ஓசை செல்லாவுக்கு

செருக்கென்று கொள்வார்தம்மின்
கருக்கலைக்க புறப்பட்டாய்
உருக்கென்றும் உறுதியென்றும்
உன்பின்னால் சேர்ந்தார் தம்மின்
கருத்தென்று எதையேனும்
கண்டிலையோ கண்டிலையோ !

பொறுக்கவொண்ணா ஒரு துயரம்
மறுக்கவில்லை இவ்விடத்தில்
இருக்கவேண்டும் எந்தோழா
இனியும் நீ இணையத்தில்!

எழுதாதே என சொல்ல
இவன் யார் இவனோ யார்
இடாதே நீ பின்னூட்டம்
என சொல்ல இவனும் யார்
என கேட்டாய் கேள்வியின்
மறுக்கவொண்ணா நியாயத்தை
மதிக்கிறேன் நான் மகிழ்கிறேன்யான்!

இன்றிருப்பர் நாளை இருந்திலார்
என நினைக்க நீ ஒன்றும்புல்லில்லை
பூண்டில்லை புயலில் சிக்கிய மரமே
கரைகள் உடைத்த அறமே! அன்பே!

கண்கள் கலங்குது உன்
கடைசி மடல் கண்டேன்
நெஞ்சம் நெருடுது
என்நேசமொன்ரு போவதற்கு !


இருந்திடுவாய் எங்களுடன்
எரிமலையாய் கடும் புயலாய்
இருந்திடுவாய் எங்களுடன்
எதிர்கின்ற போர்வாளே!

தியாகு

19 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post