ஆத்தாவ திட்டுவீரோ

சொத்து தகராறா
சொந்தபந்த தகராறா
விளைநிலத்தில் தகராறா
விற்பனையில் தகராறா

எந்த தகராறுன்னு
கச்சகட்டி வந்தீக
என்ன சொல்லனும்னு
இம்புட்டு தூரம் வந்தீக

ஆத்தாள திட்டனுமா
பெத்தவள திட்டனுமா
பிறந்தவள திட்டனுமா
பேரு வச்சவள திட்டனுமா

சண்டைக்கு வந்தீகளே
சந்திக்கு வந்திட்டீக
சண்டை நின்னபுறம்
சாதிச்சத சொல்லுமைய்யா

இருக்குற சண்டைக்கெல்லாம்
ஆத்தாவ திட்டனுமா
கிடைக்கிற சாக்கிலெல்லாம்
பிறந்தவள திட்டனுமா

பேசிவிட்ட வார்த்தையெல்லாம்
போய்விடுமா வாயவிட்டு
வீசிவிட்ட நாத்தமெல்லாம்
கழுவிவிட்டா போயிடுமா

புண்ணாக போனப்புறம்
மருந்தாக வருவீரா
மண்ணாக போனப்புறம்
மணத்தோடு வருவீரா

சொன்னாக்க கேட்பேன்னு
சொல்லிபுட்டேன் உன்கிட்ட
வில்லாக புறப்பட்ட
விசனத்தை நிறுத்திக்கைய்யா

-தியாகு

நடக்கும் சண்டையில் மிக மனவருத்தத்துடன் உள்ளேன்

8 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post