வாழ்க்கை புரியாத புதிராக இருக்கும் போது பிறப்பும் இறப்புக்கும் பிறகு நீட்சியாக வாழ்க்கை இருக்குமா என சிந்தித்து அந்த வாழ்க்கைக்கு இப்ப இருந்தே தயார் செய்வதுதான் மதங்களின் வேலை .
பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை எது அவ்வுலகம் என தெரியாது இவ்வுலகத்தின் பொருளை துறந்து விடு ஆசையை அறுத்துவிடு உணவுக்கு கூட உழைக்காதே துறவி நெருப்பை தொடக்கூடாது என்கிறது இந்து மதம் துறவையும் தொண்டையும் அடிப்படையாக கொண்டு அவ்வுலகை அடைய வழிகாட்டுகின்றன மத நிறுவனங்கள் ஆமாம் மதம் நிறுவனமயமாக்கப்பட்டு அதில் போய் சேருகிறார்கள் பல இளைஞர்கள் அவர்களின் வாழ்க்கை இடுக்கியில் அகப்பட்ட எலியாகி விடுகிறது
பரிதாபம் .
எல்லா மதங்களிலும் துறவு மடங்கள் இருக்கின்றன அதற்குள் நடக்கும் விசயங்கள் அவ்வப்போது பத்திரிக்கைகள் மூலம் தெரிய வருகிறது .
அமைதிக்கான ஐநா விருது பெற்ற பிரஜபிதா பிரம்ம குமாரிகள் மடத்தில் சேர்ந்த எனக்கு தெரிந்த நண்பரின் புலம்பலை சொல்கிறேன்
சுமார் நான்கு ஆண்டுகள் அங்கு சேவை செய்தபின் சிக்குன்குனியாவில் பாதிக்கப்பட்டவர் சுமார் இருபதுநாள் வேலை ஏது செய்யாமல் அங்கே இருந்துள்ளார் வெளியில் சென்று தங்குங்கள் என சொல்லி இவர் வெளியே
அனுப்பப்பட்டார் .
இதே போல பதினெட்டு வருடங்கள் இருபது வருடங்கள் சேவை செய்தவர்கள் திடீரென இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் புற்று நோய் தாக்குண்டவர்கள் , எதாவது கேள்வி கேட்டவர்கள்அநியாயமாக வெளியேற்றப்படுகிறார்கள் இத்தகைய நிறுவனமயமாக்கபட்ட மடங்களில் இருந்து.
இந்த கால கட்டங்களில் கிடைத்த நல்ல ஒரு வேலையை அவர்கள்தொலைத்து விட்டு சென்று இருக்கலாம் அங்கே போய் மீட்டிங்குக்கு போர்வை விரித்தல் ,காய்கறி நருக்கி கொடுத்தல்,சாமியாரை காரில் அழைத்து செல்லுதல் போன்ற சாதாரண வேலை பார்த்து விட்டு தன்னை காப்பாற்றி கொள்ளும் திறமைமிக்க வேலைகள் எதுவும் தெரியாமல் வெளியே போ என தூக்கி எறியப்படும்போது சமூகத்தில் வேலை கிடைக்காமல் மிகவும் துன்பப்படுகிறார்கள்
மடங்கள் பெரும்பணக்காரர்களின் பொழுதுபோக்கு தளம் என்பதை உணராமல் நாளும் பூசை பாத்திரம் கழுவி மடத்தை சுத்தப்படுத்தி கொரியர் பாயாக மடத்தில் கொடுக்கும் நாலுமுழு வேட்டியைகட்டி மொட்டை அடித்தபடி உழைக்கும் தொண்டனாக ஒரு ஏமாளியாக வெளியே துரத்தினால் கால் காசு சம்பாதிக்க முடியாதவனாக எல்லா பாரத்தையும் கடவுளின் மேல் சாட்டுபவன்
எந்த வலை துறவி அவன் எந்த தர்க்கத்தின் கீழ் நிற்கிறான்.
காசேதான் கடவுளடா என ஒரு பாட்டு இருக்கு அது இந்த இளைஞனுக்கும் பொருந்தும் ஒரு மடத்தின் காசாளராக இருந்த இளைஞர் இருநூற்று ஐம்பது ரூபாய் டேலிஆகவில்லை என்பதால் மடத்தை விட்டு வெளியே அனுப்பப்பட்டார் என்றால் நம்புவீர்களா ?
