நிர்வாகவியல் பற்றிய எனது பகிர்வுகள்-4

நிறுவனத்தின் முதலாளிக்கு பணம் தேவை அதற்காக கம்பெனி வைச்சு இருக்கார்
தொழிலாளிக்கு சம்பளவடிவில் பணம் தேவை அதனால் வேலைக்கு போகிறார்
என விசயங்களை சிம்பிளா புரிஞ்சுக்கலாம் ஆனால் அப்படியே நேர்கோட்டில்
சிந்தித்து நிர்வாகம் செய்ய முடியாது .

சில நேரங்களில் முதலாளி சொல்லுவார் எனக்கு ஒழுக்கம்தான் முக்கியம்
ஒழுக்கமில்லாத வேலையாள் தேவையே இல்லைன்னு அடுத்து ஒருநாள்
சொல்லுவார் பங்குசுவாலிட்டிதான் முக்கியம்னு யாரப்ப்பார்த்துன்னா
கொஞ்சம் முன்னபின்ன லேட்டா வருகிறவன் நல்ல ஒழுக்கமான ஆளா
இருந்தாலும் அவனுடைய வீக்னச பார்த்து சொல்லுவார் நீ என்ன பெரிய
நல்ல வேலை பார்க்கிற ஆனா தினம் ஒன்பது அரை மணிக்கு தானே
வர என அவருக்கு வேண்டுமானால் நேரத்துக்கு ஒரு கொள்கை
இருக்கலாம் நிர்வாகிக்கு அப்படி இல்லை முதலாளி பேசுவதை போல

நிர்வாகி பேச முடியாது . முகத்து நேர கேட்டு விடுவார்கள் அன்னைக்கு
அப்படி சொன்னீங்க அப்படின்னு என்ன சார் கால்மணி நேரமெல்லாம் கணக்கு
பார்த்துகிட்டு இரவு பகலா தேவை இருக்கும் போது வேலை செய்யுறோமே
அப்பல்லாம் ஏன் கணக்கு பார்த்து அதிகமா தரீங்களான்னு

இத போய் முதலாளிகிட்ட சொல்ல முடியுமா முதலாளிக்கு அல்டிமேட்டா
லாபம்தான் முக்கியம் நீங்கள் அவருக்கான கருவி அந்த நிறுவனமே
பணம் கொட்டும் இயந்திரம் இயந்திரமாகத்தான் அதை பார்ப்பார்

சார் அந்த ஆளுக்கு கொஞ்சம் லீவு வேணும் பாவம் அவங்க அம்மாவுக்கு உடல்நிலை
சரியில்லை என சொன்னால் முதலில் கோபப்பட்டு கத்துவது நிர்வாகிகிட்டதான்
என்ன கிழிக்கிறான் அவனுக்கு லீவு கேட்கிறீங்க அதெல்லாம் கிடையாதுன்னுட்டு
போய்டுவார் .

அவன் என்ன கிழிக்கிறான் எல்லாரும் என்ன கிழிக்கிறான்ன்னு தெரியாமலா இருக்கும்
எல்லாரும் கிழிப்பதனால்தான் கம்பெனி ஓடுதுன்னு தெரியும் ஆனா தனிமனிசனுக்கு
முக்கியத்துவம் கிடையாது . அவன் கஸ்ட நஸ்டங்களுக்கு முக்கியத்துவம் கிடையாது

டீக்கடையில் டீ போடும் பாய்லர் லீவு கேட்டால் என்ன ரியாக்சன் இருக்குமோ
அந்த ரியாக்சந்தான் இருக்கும் முதலாளியை பொருத்தவரை

