காக்கா முட்டை படமும் -புரியாத விமர்சனமும்



உதிரி பாட்டாளிகளின் வலி

காக்கா முட்டை என்ற படம் எந்த வர்க்கத்துக்காக எடுக்கப்பட்டது , அந்த வர்க்கத்தின் வரலாற்று பாத்திரம் என்ன? , அந்த வர்க்கத்தின் புரட்சிகர பாத்திரம் என்ன ?, என்பதெல்லாம்  தெரிஞ்சா நீங்க ஒரு வேளை காக்காமுட்டை படத்தை பார்க்காமல் விட கூடும் .



அதெல்லாம் இல்லை ரெண்டு சின்ன பசங்க சேரியில் வாழ்கிறார்கள் அவர்களுக்கு பீட்சா சாப்பிடனும்னு ஆசை; அது கிடைக்கும் போது அப்படி ஒண்ணும் பெரிசா தெரியலை, அவங்களுக்குன்னு பார்த்தால் நீங்கள் படத்தை பார்க்க விரும்ப கூடும் .



ஏழைகள் என்பவர்கள் ஏழையாக பிறந்தவர்கள் அல்ல அவர்கள் ஏழையாக இருக்க காரணம் பெரிய பணக்கார்களே அப்படின்னு பார்த்தால் , ஏழைகள் மீது இரக்கம் வரவைக்கும் கோமாளி படம் மாதிரி தெரிய கூடும்.


காக்கா முட்டை படத்தில் நடித்த பெரிய காக்கா முட்டைக்கு நடிகர் அஜித்தை பார்க்க வேண்டும் போல் ஆசை வந்துடுச்சாம் ஒருவேளை நடிகர் அஜித்தை பார்த்ததும் அஜித்தின் கதியும் பீட்சாவின் கதிதான் ஆகுமோன்னு நினைச்சா ? 



உங்களுக்கு மேலும் படத்தை பார்க்கனும்னு ஆசை தூண்ட படலாம்.
இந்த கதையின் கருவை எங்கிருந்து பெற்றீர்கள் என கேட்டபோது என் மகனுக்கு ஆறு வயது ஆகும்போது பீட்சா கேட்டான் ஒரு வாய் கடிச்சிட்டு சாப்பிட பிடிக்காம, சாப்பிட முடியாமல் விழி பிதுங்கினான். ஆனால் பீட்சாவுக்கு செய்யப்படும் விளம்பரங்களை , குழந்தைகளை கவர உளவியல் ரீதியாக வசியபடுத்தசெய்யப்படும் விளம்பரங்களை பார்த்து திட்டமிட்டு விளம்பரங்களை வடிவமைக்கிறார்கள் இப்படித்தான்சிறுவர்கள் உபயோகிக்கும் எல்லா பொருட்கள் மீதும் விளம்பரம் நடக்கிறது இந்த விளம்பரஅரசியலை வெளி கொண்டுவர இந்த படம் எடுத்தேன் என்கிறார்.

இதை படிக்கும் போது உங்களுக்கு மோடி முதல் ஜாடி வரை அனைத்தும் விளம்பரத்தில் தான் விற்பனையாகிறது என்கிற முதலாளித்துவ சந்தை பொருளாதார உண்மை பளிச்சென புரியலாம். 

அவர் கடித்த ஆப்பிளுக்கு ஆயிரத்து ஐநூறு விலை போனதாம்.
ஒரு நாட்டின் பிரதமர் தனது செயலால் செயல்திட்டங்களால் மனிதர்கள் மனதில் இடம்பிடித்து அதன் பிறகு வரும் மங்காத புகழை அடைவது ஒரு வகை என்றால் .

