அன்புடனுக்கான சுரேஸ் அவர்களின் மடல்

முன்கதை சுருக்கம் அறிய : இங்கே

அன்புட‌ன் ந‌ண்ப‌ர்க‌ளுக்கு,
வ‌ண‌க்க‌ம். அன்புடனுக்கான என் இறுதிம‌ட‌ல்
க‌ட்டுரையை ப‌டித்து அத‌ன் முழு அர்த்த‌த்தையும் உள்வாங்கிய‌பின்ன‌ர் ந‌ல்ல‌ க‌ட்டுரை என்று அறிந்து அன்புட‌ன் அன்ப‌ர்க‌ள் இது குறித்த‌ க‌ருத்தாட‌லில் ஈடுப‌ட்டால் ஒரு ந‌ல்ல அல‌ச‌லாக‌ இருக்கும் என்ற‌ ரீதியில்தான் அனுப்பினேன்.

தொட‌ர்ந்து ஜெய‌பார‌த‌ன் அவ‌ர்க‌ள் வினாதொடுக்க‌, அது நான்குநாட்க‌ளுக்கு முன்பே நீக்க‌ப்ப‌ட்ட‌து என்று சேது அவ‌ர்க‌ள் சொன்ன‌பின்ன‌ர்தான் என‌க்கு அந்த‌க் க‌ட்டுரை நீக்க‌ப்ப‌ட்ட‌ விட‌ய‌ம் தெரிய‌வ‌ந்த‌து. தொட‌ர்ந்து ஆசிப் அவ‌ர‌து க‌ருத்தைச் சொல்ல‌ இது அன்புட‌னுக்கு உக‌ந்தது அல்ல‌ நீக்கப்பட்டுவிட்ட‌து என்றார்கள், சரி. அப்ப‌டியானால் இந்த‌ விவாத‌த்துக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன், என்று ஆசிப் போய்விட்டார். அதோடு நிர்வாக‌த்தின் சார்பில் ஒரு விள‌க்க‌ம் கொடுத்திருக்க‌லாம். இன்னின்ன‌ கார‌ண‌த்தால் இதுபோன்ற‌ க‌ட்டுரைக‌ள் அன்புட‌னில் யாரும் இட‌வேண்டாம். தேவையில்லாத‌ க‌ருத்தாட‌ல்க‌ள் எழும். யார்ம‌ன‌தும் புண்ப‌ட‌ வேண்டாம் என்ப‌தால்...என்று புகாரியோ, சேதுவோ கொடுத்திருக்க‌லாம். அத்தோடு இந்த இழை முடிந்து போன சமாச்சாரமாயிருக்கும்!

அதைவிட்டுவிட்டு புகாரி அறிவும‌தியின் மீதும் ஆசிப் மீதும் என் மீதும் பாய்ந்த‌ பாய்ச்ச‌ல்க‌ளை அடுத்துத்தான் இங்கே க‌ருத்து மோத‌ல்க‌ளுக்குப் ப‌திலாக‌ த‌னி ம‌னித‌ தாக்க்குத‌ல் துவ‌ங்கிய‌து.

நீங்க என்ன பண்றீங்க? நீங்க என்ன செஞ்சுகிட்டு இருந்தீங்க?ஆசிப்பை கண்டித்தீர்களா? சுரேசை கண்டித்தீர்களா?நீங்கள் கொடி தூக்கியவுடன் என் கண்கள் கசிந்தது!ஆனால் நீங்கள் கொடி தூக்காமல் எங்கே போயிருந்தீர்கள்?இப்படி ஒவ்வொருவராக உசுப்பி விட்டு இன்றளவும்இந்த இழையை விடாமல் இரும்புக்கயிறு போட்டு இழுத்துச் செல்வது யார்?
இதை நண்பர்கள் அனைவரும் அறிவீர்கள்!

இந்த‌மோத‌லை நான் விரும்பாத‌தால்தான் இந்த‌
இழையில் யாரும் எழுத‌வேண்டாம் என்று த‌ய‌வாய்
ம‌ட‌ல் அனுப்பினேன்.

