சில பார்ப்பன மஸ்கிட்டோக்கள் ஊரில் எவனும் தன்னைக் கவனிக்கவில்லை என்பதால் கால்சட்டை ஜிப்பை அவிழ்த்து விட்டு அலையும் மன நோயாளியின் ரேஞ்சுக்கு இப்போது நமது கவனத்தைக் கவரும் வகையில் "அவன் சொன்னது என்ன?" "இவன் சொன்னதில் என்ன தவறு கண்டீர்கள்?"
என்று பதிவிட்டுக் கிளம்பி இருக்கிறதுகள் தமிழ்மணத்தில். முதலில் ஞானியையும் கலைஞரையும் இனைவைத்து இவர் சொன்னது தவறு தான் ஆனால் அன்று அவர்
சொன்னதில் மட்டும் என்ன நியாயம்? என்று எழுதி பார்ப்பனர்களுக்கும் அறிவுக்கும் எத்தனை ஒளியாண்டுகள் தூரம் இருக்கிறது என்பதை நிரூபித்துக்காட்டினார். இப்போது புதிதாக "ஆய்" மதன் மேல் பாசம் பீறிட்டு அடிக்கிறது. என்ன காரணம் என்று சொல்லவும் வேண்டுமா?
கலைஞர் சொன்னது சரியா? : சந்தேகமே இல்லை. எம்.ஜி.ஆர் பற்றி செத்த பிணம் என்ற ரேஞ்சில் கலைஞர் சொன்னது முற்றிலும் சரியே. கலைஞர் ஒரு அரசியல்வாதி. அதிலும் சூத்திரர்களின் ஒரு பெருமைமிகு குறியீடு. மறுபுறம் எம்.ஜி.ஆரோ தனது அட்டைக் கத்தி வீரத்தையும் ஏழைகள் மேல்
திரை வெளிச்சத்தில் நீலிக் கண்ணீர் வடித்தது ஒன்றையே தகுதியாகக் கொண்டு திராவிட இயக்கத்துக்குள் புகுந்து விட்ட அமை. ஒரு ஊடுருவல்காரன்.
அரசியல் போர்க்களத்தில் எதிராளியை பலகீனப்படுத்த இவ்வாறான தந்திரங்கள் பயன்படுத்தப்படுவது எவ்வகையிலும் தவறானதல்ல. நிஜ போர்க்களத்தில்
இவர்களின் ஆதர்ச நாயகனான "ஈவ் டீசிங்" புகழ் கிருஷ்ணன் செய்யாத ஏமாற்று வித்தைகளா? அதனோடு ஒப்பிட்டுப் பார்த்தால் கலைஞர் செய்ததெல்லாம் ரொம்பவே கம்மி தான்.
கலைஞராவது எதிர்கட்சிக்காரர். சொந்தக் கட்சியைச் சேர்ந்த, எம்.ஜி.யாரின் கள்ளப் பொண்டாட்டியே ராஜீவ் காந்திக்கு பின்பக்க கதவு வழியே "சேதி" அனுப்பினாரே எம்.ஜி.யாரின் உடல் நிலையைப் பற்றி. அதை ஏன் இவர் கேள்விக்குட்படுத்தவில்லை என்று கேட்டு இவரை நம் கேள்விக்குத்
தகுதியானவர் என்ற நிலைக்கு உயர்த்த நான் தயாரில்லை. அது பூணூல் பாசம் என்பதும் சூத்திரர்களுக்கு மோசம் என்பதும் சொல்லித் தெரியவேண்டியதில்லை.
அடுத்து, எம்.ஜி.யார் இருந்த வரை தமிழகத் தேர்தலில் கலைஞர் தோல்வியே உற்றார் என்று சொல்லி தனது உள்ளரிப்பை சொறிந்து கொள்கிறார்.தேர்தலில் தோல்வி என்பதும் வெற்றியென்பதும் ஒரு எழுபத்தைந்து வருட அரசியல் வாழ்க்கை கொண்டவருக்கு ஒரு பொருட்டல்ல. அதற்குப் பின்னும்
பெரியாரியத்தை உயிர்ப்போடு வைத்திருக்கிறார், திராவிட உணர்வு மக்களிடையே மங்காமல் வைத்திருக்கிறார் என்பது தான் முக்கியம். அது தான் அவரது வரலாற்று பங்களிப்பு. எம்.ஜி.ஆரால் கலைஞரின் தேர்தலில் வெற்றி பெரும் திறனை அழித்திருக்க முடியும் என்றால் அதற்குப் பின்னும் எம்.ஜி.ஆரின் காலத்திலேயே நடந்த பாராளுமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களிலெல்லாம் கலைஞர் தோற்றிருக்க வேண்டும்.
இன்று தமிழகத்தில் இந்து பாசிஸ்ட்டுகளின் ராமன் பப்பு வேகவில்லை என்றால், ராமனைக் கேள்விக்குட்படுத்தும் தைரியம் தமிழர்களுக்கு இருக்கிறது என்றால்..
