பிரபாகரன் போராட்டமும் அவரது இருத்தலும் சில கேள்விகள்


ஈழப்போராட்டம் ஒடுக்கப்பட்டது காட்சிகள் மாறிவிட்டன தமிழரால் ஆதரிக்கப்பட்ட பொன்செகா உள்ள போய்விட்டார் .

தமிழ்நாட்டில் செயா பின்னால் அணிகட்டி நின்றவர்கள் நான்காம் கட்ட ஈழ போர் எப்படி நடக்கும் என பேசுகிறார்கள்

முள்ளிவாய்க்காலி செத்த சுமார் இருபதினாயிரம் பேருக்கு என்ன பதில் அந்த இயக்கத்துக்கு தவறான வழிகாட்டியவர்கள் யார் என கேட்கிறது புதிய கலாசாரம் இனி நடக்கும் எல்லாமும் கடந்த காலத்தை சாராமல் நடந்து விடுமா அல்லது அதுதான் எந்த வரலாறும் அண்டாத எதிர்காலமாகிவிடுமா

பல்வேறு கேள்விகள் நெஞ்சில் எழுகிறது "எனது பிணைத்தை வைத்து போராட்டத்தை கூர்மையாக்குங்கள் " என சொல்லி உயிர் விட்ட முத்துகுமார் முதல் .அனைவரும் அம்மையார் பின் அணி திரள்வோம் என சொன்ன வைகோ முதலானவர்களும் இன்னும்  முள்வேலி கம்பிக்குள் இருக்கும் மக்களும். பிரபாகரன் உயிரோடுதான் இருக்கலாம் என நம்புகிறார்கள் அதுதான் அவர்களின் மிச்சமிருக்கும் வாழ்க்கையை நம்பிக்கைக்கு உரியதாக்கி இருக்கிறது

1.புலிகள் ஒரு ஆயுதம் தாங்கிய கும்பல் மக்கள் யாரும் புலிகளுக்கு பின்னால் இல்லை என ரொம்ப நாள் சொன்னவர்கள் இப்போது பிரபாகரன் இல்லை என்கிறார்கள்

2.புலிகளின் அரசியல் என்பது சந்தர்ப்பவாத அரசியல் அதனால் புலிகள் தோற்றுவிட்டார்கள் என சொல்பவர்கள் பிரபாகரன் இருக்கிறார் என்றோ இல்லை என்றோ சொல்வது இல்லை

3.புலிகள் தீரமாக போரிட்டார்கள் கடைசி நேரத்தில் தங்கள் தலைவனை காப்பாற்றி தப்பிபோக சொல்லிவிட்டு  நிறைய பேர் போர்களத்தில் மடிந்தார்கள் என சொல்கிறவர்கள் பிரபாகரன் இருக்கிறார் என்கிறார்கள் .

4.பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வியே தேவை இல்லாதது இருந்தாலும் அவர் மீண்டும் வந்து அமைப்பை கட்டி போராட்டம் தொடங்க அங்கே ஒன்றும் இல்லை என்பவர்கள் புலி வகையான போராட்டத்தின் பழைய வரலாற்றை  கவனிக்காதவர்கள் ஒரு துருப்பிடித்த துப்பாக்கியை கொண்டு ஆரம்பிக்கப்பட்டது அந்த இயக்கம் . இன்று பேசுபவர்கள் அத்தகைய ஒரு இயக்கத்தை கட்டி இருக்கலாமே அதை மக்கள் ஆதரவு பெற செய்து இருக்கலாமே

அகிம்சை போராட்டம் அது ஈழத்தை பொருத்தவரை ரூல்டு அவுட் ஆகிவிட்டது. ஆயுத போராட்டம் அதுவும் ரூல்டு அவுட்டுதான் என நினைப்பவர்கள் வெளிநாடுகளில் போராட்டம் நடத்தி உலக நாடுகளின் நிர்பந்தத்தை உண்டாக்கி இலங்கையை பணிய செய்ய பல்வேறு போரட்டங்களை நடத்தி பார்த்தார்கள்.

பிரபாகரன் சரணைந்தார் என சொன்னவர்கள் அவரது வரலாறு தெரியாதவர்கள் அல்லது புலிகளின் போராட்டத்தை குறைத்து மதிப்பிட்டவர்கள் என துணிந்து சொல்லலாம்எத்தனை போராட்டங்கள் எத்தனைவிதமான செயல்முறைகள் கடைசி கட்டத்தில் கூட கண்டுபிடிக்கப்பட்ட ஊடறுப்புதாக்குதல் எனும் தாக்குதல் .