அதையும் மீறி ம‌ட‌ல்க‌ள் வ‌ந்து விழ‌ நொந்து நூலாய் உட‌ல்ந‌ல‌மும் இன்றி இருந்தேன். இந்த‌ நேர‌த்தில் இத‌ற்கு கார‌ண‌மே சுரேஷ்தான் என்று புகாரி எழுத்துக் க‌த்தியால் கீறுகீறு என்று கீற‌,( புகாரி உபயம்) சேதுவும் ம‌ற்ற‌வ‌ர்க‌ளும் என்னை மிகுந்த‌ வேத‌னைக்குள்ளாக்கின‌ர். எல்லாவ‌ற்றையும் இறைவ‌னிட‌ம் சொல்லி அழுதுவிட்டு, இட்ட‌ ஒரே கார‌ண‌த்துக்காக‌ நான் ம‌ன்னிப்பு கேட்கிறேன் என்று ம‌ட‌ல் அனுப்பினாலும்
இந்த‌ நிமிட‌ம் வ‌ரை அன்புட‌ன் உறுப்பின‌ர்க‌ள் எழுதுவ‌தைக் காட்டிலும் நிர்வாக‌த்திலுள்ள‌ புகாரியும் சேதுவும் மாறி மாறி என்னை சிலுவையில் அறைந்துகொண்டிருப்பதை என்னால் தாங்க‌ முடிய‌வில்லை.

ஓடி ஒளிந்துவிட்டான்! என்கிறார் ஒருவ‌ர்! இன்னொருவ‌ர் இந்த‌க‌ட்டுரையை போட்டு அன்புட‌னை வெடிகுண்டு வைத்து த‌க‌ர்க்க‌ ச‌தித்திட்ட‌ம் தீட்டிய‌ தீவிரவாதிபோல‌ என்னை சித்த‌ரித்துக்கொண்டிருக்கிறார்!
என் ம‌ன‌ அமைதியே குலைந்து போய்விட்ட‌து!
இது ஒரு சர்ச்சைக்குரிய பிரச்னையாகிவிட்ட நிலையில் மீண்டும் மீண்டும் இதன் பின்னணி என்ன? என்ன? என்று மடலுக்குமடல் நிர்வாகத்தினர் மாற்றிமாற்றிக் கேட்பதால் என் கருத்தைச் சொல்லுகிறேன்.

எந்தவிதமான உள்நோக்கமும் இல்லாமல், எதார்த்தமாகத்தான் நல்ல கட்டுரை என்று எனக்குத் தோன்றியதால் அனுப்பினேன்!

என் கருத்தில் சிலருக்கு உடன்பாடு இருக்காது. சிலருக்கு உடன்பாடு இருக்கலாம்; இல்லாமலுமிருக்காலாம். ஒரு கருத்தைச் சொல்வதற்கு உரிமை வேண்டும். அதை நீங்கள் ஏற்காமல் இருக்கலாம். அதுதான் ஜனநாயகம்! எதையும் சொல்வதற்கு கருத்துச் சுதந்திரம் வேண்டும்!

வால்டேர் சொன்னான்; உன் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் உன் கருத்தைச் சொல்கின்ற உரிமையைக் காப்பாற்ற நான் மரணம் வரை போராடுவேன் என்று வெகு அழகாகச் சொன்னான். ஒரு கருத்தில் எனக்கு ஒரு சதவிகிதம் கூட உடன்பாடில்லாமல் இருக்கலாம்; ஆனால் அதைச் சொல்லக்கூடிய உரிமை உனக்கு இருக்கிறது. அதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை.

ஆனால் கொள்கை என்ற‌ பெய‌ரில் நிர்வாக‌மே நேர‌டித்தாக்குத‌லில்
இற‌ங்கிவிட்ட‌ பிற‌கு இனிமேலும் அன்பில்லா, ப‌ண்பில்லா இட‌த்தில் இருக்க‌ வேண்டாம் என்று முடிவு செய்து மிகுந்த வருத்தத்தோடு என்னை வில‌க்கிக் கொள்கிறேன்.ந‌ண்ப‌ர்க‌ளூக்கு என்வ‌ண‌க்க‌ங்க‌ள்.

பாசமுடன்
என் சுரேஷ்

2 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post