தனியார்துறை ஏற்றுகொள்ளப்பட வேண்டியது வேண்டாதனவும்

 

அரசுடமை ஆக்கப்பட்ட வங்கிகளுக்கு அல்லது ஒரு போஸ்ட் ஆபிசுக்கு சென்று

வரும் அனைவருக்கும் அதன் சேவை நன்கு தெரியும் உயிர் போகும் வேலையிலும்

ரூல்ஸ் பேசும் பணியாளர்கள் வேலைக்கு வராமல் டிமிக்கி கொடுக்கும் பணியாளர்கள்

என அரசுத்துறை தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுகொண்டது .

ஆயிரம் ரூபாய் பணத்தை எடுக்க நினைத்தால் அன்று அரை நாள் லீவு போடவேண்டுமே

என்ற நிலை தானியங்கி தனியார் வங்கிகள் வருவதற்கு முன்பு இருந்தது

இப்போது எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பணத்தை எடுத்துகொள்ளலாம்

என்ற நிலை வந்துவிட்டது. இது போன்ற இன்னவேட்டிவ் சிந்தனைகளை

இப்போது அரசு வங்கிகளுக்கும் வந்துவிட்டது ஆனால் பாருங்கள் தானியங்கி

எனி டைம் மணி செண்டரில் பணம் போடுவதில் பின்னடைந்து விட்டன

அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள் .

 

ஒரு கேள்வி எழுகிறது சேவைகளுக்காக நாம் தனியாருக்கு போகலாமா?

ஆம் சிறந்த சேவையை தனியார்களே தறுகிறார்கள் . ஏன் அரசு துறையால்

வழங்க முடியவில்லை அதான் ஊழல் மலிந்து கிடக்கும்  ஒரு துறையாக

ஒரு சிஸ்டமாக அரசு இருக்கும்போது அரசாங்கம் மட்டும் எப்படி நேர்மையான்

கடமை தவறாத ஒரு சேவையை வழங்க முடியும் .(இதை நாம் அடுத்து விவாதிக்கலாம்)

 

சேவை நன்கு தறுவதன் மூலம் அடுத்து லாபவெறி கொண்டு இறங்கி நம்மை

சுரண்டும் தனியார்கள் சேவையை ஒரு துருப்பு சீட்டாக பயன்படுத்துகிறார்களோ

என நம்மை எண்ண தூண்டுகிறது.

ஒரு பக்கம் சேவை என்றால் கிலோ என்னவிலை எனும் அரசு இயந்திரம்

மறுபக்கம் நல்ல சேவை ஆனால் விலை அதிகம் எனும் நிலை இன்னொரு

ஒருபக்கம் இதன் ஆரம்ப கூறுகள் நம்மை இந்த சமூக அமைப்பை ஊற்று நோக்க

சொல்ல வேண்டும் , வேண்டும் இல்லையென்றால்

(சமூகத்தை உற்று நோக்குவது வெறும் நோக்குவதற்காகவல்ல அதை மாற்றுவதற்கு)

ஒரு பக்கம் சேவை என்றால் கிலோ என்னவிலை என ஏன் அரசுதுறை கேட்கிறது

என்றால் அதன் வேலை ஸ்திரதண்மை .

 

என்ன ஆனாலும் வேலை போகாது என்ற நிலை , எந்த ஒரு ஆடிட்டும்கிடையாது

எந்த நோக்கமும் குறிக்கோளும் கிடையாது உதாரணமாக எனது வங்கியின்

இருப்பை இந்த ஆண்டு இறுதிக்குள் இத்தனை கோடியாக உயர்துவேன்

வாரா கடன்களை இத்தனை சதவீதம் பெறுவேன் என்று பேப்பரில் இருக்கும்

அதை செய்து முடிப்பதற்குள் அந்த மானேஜர் வீட்டுக்கு போயிருப்பார்.

