போலி மருந்தும் கையாளாகத்தன அரசும்

நாள் முடிந்துவிட்ட மருந்தை கொண்டு போய் குப்பை தொட்டியில் போடாமல்
அதன் தேதியை மாற்றி விற்று காசு பாத்து இருக்கிறது ஒரு கும்பல்

தேதி முடிந்து விட்ட மருந்துகள் எங்கிருந்து கிடைக்கும் யார் அதை மொத்தமாக வாங்கி
அழிக்கிறார்கள் அரசின் வழிகாட்டி நெறி முறைகள் என்ன என்பது
அந்த கடவுளுக்கே வெளிச்சம்

நாள் முடிந்து விட்ட மருந்தை விற்றவர்களே நினைத்தாலும் கண்டு பிடிக்க முடியாது
எந்த கடைக்கெல்லாம் அது போயிருக்கும் என்று அதில் இவர்கள் குடும்பம் போய்
வாங்கி தின்னாலும் அதோ கதிதான்

முக்கியமா எக்ஸ்பயரி மருந்து கற்பமான பெண்களுக்கான மருந்துகளாக
அனேகமா இருந்து இருக்கு

யாரோ ஒரு சில நாய்கள் லாபம் பார்க்க பொதுமக்களின் தலையில்
விழுந்து இருக்கு எத்தனை பேர் செத்தார்கள் எத்தனை பேர் சைடு எபக்டுக்கு உள்ளானார்கள் என தெரியவில்லை

அது மட்டுமல்ல எக்ஸ் பயரி மருந்து மட்டுமல்ல
காம்போசிசன் கூடுதல் குறைவாக இருந்து ரிஜெக்டாகும் மருந்துகள்

அதாவது xங்கிற கெமிக்கல் இத்தனை சதவீதம் y ங்கிற கெமிக்கல் இத்தனை சதவீதம்
இருக்க வேண்டுமோ அது சரியாக இல்லாமல் லாட்டு லாட்டாக நிராகரிக்கப்ப்டும் மருந்துகளை
வாங்கி புழக்கத்தில் விடுகிறார்கள் என சொல்கிறார் மெடிக்கல் சாப்பு வைத்து இருக்கும் நண்பர் ஒருவர்.

பேசாமல் அந்த காலத்து பாட்டி வைத்தியம் செய்து சாப்பிட்டுகங்க
மெடிக்கல் சாப் பக்கம் போகம இருக்கிறது நல்லது

லாபவெறி எல்லாத்துலவும் காசுபார்க்க துடிக்கும் வெறி

இதெல்லாம் அளவு கடந்து விட்டது

இனி சட்டத்தை மாற்றனும்

கத்தி எடுத்து குத்தினால் மட்டும்தான் கொலையா

இம்மாதிரி மருந்து வியாபாரமும் கொலைக்கு சமம்தான்
.
news

சென்னையில் கு‌ப்பைக‌ளி‌ல் இரு‌ந்து பொறு‌க்க‌ப்படு‌ம் காலாவதியான மருந்து ம‌ற்று‌ம் மாத்திரைகளை, பு‌திதுபோ‌ல் மா‌ற்‌றி விற்பனை செய்த போலி தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. காலாவ‌தியான மரு‌ந்துகளை ‌வி‌ற்பனை செ‌ய்து, ம‌க்களை அ‌தி‌ர்‌ச்‌சி‌க்கு‌ள்ளா‌க்‌கி‌யிரு‌க்கு‌ம் இ‌ந்த தொ‌ழி‌ற்சாலையை ந‌ட‌த்‌தி வ‌ந்த 7 பே‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் ‌சில கடைக‌ளி‌ல் ‌வி‌ற்க‌ப்படு‌ம் மரு‌ந்துக‌ள், ‌அ‌ந்த‌ந்த ‌நிறுவன‌ங்க‌ள் அ‌ளி‌க்கு‌ம் ‌விலையை ‌விட ச‌ற்று‌க் குறைவாக இரு‌ப்பதா‌ல் அவை போ‌லிகளாக இரு‌க்க‌க் கூடு‌ம் எ‌ன்ற அடி‌ப்படை‌யி‌ல் மரு‌ந்து தயா‌ரி‌க்கு‌ம் ‌நிறுவன‌ங்க‌ள் புகா‌ர் தெ‌ரி‌வி‌த்தன.

இ‌த‌ன் அடி‌ப்படை‌யி‌ல் வடசென்னை பகுதியில் சோதனை நடத்த‌ப்ப‌ட்டு போலி மருந்துகள் தயாரிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடு‌க்க‌ப்ப‌ட்டது.

