கண்டிக்கதக்க செயல்

சனிகிழமை இரவு மாதவராஜின் பக்கத்தில் பார்த்த பொழுது விசயத்தின் ஆழம் என்னவென தெரியவில்லை அவர் மொட்டையாக எழுதி இருந்தார் .(முழுசா விசயம் தெரியாமல் யாரையும் திட்ட கூடாது என்பதால் நான் அவரை (நரசிம்மை)கண்டித்து உடனே பதிவெழுதவில்லை)

இப்போது வினவு எழுதிய கட்டுரையை பார்த்த பின்புதான் தெரிந்தது .. அநாவசியமாக ஒரு பெண் பதிவரை புனைவு என்ற பெயரில் வன்மமான கருத்தை எழுதி இருக்கிறார் இந்த நரசிம் ..

முன்பு அதற்கு முன்பு என்ன நடந்தது என்ற பதிவு அதன் அரசியலுக்குள் போக முடியாவிட்டாலும் கடைசியாக அவர் பயன்படுத்திய ஒரு ஆணாதிக்க பதிவு அவரது அப்பட்டமான மனதை காண்பிக்கிறது

லீனா - விசயத்தில் இப்படி பேசி இருக்க கூடாது என நான் நான்காண்டுகளாக ஆதரித்த தோழர்களையே தூக்கி எறிந்து பேசினேன்

ஏன் - பெண்களை பொதுவெளிக்கு வராமல் தடுக்கும் ஒரு விசயமாக தோழர்களின் எதிர்வினை இருந்தது .

இந்த கட்டுரையை எழுதிய வினவு ஒரு கோரிக்கை வைத்து இருக்கிறார்

//. இத்தகைய நபர்களை தமிழ்மணத்திலிருந்து அறிவிப்பு செய்து தூக்குவதே பெண் பதிவர்களுக்கு செய்யக்கூடிய உதவியாக, நம்பிக்கையாக, ஆதரவாக, நீதியாக இருக்கும். இதை மற்ற பதிவர்களும், வாசகர்களும் ஆதரிக்க வேண்டுமென்று கோருகிறோம்..//


இந்த கருத்துடன் முழுவதும் உடன்படுகிறேன்.

ஏன் சங்கமாக திரளனும் என்பதற்கு மேலும் மேலும் நடைமுறை காரணங்களை நமக்கு தறுகிறது

நரசிம்மை ஆதரிப்பவர்களில் அபிஅப்பா போன்றவர்கள் இருப்பது மிகவும்
வேதனை அளிக்கிறது
(சார் ஒருமுறை உங்களுடன் போனில் பேசி இருக்கிறேன் - நீங்கள் இதை ஆதரிக்கலாமா?)

குசும்பன் அவர்கள் இதையும் வழக்கமான பாணியில் நகைசுவையாக எழுதி இருப்பதும் வருந்த தக்கது

மேலும் சில பெண் பதிவர்களும் நரசிம்க்கு ஆதரவாக எழுதி இருப்பினும் அதுவும்
மிகவும் கண்டிக்கத்தக்க செயல்

(வேலியில் போற ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்ட கதை )

பெண்களின் மீதானா தாக்குதலை பார்க்கும் போது அதை வெறும் ஒரு பதிவாக
சொற்களாக பார்க்காமல் அதன் உள்ளடக்கத்தை அதை எழுதியவரின் சாதி ஆதிக்க பின்புலத்தை சொல்வது என்பது சரியான விசயமாக இருக்கிறது
ஏனெனில் சாதி ஆதிக்கம் என்பதும் பெண் அடக்குமுறை என்பதும் வேறு வேறான விசயம் அல்ல

மேலும் இந்த விசயத்தில் மிக அக்கறை எடுத்து செயல்படும் வினவு தோழர்களுக்கு எனது வாழ்த்துக்கள்

--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post