சினிமாவின் எதார்த்தமும் சாதி அரசியலும்




சினிமா என்பது எதார்த்தை சொல்கிறது என்பதே மிக சிக்கலான ஒரு பார்வையாகும்  -சினிமாவில் அரசியல் இருக்கிறது முக்கியமாக சாதி அரசியல் இருக்கிறது.

சினிமாவில் தேவர் சாதி/ அரசியல் கவுண்டர் சாதி அரசியல் மற்றும் மற்ற ஆதிக்க சாதிகளின் அரசியல் என்பது மிகுந்த கவனத்துடன் ஊடாட விடப்படுவது மட்டுமின்றி, சினிமாவில் அவை சேர்க்கப்படுவதுடன் சமூகத்தின் மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது .

தேவர் மகன் , வெயில், பருத்தி வீரன் , கொம்பன் இதெல்லாம் ஒரு குறிப்பிட்ட சாதியினரை வீர புருசர்களாகவும் அதன் எதிர்முகமாக மற்ற சாதியினர் அவர்களின் அடிமைகள் அல்லது பயந்தவர்கள் என சொல்லாமல் சொல்கிறது .

இத்தகைய சினிமாக்களை எதிர்த்து மிக நெடிய போராட்டம் என்பது நடத்தப்பட வேண்டி உள்ளது.





சாதி என்கிற நிலபிரபுத்துவ விழுமியம் மெல்ல கலைந்து  வர்க்கமாக மக்கள் திரளுவதை தடை செய்யும் முகமாக இன்றைய சினிமாக்கள் அமைந்தது எதார்த்தமான விசயமல்ல .

சாதி பிரச்சனை என்றால் அதை சொல்லாமல் அல்லது பங்காளி பிரச்சனை என்றால் அதை சொல்லாமல் அதையும் இதையும் கலந்து கட்டி மொத்தத்தில் தேவர் வாழ்கன்னு படத்தை முடிப்பது முட்டாள்தனம் தானே

//
டத்தில் தென் தமிழகத்தில் நடக்கும் கலவரங்கள் இடம்பெறுகின்றன. சண்டையால் மூடப்பட்டுக் கிடக்கும் கோயில் இடம்பெறுகிறது. அணையை உடைத்து ஊருக்கு அழிவை ஏற்படுத்துவது இடம்பெறுகிறது. பொதுப் பயன்பாட்டுக்கான சாலையை மறித்து ஒரு பிரிவினரை அதன் வழியே போகவிடாமல் தடுக்கும் செயல் நடக்கிறது. தேர் திருவிழாவின் போது குண்டு வெடிக்கிறது. இப்படியாக சம கால சாதி, மதக் கலவர நிகழ்வுகள் அனைத்தும் படத்தில் இடம்பெறுகின்றன. ஆனால், இவையெல்லாமே சாதி, மதச் சண்டையாக இடம்பெறாமல் கேவலம் பங்காளிச் சண்டையால் நடப்பதாகக் காட்டப்பட்டிருக்கின்றன.
தேவர் சாதிக்குள் பங்காளிச் சண்டைகள் உண்டு என்பது உண்மைதான். ஆனால், அது இப்படியான பரிமாணங்களில் ஒருபோதும் வெளிப்படாது. இரு குடும்பத்து சண்டை என்பது அந்தக் குடும்ப உறுப்பினர்களைத் தாக்குவது என்ற அளவில்தான் நடக்கும். அதிகபட்சம் அவர்களுக்கு உதவும் மிக நெருங்கிய நபர்களுக்கு பயமுறுத்தல் என்ற அளவுக்கு வேண்டுமானால் நடக்கலாம்.. இங்கோ இரண்டு சாதிகளுக்கு இடையிலான சண்டைபோல் குடிசைகளைக் கொளுத்துதல், அணையை உடைத்தல், தேருக்குத் தீ வைத்தல் என பொதுமக்களைக் குறிவைத்து பயங்கரமாக நடக்கிறது.
நிஜத்தில் ஒருவேளை இப்படி நடந்தால் அது சட்டம் ஒழுங்கு பிரச்னையாக மாறி அடுத்த நிமிடமே இரு குடும்பத்து உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டுவிடுவார்கள். படத்திலோ ஏராளமான வெட்டும் குத்தும் கொலையும் நடந்த பிறகும் ஒரே ஒரு சாட்சிகூடக் கிடைக்காமல் காவல்துறை திணறுகிறது. என்னதான் தேவர் பூமி பஞ்சாயத்தை மட்டுமே நம்பியதாக இருந்தாலும் காவல்துறை என்பது ஓரளவுக்குத்தான் ஒதுங்கி நிற்கும். அதுவும்போக கதை என்ன 18-19-ம் நூற்றாண்டிலா நடக்கிறது? கிட்டத்தட்ட படம் வெளியான 1990-களில் தானே நடக்கிறது.
இந்தக் கதையின் அபத்தம் நன்கு புரியவேண்டுமென்றால், ஒரு உதாரணம் சொல்கிறேன். அழகிரி-ஸ்டாலின் சண்டையில் ஸ்டாலினின் ஊரான சென்னையை அழகிரி ஸ்கட் ஏவுகணை தாக்கி அழிக்கிறார்… ஆட்கொல்லி வைரஸை ஊருக்குள் பரவவிட்டு அனைவரையும் கொல்கிறார் என்றெல்லாம் காட்டினால் எப்படி இருக்குமோ அதுபோல முட்டாள்த்தனமானது.//