எத்தனை ஆண்டுகால போர் அது சும்மா இருக்கிற வாயைமெல்லுராப்பல அவரு சரணடைந்து செத்தாருன்னு சொல்லிட முடியாது
பிரபாகரனின் குணம் தெரிந்தவர்கள் அப்படி சொல்லமாட்டார்கள் சரி இருக்கிறார் என்றால் வெளியிட சொல் ஒரு கேசட்டை என சொல்பவர்களும் இருக்கிறார்கள் அவரென்ன வீரப்பனா?

கொரில்லா போராளி பதுங்குவது பாய்வது கொரில்லாக்களின் குணாம்சம் ஆகவே அவரது குணாம்சத்தை வைத்து பார்த்தால் நிச்சயம் தப்பி இருக்க கூடும்

அப்போ காட்டப்பட்ட பிணம் அவருடையதில்லையா என்றால் அந்த நேரத்திலேயே அவரது கைரேகை பிணத்தின் கைரேகையுடன் ஒத்து வரவில்லை என சொல்லப்பட்டது யாரோ அவரைப்போல இருந்த போராளியின் உடலாக இருக்கலாம் என்றுதான் பரவலாக நம்பப்பட்டது .

ஒரே நாளில் முடிவெடுத்து அன்றைக்கே நடந்ததாக இருக்குமா  பிரபாகரனின் தப்பித்தல் என்றால் கடைசி வரை எலிக்குஞ்சுபோல சுற்றி வளைக்கும் பூனைகளுக்கு பயந்து கடைசியில் உயிராவது மிஞ்சட்டும் என புலித்தலைவரும் புலிகளும் சரணடைந்தார்கள் என சொல்வது கேப்பையில் நெய் வடிந்தது எனும் கதை .

கிளிநொச்சி வீழ்ந்ததும் இப்படி ஒரு சுற்று வளைத்தல் நடக்கும் என்பது கூட அறியாமல் பின்வாங்கினார்கள் புலிகள் என்று சொல்பவர்கள் . புலிகள் தாக்குவதற்குத்தான் பின்வாங்குகிறார்கள் என சொன்னவர்கள் போலவே தப்பு செய்கிறார்கள்.

கிளிநொச்சி வீழ்ந்ததும் கடைசியில் என்ன நடக்கும் என்பது கூடவா தெரிந்து இருக்காது கடைசி இருந்த நாலு கிலோ மீட்டரிலும்
விமானங்களை பறக்கவிட்டு கடைசி நேர விமான தாக்குதல் வரை நடத்தியவர்கள் கனிமொழியிடம் சொல்லி காஸ்பரிடம் சொல்லி அய்யா காப்பாத்துங்கள் என பிரபாகரன் உள்பட அனைவரின் உயிருக்காக கெஞ்சி இருப்பார்கள் என்பதில் லாஜிக் இடிக்கிறது.
உயிராயிதமே எடுத்து எதிரிகளை நிர்மூலமாக்குதல் எனும் கரும்புலிகளை உருவாக்கியவர்கள் தங்கள் உயிருக்கு உலகம் பூராவும் போன் போட்டு கெஞ்சி இருப்பார்கள் என சொல்வது எப்படி இவர்களால் முடிகிறது.

ஒரு பிரிவு போராட்டத்தை தொடர்ந்து நடத்த ஊடறுப்பு தாக்குதல் நடத்தி தப்பிப்பது இன்னொரு பிரிவு சரணடைவது என்று முடிவானது என சொல்கிறார்கள் புலிகள் அதுதான் சரியானதாக இருக்க வேண்டும் இந்த சரணடைதல் வேலையே அனைத்து விதமான புலிகளின் முயற்சியின் கடைசி எல்லை பிறகு அவர்கள் துரோகத்தில் சிக்கி விட்டார்கள் என சொல்வதோ அதை நம்புவதோ மிக சின்ன புள்ள தனமா
இருக்கும். இந்த ஒரு பிரிவினரும் சரணடைவை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்றால் தம்மோடு இருக்கும் மக்களை காப்பாற்ற போர்கைதிகளை புலிகள் நடாத்தியது போலவே சிங்களரும் நடத்த கூடும் என எண்ணி இருப்பார்கள்.

