திருவாளர் திருமதிகள் ஆடும் ஆட்டம்

சினிமாவை (தொலைக்காட்சி மூலம்)நடுகூடத்துக்கு கொண்டு செல்வதை எதிர்க்கிறோம் என தெரிந்து தொலைக்காட்சி காரர்கள் மக்களை தொலைக்காட்சியில் ஆட வைக்க நினைத்து விட்டார்கள் . :)

பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களில் சிறுவர் ,இளைஞர்களை ஆடவைத்து நிகழ்ச்சிகாட்டிய தொலைக்காட்சிகள் இப்போது தம்பதிகளை ஆடவைத்துவிட்டது .

இதன் மூலம் நடுத்தர வர்க்கத்து தம்பதிகள் தங்களுக்கு கிடைக்கும் இருபதாயிர்டம் ரொக்கத்துக்காக கூத்து கட்டி ஆட தயாராகிவிட்டார்கள்
இதன் மூலம் சமூகத்துக்கு நல்ல நையாண்டி நடனத்தை பெற வழிசெய்த தொலைகாட்சிகாட்சிக்கு நன்றி .

வீட்டு வேலை செய்து செய்து தனது வாழ்நாளில் அடுபடியே கெதி என வாழ்ந்து இறந்து விடும் அற்ப பிறவியாகாமல் பெண்களை கூத்து கட்டி ஆடவைத்து அவர்கள் பிறந்த பலனை அடைய செய்தது சன் டிவி
அலுவலகம் வீடு என வெறும் பைலையும் கஸ்டமரையும் பார்த்து பார்த்து தனது ஜீவனை முடித்து கொண்ட ஜென்மங்களை ஆடவைத்து புண்ணியம் தேடிகொண்டது இந்த டிவி ஆட்டம் மட்டுமா என்றால் இல்லை?

இதோ சண்டைகாட்சிகள் இருக்கின்றன .

வேலைக்கு சென்றுவரும் ஆண் எப்படி கோபப்பட்டு பளாரென அடிப்பாரோ அதே வேலையை ஒரு பெண்னை செய்ய வைத்து பெண்விடுதலையை ஸ்தாபித்தது இந்த தொலைக்காட்சி .பிறகு சமாதானமாக வேண்டுமாம் அதாவது அடிவாங்கிய பெண்ணை (ஆணை) அந்த ஆணாகிய பெண் சமாதான படுத்துவாராம் .

வேறெங்கு இல்லை பெண் அடிமைத்தனத்தை விரட்டும் நல்ல ஒரு கருத்தை இங்கே தானே சொல்லிட்டாங்க புதையல் கிடைக்க அடுத்த கட்ட நடவடிக்கை தனது கணவரின் கண்களை வைத்து கண்டுபிடிக்கும் போட்டி
"ஓர் ஆயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன் " எனும் பாட்டை அப்படியே நிரூபிக்கும் முயற்சிதான் இந்த அடுத்தகட்ட நடவடிக்கை
மறைப்புக்கு பின்னால் நிற்கும் தனது கணவனை கண்டு பிடிச்சுட்டா அந்த மனைவிக்கு வருகிறதே சந்தோசன் அட அட பாவம் பரிதாபமாக யாரோ ஒருத்தனை கணவன் என சொல்லும் பெண்கள்\பரிசு கிடைக்காமல் துவண்டு போய்விட்டார்கள் பரிசு நேரே நேயர் புதையலுக்கு வந்துவிட்டது .
ஜெயலலிதாவை மறைப்புக்கு பின் நிற்க்கும் எம்ஜியாரை கண்டுபிடிக்க சொல்லி இருந்தால் அவர் கண்டு பிடிப்பார் ஆனால் ஜானகியால் முடியாது பாவம் :)
ஒரு வழியாக மூன்று கட்டங்கள் முடிந்தது
அடுத்தகட்டத்தை நோக்கி நகர்கிறது நமது குடும்பங்கள்
1.திருமணம் முடிந்ததும் பார்த்த சினிமா 2. இந்தமாதம் கரெண்டு பில் என அறிவுப்பூர்வமான பலஅசரவைக்கும் கேள்விகளால் திணறடிக்கும் போட்டியில்
வெற்றிகரமாக பரிசு வாங்கி போகிறார்கள் யாராவது ஒரு தம்பதிகள்
இந்த கடைசி வரும் கட்டங்கள் எல்லாம் சும்மா உப்புக்கு சப்பாணியாக சேர்க்கப்பட்டது விசயம் என்னமோ அந்த ஆட்டத்தில் தான் மையம் கொண்டு பிறகு சண்டையில் கரையை கடக்கிறது ..
ஆகவே தம்பதிகளே இது நாள் வரை ஆடத்தெரியாதவர்கள் ஆடுங்கள்
ஆடபழகி கொள்ளுங்கள்
இதுநாள் வரை சண்டை போட தெரியாதவர்கள் பழகிகொள்ளுங்கள்
உலகமே எதிர்பார்கிறது உங்களின் கூத்தை ?

7 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post