மங்காத புகழை செயற்கையாக ஏற்படுத்தி அதை விளம்பரபடுத்தி மேலும் மேலும் – அரசியலை வெல்வது இரண்டாம் வகை .
இப்போதெல்லாம் போலிதான் முன்னுக்கு வரமுடியும் ஏன் கலிகாலம் என சொன்னால் நீங்கள் கற்கால மனிதன் இயக்க மறுப்பியல் வாதி.
போலிதான் விளம்பரம் மூலம் நின்று நிலைப்பது தனது விளம்பரத்தின் மூலம்தான் என்பது புது விதி .
யோகாவை இந்தியாவில் காலம் காலமாக செய்துவருகிறார்கள் அதன் மூலம் சில நோய்களுக்கு தீர்வும் மன அமைதியும் கிடைக்கிறது என்பது உண்மையாக இருக்கலாம்.

அதை ஒரு பெரிய இயக்கமாக்கி அதன் ஒளியில் அரசியல் செய்யும் போதுஅதுவும் போலித்தனத்தால் மறைக்கப்படுகிறது என்பது உண்மை.
இங்கே பெட்ரோ மாக்ஸ் லைட்டுகள் வெளிச்சத்தில் தீபந்தங்கள் காணாமல் போவது சமூகத்தின் இயக்கவியல்.
நினைத்தவுடன் அந்த பீட்சா கிடைத்திருந்தால் வாழ்க்கை அலுப்புதட்டி போகும்.நினைத்தெல்லாம் சிலருக்கு கிடைப்பதன் பின்னால் இருக்கும் உற்பத்தி உறவுகள் எந்த வகை என பேசினால் உங்களுக்கும் அலுப்புதட்டி போகும்.
ஒரு வெயில் படத்தில் தோல்வி பெற்ற நாயகனை காட்டுகிறார்கள்.
அங்காடி கடைதெருவில் அங்கே உழைக்கும் தொழிலாளர்களை காட்டுகிறார்கள் என்றால்.
எளியவர்களை தொழிலாளர்களை இப்படி காட்டுவதால் பிரச்சனை தீராது என சொல்வது ஒருவகை .

புரட்சியும் நடத்த முடியாது ஆனால் புரட்சிகாரமாக பேச வேண்டும் என்பது “வரும் ஆனால் வராது” வகைமாதிரி .
ஏன் புரட்சி வராது ? என்பதை கேள்வி கேட்டீர்கள் என்றால்,
 எதிரி இந்தியாவில் இல்லை என்றும் அவன் அமெரிக்காவில் இருக்கிறான் என்றும் சொன்னால் எப்படி புரட்சிவரும் .
இதன் இயக்கவியல்தான் காக்கா முட்டையை நிராகரிக்க சொல்கிறது .
நான் மட்டுமே பாட்டாளிகளின் தோழன் என்னால் மட்டுமே ஏழையை சரியாக புரிந்து கொள்ள முடியும் என சொல்வதும் ஒரு குட்டி பூர்சுவா மனநிலைதான்.
ஏனெனில் பாட்டாளிவர்க்க இலக்கியம் என்பது வர்க்கமற்ற சமூகத்தை காட்டுவதல்ல அந்த சமூகத்தை இப்போது காட்ட முடியாது . வர்க்க அரசியலை பேசுவதுதான் என்கிறார் லெனின்.

நிறைய படங்கள் வியாபார ரீதியாக வெற்றி பெறுவதில்லை ஆனால் வியாபார ரீதியாக வெற்றி பெற்ற படங்கள் வர்க்க குணாம்சம் பெற்று எடுக்கப்படவில்லை என்று சொல்கிறார்கள்.

லெனின் மேலைநாடுகளில் பிரபலாமாகிவரும் இசங்களை அணுகுவதில் தனக்குள்ள தயக்கங்களையும் அச்சங்களையும் லெனின் பதிவு செய்கிறார். ‘ என்னைப் பொறுத்தவரை இத்துறையில் நான் ஒருகாட்டுமிராண்டியேஎன்பதாகத் துணிவுடன் அறிவிக்க விரும்புகிறேன். Expressionism, futurism, cubism  இத்யாதி வாதங்களின் கலைப்படைப்புகளை என்னால் கலைமேதாவிலாசத்தின் தலையாய வெளியீடுகளாகக் கருத முடியவில்லை. என்னால் இவற்றைப் புரிந்துகொள்ள முடியவில்லை.  