அந்த விசயத்தில் தோல்வி ஏற்பட்டது புலிகளின் போர் முறை அவர்களின் தியாகம் அவர்களின் அர்பணிப்பு நிறைந்த இத்தனை ஆண்டுகால போராட்டம் எல்லாமே மிக அற்பமாகபேசபட வேண்டியதல்ல.

ஒரு போராட்டத்துக்கு வெற்றி தோல்வி இரண்டும் எதிர்பார்க்கப்பட வேண்டும் சரி இந்திய வீரர்களும் அதிகாரிகளும் இலங்கையின் படைகளுக்கு வழிகாட்டி கொண்டுதானே இருந்தார்கள் அப்போது பிரபாகரன் கையில் சிக்கி இருந்தார் உடனே இந்தியாவில் இருக்கும் தங்களது தலைமைக்கு  தகவல் அனுப்பாமல் இருப்பார்களா என்ன அதான் ராஜீவ்காந்தி கொலைக்கு ஆள் தேவைபடுகிறாரே எப்படி பாத்தாலும் அவர் சரணடையோ  அல்லது கொல்லப்படவோ இல்லை என்றாகிறது அப்போ அவர் எங்கே ? இந்த கேள்விக்கு பதில் இல்லை என்பதால் முன்னிரண்டும் பொய்யாகிவிடாது

சரி இருக்கிறார் என சொல்வதன் மூலம் உலகலாவிய அளவில் மக்களிடம் பணத்தை சுருட்டுகிறார்கள் அல்லது ஏற்கனவே சுருட்டிய பணத்தை  பதுக்குகிறார்கள் எனும் குற்றச்சாட்டு இருக்கு?

இல்லாத ஒருவரை சொல்லுதல் அதன் மூலம் தொடர்ந்து நிதி வசூலித்தல் அவர்களுக்குதான் ஆபத்து ஆகவே அப்படி சொல்ல பிரயத்தன படமாட்டார்கள்.

தலைவனை தேடும் நோஞ்சான்களாக சமூகத்தை ஆக்கிவிட்டார் எனும் குற்றச்ச்சாட்டு? இன்னும் பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கிறார் என சொல்வதன் மூலமே நாம் வெற்றி பெறுவோம் என மனதைரியத்தை தரும் எனும் சொல்லின் மூலம்  கணக்கு தீர்க்கப்படுகிறது .

ஒரு வகையில் அவரை தேடாமல் போராட்டத்தை தேடுவோமே அவர் இரண்டாம் பட்சம்தான் முதலில் தமிழின மக்கள் தான் என சொல்பவர்கள் என்ன திட்டம் வைத்து இருக்கிறார்கள் .

ஒரு செயல் திட்டம் அதற்கான முயற்சி அந்த போராட்டத்தை முப்பதாண்டுகாலம் நடத்திய தெளிவு இவை எல்லாம் எப்படி மறைந்தது என்பதை கூட சிந்தித்து பார்க்காவோ விவாதிக்கவோ சூழ்நிலைகளின் அழுதத்தை புரிந்து கொள்ளவோ இயலாதவர்கள் இந்த வரலாற்றில் இருந்து எம்பி குதிக்கப்பார்கிறார்கள்.

எனக்கும் தனி தலைவனின் கையில் ஒரு போராட்டம் கையளிக்கப்படுவது குறித்து பாரிய அளவில் கசப்புணர்வு உண்டுதான் ஆனால் மக்கள் வரித்துகொண்ட மக்களுக்காக வாழ்ந்த தலைவனை பற்றி கண்டு கொள்ளாமல் நாம் அடுத்த என்ன என போக முடியாது

முப்பது ஆண்டுகள் கழித்து சேகுவேராவின் எழும்புகூடுகளை கொண்டு வந்து சமாதி வைத்து அவர் வாழ்ந்த மண்ணின் நாங்களும் வாழ்ந்தோம் என பெரிமிதம் கொள்ள செய்யும் மன உணர்வுதான் மக்களை போராட செய்யும் மக்கள் முக்கியதான் அதேபோல
தலைவனும் முக்கியம்தான் அவனுக்கு எதுவும் ஆகாத பட்சத்தில் ஆகிவிட்டது என சொல்லி எள்ளும் தண்ணியும் தெளிக்கசொல்பவர்களின் மேல் ஒரு கவனம் கொள்வார்கள் மக்கள்.