சாமியாராக போக வேண்டும் என விரும்புபவர்கள் மிகப்பெரிய தவறு செய்கிறார்கள் அவர்கள் நினைத்து போவது ஒரு விவேகானந்தர் ஒரு இராமகிருஸ்ணர் போன்ற மகான்கள் மடத்தில் இருப்பதாக ஆனால் அங்கே மிகச்சாதாரணமான மனிதர்கள் இருப்பதையும் அரசியலும் அதிகார வெறியும் தாண்டவமாடுவுதையும் ஆன்மீகப்பத்திரிக்கை அழகாக
எழுதிவிட்டு தனது தனி அறையில் அனைத்துவித வசதிகளுடன் வாழ்வதையும் அது தனி உலகமாக வேறுவிதமான ஆசா பாசங்களுடன் இயங்குவதையும் மூன்றுவேளை சோற்றுக்கும் தாம் அடிமையாக இவர்களுக்கு இருப்பதையும்
கண்டவுடன் யோசிப்பவர்கள் உடனே வெளியேறி விடுகிறார்கள் முரட்டு வைராக்கியம் பிடித்தவர்கள் மடத்தின் அடிமைகளாக சுரணை அற்றவர்களாக காலத்தை தள்ளுகிறார்கள் வேறென்ன கொஞ்ச நாளில் இவர்களது கையில் திணிக்கப்படும் பகவத் கீதைக்கு விளக்கம் அளிக்க தொடங்கி விடுவார்கள்.
"செய்யும் செயலில் பற்றற்று இருப்பவன் கர்ம யோகி" -கீதை
இப்படித்தான் ஆகிவிடுகிறார்கள் ஆனால் என்ன செய்கிறோம் என்பதுதான் தெரியவில்லை பசுமாட்டு பாலை மூன்று
நேரம் சுண்ட காய்ச்சி குடிப்பது தவிர .
தங்களது வாழ்க்கையை தீர்மானிக்க முடியாத இவர்கள் உலக மக்கள் அனைவரின் வாழ்க்கைகும் தீர்வு சொல்ல தொடங்கி விடுகிறார்கள்
ஏன் இராமகிருஸ்ண மடத்தில் இன்னொரு விவேகானந்தர் உருவாகவில்லை என்றால் இதான் காரணம் நிருவனமயமாக்கப்பட்ட மத நிறுவனமானது சமூகத்தில் அது செய்யும் நல்ல வேளைகளை பெருக்கி காண்பிக்கிறது அங்கு வந்து சேர்ந்து வெளியே துரத்தப்படும் எண்ணற்ற இளைஞர்களை அது மறைத்து நாளும் புனித வேசம் காட்டுகிறது .மடத்துக்குள்ளும் கருணாநிதிகளும்
ஜெயலலிதாக்களும் நிறைந்து இருக்கிறார்கள் அங்கே பாலிடிக்ஸ் பயங்கரம். யாரோ ஒரு சில நல்லவர்கள் இருக்கிறார்கள் அவர்களை நம்பி பாவம் இந்த இளைஞர்கள் இலட்சிய வெறியுடன் மடங்களில் சேர்கிறார்கள்.
குமரியில் விவேகானந்தா சேவாஸ்ரமம் என்ற பெயரில் ஆர் எஸ் எஸ் ஒரு மடம் நடத்துகிறது அதில் இரண்டு வருடத்தில் சன்னியாசம் தருகிறார்களாம் மூனுவேளை சாப்பாடு வேலை என்ன தெரியுமா மதம் மாற்றுதல் ஆர் எஸ் எஸ் பிரசாரம் செய்வது விவேகானந்தை அதை சொன்னார் இதை சொன்னார் என மதவெறி ஏற்றுவது மக்களை இதான் வேலை.
சமூகத்தில் இருந்து கொண்டே தனக்காகவும் சமூக முன்னேற்றத்துக்காகவும் பாடுபட தானும் உழைத்து அடுத்தவர்களுக்கும் கொடுத்து வாழலாம் என்பது எனது கருத்து இவ்விளைஞர்களுக்கு .
உங்கள் நம்பிக்கை எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் உழைப்பை ஒருநாளும் கைவிட வேண்டாம் என்பது சரிதானே . ஒரு வேலையை ஒரு கைத்தொழிலை ஒரு வருமானம் தரும் கடையை விட்டு துறவு என ஓடுவதால்
எந்த பயனும் இல்லை கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் கதையாகிவிடும் .
பெற்று வளர்த்து இஞ்சினியரிங்க படிக்க வைத்த ஒரு தந்தை கல்யாண வயதில் நிற்கும் தங்கை குடும்ப பாரம் தாங்கமாட்டாமல் பாத்திரம் கழுவி பிழைக்கும் தாய் இவர்களை விட்டு விட்டு சுய ஆன்ம விடுதலை மட்டுமேமுக்கியம் என நீங்கள் தேடி ஓடுவது சுத்த சுயநலம் அல்லவா இதில் பட்டினத்தார் , சங்கரர் என உதாரணங்கள்
வேறு நடைமுறை வாழ்க்கைக்கு சிறுதும் ஒப்பாத ஒரு கனவு நிலையே இந்த இளைஞர்கள் இருப்பது.
உழைப்பு உழைப்பு மேலும் உழைப்பு அதுதான் முன்னேற ஒரே வழி -லெனின்
குறிப்பு:
இந்த கட்டுரை எழுதிய ஒரு வாரத்தில் நித்தியானந்தாவின் லீலைகள் அம்பலமாகியது அவருக்கு கீழே ஆன்ம விடுதலை தேடி அவரது மடத்தில் சேர்ந்த பல இளைஞர்கள் கதி என்னாயிற்று அதுதான் மிக கவலையளிக்கும்
செய்தி
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================