பார்பனிய பிரசாரத்தில் தினமலர் பத்திரிக்கை
ஒரு சனநாயக நாட்டில் அந்த நாட்டின் பத்திரிக்கைகள் தான் நினைக்கும் கருத்தை சொல்லும் உரிமை வழங்கப்பட்டு இருக்கிறது மறுக்க முடியாது சரி.
கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் ஒரு பத்திரிக்கை தனது வர்க்க சார்பு நிலையை சாதிய நிலைபாட்டை விசக்கருத்துக்களால் விதைத்து கொண்டு இருந்ந்தால் சனநாயகம் என்ன செய்யும் ஒன்னும் செய்யாது வேடிக்கை பார்க்கும்.
அப்படித்தான் நடக்கிறது தினமலர் விசயத்தில் பெரியார் உட்படஎத்தனையொ
தலைவர்கள் உயிரைக்கொடுத்து போராடி உருவாக்கிய ஜாதி எதிர்ப்பு , பெண் சுதந்திரம் இன்னும் பல சுயமரியாதை கருத்துக்களைதனது பார்பனிய ஆதரவு பேனா முனையால் இன்று கொஞ்சம்
கொஞ்சமாக மாற்றுவதில் வெற்றி பெற்று வருகிறது தினமலர் எனும்
தின மலம் .
பிற்போக்கு கருத்துக்களை வாழைபழத்தின் நடுவில் வைக்கப்பட்டுள்ள
நஞ்சைபோல ஊட்டுகிறது சமூகத்தில்
யார் இந்த பேப்பரை படிக்கிறார்கள் , மத்திய நடுத்தர வர்க்கத்தினர்
இந்தியாவின் தமிழ்நாட்டில் அதிகம் படிக்கத்தெரிந்த வர்கள் மத்திய
நடுத்த்ர வர்க்கத்தினர் இதில் அனைத்து சாதியினரும் அடக்கம் இவர்கள்
மத்தியில் அறுபதுகளில் இருந்த பார்பனிய எதிர்ப்பு மற்றும்
முற்போக்கு சிந்தனைகள் அந்த காலத்தில் வாழ்ந்த தலைவர்களாலும்
போராட்ட இயங்கங்களாலும் பத்திரிக்கைகளாலும் ஏற்படுத்தப்பட்ட
கருத்தியலானது இன்று மழுங்கடிக்கப்பட்டு வருகிறது
மொத்தமாகவல்ல மெதுவாக ஒவ்வொரு நாளும் தினமலர் மூலமாக
ஒரு செய்திபத்திரிக்கை செய்தியை தருகிறது அதில் என்ன குறை இருக்கிறது
என சொல்வோர் ஒரு ஆறுமாதங்கள் தினமலர் படித்து வாருங்கள்
என சொல்வேன் .
கடந்த மாதம் ஒரு ஞாயிற்று கிழமை வாரமலர் பார்த்தது கேட்டது படித்தது
பக்கத்தில் வழக்கம்போல் ஒரு பெண் அந்துமணிக்கு போன் செய்து அவரது
வாழ்க்கையில் நடந்த விசயங்களை சொல்கிறார் அழுகையினூடே அவர்
சொன்னது அவர் வீட்டில் விருந்தாடியாக தங்கிய இளைஞன் கன்னி பெண்ணான
அவரை கற்பழித்து விட்டான் என்பதாகும் அதற்கு மறுமுனையில் இருந்த
அந்து மணி சொன்னது ஒரு கன்னி பெண்ணின் ஆமோதிப்பு இல்லாமல்
எந்த ஆணும் கற்பழித்து விட முடியாது என்பதே
இந்த அரிய கருத்தை அவர் பல்வேறு நிபுணர்களிடம் பிறகுஉறுதி படித்து
கொண்டதாக எழுதுகிறார் அடுத்த இரண்டாவது வாரத்தில் ஒரு செய்தி
வெளி நாட்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் "ஒரு கன்னிபெண்ணை
அவளது அனுமதி இல்லாமல் பலவந்த படுத்த முடியாது" என்பதே
அந்த செய்தி .
