வர்க்கசார்பு நிலைதான்

கட்சியே தவறாக சென்றாலும் தனது சார்புநிலையை விட்டுகொடுக்காமல்

பாட்டாளி வர்க்கத்தின் சார்பாக குரலை உயர்த்துபவன் கம்யூனிஸ்டு

ஆனால் நம்ம கோவிந்தசாமி எம் எல் ஏ அப்படி எல்லாம் தப்பா செய்யலை

நேரா முதலாளி வர்க்கத்தின் குரலை உயர்த்தினார் எப்படி திருப்பூரில் பதினாறு

மணி நேரம் கூட வேலை வாங்கலாம் அல்லது திருப்பூரை சிறப்பு பொருளாதார

மண்டலம் போல ஒரு சூழ்நிலைக்கு கொண்டு வரலாம் என முயன்றார்

 

அதற்கு காசு வாங்கினார் என்பதைவிட அவர் எடுத்த முயற்சியே தொழிலாளர்

விரோதமானது .

 

எட்டு மணி நேர போராட்டத்துக்கு உலக தொழிலாளி வர்க்கம் இன்றுவரை

போராடி வருகிறது ஆனால் இவர் பதினாறு மணிநேரத்தை நிரந்தரமாக்க

போராடுகிறார் .

இது தற்செயலானதா இவர் போராடியது மட்டும்தான் தவறா என்றால் இல்லை

ஏன் திருப்பூருக்கு மட்டும் இருபத்தினாலு மணிநேரம் வேலை செய்ய ஆள் தேவைபட்டது என்பதும் அந்த பழக்கத்தி முதலாளிகள் ஏன் இன்றுவரை தொடர்கிறார்கள் என்பதும் புரட்சிகர இயக்கம் என மார்த்தட்டி கொள்ளும்

தோழர்கள் கம்பெனியிலும் இதே சுரண்டல் இன்னும் நீடிக்கிறது என்பதும்

2007 க்கும் முன்பு உலகமயமாக்கலுக்கு முன்பு இருந்த சூழலை பொருத்தது

 

அப்போது கோட்டா சிஸ்டம் இருந்தது ஏ இ பிசி இருந்தது குறிப்பிட்ட காலத்தில்

ஆடரை அனுப்ப வேண்டிய நிர்பந்தம் இந்தியாவுக்கு இத்தனை டி சர்டு இலங்கைக்கு இத்தனை டி சர்ட்தான் என கோட்டா இருந்ததால் அதை

பெறவும் பெற்ற கோட்டாவை சரியாக பயன்படுத்தி லாபம் சம்பாரிக்கவும்

இந்த நேரம் பார்க்காத வேலை திட்டம் தேவைபட்டது.

 

அதை சரி என்பதோ தவறு என்பதோ நமது வாதமல்ல ஆனால் அந்த

மாதிரி வேலை திட்டம் இருந்தால் மட்டுமே ஆடர் செய்ய முடியும் என்பதுதான்

நிலை இருந்து வேலை நடந்தது

 

புதிய ஜனநாயகத்தில் தனபால் என்பவர் எழுதியதுபோல

திருப்பூரில் எந்த தொழிலாளியும் கொத்தடிமை கிடையாது சொல்லப்ப்போனால்

எட்டுமணி நேரம் மட்டும் அல்லது பனிரெண்டு மணிநேரம் வேலை மட்டும்

என சொன்னால் வேலைக்கு சேராத தொழிலாளிகளைத்தான் இங்கு பார்கிறோம்

ஏன் இந்த நிலை என்றால் ஒரு நாள் இரண்டுநாள் ஓடி பார்த்தால்தான் இங்கு

இருக்கும் விலைவாசிக்கு வண்டி ஓட்ட முடியும் அதற்கு தகுந்தாற்போல

வீட்டு வாடகை மற்றும் விலைவாசி ஏறிவிட்டது .

தொழிலாளர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த பணி சூழல் என்பது

ஓடி பார்த்தே ஆக வேண்டிய சமூக பொருளாதார சூழலுக்கு கொண்டு

வந்தது .

 

சரி தொழிற்சாலை ஆய்வாளர்கள் (கவனிக்கவும் தொழிலாளர் நல ஆய்வாளர்

அல்ல) இதை பயன்படுத்தி ஆறுமாதத்துக்கு நான்காயிரம் என்றும் பெரிய கம்பெனி

என்றால் பத்தாயிரம் என்றும் லஞ்சம் வாங்கி தங்கள் சட்ட கடமையை செய்கிறார்கள் தொழிற்சாலைகளுக்கு மிகப்பெரிய தலைவலி யார் என்றால்

ஈ எஸ் ஐ இன்ஸ்பெக்டர்கள் மற்ற்றும் இன்பெக்டர் ஆப் பேக்டரிகளின்

ஆய்வாளர்கள் .

