சமையல் நான் திருப்பூர் வரும்போது கற்றுகொண்ட முதல் விசயம் நானும் நண்பனும் ஞாயிற்றுகிழமையானா பழைய பஸ்நிலையம் அருகில் உள்ள மார்க்கெட்டுக்கு சென்று காய்கறி வாங்குவோம் மொத்தமா இருநூற்று அம்பது ரூபாய்க்கு அரிசி உட்பட அனைத்தையும் வாங்கி விடுவோம் (வாரம் நானூறு ரூபா சம்பளத்தில் இரு நூறு ரூபாய்க்கு சாப்பாட்டுக்கு செலவழிப்பது அதிகம் )
அவன் தனக்கு ஒரு குவார்டருக்கு அளவாக பணத்தை எடுத்து கொண்டு கொடுக்கும் பணத்தை வைத்து அந்த வாரத்துக்கான சாமான்களை வாங்கி
வருவோம் இதுக்குள்ள ஞாயிற்று கிழமை கோழிகறியும் வறுவலும் தவறாதுன்னா பார்த்துக்கங்க.
அவனது ரூமில் இருந்ததால் நான் சமையல் வேலையை எடுத்துகொண்டேன் . என்ன பெரிய சமையல் தட்டுகெட்டு போகும்னா சாம்பார் வைப்பது , சுண்டல்கடலை புளி கொழம்பு , ரசம் , கருவாட்டு குழம்பு, இதையெல்லாம் இரண்டு பார்முலாவில் செய்து விடுவேன் .
சாம்பார் வைப்பதென்றால்:
முதலில் தண்ணிரை கொதிக்க விடனும் , பிறகு அதில் கொஞ்சம் எண்ணெய் விடனும் என்ன பார்கிறீங்க கேளுங்க கொஞ்சம் கொதி வந்ததும் அதில பருப்பை போடனும் பருப்பு நல்லா கொதிக்கும் போது வெட்டி வைச்ச காய்கறியை போடனும் .
தாழிக்க தனியா ஒரு சட்டிய எடுத்து எண்ணெய் ஊத்தி வெங்காயம் தக்காளி போட்டு நல்லா வதக்கி ஏற்கனவே கொதிக்கிற காய் கறியை இதுல ஊத்தி எடுத்துடனும் .
-இந்த பாணியில் அனைத்து சாம்பாரும் வைச்சுடலாம்( அப்போ குக்கர் வாங்கலை நாங்க) (முருகக்காய் இருப்பின் அனைத்து சாம்பாரும் சுவைதான்)
புளி கொழம்புக்கு இதே பாணிதான் ஆனால் புளியை கரைச்சு அதை கொதிக்க வைக்கனும் பிறகு அதில் காய்கறியை போட்டு வேக வைக்கனும் ஆனால் தாழிப்பு எல்லாம் ஒரே மாதிரிதான்.
சாம்பாருக்கு புளி தேவை இல்லை -(அல்லது கொஞ்சம் போட்டால் போதும்)
புளி கொழம்புக்கு புளி மட்டும் ஊத்தி காய்கறியை போட்டால் போதும் . மற்றபடி தேங்காய் காமன் . சிக்கன் மட்டன் என்றால் நன்றாக தண்ணீரில் வேகவைத்து கொடுத்துள்ள பொடி பாக்கெட்டின் பின்னால் என்ன எழுதி இருக்கோ அதை செய்தால் போதுமானது.
பனிரெண்டு மணிநேரம் வேலை செய்துவிட்டு லொங்கு லொங்குன்னு வீட்டுக்கு போனால் இருக்கிற குழம்பின் சுவை எல்லாம் தெரியாது . சாப்பாடு அப்படியே உள்ள போகும் .
(இப்போ சிறிது உப்பு கூடன்னு தலையை சொறியும் மனைவி இதை படித்தாள் நிச்சயம் கேட்பார்)
சமையல் நன்றாக தெரிந்ததும் பார்க்கும் முதல் வேலை தனியா சட்டிமுட்டி வாங்கிட்டு ரூமை பார்பதுதான் ரூமென்றால் மாதம் ஐநூறுக்கு அதிகமா இல்லை அந்தளவுதான் .
எட்டே முக்காலுக்கு வேலைக்கு நிக்கனும் அதற்குள்ள சமைக்கனும் . இடையில் கம்யூட்டர் வேற கத்துக்கனும் என்கிற போராட்டத்தில் சமையலும் கூட சேர்ந்து வளர்ந்து விட்டது.
காய்கறி வாங்க தினமும் பையுடன் கிளம்பி செல்வது குறித்து அந்த பகுதி டைபி தோழர்கள் தினமும் கிண்டல் அடிப்பது தொடரும் .
இதுல கட்சிக்கு எப்ப வரபோறீங்கன்ற தொண தொணப்பும் குறையாது அவர்களிடம் .
எனது சமையல் திறமை நல்லா வெளிச்சத்துக்கு வரும்போது மனைவி வந்து விட்டார் அவ்வப்போது அளந்து விடுவேன் . நாங்கலெல்லாம் அந்த காலத்துல சமைக்காததையா நீ சமைச்சுட்ட .
என்னதான் இருந்தாலும் சட்டிபாத்திரம் கழுவுறதுதாங்க ரொம்ப கொடுமையா இருக்கும் நண்பன் அடிக்கடி இதை கழுவாமல் எஸ்கேப்பாக . அந்த பொறுப்பும் விழுந்தது .
ஆகவே ஒரு வேளை செய்தேன் ஒரு கரண்டி , ஒரு சோத்து பானை , ஒரு குழம்பு சட்டி ஒரு கிண்ணம் இதுதான் அந்த அறுசுவை உணவுக்கு போதுமான பாத்திரங்கள் அதிகம் பாத்திரம் போட்டா யார் கழுவுறது.
இப்படியே பல ஆண்டுகள் சமையல் செய்தால் உங்கள் நாக்கு செத்து போகும் போது ஊருக்கு சென்று அம்மா கையில் ஒரு வாய் சாப்பிடும்போது உங்களுக்கு தோணும் இதல்லவா சாம்பார் என அப்படி எல்லாம் தோணப்படாது :)
குறிப்பு:
ஒரு சமையலை சுவையாக செய்வது என்படின்னு புத்தகம் படிச்சோ அல்லது
என்னை போன்ற ஆட்களின் பதிவை படிச்சோ கத்துக்க முடியாது என்பதே இந்த பதிவு எழுதியதன் நோக்கம் மற்றும் கொஞ்சம் சுய விளம்பரம் கலந்து இருக்கிறது
யாராவது பின்நவீனத்துவ சமையல் பற்றி எழுதினால் நலம்.
ஒவ்வொரு சமையலா கட்டுடைத்தால் என்ன கிடைக்கும் என விளக்கலாம்
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

Tags
சமையல் எனது பாணி