நிர்வாகவியல் பற்றிய எனது பகிர்வுகள்-7

திட்ட நடமுறைக்கு சிஸ்டம் என பெயரா என்றால் இல்லை திட்டமிட்டு ஒழுங்குபடுத்தி
தானே இயங்கும் நடைமுறைதான் சிஸ்டம் எனப்படுகிறது ..

நான் போன பதிவில் சொன்னது போல தனிமனிதனை, அவன் கட்டளையை,
அவன் மூளையில் அவ்வப்போது உதிக்கும் நடைமுறைக்கு தகுந்தாற்போல
ஒரு நிறுவனமோ ,நாடோ இயங்க முடியாது.

வீட்டில் கூட அப்படி இயங்க முடியாது அப்பாவை கேட்டுத்தான் ஜட்டிகூட
வாங்கனும் என்ற வீட்டில் மகனுக்கு அப்பாமேல் அனேகமா எரிச்சல்தான்
வரும்.

நன்கு தீர்மானிக்கப்பட்ட ஒரு நடைமுறை தனிமனிதனை சாராமல்
தன்னைதானே சார்ந்து அதுவே இயங்கி கொண்டு இருக்கும்.

நிர்வாகி அதை அடிக்கடி சோதனை செய்தால் போதுமானது .

உதாரணமாக,

தினமும் ஜெனரேட்டரில் டீசலின் அளவை கம்பெனியின் செக்யூரிட்டி
அளக்கனும் மீட்டர் முள் அளவை பார்த்து - ஒரு முள் இருக்கையில்
டீசல் வாங்க ஆள் அனுப்பனும்- டீசல் டோக்கனோ வாங்கிவர
ஆளோ இல்லைஎன்றால் நிர்வாகியிடம் தெரிவிக்கனும் - நிர்வாகி
இல்லை என்றால் -நிர்வாகியின் உதவியாளரிடம் தெரிவிக்கனும்,
அவரும் இல்லை என்றால் -முதலாளியிடம் தெரிவித்து
டீசலை வாங்கி நிரப்பி கொள்ளனும்.
தினமும் ஜெனரேட்ட ஓடும் நேரத்தை குறித்து கொள்ளனும்.

இப்படி ஒரு சிஸ்டம் உருவாக்கி விட்டீர்கள் என்றால், பிறகு நீங்கள்
ஜெனரேட்டர் ஓடாமல் நின்றுவிடும் என கவலை பட தேவை இருக்காது

செக்யூரிட்டி மாறினால் என்ன செய்யவேண்டும் என்பதையும் சொல்லிவிடனும்.

ஐஎஸ் ஓ தர சான்றுகள் இன்னைக்கு கோவிலுக்கு கூட தரப்படுகிறது
பஸ்ஸ்டாண்டு ,போலீஸ் ஸ்டேசன் என் அனைவரும் ஐஎஸ் ஓ வாங்குவது
சும்மா பந்தாவுக்குன்னு சொன்னாலும் அதை வாங்க அவர்கள் பலவேலைகள்
செய்யனும்.

போலீஸ் ஸ்டேசன் என்றால் பல பதிவேடுகள் முறையே கையாளபட்டு இருக்கனும்
குறிப்பிட்ட கால இடைவேளியில் சோதிக்கப்பட்டு மாற்றங்கள் கொண்டு
வரபட்டு இருக்கனும் இப்படி கோவிலும் அவ்வாறே சென்னை சில்கின் ஒரு
திட்டமிட்ட நடைமுறையை சொல்கிறேன் ஆறுமாதத்துக்கு ஒரு அட்வடைஸ்மெண்டை
மாற்றி புது விளம்பரம்தான் தரப்படவேண்டும் எனும் சிஸ்டம் இருக்கிறது. .

வாசிங் பவுடர் நிர்மா மாதிரி அந்தகாலத்தில் ஓடிய அதே விளம்பரம் ஒடாது.

யாராலும் பரிசீலிக்கப்படாதா லெட்சர்கள் ,நோட்டுகள்,நடைமுறைகள் சிஸ்டம் இல்லாமல்
இயங்கும் நிறுவனத்தின் உதாரணம்.

ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட நடைமுறையை உருவாக்கி ,மேற்பார்வை இடனும்
இடர்களை கலைந்து சீர்திருத்தி மேலும் சிறப்பாக அதை மாற்றனும்
என்பதைத்தான் சோசலிசமும் சொல்லுது.

ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட தானே இயங்கும் நடைமுறை இருந்தால்
முதலாளியோ நிர்வாகியோ ஆன் த ஸ்பாட்டில் இருக்கவேண்டியதேவை
இல்லை .

சிஸ்டம் இருக்குன்னு நிர்வாகி தூங்கிட கூடாது .சரியா நடக்குதான்னு
அப்பப்போசரிபார்க்கனும். குறிப்பெடுக்கனும் , சீர்திருத்து மறுபடியும்
நடைமுறை படுத்தனும் plan -Do-check -Act என ஐஎஸ் ஓவில் சொல்வார்கள் அதுமாதிரி.