//மனிதர்களே நாம் உங்களை ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக்கொள்ளும் பொருட்டு உங்களைச் சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம்" (திருமறை 49:13) என்னும் நபிகளின் வாசகத்தோடு பருத்திவீரன் படம் தொடங்குகிறது. தொழில் பகைமை மற்றும் 'கீழான' சாதி காரணமாக, தேவர் சமூகத்தவரால் கொலை செய்யப்படும் குறத்தியின் மகளை விசுவாசத்தின் பொருட்டுத் தேவர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரே மணந்துகொள்ளும்போது சொந்தச் சாதியினர் ஏற்க மறுக்கின்றனர். விபத்தொன்றில் இறந்தபோதும் அத்தம்பதியினரின் மகன்மீதும் (பருத்திவீரன்) 'ஈனச் சாதி' பிறப்புக் காரணமாகப் பேதம் பேணப்படுகிறது. அவன் தான்தோன்றித்தனமாகவும் சண்டியராகவும் வளர்கிறான். மறுபுறத்தில் பேதம் பாராட்டும் மாமனிதன் (கழுவச் சேர்வை) மகள் முத்தழகு, சிறுவயதில் தன்னை ஆபத்திலிருந்து காப்பாற்றிய காரணத்தால் பருத்திவீரன் மீது தீராத காதலோடு வளர்கிறாள். ஒரு கட்டத்தில் அவள் காதலைப் புரிந்துகொள்ளும் பருத்திவீரன் அவளோடு ஊரைவிட்டு வெளியேறுகிறான். ஆனால் சண்டியரின் தீய நண்பர்களாலேயே முத்தழகு பாலியல் வல்லுறவுசெய்யப்பட்டு இறந்துபோகிறாள். அவளைப் பருத்திவீரன்தான் கொன்றான் என்னும் பழியோடு அவனும் சாகிறான்.ு

அண்மையில் வெளியான வட்டாரப் படங்களைப் போலவே இப்படமும் தென்மாவட்டத்தைக் கதைக் களமாகவும் சாதி முரணைக் கதையம்சமாகவும் கொண்டிருக்கிறது. அதிலும் கூடுதலாக, முரண்படும் இருவேறு சாதிய அடையாளங்களை வெளிப்படையாகவும் ஆதிக்கப் பிரிவினரின் சாதிய இறுமாப்பைத் துல்லியமாகவும் சொல்கிறது. // நன்றி காலசுவட


1990 களுக்கு பிறகு சமூகத்தில் சாதி அடையாளங்களுடன் கட்சிகள் தோன்றியதும் அவை தமிழகத்தின் அரசியல் கோரிக்கைகள் என்கிற எதுவும் இன்றி எந்த கொள்கை முழக்கமும் இன்றி சாதிய அணி திரட்டலுடன் மக்களை சேர்த்து ஓட்டு வங்கிகளை உருவாக்க தொடங்கின.
சாதியை எதிர்த்த இன ஒற்றுமையை வலியுறுத்தி பேசிய திமுக அதிமுகவுமே வன்னிய சாதிக்கும் தேவர் சாதிக்கும் சில இடங்களில் முக்கியதுவம் தரத்தொடங்கின.
                    

//இவ்வாறு தமிழ் வாழ்க்கை, தேவர் சமூகம் சார்ந்ததாகவே முன்வைக்கப்பட்டுவருவதன் பின்னணி என்ன? 1990களில் வெளிப்படையாகத் தொடங்கிய சாதியடையாளம் பருத்திவீரன் வரையிலும் பல்வேறு பரிமாணங்களைப் பெற்றுவந்தாலும் அவை சனநாயகப் பண்பிற்கு ஆற்றியுள்ள பங்களிப்பு என்ன என்று மதிப்பிட்டால் ஒன்றுமேயில்லை. திரைப்படத் துறையின் மொத்த நடவடிக்கைகளோடு தொடர்பான பிரச்சினையாக இது உருமாறியுள்ளது. திரைப்படத் துறையில் வினையாற்றத் தொடங்கியுள்ள வட்டாரச் சாதிய சக்திகளின் ஏகபோகம் பற்றிப் பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. தேவர் சமூகம் சாராத இயக்குநர்களும் அதே மாதிரியான கதைகளைத் தேடித் திரிவதன் பின்னணி என்ன? அரசியலிலும் ஊடகத் துறையிலும் பெருகியுள்ள சாதிப் பெரும்பான்மை வாதத்தினைச் சுட்டிக் காட்டும் ஆற்றல் இங்கு யாருக்கு இருக்கிறது?//

