வீட்டுக்கு பட்ஜெட் தேவையா?

வீட்டு செலவுகள் என்பதை நம்மில் பெரும்பாலோர் அதிகம்

கண்டுகொள்வதில்லை .ஏறுகிற விலைவாசியில் செலவு கணக்கை

பார்ப்பதையே நம்மில் பல தூக்கி போட்டு விட்டோம் என்றுதான்

சொல்ல வேணும் . எல்லாமே விலை கூடிப்போய் நம்மால்

அனுகமுடியாத தூரத்தில் இருக்கிறது .

எதை குறைப்பது எதை விடுவது என தீர்மானிக்க முடியாமல்

மாதாமாதம் விழும் துண்டை கடனில் போட்டு அதற்கு வரூம்

வட்டியும் கடனாக மாற சேமிப்பு என்பதே துர்பலமாகிப்போனது .

ஆனால் விசயங்களை அதன் போக்கில் விட்டுவுடுவது சரியல்ல

என நினைக்கிறேன்.

மிக தாரளமாக பணம் இருக்கையில் விலைவாசி குறைவாக

இருக்கையில் எந்த திட்டமிடலும் பட்ஜெட்டும் அவசியமில்லை

ஆனால் அன்றாட விலைவாசி ஏற்றத்தில் நீங்கள் திட்டமிட

வில்லையெனில் கண்டிப்பாக தடுமாறுவீர்கள் .

மாதம் ஐந்தாயிரம் சம்பளத்தில் என்னத்தை பட்ஜெட் போடுவது ,

மாதம் பத்தாயிரத்தில் என்ன திட்டமிடல் என கேட்கலாம்

ஆனால் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவ்ளோதான்

வரப்போகிறது அதை ஏன் திட்டமிட்டு செலவு செய்ய கூடாது.

கடன் வாங்கி ,வாங்கி வட்டியே லட்சரூபாய்க்கு மேலே போனதும்

சிலர் யோசிப்பார்கள்ஆகா யோசிக்காமல் செலவு செய்தோமேன்னு .

நமக்கு சிறிய செலவுகளாக தோன்றுவதெல்லாம் பார்த்தால்

திட்டமிடலில் இல்லாமல் கணக்கு பார்த்தால் மாத சம்பளத்தை

பொத்துகொண்டு வெளியே கிடக்கும் .

ஆகவே திட்டமிட்ட செலவு அவசியம் எனக்கு தெரிந்த நண்பன்

முப்பது ரூபாய்க்கு சிகரெட் குடிப்பான் தம்பி அதை ஏன் குறைக்க

கூடாதென்றால் கேட்கவில்லை ஒரு நாளைக்கு முப்பதென்றால்

மாதம் தொழாயிரம் வருடம் 900x12=10,800 வருகிறது சிகரெட் குடிக்காமல்

விட்டால் பத்தாயிரம் சேமிக்கலாம் முடியவில்லை எனில் ஐந்தாயிரமாவது

சேமிக்கலாம் என்றேன் .


ஒரு நாளைக்கு ஐந்து நிமிடம் கணக்கு எழுதுங்கள் செலவு கணக்கை ,

ஒருவாரத்தில் ஒரு அரைமணிநேரம் செலவு செய்யுங்கள் ஒரு கணக்கு

புத்தகத்தில் அதை எழுத . இப்படி ஒரு வருடம் கணக்கு எழுதி பார்த்தால்

தெரியும் அதிகமாக எதில் வீண்செலவு செய்திருக்கிறோம் என்று .

நம்மால் முடிந்தது வீண் செலவுகளை குறைப்பதே அதுவே முதல் தேவை

பிறகு கைமீறும் விசயங்களை இந்த திட்டமிடலின் மூலம் சமாளிக்கலாம்

அடுத்த முயற்சி சிறு வேலைகளை நேரம் ஒதுக்கி செய்வது பெண்களாக

இருப்பின் வீட்டில் செய்ய முடிந்த வேலைகள் இருக்கும் ஒரு எம்ராய்டரி ,

தையல் இப்படி ஆண்களாக இருந்தால் பேப்பர் போடுதல் ,கணினி

சொல்லிதறுதல் இதன் மூலம் மாதம் ஒரு ஆயிரம் ரூபாய் சேர்த்தால் கூட

அதை ஒரு செலவுக்கு பயன்படுத்தலாம் முடியாது என்பது நமது மூளையில்

மட்டுமே இருக்கிறது . யோசித்து பார்த்தால்எதாவது ஒரு வேலை கிடைக்கும் .