எனக்கு இவை இனிமை பயப்பதாயில்லை.’ தன்னுடைய புரிதலின் அடிப்படையில் கீழ்வரும் முடிவுக்கு அவர் வந்து சேர்கிறார். ‘இதில் பெரும் பகுதி வெறும் கபடக் கூத்தும், கலைத் துறையில் மேலைய நாடுகளில் ஆட்சி செலுத்தும் பாணிகளைத் தம்மையும் அறியாமல் வழிபடும் போக்குமேயன்றி வேறில்லை.’

இலக்கியத் தரத்தை உயர்த்துவதைக் காட்டிலும் முக்கியமான வேறொரு காரியம் இருக்கிறது என்றார் லெனின். ‘கலை மேலும் மேலும் மக்களையும், மக்கள் மேலும் மேலும் கலையையும் நெருங்கிவர வேண்டுமாயின், முதலில் நாம் பொதுவான கல்வி, பண்பாட்டு தரங்களை உயர்த்தியாக வேண்டும்.

ஆகவே நமது சினிமாவை மரத்தை சுத்தி ஓடுவதில் இருந்து பிரித்து பீட்சாவுக்கு கொண்டு வருவதை ஒரு சிறிய ஆனால் கொஞ்சம் தைரியமான முன்னேற்றமாக கருதவேண்டும்.

இல்லையா?

கலை என்பதற்கு லெனின் விடை பகர்கிறார்
எனில், கலையெனப்படுவது எது? ‘கலையானது மக்களுக்கு உரியதாகும். உழைப்பாளி மக்கள் திரளிடையே அதன் வேர்கள் ஆழப் பதிந்திருக்கவேண்டும். அது அவர்களுக்குப் புரியக்கூடியதாக இருக்கவேண்டும். அவர்களது நேசத்துக்கு உரியதாக இருக்கவேண்டும். அது அவர்களுடைய உணர்வுகளையும் சிந்தனைகளையும் சித்தத்தையும் ஒன்றிணைத்திட வேண்டும்; உயர்த்திட வேண்டும். அவர்களிடத்தே அது கலை உணர்ச்சியைத் தட்டியெழுப்பிச் செயல்படவைத்து வளர்த்திட வேண்டும்.’

இப்படி பட்ட கலை படைப்புக்கள் இன்னும் பாட்டாளிகளுக்கு நம்மால் உருவாக்க முடியவில்லைதான் .
ஆனால் உதிரி பாட்டாளிகளின் வாழ்க்கையை ரசிக்கதக்கதாக ஒரு கலைப்படைப்பாக கொண்டுவந்து தருபவர்கள் கீழ் காணும் பிரச்சனையை சந்திக்க வேணும்
1.அது பரவலான மக்களால் ரசிக்கப்பட வேண்டும்
2.வியாபாரா ரீதியில் வெற்றி பெற வேண்டும் .
அதற்குள் பெரிய கதாநாயகன் இல்லாமல் வெளி நாட்டு காதல் காட்சிகள் இல்லாமல் 80 லட்சத்தில் படம் எடுத்து 8 கோடி வசூல் ஆக வேண்டும் .
இதெல்லாம் இருக்கும் போது.
ஏழையை நீ அப்படியே வைத்து ரசிக்க கத்து கொடுக்கிறாய் .
நாங்கள் அவர்களை போராட அழைக்கிறோம்
நீ ஏழையை ரசிக்கிறாய் – நாங்கள் ஏழ்மையை வெறுக்கிறோம் என்பது
நமது வேலை அல்ல.
சினிமா அதன் வளர்ந்து வந்த பாதை அது சமூகத்தில் கசடுகளை எப்படி பார்க்கிறது எப்படி வளர்கிறது
ரத்த கண்ணீர் மூலம் கதாநாயகனே வில்லன் பாத்திரம் ஏற்று பேசும் வசனங்கள் புகழ் பெற்றவை
தண்ணீர் தண்ணீர் மூலம் வெளிவந்த வசனங்கள் புகழ் பெற்றவை
எப்போதாவது வானில் சில நட்சத்திரங்கள் தோன்றும் போது வெடித்து கிளம்பும் சந்தோசத்துடன் நாம் அதை காண்கிறோம்
21 நாட்களில் தோல்வி அடைந்த பாரிஸ் கம்யூனின் முதல் புரட்சியை பற்றி மார்க்ஸ் கொண்ட மகிழ்ச்சியை போல
ஆம் , லெனின் சொல்வதை போல ஒரு இலக்கியம் அல்லது சினிமா படைப்பது உடனடியாக முடியாததே .
அதை குறித்து லெனினுக்கும் உடன்பாடான கருத்து இருக்கிறது.
வர்க்கத்தின் கைசரக்கு இல்லாத அல்லது வர்க்கத்தின் நோக்கம் உள்நுழைக்காத ஒரு கலை படைப்பு வெளிவராது
அதைத்தான்

