இராமபக்தனான வடிவேலு நிற்கிறான் .
"ஆரம்பிச்சுட்டாய்ங்கய்யா ஆரம்பிச்சுட்டாங்க"
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இவன் கிட்ட சிக்க கூடாதுன்னு
நினைச்சா முடியலையே .
பார்த்திபன் வருகிறார் .
டே எங்கடா ஒடுற அதான் பார்த்துட்டம்ல
"ஏ உனக்கு என்னப்பா வேணும் படுதுறயே என்னை "
சரி இதென்ன டிரெஸ் ஜிங்குஜ்ஜா ஜிங்குச்சா சிகப்பு கலரு சிங்குச்சான்னு
"அதா நான் இராம பக்தன் இல்லையா அதான் காவி கலர்ல ஜிப்பா போட்டு இருக்கேன் அது புடிக்கலையா
உனக்கு"
"சரி இந்த ஜிப்பாவை துவைச்சு எத்தனை நாளாச்சு"
பக்கத்துல வரமுடியலை கப்படிக்குது"
"அத கேட்கிறியா துவைச்சு ஒரு வருடம் நாலு நாலா ஆச்சு என்னைக்கு இராமர் கோயிலை கட்டி முடிக்கிறோமோ அப்போதான் துவைப்பேன்"
"சரி அதென்னடா இராமர் பாலம்னு ரீல் உட்டுட்டு திரியிறீங்க "
"ஆகா , அப்படி கேளு அதாவது இராமாயணம் தெரியுமா இராமாயணம் "
"சொல்லுடா கொய்யால"
"அதுல இராமர் இலங்கைக்கும் இந்தியாவுக்கு நடுவுல பாலம் கட்டினாருன்னு போட்டு இருக்கு அந்த பாலம்தான் இது"
"அடி , ராஸ்கல் அவர் கட்டி எத்தனை வருசம் ஆச்சு
இன்னுமாடா அந்த பாலம் இருக்கும் . விட்டேன்னா பல்லு காணமா போயிடும்"
"இந்தாப்பா , இந்தமாதிரி குண்டக்க மண்டக்க கேள்வி கேட்கப்படாது "
"அதென்னடா குண்டக்க மண்டக்க"
"குண்டக்க மண்டக்கன்னா குண்டக்க மண்டக்கதான் , சரி நான் வரேன் "
"ஏ இருடா இரு அதுக்குள்ள கிளம்பிட்ட மிச்சகதைய யாரு கொப்பனா சொல்லுவான்"
"வேற என்னய்யா வேணும் உனக்கு படுத்துறானே"
"அப்ப ராமந்தான் பாலம் கட்டினாரு அப்படிங்கிறயா "
"ஆமாய்யா ஆமா"
"அப்போ இராமயணத்தில் நடந்தது உண்மையா"
"ஆமப்பா ஆமா"
"சரி அதில இராவணனுக்கு பத்து தலை இருந்ததுன்னு போட்டு இருக்கே அதும் உண்மையா"
"ஆகா வில்லங்கமா கேட்குறானே " அய்யா சாமி
இராவணன் அசுரன் அதனால பத்து தலை இருக்கும்"
"அசுரன்னா பத்து தலையா அப்ப யாருக்கும் ஏண்டா இப்ப யாருக்கும் பத்து தலை இல்லை"
" இத பாரு இவ்ளோ நேரம் பதில் சொன்னதே எதோ போனா போகட்டும் நம்மூர்காரன்னுதான் என்னைய விட்டுரு நான் போகனும் "
"ஆமா , டீ குடிக்க மாட்டேன் காப்பியும் வேணாம் காவி பால் இருந்தா குடுன்னு கேட்டியாமே , என்னா தெனாவெட்டுடா உனக்கு "
"இனிமே கேட்கமாட்டேன் சாமி கேட்கமாட்டேன்"
காட்சி மாறுகிறது
பார்த்திபன அருகில் வந்து உட்காரும் வடிவேலாகிய ராம பக்தன் பயந்து கொண்டே அமருகிறான்.
"இவன் பக்கதுல உக்கார்ந்துட்டமே எப்படியாவது
எஸ்கேப்பாகிட வேண்டியதுதான்"
" என்னடா "இவன் பக்கதுல உக்கார்ந்துட்டமே எப்படியாவது எஸ்கேப்பாகிட வேண்டியதுதான்"
அப்படின்னுதானே நினைக்கிறே.
"ஆகா மனசில நினைக்கிறதெல்லாம் சொல்றானே (என நினைத்து கொண்டு)
அது இல்லப்பா வேற நினைச்சேன் "
"எது இராமர் பாலத்தை எப்படி காப்பாத்துறாதுன்னா"
"இந்தா பாரு உனக்கும் எனக்கும் பேச்சு கிடையாது நான் அந்த சீட்ல போய் உக்கார்ரேன் "
"டே டே கோவிச்சுகாம உக்காருடா"
"ஆமா டிக்கெட் எடுத்தியா "
"எடுக்க போறேன் ஆமா நீ எடுத்தியா "
"கவுர்மெண்ட் பஸ்லெயெல்லாம் உன்னைமாதிரி கேணயந்தான் டிக்கெட் எடுப்பான் நாங்கெல்லாம் பிளைட்டிலெயே டிக்கெட் எடுக்க மாட்டம்ல"
"அப்படியா (தெரியாமத்தான் இத்தனை நாள் டிக்கெட் எடுத்துட்டமோ) ஆ செக்கிங் வருவாருல்ல
செக்கிங் வருவாருல்ல"
"வருவாரு வந்தா நான் இராம பக்தன் என்கிட்ட டிக்கெட் கேட்க கூடாதுன்னு சொல்லனும் சரியா"
"அப்படியா ராமபக்தன்னா டிக்கெட் வாங்க சொல்ல மாட்டாய்ங்களா சரி அப்படியே சொல்லிருவோம்"
//செக்கிங்க் வருகிறார்//
ராமபக்தன் வடிவேலு தூங்குவதுபோல நடிக்கிறான்.
"டிக்கெட் டிக்கெட்"
"ஏப்பா டிக்கெட்ட கொடு "
பையை துலாவுகிறார் நம்ம இராமபக்தன்வடிவேலு
"நல்லா கேளுங்க சார் " கவர்மெண்ட் பஸ்சிலெல்லாம்
கேணப்பயதான் டிக்கெட் எடுப்பான்னு சொல்றான்சார்"
"ஏண்டா அப்படியா சொன்ன"
"அதுமட்டுமில்லாம இவர் இராமபக்தனாம் ஆர் எஸ் எஸ் பார்ட்டியாம் அதனால டிக்கெட் கேட்கபடாதாம் சார்"
"ஏண்டா நாயே அப்படியா சொன்ன, இராமபக்தனாமில்ல ஏண்டா பஸ்சென்ன இராமர் வீட்டு பெட்ரோல்யா ஓடுது இல்லை இராமர்பிள்ளை பெட்ரோலில் ஓடாதா. கழுத"
பளாரென கன்னத்தில் வாங்குகிறான்
"ஏப்பா இது உனக்கே நல்லா இருக்கா ஊர்காரன இப்படி மாட்டி விடுறயே"
" இந்தா இந்த அம்பது ரூபாய லஞ்சம்ம்னு சொல்லி கொடு"
"யோவ் இந்தாய்யா ரொம்ப்ப பேசாத இந்த அம்பது ரூபாய லஞ்சமா வைச்சுக்க"
அழுது கொண்டே அமர்ந்துவிட்டான்
நமது ஹீரோ :)
தொடரும்
தியாகு