இப்போதெல்லாம் ஒரே கம்பெனியில் ஒரே சம்பளத்தில் வேலை செய்வது என்பது

பயந்தராமல் போய்விட்டதை உணர்கிறோம் .எந்த காரணத்துக்காகவும் சம்பளம்

குறைவாக நீண்டநாள் வேலை செய்வது புத்திசாலித்தனமல்ல மேலும் நமது

அறிவை சைடில் வளர்த்து கொண்டே இருக்கவேண்டும் வாய்ப்பு கிடைத்தால் தாவிவிட

ஒரு மாற்றமிக்க சமூகம் வரும் என குத்த வைத்து கொண்டு இருக்காமல்

நடைமுறையில் என்ன தேவை தற்சமயத்தில் என யோசிப்பது புத்திசாலித்தனம்.

இதையெல்லாம் சொல்வதன் மூலம் ஒரு அறிவுரை தரும் எண்ணமில்லை

எனக்கு ஆனால் அனுபவத்தை சொல்லும் நோக்கம் தவிர.



இதை பற்றி இன்னும் விரிவாக ஈழநேசன் இணையத்தில் ஒரு பக்கம் இருக்கிறது :

நன்றி ஈழநேசன் இணையதளம்


வரவு 100 ரூபாயாக இருந்தாலும் அதில் 99 ரூபாய் செலவு செய்பவர்கள் நிம்மதியாக இருக்கலாம். வரவு ஒரு லட்சம், செலவோ ஒரு லட்சத்து பத்தாயிரம் என்று இருப்பவர்கள் வாழ்க்கை எப்படி நிம்மதியாக இருக்க முடியும்? இன்றைய உலகில் ஆடம்பரத் தேவைகளுக்காகக் கடனின் பிடியில் சிக்கி அவதிப்படுபவர்கள் ஏராளம். கடனே வாங்காமல் வாழ்க்கை நடத்த முடியுமானால் அது உத்தமம். ஆனால், வீடு வாகனம் போன்றவற்றை, கடனுதவி இல்லாமல் பெறுவது மிகக் கடினம். அளவுடன் செலவு செய்து, அளவாகக் கடன் வாங்கித் திருப்பிக் கட்டுவோமானால், வாழ்க்கை நமது கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். இல்லையெனில், மிகக் கடினம். இது பற்றிக் கூற வரும் திருவள்ளுவரோ
'அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாதாகிக் கெடும்' என்கிறார். அதாவது தமது வரவு என்ன செலவு என்ன என்று அறியாமல் வாழ்பவர்கள், அளவுக்கு மிஞ்சிச் செலவு செய்பவர்களது வாழ்க்கை, நன்றாக இருப்பது போல் இருக்கும், ஆனால் திடீரெனக் காணாமல் போய்விடும் என்பது இதன் பொருள்.

உலக முழுவதும் ஏற்பட்ட பொருளாதாரத் தொய்வானது, பலரது மனதில் பதட்டத்தை உண்டாக்கிவிட்டது. மாதம் ஒரு லட்சம், ஐம்பதாயிரம் என்று வருமானம் வந்தபொழுது சேமிக்காமல், தாம்தூம் என்று செலவு செய்தவர்கள் பலர் இன்று மாதாந்திரச் செலவை சமாளிக்கவே திண்டாடி வருகின்றனர்.