அதற்குக் காரணம் பெரியாரும் அவர் தோற்றுவித்த திராவிட உணர்வும் மட்டுமில்லை. அதனை இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கும் கலைஞரும் தான். இது அவரின் மாபெரும் வெற்றி. ஆயிரம் தேர்தல் வெற்றிகளைக் காட்டிலும் இந்த வெற்றியே எங்களைப் பெருமிதம் கொள்ள வைக்கிறது..
கலைஞரின் மேல் எங்களுக்கும் விமர்சங்கள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் கலைஞரா பூணூலா என்னும் கேள்வி எழும் போது எங்களின் நிலை பற்றி எந்த சந்தேகமும் இல்லை. குடுமிகளின் முன் எங்கள் கலைஞரை விட்டுக் கொடுக்க நாங்கள் தயாரில்லை.
அடுத்ததாக மஸ்கிட்டோவின் ஆதரவுக்கரம் நீண்டிருப்பது "ஆய்" மதன் பக்கம். தமிழகத்திற்கு வரலாறே கிடையாதாம். ஆமாம் முதலில் வரலாறு என்பது என்ன?
அரசர்களின் அட்டண்டன்ஸ் ரெஜிஸ்ட்டர் தான் வரலாறு. அரசர்கள் ஒவ்வொரு நாளும் பல்விளக்கியது, படுத்துப் புரண்டது, கக்கூஸ் போனது, மலச்சிக்கல்
வந்தது இப்படியான நாட்குறிப்புகள் தான் வரலாறு என்பது பார்ப்பன வரையறை! இவர்களைப் பார்த்து "வரலாறு என்பது அரசர்களின் அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்டரல்ல. மக்களின் வரலாறே வரலாறு. அவர்களூடே நடந்த வர்க்கப் போராட்டங்கள், அதனூடே நிகழ்ந்த காதல், வீரம், நிலவிய பொருளாதா¡ரம் இவைகளின்
தொகுப்பே வரலாறு" என்கிறார் பேராசிரியர் பெரியார் தாசன்.
இங்கே கோவை திருப்பூர் பகுதியைச் சுற்றிலும் ஏசுவின் காலத்துக்கு முந்திய கிரேக்க ரோமானிய நானயங்கள் கிடைத்து வருவதாகவும், அந்த நாட்களிலேயே
தமிழர்கள் கடலாடும் திறன் பெற்றிருந்தார்களென்றும், வடவர்களைக் காட்டிலும் தமிழர்கள் பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும் தத்துவத்துறையிலும்
மேன்மை பெற்றிருந்தார்களென்றும் புதை பொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நன்பரொருவரோடு பேசும் போது குறிப்பிட்டார். எவனுக்குப் பின் எவன் அரசனாக இருந்திருந்தால்
என்ன? மக்களின் வாழ்க்கை எப்படியிருந்தது என்பதே முக்கியமானது. அதனைப் பற்றிய குறிப்புகள் தமிழகமெங்கும் பரந்து விரிந்து கிடக்கும் போது,
தமிழக வரலாறு சரியாக எழுதப்படவில்லை என்று சொல்வது - தமிழர்களுக்கென்று வரலாறே இல்லை என்பதற்கொப்பானதாகும்.ஆனால் இது தான் பார்ப்பன குயுக்தி என்பது. பல லட்சம் வாசகர்களைக் கொண்டிருக்கும் ஒரு பத்திரிக்கையில் தமிழர்களுக்கு வரலாறு கிடையாது
என்று எழுதும் கொழுப்பு பார்ப்பனக் கொழுப்பில்லாமல் வேறென்ன?
நீலகேசி என்னும் பண்டைய நூலின் தலைவி அந்தக் காலத்திலேயே இவர்களின் முகத்திரையைக் கிழித்துத் தொங்க விட்டிருக்கிறாள். பின்னர் சித்தர்கள் தமது பங்குக்கு இவர்களைப் பார்த்து எள்ளி நகையாடி இருக்கிறார்கள். இதெல்லாம் நமது தத்துவ வரலாறு. பன்டைத் தமிழனின் வீரத்தைப் பாட புறநானூறு,
காதலைச் சொல்ல அகநானூறு என்று தனது வரலாற்றை மிகச் சரியாகப் பதிவு செய்து வைத்து விட்டே சென்றுள்ளான். இவர்கள் அதனை ஒன்றும் புதிதாக எழுதிக் கிழிக்க வேண்டியதில்லை. ஆனால் மயக்கமுற்றிருக்கும் தமிழனுக்கு அவனின் மூதாதையர்கள் பார்ப்பனியத்தை எதிர்த்து சகல முனைகளிலும்
போராடியதன் வரலாற்றை நினைவூட்ட வேண்டிய பணி நம்முன் இருக்கிறது. அது வரை மஸ்கிட்டோக்களின் தொல்லை இப்படித்தான் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
--