நிர்வாகவியல் பற்றிய எனது பகிர்வுகள்-5

பணியாளர்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் ஒரு சின்ன டீக்கடையோ ஒரு பெரிய பிஸ்கட் கம்பெனியோ நல்ல லாபம் ஈட்ட முடியும் .

வெறும் சம்பளம் தருவதால் வருவதல்ல இந்த பணியாளர் ஒத்துழைப்பு அதிகமா சம்பளம் கொடுத்த நிறுவனங்கள் பல மூணே முக்கால் நாளில் இழுத்து மூடப்படுவதையும் குறைவான சம்பளமாக இருந்தாலும் அந்த நிறுவனத்தில் பலர் ஆண்டு கணக்காக வேலை செய்வதையும் காணலாம் .

வேலை என்பது அவர்களுக்கு மனநிம்மதியை தரும் விசயமாக அங்கே ஆகிவிடுகிறது . நுகத்தடியில் பூட்டிய மாட்டின் நிலமையில் இருந்து துள்ளி ஓடும் குதிரைகளை போல அவர்கள் வண்டியை இழுத்து செல்லதேவை ஊக்கம் .

உங்கள் பிறந்த நாள் தெரியுமா இதென்ன கேள்வி எனக்கு என் பிறந்த நாள் தெரியும் உங்கள் பணியாளர் யாராவது ஒருத்தரின் பிறந்த நாள் தெரியுமா என பெரும்பாலான முதலாளிகளை கேட்டு பாருங்கள் அதெல்லாம் அவர்களுக்கு அநாவசியமான விசயமாக தோன்றும்.

ஒரு ஈக்குச்சு கூட பல்குத்த உதவும் எனும் பழமொழி மறந்தவர்கள் அவர்கள் சின்ன சின்ன பணியாளர்கள் லோடு மேன்கள் வாட்சுமேன்கள் தொழிற்சாலையை பெருக்கும் பெண்கள் என பல மனிதர்கள் செய்யும் வேலைகளால் ஒரு பெரிய இயக்கம் நடக்கிறது .

எங்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் அனைவரின் பிறந்த நாளைஎடுத்து அன்றைய தினம் மேலாளர்கள் அனைவரும் அந்த தொழிலாளியை அவனது மெசின் அருகே சென்று வாழ்த்துவது என முடிவெடுத்தேன் .

ஆச்சரியமான முறையில் அதன்பிறகு டெய்லர்கள் வேலையைவிட்டு மாறுவது குறைந்தது. ஒரு நகை கடையில் இருந்து பிறந்த நாள் வாழ்த்து சொன்னார்கள் அன்று நான் பலவருடம் பழகிய நண்பர்களிடம் இருந்து கூட முதல் வாழ்த்தை
பெறவில்லை என மனநெருக்கத்தை அது தந்தது அவர்களுக்கு வியாபார நோக்கம் காரணம் என்பது எனக்கு தெரிந்தாலும் அவர்கள் சொல்லும்போது சந்தோசம் வருவதை தடுப்பதில்லை இந்த எண்ணம் .

ஆகவே இத்தகைய மனநெருக்கத்தை கட்டியமைக்காமல் நிறுவனத்தை எத்தனை காசு போட்டாலும் கட்டியமைக்க முடியாது வருடம் ஒரு முறை டூர் என்பது கொஞ்சநாள் பேசனாக இருந்தது ஆனால் அதில் கொடுக்கும் காசை வாங்கி நாள் பூரவும் ஊட்டியில் ரூம்போட்டு தண்ணி அடித்தே திரும்பி வருவார்கள் அவர்களுக்குள் என்ன ரிலாக்ஸ் கிடைத்து இருக்கும் ..

இந்த முறையில் நம்பிக்கை இல்லை எனக்கு இன்னும் சில நிறுவனங்களில் பல்வேறு விளையாட்டுக்கள் நடத்தி பரிசளிப்பது என அந்த நாளை மனநெருக்கம் அதிகரிக்கும் ஒரு நாளாக மாற்றுவார்கள் இதெல்லாம் சிறந்த வழிகள் வழிகளை நாளும் நிர்வாகி யோசித்து கொண்டே இருக்கவேண்டும் என்ன வழிகள் இந்தவருடம் நாற்பது கோடி அடுத்த வருடம் எண்பது கோடி எனும் வருடாந்திர வியாபார பெருக்கத்தை மட்டுமல்ல அதில் ஆயிரத்தில் ஒரு பகுதி தொழிலாளிக்கு செல்கிறதா எனும் கவனம் இருந்தால் போதும்.

மிக நன்றாக தையல் தைக்கும் தொழிலாளிக்கு ஸ்டார் ஆப்த டே கொடுக்கனும் என்பது நடைமுறை படுத்தி பாருங்கள் அல்லது மிக நன்றாக வெட்டுபவன் அல்லது மிக நன்றாக பணி செய்த ஒரு டாய்லட் கழுவுபவன் இவர்கள் எல்லாம்
அங்கீகாரம் குறித்து மிகவும் ஏங்கு வார்கள் அட போடா எத்தனை செய்தாலும் ஒரே மாதிரிதான் போகுது இவங்கபுத்தின்னு சலிப்பு தட்டினால் அன்று முதல்
உற்பத்தி குறைவு நிச்சயம் நடக்கும்

வேலையை அதிகமா செய் இல்லைன்னா வீட்டுக்கு போன்னு இன்னைக்கு யாரையும் சொல்ல முடியாது அந்தளவு தொழிலாளர் பற்றாக்குறை உள்ளது நாட்டில் நல்ல தொழிலாளி கிடைப்பது அரிதினும் அரிது .

முதலில் பணியாளர் ஒத்துழைப்பு பிறகுதான் மற்றெல்லாமே எனும் மந்திரம் மிக பயன் தரும் மீண்டும் உரையாடுவோம் ..
--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

5 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post