உங்கள் வீட்டுக்கான மாதாந்திர வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதும், செலவுகளை கட்டுப்படுத்துவதும், மாத வருமானத்தில் ஒரு பகுதியைச் சேமிப்பதும் முக்கியம். மாதாந்திர வரவு செலவுத்திட்டம் என்பது, உங்களுக்கு உங்கள் வருமானம், செலவினங்கள் குறித்த ஒரு தெளிவை ஏற்படுத்தும். எந்தெந்த செலவினங்களுக்கு எவ்வளவு ஒதுக்கவேண்டும். எவற்றை நிறுத்தவேண்டும் என்பது பற்றிய விழிப்பு உண்டாகும்.

budgetமாதாந்திர வரவு செலவுத் திட்டத்தின் அங்கங்கள்:

மாதாந்திர வரவு செலவுத்திட்டத்தில் மூன்று பகுதிகள் உண்டு. அவை-
ஒன்று -உங்கள் மாதாந்திர வருமானத்தைக் கணக்கிடுதல்,
இரண்டு - உங்கள் செலவினங்களைப் பட்டியலிடுதல்
மூன்று - உண்மையான செலவுகளையும், நீங்கள் எதிர்பார்த்த செலவுகளையும் ஒப்பிடுதல் மற்றும் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளல்.

வருமானங்களைக் கணக்கிடுதல்

உங்களுடைய நிகர வரவினங்களைப் பட்டியலிடுங்கள். உதாரணமாக
நிகர சம்பளம் - ரூ.38000.00
வாடகை வருமானம் - ரூ.10000.00
வட்டி, பங்காதாயம் - ரூ. 5000.00
இதர வருமானங்கள் - ரூ. 2500.00

மொத்த வருமானம் - ரூ. 55000.00

மொத்த வருமானத்தைக் கணக்கிடுகையில், நிகரத் தொகைகளை, அதாவது வரி, பிடித்தங்கள் போக மிச்சமுள்ள தொகையை மட்டுமே கணக்கிட வேண்டும். இது போக, வருடத்தில் ஓரிரு முறை கிடைக்கக் கூடிய ஊக்கத் தொகை, போனஸ், விவசாய நிலத்தில் கிடைக்கும் வருமானம் முதலியவற்றை மாத வருமானத்தில் சேர்க்காமல், தனியாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். அப்பொழுதுதான், உங்களால் உண்மையான, சரியான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்க இயலும்.

செலவினங்களைக் கணக்கிடுதல்:
செலவினங்களைக் கணக்கிடுகையில், மாதாமாதம் வரும் செலவுகள், இரண்டு மாதத்திற்கொருமுறை கட்டவேண்டிய கட்டணங்கள், மூன்று மாதத்திற்கொருமுறை செய்யவேண்டியவை, வருடம் ஒருமுறை வரும் செலவுகள் என்று பிரித்துக் கொள்ளுங்கள். இவை தவிர எதிர்பாராத செலவுகளுக்காகவும் ஒரு தொகையினை ஒதுக்கிக் கொள்ளுங்கள். அதன்பின் திட்டமிடத்தொடங்குங்கள்.

மாதச் செலவுகள்:

இத்தலைப்புக்குக் கீழ் மாத வாடகை, தொலைபேசி, செல்பேசி, மின்சாரம், தண்ணீர், போக்குவரவு,பெட்ரோல், மாதாந்திர மளிகைகள், பால், காய்கறி, பழங்கள், புத்தகங்கள், பொழுதுபோக்குகள், கடனுக்கான தவணைகள், மருத்துவச் செலவுகள், மாதாந்திர சேமிப்புத் திட்டங்கள் இவை அடங்கும். இவை தவிர இதர செலவுகள்- திரைப்படங்களுக்குச் செல்லுதல், வெளியில் உணவருந்துதல், உல்லாசப்பயணம் முதலியவை செல்லுதல் இவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள். கவனம். இதற்காக குறைந்த அளவு மட்டுமே ஒதுக்கவும்.
இரு மாதங்கள், மூன்று மாதங்கள் அல்லது வருடமொருமுறை வரும் செலவுகளுக்கான மொத்தத் தொகையை, உத்தேசமாகக் கணக்கிட்டு, மாதாந்திரச் செலவில் சேர்த்துவிடுங்கள். அந்தத் தொகையினை வங்கியில் சேமித்துவிடுவதால், ஒரு மாதம் கைவீசி செலவு செய்துவிட்டு மறுமாதம் கையைக்கடிக்கும் செலவுகளில் மாட்டிக்கொண்டு திண்டாடத் தேவை ஏற்படாது.