 

சரி அரசு , அரசு அதிகாரிகள் , தொழிற்சங்கங்கள் எல்லாம் எதிர்கின்றன என்றால்

எப்படி ஓடி திருப்பூரில் நடக்கும் உண்மையில் யாரும் எதிர்க்கவில்லை அதை

ஆதரிக்கவும் இடையில் அவர்களுக்கு கொஞ்சம் லஞ்சம் கிடைத்தால் போதும்

என்பதும் தான் நடக்கிறது இடை இடையே சாராய கேசை போல சிப்ட் ஓவர்லாபிங்

கேசு போட்டு தங்களது கடமையை செய்யும் அதிகாரிகளும், தொழிலாளர் பிரதிநிதி

போல வந்து தனது லஞ்சத்தை வாங்கி செல்லும் தொழிற்சங்க நிர்வாகிகளும்

நிரம்பி வழியும் திருப்பூரில் கொத்தடிமை வேலை முறை என எதுவும் இல்லை

இந்த லாஜிக் படி கோவிந்த சாமி செய்தது சரிதான் ஒரு வகையில் ஆனால்

கட்சி இதற்காக இவரை எச்சரிக்கவில்லை மாறாக அவர் வாங்கிய தொகையில்

கட்சியின் மாநில கமிட்டிக்கு பங்கு கொடுக்கவில்லை என்பதால் தூக்கியது.

 

போலி கம்யுனிஸ்டுகள் பேசுவதெல்லாம் சும்மா உருகி உருகி ஓடும் திருப்பூர்

வீதியில் திமுக காரன் அதிமுக காரன் எல்லாம் என்ன சொன்னாலும் தொழிலாளர்

மத்தியில் எடுபடாது அதே நேரத்தில் இந்த போலி தொழிற்சங்க வாதிகளும்

முதலாளிகளும் ஏமாற்றும் அப்பாவி ஜீவன்கள் தொழிலாளர்கள் தாம்.

 

எல்லா கட்சியை போலவும் போட்டியும் பொறாமையும் நிரைந்த சிபிஎம்

ஊழலும் நிரைந்ததுதான் வரதராஜன் இறப்பு பதவி போட்டிக்கு என்றால்

கோவிந்த சாமி நீக்கம் இன்னொரு வகையான பதவி போட்டி மற்றும்

பண பரிவர்த்தனை பிரச்சனை தானே ஒழிய பெரிசா தொழிலாளர் நலன்

சம்பந்த பட்டது அல்ல.

அவர்களும் தொழிலாளர்கல் பிரதிநிதி அல்ல மாறாக கமிசன் ஏஜெண்டுகள்

(இவர்கள் இல்லை என்றாலும் முதலாளிகள் முழுசா தொழிலாளர்களை

ஏப்பம் விடுவார்கள் )

 

கோவிந்த சாமி மட்டுமல்ல இன்றைக்கு திருப்பூரில் செயல்படும் பஜக

வின் முக்கிய புள்ளியான நாச்சிமுத்துவும் இதே சிபிஎம்மில் இருந்தவர்தான்

ஏன் பிஜேபிக்கு போனார் ஏனெனில் முதலாளிகள் இருக்கும் கட்சியாக

சிபிஎம் இல்லாது போனதும் மறைமுக முதலாளிகளால் கட்சி நடத்தப்படுவதால்

அப்போ அப்போ முகமூடி கிழிபவனை கீழே தள்ளி விடுவதும்தான்

நடக்கிறது

 

ஆகவே பெரிசா கொள்கை விளக்கம் எல்லாம் தேவை இல்லை

நந்திகிராம் போன்ற பிரச்சனைகளில் கட்சி அம்பலப்படுகிறது என்றால்

எட்டுமணி நேர வேலை பிரச்சனையில் தனிநபர்கள் அம்பலபடுகிறார்கள்

என சொல்லமுடியாது .

 

கட்சி எப்போதும் அம்மணமாக நிற்கிறது தனிநபர்கள் முகமூடி கிழியவில்லை

என்பது நமக்கு தெரியவில்லை அவ்ளோதான்.

 

மொத்தமா ஒரு சாதி ஆதிக்கத்தில் இருந்து திருப்பூர் விடுவிக்கப்படும் வரை

தொழிலாளர்கள் ஏமாற்றப்படுவது தொடரும்

எந்த கொள்கையும் இல்லாதவன் பணம் சம்பாதிக்க நோக்கமுள்ளவந்தான்

எல்லா கட்சியிலயும் இருக்கிறான் என்பதை மட்டும் தொழிலாளர்கள்

புரிந்து கொண்டால் போதும்

சுய சிந்தனை இருந்தால் எந்த புரட்சிகரவாய்சவடால் தோழனையும்

புரிந்து கொள்ளலாம்

 

திருப்பூரின் தொழில் சூழலை மாற்ற முயலாமல் எட்டு மணி நேர வேலை

திட்டம் வெற்றி அடையாது மேலும் அதிகாரிகளின் கொட்டத்தை

தொழிலாளர்கள் ஒடுக்காமல் (அதிகாரிகளும் ஒருவகை முதலாளிகளே)

தொழிலும் வளராது .

 



--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

5 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post