பணக்காரன் வெறுக்கத்தக்கவனா?

என செல்வன் ஒரு பதிவு போட்டு இருந்தார் அமெரிக்காவில் யாரும் ஏழைக்கு வக்காலத்து வாங்குவதில்லை என்றும் அவ்வாறு பேசியவர்களும் டெபாசிட் காலியானவர்களாக காணாமல் போனதாகவும் எழுதி இருக்கார்.
1.பணக்காரனுக்கு ஏழைக்கும் சம்பந்தம் இல்லை?
2.ஏழையாக இருப்பதன் காரணமாக பணக்காரன் உருவாவதில்லை?
3.ஏழைகள் சோம்பேறிகள் ?
4.ஏழைகள் கர்மவிதிப்படி ஏழையாக இருக்கிறார்கள் ?
என்ற அடிப்படையில் இந்த கருத்துக்கள் உதிக்கிறது \
மேலும் ஒருவன் ஏழையாக இருப்பதற்கு தான் பொறுப்பில்லை என
ஒவ்வொருத்தனும் நினைக்கிறான்,
ஒரு பெரிய எந்திரத்தில் மேல் அடுக்கில் இருப்பவந்தான் பணக்காரன்
கீழ் அடுக்கில் இருப்பவந்தான் நடுத்தரவர்க்கம்
அந்த எந்திரத்தின் சக்கரங்களை சுழட்டும் பாட்டாளிகள்தான் ஏழைகள்
என்பதை கண்திறந்து பார்க்க மறுக்கும் இவர்கள்
ஏழைகள் ஏழைகளாய் இருப்பதை வெக்கமில்லாமல் மறுக்கவும்
பணக்காரன் மேலும் பணக்காரன் ஆவதை புகழவும் தலைபடுகிறார்கள்
பணக்காரனின் குற்றத்தை அவன் சுரண்டல் மூலம் சேர்க்கும் சொத்துக்கு
சேமிப்பு எனும் முலாம் பூசும் இவர்கள் உழைத்தால் உயரலாம் என்றும் உயராத ஏழைகள் சோம்பேறிகள் என்றும் நாக்கூசாமல் சொல்ல தளைபடுகிறார்கள்
இது அநியாயமில்லையா , இதை தொடர விடலாமா?

5 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post