குழந்தைகளுக்கான பள்ளிக் கட்டணங்கள், சமையல் எரிவாயு, வீட்டு வரி, காப்பீட்டுக் கட்டணங்கள், வாகனங்கள் பராமரிப்பு, வீட்டிற்குத் தேவையான சாதனங்கள் வாங்குதல், நகைகள் வாங்குதல், பண்டிகை மற்றும் விழாச் செலவுகள், மருத்துவப் பரிசோதனை போன்ற செலவினங்களைக் கணக்கிட்டு அவற்றினை மாதாமாதம் இவ்வளவு பணம் என்று பகிர்ந்து (Prorata Basis) ஒதுக்கீடு செய்து சேமிக்கவும். இதே போல் எதிர்பாராத பயணங்கள், பரிசுகள் வாங்கவேண்டி நேருதல், மருத்துவ அவசரத்தேவைகள் (Emergency) இவற்றுக்கும் ஒரு தொகையைத் தனியாகச் சேமித்து வாருங்கள்.

ஒப்பீடு செய்தல்: உங்களுடைய வரவிற்கும் செலவிற்கும் உள்ள வேறுபாடு என்ன என்று கணக்கிடுங்கள். வரவு அதிகமாகவும் செலவு குறைவாகவும் இருந்தால்... நீங்கள் அதிர்ஷ்டசாலி. மீதத்தொகையை நல்ல முறையில் முதலீடு செய்யுங்கள். அதுதான் பணம் மிச்சமாகிறதே என்று தேவையற்ற வீண் செலவுகளில் ஈடுபட வேண்டாம். வரவை விடச் செலவு அதிகம் இருப்பின்...கவலைப்படவேண்டாம். உலகில் 99 சதவீத மக்கள் உங்கள் கட்சிதான். ஏன்! பல அரசாங்கங்கள் கூட துண்டு விழும் பட்ஜெட்தான் தயாரிக்கின்றன. ஆனால், அப்படியே விட்டுவிட முடியமா? உங்கள் செலவினங்களை மீண்டும் ஆய்ந்து, எதை எதை எல்லாம் குறைக்கலாம் என்று பாருங்கள்.

ஒவ்வொரு மாதமும் இதற்கு இவ்வளவு தொகை என்று நிர்ணயித்தால் போதுமா? அன்றாடம் செய்யும் செலவுகளை மறக்காமல் அனைவரும் குறித்துவைக்கவேண்டும். ஒவ்வொரு செலவினத்திற்கும் ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு, உண்மையில் செலவானது எவ்வளவு என்று ஒப்பிட வேண்டும். அதிகம் ஆகியிருப்பின் அது ஏன் என்று தெரிந்துகொள்ளவேண்டும். அவசியமான செலவுகள், ஆடம்பரச் செலவுகளை இனம் கண்டு தேவையற்றவற்றைக் குறைத்துவிட வேண்டும். எந்தெந்த வகையான செலவினங்களைக் கட்டுப்படுத்த முடியுமோ அவற்றைக் கட்டுப்படுத்தி சேமிப்பைப் பெருக்க வேண்டும். 'There is no gain without pain' என்பது ஒரு பொன்மொழி. சரியாகத் திட்டமிட்டு, அவற்றை எழுதிவைத்துக்கொண்டு யார் கஷ்டப்படுவது? இது எல்லாம் வெட்டிவேலை, என்று சொல்வீர்களே ஆனால், உங்களால் உங்கள் சேமிப்பைக் கூட்டவோ, தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்தவோ இயலாது.
'ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை'
என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கை மனத்தில் நிறுத்தினால், பொருளாதார விடுதலையும், மன நிம்மதியும் நிச்சயம்.


--

தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

3 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post