பெண்களின் ஆவி -எப்படி உருவாகிறது



பெண்களின் ஆவி

பெண்களின் ஆவி என்பது கதாநாயகர்களை விட பெரிய பிரமாண்டமாக தற்போது சினிமாவில் காட்டப்படுகிறது. பெரும்பாலும் கற்பழித்து கொல்ல பட்ட பெண் அல்லது அடித்து கொள்ள பட்ட பெண் அந்த வீட்டில் அதாவது பெரிய அரண்மனையில் (ரரா ) ஆவியாக காத்து கிடக்கிறாள்.
அவளை கொன்ற அல்லது அவளது சாவுக்கு காரணமானவன் அந்த பிறவியிலோ அடுத்த பிறவியிலோ வரும்போது பலி வாங்கியாக ஆவி பெண் காட்டப்படுகிறாள்.



 
எதார்த்த உலகில் இல்லாத பலமும் தைரியமும் ஆவி பெண்ணுக்கு எப்படி வருகிறது என்கிற லாஜிக் கோடு உங்களை பார்க்க சொல்லவில்லை அடியேனுக்கு அப்படி பட்ட அறிவுஜீவி வேலை எல்லாம் தேவை இல்லை ஆனால் பெண் என்கிற கதாபாத்திரம் நாள் தோறும் நொடிதோறும் நம்முடனே ஜீவித்து வந்தாலும் அவளது அருமையை பேயாய் வந்து சொல்லும் போதுதான் உணர்ந்து கொள்வோம் என்பது நம்மை செத்தவர்களாகவே காட்டுகிறது.
அறிவால் அல்ல கருத்தால் செத்தவர்களே நாம்.



 
சமூகத்தில் பெண்ணிற்கு கொடுக்கப்படும் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு (எழுத்து பிழை இருக்கான்னு தெரியல்லை) என்கிற நான்கு குணாதியசங்கள் ஆவி பெண் இடம் ஏனோ யாரும் கேட்பதில்லை
அழகான உயரமான நல்ல சிகப்பான பெண் ஆவி என்று யாரும் ஏனோ பேப்பரில் விளம்பரம் எல்லாம் கொடுப்பதில்லை.




 
பெண்ணிடம் இருந்து சகல சத்துக்களையும் எப்படி உரிஞ்சவேணும் என்பதை  ஆண் வர்க்கத்தார் நன்கு தெரிந்து வைத்துள்ளார்கள்.
பெண்ணுக்கு உடல் கூட சொந்தமல்ல சிந்தனையை குறித்து கேட்கவே வேண்டாம்.

தாமே  முதலாளிகளால் அடக்கி ஒடுக்கப்பட்டாலும் வீட்டில் வந்து தாம் தூம்னு ஒரு குதி குதிச்சி  அதற்கு பயந்து பணிவிடை செய்யும் பெண் என்கிற ஜீவன் இருப்பதை உறுதி படுத்து கொண்டு நிம்மதியாக உறங்கி போகிறான் ஆண் .
ஆனால் ஆக பெரிய இரட்டை அடக்குமுறைக்கு உள்ளாகி மேலும் சமூக கருத்தியல் என்கிற தாக்கத்தில் இருந்தும் அதன் சுவாலையில் இருந்தும்
பெண் என்கிற பிறவி தப்பித்து , இந்த சமூகத்தில் ஏதேனும் செய்தே இருக்கிறார்கள் ஒரு சிலர் அவ்வையார், ஒரு கல்பனா தத் (போராளி)
ஒரு அருந்ததி ராய்னு.
இவர்கள் எல்லாம் ஆவியாகி சமூக குற்றங்களை எதித்தவர்கள் இல்லை
நடைமுறை வாழ்க்கையில் சாதாரணமாக இருந்தவர்களே.
ஆண் சம்பந்தபட்ட ஆணால் ஆணுக்காக உருவாக்கபட்ட  உலகமாக இதை உருவாகியதற்கென்று ஒரு வரலாறு உள்ளது.
ஆண்களால் பெண்களின் அதிகாரமும் சமதர்மமும் ஒடுக்கப்பட்டது மதம் என்கிற மாய வலையினால்தான் என்பது என்னமோ பெண்களுக்கு இன்னும் புரியவே இல்லை.
இன்னமும் மண்சோறு சாப்பிட்டு கொண்டும் , தீமித்து கொண்டும் இருக்கும் இந்த பெண்கள் தான் ஏமாற்றபடுகிறோம் சுரண்டபடுகிறோம் என்பதை நன்கு உணர்ந்திருக்கிறார்கள் ஆனால் அவர்களின் ஆவிதான் உணரவில்லை.
பெண்ணின் ஆவிகளுக்கு அச்சர சுத்தமாக வரைவிலக்கணம் எழுத ஏனோ
ஆணாதிக்க சமூகம் முயலவில்லை .

"நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்ன உரைப்பது கேட்டிரோ!"


