நிர்வாகவியல் பற்றிய எனது பகிர்வுகள்-6

ல்வேறு பணி குழுக்கள் ஒரு நிறுவனத்திற்கு தேவைப்படும்

ஒரு பொருளை உற்பத்திய செய்ய திட்டமிடும் பிரிவு ,பொருட்களை
வாங்கும் பர்சேற் பிரிவு , உற்பத்தி பிரிவு, ஆட்களை தேர்வு செய்யும்
மனிதவள பிரிவு , ஆர்டர்களை எடுக்கும் மெர்சண்டைசர்கள்,
பண வரவு செலவுகளை கவனிக்கும் அக்கவுண்ட்ஸ் பிரிவு
என பல்வேறு பிரிவுகள் கொண்டது ஒரு கம்பெனி .

மனிதனின் தலை , கை , கால் உடல் என்பன போன்றவை
எது மிக அதிக முக்கியம் என்பதெல்லாம் இல்லை .

இந்த குழுக்களை சரியாக திறம்பட நிர்வகிக்க ஒரு சிஸ்டம்
தேவை அறிவியல் பூர்வமான ஒரு அணுகுமுறை தேவை

தனி மனிதர்களை சார்ந்து இயங்காமல் எழுதி வைக்கப்பட்ட
பிரேம் செய்யப்பட்ட இயங்கு முறையின் கீழ் அனைத்து
பெரிய நிறுவனங்களும் வந்துவிட முயற்சி செய்கின்றன

இதனால் அனேக நேரம் மிச்சம் மிக எளிது ஆர்டர்
கிடைத்து இத்தனை நாளில் அதை பர்சேஸ் பிரிக்வுக்கு
தெரிவிக்க வேண்டும் பர்சேஸ் பிரிவு இத்தனை நாளில்
பொருள் வாங்க வேண்டும் அதே போல துணி வந்து
இத்தனை நாளில் வேலைக்கு உற்பத்தி பிரிவு எடுத்து விட
வேண்டும் என்பதை ஒரு சிஸ்டம் ஆக்கி விட்டால்

அந்த இடத்தில் ஒரு முதலாளியோ அல்லது நிர்வாகியோ
இருந்து சாட்டை கம்பை வைத்து குத்தி கொண்டே இருக்க
தேவை இல்லை .

சிஸ்டம் இயங்க கொஞ்ச நாள் ஆகலாம் ஆனால் ஆரம்பித்து
விட்டால் நிற்காமல் செல்லும் இயந்திரம் போலத்தான்
சிஸ்டம் தொடர்ந்து இயங்கி நிர்வாகத்தை நடத்தும்.

ஒவ்வொரு கம்பெனியில் இத்தகைய சிஸ்டம் இருக்கும்

ஆயிரக்கணக்கான நபர்கள் வேலை செய்வார்கள் ஆர்டர்கள்
பிரச்சனை இல்லாமல் சென்று கொண்டு இருக்கும் ஆனால்
ஒரு மீட்டர் துணியை நீங்கள் வெளியில் எடுத்து செல்ல
நிறைய கையெழுத்து வாங்க வேண்டியது இருக்கும்

பரவாயில்லை ஆனால் துணி களவாட படாது

சின்ன நிறுவனங்களில் இத்தகைய சிஸ்டம் இல்லாத இடங்களில்
முதலாளி தானே களத்தில் குதித்தாலும் ஒரு பப்பும் வேகாது

வீண் டென்சந்தான் மிச்சமாகும் .

ஒரு குழுவை உருவாக்கி அதன் பொறுப்புகளை தீர்மானித்து
விட்டு கொடுத்து விட்டீர்கள் என்றால் பலன் சரியாக வருகிறதா
என்று மட்டும்தான் பார்க்க வேண்டும்

ஒரு முதலாளி இருந்தார் ஒரு வேலையை ஒரு ஆளிடம் கொடுத்து
விட்டு அவரே போன் செய்து விசாரித்து வைத்து கொள்வார்
இது தெரிந்த அந்த ஆள் பிறகு எப்படி தலைமை பொறுப்பேற்று
அந்த வேலையை செய்து முடிப்பார்

மேலும் குழுக்களுக்கிடையே போட்டி ஏற்படுத்துகிறேன் என்று
பெரும்பாலும் சண்டை மூட்டி குளிர்காய நினைப்பார்கள் முதலாளிகள்
அது அவர்களுக்கே ஆபத்தாக முடியும் .

ஒவ்வொரு குழுவும் தனது கடமையையும் அடுத்த குழுவின் கடமையையும்
பொறுப்பையும் தெளிவாக தெரிந்து வைத்து இருக்கவேண்டும் .

குழுக்களின் குறிப்பிட்ட நடவடிக்கையையை நிருவாகத்தின் மொத்த
நடவடிக்கையில் சரியாக கொண்டு இணைப்பதில் நிர்வாகி
மெத்த முயற்சி எடுக்க வேண்டும்

குழுவின் தனிபட்ட குறிக்கோளை அடைய நிர்வாகி உதவ வேண்டும்

குழுக்களிடம் பாரபட்சம் காட்ட கூடாது .

அது குழுக்கள் செயல்படும் திறனை குழைத்து விடும்.

ஒரு காமெடி காட்சி பார்த்து இருப்பீர்கள் நாலு பேரு சேர்ந்து
ஒரு பழைய கடிகாரத்தை தூக்கி வருவார்கள் வடிவேல் காமெடியில்

விஜய் ஒரு கை பிடிக்காமல் அந்த பக்கம் திரும்பி சைட்
அடித்து கொண்டு இருப்பார் கடிகாரம் விழுந்து நொருங்கி விடும்

பிறகு இன்னொருத்தன் சொல்வான் அவன் பிடிக்கவே இல்லை
நான் பார்த்தேன் என்று

இந்த படத்தில் பெயிண்டு அடிக்கும் ஒரு நிர்வாகியாக உச்சகட்ட
டென்சனில் இருப்பார் வடிவேலு அந்த வேலைகளினூடே

ஒத்துழைப்பு தராத பணியாளர்களால் அவர் படும் அவதி
நகைச்சுவையாக பிண்ணப்பட்டு இருக்கும் .

கொஞ்சம் அசந்தால் நிர்வாகியையும் நிர்வாகத்தையும்
காமெடியனாக்கி விடுவார்கள் பார்த்துக்கங்க :)
--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post