 

கணிவாக பேசுவேன் என்று எந்த அரசுதுறை ஊழியரும் நினைப்பதுகூட இல்லை

சீட்டில் உக்கார்ந்து இருப்பவன் கடவுளாக தன்னை நினைத்து கொள்கிறான்

அது வங்கி சீட்டாக இருந்தாலும் இரயில்வே சீட்டாக இருந்தாலும் எந்த

சீட்டாக இருந்தாலும் சீட்டு கிழியும் என்ற பயம் இல்லையே

அதனால் சேவை இப்படித்தான் அளிப்பேன் என அவன் சொல்கிறான்

 

ஆகா ஊழியர்களின் வேலைக்கு வேட்டுவைக்கிறானே கம்யூனிசம் பேசிக்கொண்டு

என நீங்கள் நினைக்கலாம் தனக்கு கிடைக்கும் சந்தா போய்விடும் என பல

போலி கம்யூனிஸ்டுகள் நினைக்கலாம் கடமையை செய்வதன் அவசியத்தையும்

நேர்மையாக பணி செய்வதன் மூலமே முன்னேற்றம் வரும் என்பதையும்

எந்த கட்சி போதிக்கிறது .

சங்கத்தை சோம்பேறித்தனத்திற்கும் ,கடமையை செய்யாமல் இருப்பதற்கும்

அனைத்து ஊழியனும் பயன்படுத்துகிறான்.

 

எந்தனை சங்கம் இருக்கும் இருந்தாலும் எத்தனை ஊழல் இருக்கு

அப்போ சங்கங்கள் ஊழலை கண்டுக்காமல் இருக்கனும் அல்லது ஊழல்

சேவையை தட்டிகழித்தல் இவை சங்களுக்கு தெரியாமல் இருக்கனும்

ஆனால் இரண்டாவதற்கு சான்சே இல்லை எல்லாருக்கும் தெரியும்

 

சோசலிசம் வந்தால் உடனே இந்த அரசு ஊழியர்கள் எல்லாம் அப்படியே

புத்தர்களாக மாறிவிடுவார்கள் என சொல்ல முடியுமா?

கண்டிப்பா மாட்டார்கள் அப்போ என்ன தேவை ?

 

வேலை என்பது நிரந்தரம் ஆனால் நீ பணியை சரிவர செய்வது வரை

மட்டுமே என்ற நிலை இருந்து வரவேண்டும் .

 

குறிப்பிட்ட கால இடைவெளியில் அவனது பணி ஆய்வுக்குட்படுத்தப்பட

வேண்டும் . நடப்பில் இருக்கும் சட்டங்கள் ஒரு வருடத்துக்கு ஒருமுறை

ரிவிசன் செய்யப்பட வேண்டும் .

தண்டனைகள் கடுமையாக்குவதன் மூலமல்ல ,  திட்டமிட்ட அமைப்பின்

மூலமாக இதை செய்யலாம் என கருதுகிறேன்

 

உங்கள் விமர்சனங்களை தொடர்ந்து பேசலாம்

 

அடுத்து தனியாருக்கு தாரைவார்ப்பதன் மூலம் சேவையை துரிதப்படுத்தி

நாட்டை ஒளிமயமாக மாற்ற போகிறேன் என்பவர்கள் முழு உண்மையை

மறைக்கிறார்கள் .

 

அரசுடைமையில் சோம்பேறித்தனமும் சிஸ்டமும் இல்லையென்றாலும்

அதன் அடிப்படைகூறுகள் மக்களுக்கு நன்மை பயக்கும் விதமாகவே

இருக்கின்றன ஆனால் அதன் காலில் ஆனைக்கால் வந்துவிட்டது

அதற்காக அதை கொன்றுவிட கூடாது .

 

அந்த நோய்க்கு மருந்து போடவேண்டும் ஆனால் தனியாரின் கால்கள்

பார்க்க நன்றாக வளவளப்பாக வேகமாக நடக்கிறது ஆனால்

அது நம்மை பெரிய கிணற்றில் தள்ள அழைத்து செல்கிறது

 

என்ன செய்யலாம் ஆணைக்காலே தேவலாம் என அவனை கொன்றபின்

நினைக்கலாமா?

 

மேலும் பேசுவோம்



--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post