மாறாக சிக்கலான அறிவு அல்ல போராட்டத்துக்கு தேவை உணர்வு .. போர்குணம் இதெல்லாம் புலிகளிடம் இருந்தது .

இனி புலிகள் மீதான விமர்சங்கள் பல அதிக உண்மையானவை .அவை ஆதரவு சக்திகளை தேடாமை , நடு நிலையாளர்கள் தொடர்ந்து கொன்றது , யாரும் மூச்சு விடக்கூடாது என்ற பாசிச போக்கு. நாங்க போராடுவோம் ஆனா நீ கேள்வி கேட்ட அவ்ளோதான் நீ காலி எனும் போக்கு.

பிரபாகரனே  இருந்தாலும் அவர் நிச்சயம் நடந்து முடிந்த போராட்டத்தின் தவறுகளை எண்ணி பார்க்க வேண்டும்  மக்களும் அவர் என்ன தவறு செய்தார் என எண்ணிப்பார்க்கவேண்டும் இது நமது உணர்வை தாண்டிய விசயம் அதுதான் சுயவிமர்சனம்

போராட்டம் என்பது மக்களை சார்ந்து பிறக்க வேண்டும் புலிகளின் போராட்டம் மக்கள் ஆதரவு போராட்டமாக இருந்தது ஆனால் மக்களால் நடத்தப்பட்ட போராட்டமாக இருக்கவில்லை வியட்நாமில் நடந்ததே அம்மாதிரி இனி ஒரு போராட்டம் நடப்பின் அது மக்கள் போராட்டமாக இருக்க வேண்டும் .

இரண்டாவது புலிகளின் அரசியல் சந்தர்ப்பவாத அரசியல் எனும் குற்றச்சாட்டு ஆமாம் அமெரிக்காவையும் கைக்குள் போட்டு  இந்தியாவையும் கைக்குள் போட்டு , எப்படியாவது ஈழத்தை  பெற்றுவிட்டால் போதும் எனும் நிலைப்பாடு எப்படி என்றால் எல்லாரும் கைவிடும் நிலை வரும் இந்திய ஆளும் வர்க்கம் உண்மையான் நண்பன் அல்ல என்னதான் ஆயுதம் கொடுத்து  போராட சொல்லி இருந்தாலும் இப்போது இந்திய ஆளும் வர்க்கம் எதிராகத்தான் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளாமல்  இருப்பதே அரசியல் புரியாமை .

தவறுகளை அலசுங்கள் திருத்துங்கள் மீண்டும் போராடுங்கள் நேரம் வரும் வரை காத்திருங்கள் என்பதுதான் இப்போது நான் பகிர்ந்து கொள்ள நினைக்கும் விசயம்.

பிரபாகரன் என்பது ஒரு தனிநபரல்ல ஒரு போராட்டத்தின் குறியீடு இன்னும் தமிழர்களின் குறியீடு .

அவர் மீது தவறு இருக்கலாம் கடைசிவரை போராடினார் அவர் உயிரோடு இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் ஆனால் அவர் கொச்சை படுத்தபட கூடியவரல்ல. மதிப்பளிக்க கூடியவர், அதன் மூலம் போராட்டம் மதிப்பளிக்கபடும் அதன் மூலம் மீண்டும் ஒரு போராட்டம் பிறந்தால் போராடும் மனப்பான்மையை போராடுபவர்களுக்கு பெற்றுத்தரும்.

எத்தனை நாடுகள் அடிமைப்பட்டு கிடக்கிறதோ அங்கெல்லாம் நான் செல்வேன் என சொல்லி கிளம்பிய
சேகுவேரா காடுகளிலும் மலைகளிலும் மக்களுக்காக போராடினார் எது அவரை தூண்டியது போராடச் சொன்னது

தமிழன் நாளும் கொல்லப்படுகிறான் அதற்கு பதிலடி தரவேண்டும் என ஒரு எட்டாம் வகுப்பு படித்த பையன்
கிளம்பினான் அவந்தான் பிரபாகரன். இவனுக்கு பின்னால் இருந்தது அதே மனித நேயம்தான்.

பிரபாகரன்கள் கொல்லப்படுவதில்லை நாளும் மக்கள் மத்தியில் இருந்து உருவாகிறார்கள் .


--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

5 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post