மாட்டிகொண்ட சாமியார் மட்டும் அயோக்கியனா

ஆகா மாட்டிகிட்டாண்டா மைனா குஞ்சென்று அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி
கதவை திற காற்று வரட்டும் என்றவர் கதவை சற்று அகலமாக திறந்து விட்டார்

எவனோ காமிராவை கொண்டுபோய் வைத்து விட்டான் .

கட்டி பிடிக்கிறான் சாமியார் என சன் டீவி கூவு கிறது மக்கள் கையில்
செருப்புடன் கிளம்பி விட்டார்கள் சாமியாரை அடிக்கத்தான்

இதுக்கு மேலயும் அடிக்கவில்லை என்றால் மற்ற மதத்தான் என்ன
நினைப்பான் என மதத்தை கட்டி காப்பாத்த சிலரும்

நமக்கு ஒரு அடிமை சிக்கினான் என்று அடிக்க சிலரும்

அடுத்து என்ன நடக்கும் என தெரிந்து கொள்ள பலரும்
இன்னு சாமியார் பஜனையை பார்த்து கொண்டு இருக்கிறோம்

நடக்கும் இந்த வாழ்வு மாயை என்றவர் மாயையை கட்டிபுடிச்சு
உருள்வதை கண்டவுடன் காயமே இது பொய்யடா எனும்
அவரது திருவாய்மொழியின் மேல் வெறுப்பு வந்தது

ஒரு வேளை காயம்மெய்யோ அதன் காமமும் மெய்யோ
என நினைக்க தோன்றவில்லை காயம் பொய் காமம் பொய்

சாமியார் தான் வழுக்கி விட்டான் என சாமியாரின் மேல்
கோபம் பொத்து கொண்டு வருகிறது

துறவின் எந்த சந்தர்ப்பத்திலும் வழுக்கி விழ வாய்ப்பு இருப்பதை
அனைத்து ஞானிகளும் உணர்ந்து இருப்பதை நாம் அறியலாம்

ஆனால் வழுக்கி விழும்பச்சத்தில் அதில் நேர்மை இல்லை என்பதுதான்
நித்தியா நந்தாவின் மேல் எனக்கு கோபம்

உடனே மடத்தை கலைத்து விட்டு கைலி உடுத்தி போக மனம் பணம்
இரண்டும் இடம் கொடுக்கவில்லை .

காமிராவின் கண்களின் மாட்டிவிட்டார் அதற்காக மாட்டாத
சாயி பாபாக்கள் , பங்காரு அடிகளார்கள் எல்லாம் யோகிகள் என
சொல்லலாமா இல்லை மாட்டும்வரை யோகிகள்

யோகத்தில் இரு அல்லது போகத்தில் இரு
அது உன் இஸ்டம் ஆனால் அடுத்தவனை யோகத்தில்
இருக்க சொல்ல கல்லா கட்டிவிட்டு நீ போகத்தில் இருந்தலா

அவனவனுக்கு வட போச்சேன்னு கடுப்பாகும்ல

நிற்க இந்த உடல் அதன் அவஸ்தைகளை மறுத்து
ஊணடக்கி உயிரடக்கி கண்டுகொள்ள துடிக்கும் உண்மையை
கண்ட பிறகு விண்டால் செருப்படி கிடைக்காது

காணாததை கண்டதாக சொல்லி கல்லா கட்டினால்
இப்படித்தான்.

கடும் உழைப்பில் வேர்வை நாற்றத்துடன் தன் மனைவியை
அணைக்கும் அந்த உழைப்பாளியை கடவுள் அல்லது நெறி
ஒதுக்கி விடுமா

ஏசி அறையில் கன்னியருடன் சல்லாபிக்கும் சாமியாரை
ஏற்று கொள்ளுமா அது மதமா

முதலில் மதமே தேவையா எனும் பரிசீலனைக்கு
நம்மை இம்மாதிரி நிகழ்வுகள் இட்டு செல்லுமா

இல்லையெனில் அந்த அடிமையை அடித்து அடித்து கை ஓயுங்கள்

வேறென்ன செய்ய முடியும் நம்மால் சுத்தி நின்று வேடிக்கை
பார்பதை தவிர

















--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

3 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post