ஒரு சில இடங்களில் இரட்டை ரெக்கார்டு கடைபிடித்து வருவார்கள்
ஏன் எதுக்குன்னு தெரியாம கடனேன்னு பல லெட்ஜர்கள் , நோட்டுகள் இருக்கும்
யார் அதை பரிசீலிப்பது, திருத்துவது அதிலிருந்து ரிப்போர்ட் தயார் செய்வது
என்பது இருக்காது .

இதனால் நேரவிரயம்தான் .

ஒழுங்கமைக்கப்பட்டு தானே இயங்கும் நடைமுறை நன்றாக இயங்க ஆரம்பித்தால்
நூறு மேனேஜர்கள் தேவையே இல்லை.

ஒரு நாட்டையே ஒழுங்குபடுத்தப்பட்ட நடைமுறை இயக்கும் என்பதற்கு சோசலிச
நாடுகள் உதாரணம் சரியாக கண்காணிக்காவிட்டால் தோல்வியும் ஏற்படும்.

சோசலிச நாட்டில் எல்லாரும் வேலைக்கு போவார்கள் , அவர்கள் வேலை செய்தது
பதிவு செய்யப்படும் .செய்த வேலைக்கு ஏற்ப கூலி வழங்கப்படும். கண்காணிப்பு இருக்கும்

அதே போல சிஸ்டம் இருக்குன்னு சொல்லிட்டு நிர்வாகி தூங்கி விட்டால்
அவ்ளோதான். எல்லாரும் மனிதர்கள் தானே தங்களை யாரும் எந்த கேள்வியும்
கேட்பதே இல்லை நோட்டுகளை யாரும் சரிபார்ப்பதில்லை என்றால்
அவர்கள் எழுதுவதில் கோட்டை விடுவார்கள் படிப்படியாக ஒவ்வொரு
சிஸ்டமாக கைவிடப்படும்.

இதில் மிகப்பெரிய போராட்டம் சக ஊழியர்களுடன் நடக்கும் நிர்வாகத்தில்
யாருக்கும் அடங்காமல் சிலபேர் இருக்கத்தான் செய்வார்கள் அவர்களுக்கு
முதலாளியின் நேரடி ஆசிர்வாதம் இருக்கும் அல்லது சொந்தகாரனா இருப்பான்

சிஸ்டத்துக்கு மிகப்பெரிய இடைஞ்சலா இவன் இருப்பான் நான் எதுவும் கடைபிடிக்க
மாட்டேன் என்பான் அல்லது நான் மட்டுமே இதெல்லாம் கடைபிடிக்கிறேன்
யாரும் கடைபிடிக்கவில்லையெ என சொல்லிட்டே இருப்பான் இவன்
மற்றவனை கெடுப்பான் .

எதாவது சொன்னோம் என்றால் நான் முதலாளியிடம் பேசிக்கிறேன் என்பான்
பெரும்பாலும் முதலாளிக்கே சிஸ்டத்தை புரியவைப்பது படு சிரமமான வேலையாக
இருக்கும் ஆரம்பத்தில் புரிந்து விட்டால் சிஸ்டத்தை பின்பற்றுவது அவருக்கு,
எளிதான வேலையாக போய்விடும்.

இன்னும் சிலர் நீங்கள் கொண்டு வரும் விசயங்கள் வெற்றிகரமா நடப்பதை
அறிந்து பொறாமை கொள்வார்கள் அதை வெளிகாட்டாமல் உங்களுக்கு யோசனை
சொல்வதுபோல சிஸ்டத்தை குழப்புவார்கள் சார் இதை இப்படி செய்யாமல்
அப்படி செய்தால் என்ன என உங்களிடம் சொல்லிவிட்டு அந்த பக்கம்போய்
அவருக்கு ஒன்னும் தெரியல இதெல்லாம் நாந்தான் சொன்னேன் என
பீத்துவார்கள் .அல்லது ஓயாமல் உங்களுடன் ஆர்குமெண்டு செய்வார்கள்
முதலில் சிஸ்டம் சரியா தவறா என இவர்களுடன் விவாதிக்காதீர்கள்

இதுதான் சிஸ்டம் முதலில் செய்யுங்கள் மூனுமாதம் கழித்து உங்கள்
குறையை எழுதி கொடுங்கள் அல்லது இப்போதே உங்கள் குறையை
எழுத்து மூலம் தெரிவியுங்கள் என சொல்லிவிடுங்கள் .

சிலர் ஆகா ஓகோ வென புகழ்வார்கள் இவர்களிடமும் நிர்வாகி கவனமுடன்
இருக்கனும்.

ஒரு பழைய கண்ணதாசன் பாடல் நியாபகம் வருகிறது

கண்களிரண்டில் அருளிருக்கும் சொல்லும்
கருத்தினில் ஆயிரம் பொருளிருக்கும்
உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும் அது
உடன் பிறந்தோரையும் கருவருக்கும்

எல்லா செயல்களும் முதலில் ஏளனத்துக்கு உள்ளாகிறது
பிறகு ஏற்றுகொள்ளப்பட்டு புகழப்படுகிறது என்பார் விவேகானந்தர்
அதுபோலத்தான் நிர்வாகத்தின் சீரமைப்பும்

இன்னும் பேசுவோம்.


--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post