மொழிகளில் எவ்வகை

உன்னது எந்த மொழி

விசும்பையும் காற்றையும்
துளைத்து செல்கிறது
மொழிகளை கடந்த
உன் மொழி!

உன் மெளனம் பெரிது

நீ பேசிய எல்லாவற்றையும்
கடந்து நிற்கிறது
சம்மதிக்கும்போது
நீ பேசிய மெளனம்!

நீ பேசதெரிந்தவள்

உனக்கு மட்டும் தான் தெரிகிறது
எப்போது பேசவேண்டும்
எப்போது நிறுத்தவேண்டும்
என்று, நிறுத்தாமல் தொடரும்
என் பேச்சுகிடையே!

உன் மெளனம் பேசியது
எனக்கு தரபடாத உன் புன்னகை
கடலுக்கு தரபட்டதோ
அலைகளாக ஆர்பறிக்குது
என்னிடம் எதையெல்லாம்
மறைத்தயோ அதையெல்லாம்
தர காத்திருப்பதாய் சொன்னது உன் மெளனம்!

மரணதேவனை மிஞ்சிய மெளனம்

மரணகால சப்தங்களை விட
கொடிதானதாக இருக்கும்
உன் மெளனம் பழக வருவதாய்
மரணதூதனை ஆசையாம்
தேவை இல்லை
உன்னை காதலிக்க
சொன்னேன்!

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post