இவற்றின் மழை தற்போது குறைய தொடங்கி விட்டது என சொல்லலாம்
ஆனால் இன்னும் முடியவில்லை .
எதார்த்தம் என்ற பெயரில் சாதிய அடையாளங்களையும் சாதிய வீண் பெருமைகளையும் பேசியே காசு பார்த்துவிட முடியும் என்கிற கலை மனதை படைத்தோர் உருவாக ஆரம்பித்தது நமது சமூகத்தின் சாபக்கேடு
அப்படி பட்ட ஒரு படம்தான் சுந்தரபாண்டியன்.
படத்தின் மையம் என்னவோ –காதலாக இருந்தாலும் அதன் அடிசரடு சாதிய விழுமியத்தை காட்டுவதே மற்றப்டி நண்பனின் துரோகம் மீளாத காதல்
காவிய காதல் என்பதெல்லாம் மேல் பூச்சு வேலையே.
பருத்தி வீரன் என்ற படத்திலும் சாதிய விழுமியங்களே எதார்த்தமானதாக காட்டப்படுவதும் – படத்தின் கடைசி டிவிஸ்டில் மட்டும் நியாய தர்மங்களின் விளைவு பற்றி பேசுவதும் பொதுமக்களை ஏமாற்றவே.
கிராமங்களில் சாதி என்பது நெகிழ்ச்சியாகி மக்களின் வாழ்நிலையில் இருந்து சாதியை மக்கள் தூக்கி எறியும் நிலையில் .

அவர்களின் உற்பத்தி உறவுகளில் சாதி இல்லாமல் இருக்கும் நிலையில்
பருத்தி வீரன்களும் , சுப்பரமணிய புரமும் , சுந்தரபாண்டியும்
ஒட்டாமல் நிற்கிற கதைகளே.

அணைந்து போன தீயை ஊதி  ஊதி பெருசாக்கினால் இவர்களுக்கு லாபம் கிடைக்கலாம்

பதவி அந்தஸ்து பணம் சம்பாதிக்க சாதியை சினிமாக்காரர்கள் கையில் எடுப்பது இருபக்கமும் கூர் உள்ள கத்தியை கையில் எடுப்பது போலத்தான்.

நடிகர் சிவக்குமார் இதை கவனித்தாரான்னு தெரியலை ஆனால் கார்த்திக் தொடர்ந்து ஒரு சாதியின் வீரனாக (அவர் சொந்த சாதி அல்ல) காட்டி சினிமா புகழ் அடைவது மற்றவர்கள் மனதில் பெரிய கேள்விகளை உருவாக்குகிறது .




 இதில் என்ன காமெடி என்றால் சினிமாவில் எந்த சாதி ஆதிக்க படங்களில் வேண்டுமானாலும் நடித்து கொண்டு வெளியே மேடைகளில் சாதி எதிர்ப்பை மேடை பேச்சுக்காக பேசுவார்களாம்.

இதைத்தான் முகநூல் போன்ற இடங்களில் விமர்சிக்கிறார்கள்.

சினிமா +சாதி = அரசியல் என்கிற கலவை பார்முலாவை அனைவரும் 
அறிந்து வைத்திருக்க வேண்டும் .

சினிமாவின் அரசியல் என்பது சாதியை தூண்டி விடும் அரசியல் என்பதையும் அது மக்களை பிரிக்கும் முயற்சி என்பதையும் 
நடிகர்கள் தெரிந்து வைக்கவும் அத்தகைய கதைகளை தவிர்க்கவும் வேண்டும் .

கொக்க கோலா விளம்பரத்தில் நடித்துவிட்டு சுதேசின்னு பேசினால் எப்படி 

அம்மாதிரி நடிகர்கள் - சமூக சிந்தனை உடையவர்களாக மாற அவர்களின் வயது 70 அல்ல .

தற்போதிருந்தே மாற முயற்சிக்கனும் .

ஆங்கிலத்தில் ரேசிசம் என்பார்களே அதுதான் இங்கே சாதியாக பரிணபித்து இருக்கிறது நமது சொந்த சகோதரர்களையே நாம் சாதியாக பார்த்து அவமான படுத்தி அதில் இன்புற்று அதன் மேல் செருகுற்று என்ன சாதிக்க முடியும் .

பிறகு முன்னூறு ஆண்டுகால ஆரியத்துக்கு எதிரான போர்  என முழங்குவதும் நானூறு ஆண்டுகளாக சிங்களத்துடன் போர் என சொல்வதும் தேவை யற்ற ஒன்று ஏனெனில் நம்ம மாநிலத்திலேயே தமிழ் இனம் என்கிற இனத்திலேயே இத்தனை பூசல் வைத்து கொண்டு ஏன் அடுத்த இனத்துடன் நல்லுறவை எதிர்பார்க்கனும் 

தெரிந்தோ தெரியாமலோ அல்லது லாபநோக்கத்துடன் எடுக்கப்பட்டாலும் இல்லையென்றாலும் ஒரு சாதி ஒரு மொழி உயர்த்தி படங்களை எடுப்பதும் அதில் நடிப்பதும் 

இன மற்றும் சாதி அல்லது மொழி வெறியே

2 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post