ஈழப்போராட்டத்தை புலிகளை விடுத்து படிக்க முடியாது
ஈழ விடுதலையை புலிகளை தவிர்த்து கொணர முடியாது
ஈழ விடுதலையில் மக்களை விடுத்து முன்னெடுத்தார்கள்
விடுதலை புலிகள் மக்களிடம் இருந்து அன்னியப்பட்டார்கள்
இதுதான் கசப்பான உண்மை புலிகள் தோற்று கொண்டோ அல்லது பின்வாங்கி கொண்டோ
இருக்கிறார்கள் என்பதனால் இதை சொல்லவில்லை புலிகள் அளவுக்கு தியாகம் செய்தவன்
ஈழத்தில் எவனும் கிடையாது என்பதை நான் சொல்லவேண்டியதே இல்லை
ஆனால் தவறு எங்கே உள்ளது
கடைசியாக ஒரு விமானதாக்குதல் நடத்திய போராளி சொன்னாரே
வன்னியில் இருக்கும் மக்கள் எல்லாம் ஆயுதம் தூக்கினால் நமக்கு விடுதலை
கிடைத்து இருக்கும் என்று அதைத்தான் செய்ய தவறினார்கள் புலிகள்
மக்களை ஆயுத பாணிகளாக்கி சோசலிச குடியரசுதா ஈழத்தில் என
சொல்லி இருக்கனும்
மக்கள் போராட துவங்கினால் தனியொரு நாடோ தனியொரு படையோ
நிற்க முடியாது அவர்கள் முன்னால் அதற்கு ரசியா தொடங்கி
சீனா வரையும் தற்போதைய வியட்நாம் முடியவும் பல ஆதாரங்கள் இருக்கிறது
"மக்களால் மக்களுக்காக மக்களே ஆயுட்தம் ஏந்த வேண்டும் "
துப்பாக்கி குழலில் இருந்துதான் அதிகாரம் பிறகிறது -மாவோ
ஆனால் அந்த துப்பாக்கி ஒரு குழு ஏந்துவது மட்டும் போதாது
தற்காலிக பின்னடைவை சரிசெய்து புலிகள் முன்னேறுவார்கள் எனும்
அதிக நம்பிக்கை இருக்கிறது
பிறகு தற்போதைய தவறுகளில் இருந்து பாடம் கற்றால்
அவர்களை விட சிறந்த மக்கள் விடுதலை படை இருக்க போவதில்லை
அவர்களிடம் இருக்கும் பிரசார சாதனங்களின் மூலம் முடங்கி கிடக்கும்
மக்களுக்கு அரசியல் அறிவும் போர் தந்திரமும் கற்பிக்கனு
கற்பி ,ஒன்றுசேர் ,போராடு -அம்பேத்கார்
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================