நாலடியாரில் பொதுவுடமை பாடல்

நாலடியார் அறத்துப்பால்துறவறவியல்

அதிகாரம் 1 'செல்வம் நிலையாமை'[செல்வத்தின் நிலையற்ற தன்மை]

1.அருசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச் சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழெனிற் செல்வமொன்[று] உண்டாக வைக்கற்பாற் றன்று.


ஒரு பெரிய பணக்காரன் இருக்கிறான். சாப்பிட வருகிறான்.மனைவி தலைவாழை நீர்தெளித்து, வட்டிலிலே சோறாக்கிகூடவே சேர்ந்து உண்ண பலவகைப் பதார்த்தங்களையும் படைத்து, அவன் முன்னே வைக்கிறாள். தங்கத்தட்டிலே சோறு வைத்து, கொஞ்சம் பதார்த்தம் கலந்து, நெய்யூற்றிப் பிசைந்து, அளவான உருண்டையாக்கி, அவன் வாயிலே ஊட்டுகிறாள்.அடுத்த பிடி நீட்டுகிறாள். அவன் அதைப் புறந்தள்ளி,' அதோ, அது என்ன? அதைக் கொடு என இன்னொரு பண்டத்தைக் காட்டிக் கேட்கிறான். அதுவும் ஒரு பிடிதான்! ஒரு கடிதான்.அடுத்த பண்டம் நோக்கி அவன் பார்வை பாய்கிறது.அப்படி, அடுத்த பிடியை ஒதுக்கி பல பண்டங்களையும் உண்டு களித்த பெரும் செல்வந்தர்களும் கூட, காலத்தின் கோலத்தால், சொத்து, சுகம், வீடு, மனை அனைத்தையும் இழந்து, ஒரு வேளைக் கஞ்சிக்குக் கூட வழியின்றிப் போய் அதற்கும் பிச்சையெடுக்கும் நிலைக்கு உள்ளாவார்கள். வாழ்க்கையின் தன்மையானது, இப்படி இருக்கும் காரணத்தால், செல்வம் என்னும் ஒரு பொருளைச் சேர்த்து வைத்து, ஒரு நிலையாய தன்மை அடைந்துவிடலாம் என்று எண்ணவேண்டாம்.
[உண்டி= உணவு; அமர்ந்து= விரும்பி; சிகை= பிடியளவு]

எழுதியர் : சங்கர் இட்டவர் : அக்னி இறகு

2 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post