ஆனால் என்னென்ன தேவைகளுக்காக நம்மிடம் ஊழியர்கள் வேலைக்கு
வருகிறார்கள் 1.அடிப்படை தேவைகள் (உணவு ,உடை ,இருப்பிடம்)
2.பாதுகாப்பு தேவைக: 3.அன்பு தேவைகள் (ஒரு வாரம் லீவு போட்டு விட்டீர்கள்
கடுமையான டைபாய்டு அல்லது சிக்குன்குனியான்னு வைச்சுக்கங்க திரும்ப
வேலைக்கு போகையில் யாரும் என்னாச்சு ஒருவாரம் லீவு உடம்பு பரவாயில்லையான்னு
கேட்கலை யாருமேன்னா என்ன பாடுபடும் உங்க மனசு)
4.சுய மரியாதை தேவைகள் (மற்றவர்கள் முன்பு தான் சரியாக நடத்தபட வேண்டும்
என்ற எண்ணம் எல்லாருக்கும் இருக்கும் இந்த இத பேப்பரை நகலெடுன்னு
அதட்டி கூட சொல்ல கூடாது ஆபிஸ் பாயை அது உங்கள் மரியாதையை
கெடுப்பதுடன் அவனுக்கு அந்த வேலை சுமையாகி போகும்)
5.சுய முன்னேற்ற தேவைகள் ( அனைவருக்கும் சம்பள வடிவிலாவது
முன்னேறனும் பதவி வடிவில் முன்னேறனும் தகுதியை வளர்த்து முன்னேறனும்
என தேவைகள் இருக்கும் இப்படி குறைந்த பட்சம் மேற்சொன்ன
தேவைகளும் ஊழியர் வேலைக்கு வருகிறார் என்பதை

நிர்வாகி மறக்கலாகாது இந்த தேவையெல்லாம் நிறைவேற்றுவது
ஒரு நிர்வாகியின் லட்சியம் கிடையாது அவர் சம்பளம் வாங்கும்
நிறுவனத்துக்கும் உபயோகமானதாக உள்ள இவர்களின் தேவைகளை
நிறைவேற்றுவதன் மூலம் அந்த உபயோகத்தை அதிகப்படுத்தும்
காரியங்களை செய்ய முயல வேண்டும் என நினைக்கிறேன்.

எல்லா ஊழியரும் உண்மையே பேசுவான் என நினைத்தால் உங்களை
போல ஒரு முட்டாள் யாரும் இருக்க முடியாது பல்வேறு பொய்களை
திறம்பட சொல்வதில் முதலாளியை விட ஊழியர்கள் திறமைசாலிகள்
லீவு எடுக்க அடுத்த கம்பெனிக்கு போக சம்பளம் அதிகம் வாங்க
என அடுக்கும் பொய்களால் முதலாளிக்கு அவன் உண்மையே சொன்னாலு,ம்
பொய்யாக இருக்குமோன்னு நினைக்க தோன்றும் .

நீ பொய் சொல்கிறாய் என சொல்லி பாருங்கள் அடுத்த கம்பெனிக்கு
அப்ளிகேசன் அனுப்பிட்டு கம்னு இருந்து திடீர்னு கிளம்பிடுவாங்க
நீங்க எந்த செவுத்துல் முட்டினாலும் அவங்களால் பாதியில் விட்ட பணி
அப்படியே பல்லை இளிச்சுட்டு நிக்கும் உங்களை முதலாளி பிராண்ட
ஆரம்பிச்சுடுவார் .

காரிய சிரத்தை இருக்கனும் என்பது எல்லாம் எல்லாருக்கும் இருக்கும்னு
சொல்ல முடியாது பணத்தால் ஆளப்படுகிற பணத்தை நோக்கமாக கொண்ட
பணத்தின் மூலம் இயங்கும் ஒரு சமூகத்தில் பண்பாட்டு விழுமியங்களுக்கு
முதலாளியோ அல்லது தொழிலாளியோ மதிப்பளிப்பது குதிரை கொம்பு
ஆகையால் சம்பளம் வாங்கும் அவரது உபயோகமானது கம்பெனிக்கு
உபயோகப்படும்படி செய்யவது நல்லது .

சரி மீண்டும் உரையாடுவோம்.
--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post