இவ‌ர்க‌ளிட‌ம் நட‌த்‌திய ‌விசாரணை‌யி‌ல் பல அ‌தி‌ர்‌ச்‌சி‌க்கு‌ள்ளா‌க்கு‌ம் தகவ‌ல்க‌ள் வெ‌ளியா‌கின. அதாவது, சென்னை கொடுங்கையூரில் மாநகராட்சி குப்பை கொட்டும் தளம் உள்ளது. காலாவதியான மருந்து மாத்திரைகளை இங்கு கொண்டு வந்து கொட்டுவார்கள். இதை ஒரு கும்பல் ஆ‌ட்களை வை‌த்து‌ப் பொறு‌க்‌கி வ‌ந்து அத‌ன் லே‌பி‌ள்களை மா‌ற்‌றி புதிய மருந்து மாத்திரைகள் போல் விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தும்படி சென்னை மருந்து கட்டுப்பாடு இயக்குநர் இளங்கோ, காவ‌ல்துறை ஆணை‌ய‌ர் ராஜேந்திரனிடம் புகார் கொடுத்தார். ராஜேந்திரன் இதுபற்றி விசாரணை நடத்த இணை ஆணைய‌ர் சேஷசாயி, துணை ஆணைய‌ர் பாஸ்கர், உதவி ஆணைய‌ர் பாலசந்திரன், கொடுங்கையூர் குற்றப்பிரிவு ஆ‌ய்வாள‌ர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையிலான தனி காவ‌ல் படை அமைத்தார்.

தனிப்படை காவ‌ல்துறை‌ விசாரணையில் காலாவதியான மருந்துகளை புதிய மருந்துகளைப்போல விற்பனை செய்வதில் ஒரு பெரிய கும்பல் குழுவாக செயல்படுவது தெரிந்தது. இது தொடர்பாக போலி தொழிற்சாலை ஒன்று கோயம்பேடு அருகேயுள்ள சின்மயாநகரில் செயல்படுவதும் கண்டறியப்பட்டது.

கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் ரவி என்ற பிரபாகரனு‌ம்(வயது 40), இவரது மனைவி சுனிதாராணி (30)யும் தான் இந்த கு‌ம்பலு‌க்கு மூளையாக செயல்பட்டு உள்ளனர். குப்பை மேட்டுக்கு வரக்கூடிய காலாவதியான மருந்து, மாத்திரைகளை ஆ‌ட்களை வை‌த்து‌ப் பொறு‌க்‌கி அதனை தரவாரியாக பிரிப்பார்கள். பின்னர் அவற்றை சின்மயா நகரில் செயல்பட்ட மீனா ஹெல்த்கேர் என்ற நிறுவனத்திடம் விற்றுவிடுவார்கள்.

மீனாட்சி சுந்தரம் என்பவர் மீனா ஹெல்த்கேர் நிறுவனத்தை நடத்தி வந்தார். காலாவதியான மருந்து மாத்திரைகள் இங்குதான் புத்தம்புது மருந்து மாத்திரைகள் போல உருமா‌ற்ற‌ப்படு‌ம். ஒரு‌வித ரசாயன‌த்‌தி‌ன் மூல‌ம், மரு‌ந்து, மா‌த்‌திரைக‌ளி‌ல் அ‌ச்‌சி‌ட‌ப்பட்ட தேதி, பேட்ச் நம்பர், விலை விவரங்களை அழித்துவிட்டு, புதிய தேதி, விலை விவரங்களை அச்சிட்டு விற்பனைக்கு கொ‌ண்டு வருவா‌ர்க‌ள்‌.

இதுபோன்ற காலாவதியான மருந்து, மாத்திரைகள் செ‌ன்னை ம‌ட்டு‌ம‌ல்லாம‌ல் தமிழகம் முழுவதும் விற்கப்பட்டு வ‌ந்து‌ள்ளது. ம‌க்க‌ளி‌ன் உ‌யிரோடு ‌விலையாடி‌க் கொ‌ண்டிரு‌ந்த இ‌ந்த மோசடி சுமா‌ர் நா‌ன்கை‌ந்து ஆ‌ண்டுகளாக நட‌ந்து வருவதுதா‌ன் சோ‌க‌த்‌தி‌ன் உ‌ச்ச‌ம்.

இ‌ந்த ச‌தி‌ச் செய‌லி‌ல் ஈடுப‌ட்டு வ‌ந்த 7 பேரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்தன‌ர். ம‌ற்று‌‌ம் பலரை‌த் தேடி வரு‌கி‌ன்றன‌ர்.







--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post