ஏன் முரண்பாடு -தொடர்ச்சி

நான் வினவுடன் முரண்பட்டதும் தோழர்கள் பலர் இது வேண்டாம்

நீங்கள் வினவுடன் விவாதிக்கனும் என கேட்டு கொண்டார்கள் அப்படி

விவாதிக்கவோ என் தரப்பில் இருக்கும் விசயங்களை கேட்கவோ அசுரன்

வினவு, அங்குள்ள தோழர்கள் யாரும் தயாராக இல்லை .

ஏன் தயாராக இல்லை எனது கேள்விகள் குறிப்பிட்ட முறையில்

அவர்களின் செயல்பாடுகளை விமர்சிக்கும் போது ஏன் தப்பிக்கிறார்கள்

"தோழமையோடு சொல்கிறேன் நீங்கள் ஒரு வருடம்

புத்தகம் படித்துவிட்டு திரும்ப வாருங்கள் என

சொல்லும் வினவு"

மறுபக்கத்தில் என்னை பற்றிய அவதூற்றை அனுமதித்து எனது பதில்களை

வராமல் செய்தார்கள் இந்த புரட்சிவாதிகள் .

இத்தனை நாள் இவர்களை ஆதரித்த எனக்கே இந்த நிலைமை என்றால்

மற்றவர்கள் நிலமை அவ்ளோதான்.

எனது விமர்சனங்கள் பொதுவாக வினவை சில இடங்களில் கேள்வி கேட்டன

எல்லாரும் புகழும் விசயங்களிலும் சில முரண்பாடுகள் இருக்கும்போது

அதை கேள்வி கேட்பது தவறல்ல ஆனால் அதற்கு பதில் சொல்லாமல்

தப்பிப்பது தவறென கருதுகிறேன்.

உதாரணமாக , சங்கரி என்ற பெண் தோழர் எழுதிய ஒரு கட்டுரைக்கு எனது

பின்னூட்டம் இப்படித்தான் அமைந்தது சங்கரி பெண்களின் மாதவிலக்கு

நிகழ்வை உணர்வு பூர்வமாக எழுதினார் உழைக்கும் பெண்களுக்கு

அது ஒரு பெரிய பாரமாக வறுமையும் சேர்ந்துகொண்டு கொடிய துன்பமாக

இருக்கு என்றார் அனைவரும் பாராட்டினோம் அதே நேரத்தில் ஆயிரம்

பேர் வேலை செய்யும் ஒரு இடத்தில் சில பெண்கள் தமது மாதவிலக்கு

துணியை கக்கூசில் போடுவது சரியா என கேட்டு இருந்தேன்.

அதற்கு நேர்மையாக சங்கரியோ , தோழர்களோ

பதிலளிக்கவில்லை மாறாக எனக்கு இந்த கட்டுரைமேல்

பொறாமை என்றார்கள் .

பாராட்டு மட்டுமே கிடைக்க வேண்டும் என கங்கணம் கட்டி இறங்கி இருப்பார்கள்

என நினைக்கிறேன் ஒரு விசயத்துக்குள் இருக்கும் பல நிலைகளை விளக்கவும்

உழைக்கும் பெண்களின் துன்பத்தை சொல்லும் அதே வேளையில் அவர்களின்

அறியாமையால் அல்லது வேண்டுமென்றே செய்யும் செயல் துப்புரவு தொழிலாளியான்

ஒரு சகோதரனை என்ன பாடு படுத்துகிறது என்பதையும் சுட்டி காட்டி

தனக்கு வரும் துன்பம் மட்டுமே பெரிசுன்னு பேசாமல் தன்னால் பிறருக்கு

வரும் துன்பத்தையும் அந்த கட்டுரையில் சொல்லி இருக்கனும் அல்லது

கேள்விக்காவது நேர்மையாக பதிலளித்து இருக்கனும் ஒரு சிலர்

இப்படி இருக்கிறார்கள் அவர்களுக்கு தொடர்ச்சியாக பேசித்தான் புரியவைக்கனும்

என பதில் சொல்லி இருந்தால் போதும் .அதை விடுத்து

பொறாமைக்காரன் என இழிவாடுவதால் என்ன நன்மை .

பொதுவாகவே வினவின் எந்த ஒரு விவாதமும் நடக்க முடியாமல் ஏன்

போனது என்பதற்கு இன்னொரு உதாரணம் சினிமா விமர்சனம் பற்றி

நான் எழுதிய கமெண்டு . இது தேவையா இருக்கும் பிரச்சனைகளை

பேச வேண்டாமா ? என சொன்னது .

இது நானும் இன்னும் சில தோழர்களும் பேசிய பிறகு வைத்த

விமர்சனம் இது .

உடனே பதில் சொல்ல குதித்த கேள்விகுறி எனதும் நபர்

நான் வினவு சினிமா விமர்சனம் எழுதுவது தவறு எனும் கருத்தை

உருவாக்குவதாக குதித்தார் .

மேலும் ஒரு ஆரோக்கியமான விவாத சூழல் வினவில் இருக்கனும்

என்ற எனது நினைப்பே அனேக பிளாக்கர்களிடமும் இருந்தது.

ஆனால் வினவோ என்ன எழுதனும் எப்படி எழுதனும் என எவனும்

சொல்லதேவை இல்லை என அகங்காரமாக நடந்து கொண்டது

வினவாதே மூடு என்பதுபோல நடந்து கொண்டது

இந்த புரட்சி வாதிகள் அடுத்து இன்னொரு சந்தர்பத்தில் எப்படி

பிளாக்கர்களிடம் அம்பலப்பட்டார்கள் எனப்தையும் .

புரட்சிகாரர் அசுரன் எப்படு கூசா தூக்கினார் என்பதையும்

அடுத்த கட்டுரையில் உடைக்கிறேன்


--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

54 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post