தானே வாரமலரில் ஒரு கருத்தை வலிந்து புகுத்தி எழுதிவிட்டு
அதற்கேற்ப தினமலரில் ஒரு செய்தியை கொடுப்பது எதனால்
என்று எத்தனைபேர் என தெரியவில்லை ஆனால் இது எதார்த்தமாக
எழுதப்படு விசயம் இல்லை என்பது உறுதி .
இவர்களது வீட்டில் ஒரு கன்னி பெண் கற்பழிக்கப்பட்டால் கூட
அதை இந்த கண்ணோட்டத்தில் பார்பார்களா என்பதை கேட்டால்
எழுதியதற்கு எவன் நேர்மையாக இருக்கிறான் என்பார்களோ
ஆணாதிக்க சிந்தனை , பெண் அடிமைத்தனம் , சமூக ஒடுக்குமுறை
ஆதிக்க சாதி சிந்தனை இவை எல்லாம் தனது பெட்டிக்குள்
வைத்து நேரம் பார்த்த் இறக்கி விடுகிறது தினமலர் .
இவர்களது இந்த பத்தாம் பசலி கருத்துக்கு படித்த பலரும் தனக்கு
தெரியாமல் பழியாகி விடுகிறார்கள்
தந்தை பெரியாரின் கருத்துக்களை எள்ளி நகையாடுதல்
கம்யூனிஸ்டுகளை தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் என முத்திரை
குத்துதல் ஈழ ஆதரவாளார்களை புலி ஆதரவாளர்கள் என சொல்லுதல்
என தினமலரின் துரோக பார்பனிய கருத்துக்களின் வரிசைகள்
அதிகரித்து செல்கிறது.
செய்தியை செய்தியாக பார்பவகள் ,அதன் வர்க்கத்தன்மையை
சார்புநிலையை மறுப்பவர்கள் காலையில் எழுந்து கக்கூஸ் போவதை போல
செய்தியை கடமையாகத்தான் செய்கிறார்கள்
ஒவ்வொரு கருத்துக்கு பின்பும் அதன் வர்க்கசார்பு தன்மை ஒழிந்து இருக்கிறது
என்றார் லெனின் - தினமலர் விசயத்தில் அது எவ்வளவு பெரிய உண்மை
நித்தியானந்தாவை பற்றி எல்லா பத்திரிக்கைகளும் எழுதிய போதும்
தினமலர் இரண்டு நாள் மெளனம் காத்தது பிறகு அது விடியோ மார்பிங்
வேலை என்றது பிறகு குற்றஞ்சாட்டிய அவரது சீடரை குற்றம் சொல்லியது
என அதன் பல்வேறு செய்திகள் .
கண்டிப்பாக சார்புடையது .அதை தெரிந்து கொண்டு படிக்க வேண்டும்
என்பதை தினமலர் படிப்பவர்களை கேட்டு கொள்கிறேன்
ஒரு கொலைகாரனை , கற்பழிப்பவனை மன்னித்து விடலாம்
ஆனால் கொலையும் கற்பழிப்பும் உலகத்தில் நடக்காத ஒரு விசயமா
என அவனுக்கு சப்பை கட்டு கட்டி ஒரு கருத்தை உருவாக்க நினைப்பவனை
நீங்கள் சுலபத்தில் விட்டு விட கூடாது .
முற்போக்கு எண்ண அலை தமிழ் நாட்டில் மட்டும்தான் வீசுது
அதற்கு பெரியார் என்ற கிழவர் காரணம் நேரடியாக மோத முடியாத
இத்தகைய பார்பன ஏடுகள் மறைமுக எதிர்ப்புதான் செய்தி திரிப்பு
முதல் கருத்து திரிபை வரையிலான விசயங்கள்
தகவலை தகவலா பார்பது ,செய்தியை செய்தியா பார்பது சினிமாவை
சினிமாவா பார்பது கலையை கலையா பார்பது என சொல்லும் அறிவுஜீவிகளே
அதன் வர்க்கத்தன்மையை இனிமேல் காணுங்கள்
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================