இப்படி பாரதி பாட்டை யார் கேட்டாங்களோ இல்லையோ 
சினிமா டைரக்டர்களுக்கு கேட்டு 
நிமிர்ந்த நன்னடை கொண்ட ஆவியை படைத்திட்டார்கள்  
இதை பயன்படுத்தி கொண்ட சினிமா காரர்கள் பெண் பலிவாங்க ஏற்படுத்தி தரும் கலம்தான் “ஆவி “ பெண்

ஆவி பெண்ணுக்கு எப்படி இவ்ளோ பலம் வந்தது என்றால் அவளுக்கு முக்கியமா உடல் இல்லை பாருங்கள் அதான்.
ஆவி பெண்ணை இஸ்டத்துக்கு அடித்து நொறுக்க இயலாது.
அவளுக்கு தர்க்க நியாயங்கள் புரியாது.
அவளுக்கு உனது இந்த உலகின் போக்கிரி ஏமாத்து புரிந்து போகிறது.
எடுக்கிறாள் தடியை அடிக்கிறாள் மண்டையை பிளக்கிறாள்.
ஆவி பெண் வாழ்க.

பெண் களை சாமிகளாக வைத்திருந்த வரை அவர்களை அடிமை படுத்தினார்கள் இப்போ பெண்களின் ஆவிகேரக்டருக்கு சுதந்திரம் இருக்கு

//இந்து மதத்தின் கல்வித் தெய்வமும், செல்வத் தெய்வமும் பெண் தெய்வங்களாயிருந்தும் இந்துமதக் கொள்கையின்படி பெண்களுக்கு கல்வியும் சொத்துக்களும் இருக்க இடமில்லையே ஏன்?(கு.3.11.29;8)//-பெரியார்

குறிப்பு :

அரண்மணை 

சந்திரமுகி 

காஞ்சனா -1 , காஞ்சனா-2  பார்க்கவும்



சில பழைய படங்கள் 
யாவரும் நலம்(2009)
பதிமூனாம் நம்பர் வீடு(1990)
மைடியர் லிசா(1987)
ஜென்ம நட்சத்திரம்(1980)
உருவம்(1991)

 முதலாளித்துவ சமூகத்தில் பெண்கள் குறித்து லெனின்:

பெண்களுக்கு முழு சுதந்திரம் வாங்கிக் கொடுக்காத வரையிலும்,பாட்டாளி வர்க்கம் முழு விடுதலையை அடைய முடியாது." - லெனின்

ஒரு முதலாளித்துவ குடியரசில் எவ்வளவு ஜனநாயகம் உள்ள நாடாக இருந்த போதிலும் தனிச் சொத்துரிமை இருக்கின்ற நாடான போதிலும் உலகத்தின் எந்தப் பகுதியிலும் அதிகமான முன்னேற்றம் அடைந்த நாட்டில் கூட பெண்களுக்கு ஆண்களைப் போல் முழு அளவுக்கு சமமான உரிமைகள் இல்லை.

முதலாளித்துவ ஜனநாயகம் என்பது சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் பற்றி அலங்காரமான சொற்றொடர்களும் கம்பீரமான வார்த்தைகளும் மிதமிஞ்சிய வாக்குறுதிகளும் ஆர்பாட்டங்களுமாக ஒலிக்கும் கோஷங்களும் உள்ள ஜனநாயகமாகும். ஆனால் பெண்களின் உண்மை நிலையை அதாவது சமத்துவமும் சுதந்திரமும் இல்லாது இருப்பதை மூடி மறைக்கிறது.

ஆனால் ´சோலிஸ்ட் ஜனநாயகம்´ என்பது புரட்டான பகட்டான போலியான வார்த்தைகளை அலட்சியப்படுத்துகிறது...

ஒடுக்கப்பட்டவர்களுக்கும் ஒடுக்குவோர்களுக்கும் சுரண்டப்படுபவர்களுக்கும் சுரண்டுவோருக்கும் இடையே சமத்துவம் என்பது இல்லை. அப்படி ஏற்படவும் முடியாது.

ஆண்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சட்டப்பூர்வமான தனி உரிமைகளால் பெண்குலம் பாதிக்கப்படும் வரை மூலதனத்திலிருந்து தொழிலாளிக்கு விடுதலை கிடைக்காத வரை முதலாளி நில உரிமையாளர் வணிகர் ஆகியோரின் அதிகாரத்தில் இருந்து உழைக்கும் விவசாயிக்கு விடுதலை கிடைக்காத வரையில் உண்மையான சுதந்திரம் என்பது கிடையவே கிடையாது.

"ஒடுக்கப்பட்ட பெண்ணினத்துக்கு சுதந்திரமும், சமத்துவமும்...."

"தொழிலாளிகளுக்கும், உழைக்கும் விவசாயிகளுக்கும் சுதந்திரமும், சமத்துவமும்..."

"ஒடுக்குபவர்களுக்கு எதிராக, முதலாளிகளுக்கு எதிராக, ஏழை விவசாயிகளைச் சுரண்டும் பணக்கார விவசாய உடைமையாளர்களுக்கு எதிராகப் போராட்டம்..."

இதுவே நமது போர் முழக்கம்! இதுவே நமது பாட்டாளி வர்க்க உண்மை!!.






வாசிக்க பெண்ணுரிமை பற்றி பெரியார்

http://periyaarr.blogspot.in/2006/08/4.html

https://www.marxists.org/archive/lenin/works/1913/apr/27.htm

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post