//வாழ்வு பற்றிய மார்க்சியக் கண்ணோட்டத்தின் சாரம் இதுதான். உவமைகள் எல்லாம் ஊனமானவைகளே என்பார்கள். இந்தக் கண்ணோட்டத்தை விளக்கப் பயன்படுத்தப்பட்ட கட்டடம் உதாரணத்தைஅஸ்திவாரம், மேற்கட்டுக்கோப்பு எனும் விவரணத்தைசிலர் இயந்திரகதியில் புரிந்து கொண்டார்கள். அதிகாரத்தின் மீது செல்வாக்கு செலுத்தாத மேற்கட்டுக்கோப்பாகபொருளியல் வாழ்வு மீது இதர காரணிகளுக்கு பங்களிப்பே இல்லை என்பதாகபுரிந்து கொண்டார்கள். இதைத்தான் ஏங்கெல்ஸ் தனது காலத்திலேயே சரி செய்தார். பல காரணிகளுக்கிடையே பரஸ்பர செல்வாக்கு நடக்கிறது. முடிவில் அங்கே பொருளியல் காரணி தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது.

இலக்கியம் பற்றிய மார்க்சியக் கண்ணோட்டம் என்ன
(சினிமாவையும் நாம் சேர்த்து கொள்வோம்)
ஒரு சிந்தனைத்துறை என்ற முறையில் ஒரு காலகட்டத்திய இலக்கியத்தில் அந்தக் காலகட்டத்திய ஆளும் வர்க்கத்தின் சிந்தனையே ஆளுகை செலுத்துகிறது. வாழ்வைப் பிரதிபலிப்பதே, அதைப் போலி செய்து மறுஉருவாக்கம் செய்வதே. அப்படிச் செய்யும் போது படைப்பாளி தனது கைச்சரக்கையும்கற்பிதத்தையும்சேர்ப்பதே இலக்கியம் என்பதால் வர்க்க சமுதாயம் எனும் வாழ்வின் அடிப்படை உண்மை அதிலும் தனது இயங்கு நிலையைத் தக்கவைத்துக் கொள்கிறது.
//

//வாழ்க்கை இன்று எப்படி இருக்கிறது என்பதைச் சித்தரிப்பதோடல்லாமல்  அது எப்படி இருக்க வேண்டும் என்பதையும் தங்களது படைப்புகளில் கோடிட்டுக் காட்டுவதன் மூலமே ஓர் எழுத்தாளர் தனது சமுதாயக் கடமையை முழுமையாகச் செய்ய முடியும் .//

வாழ்க்கை என்பது பீட்சாவை தேடுவதாக இருக்கிறது ஆனால் பீட்சாவென்பது வெறும் குறியீடு ஒரு நுகர்வு பொருள்
அந்த பீட்சா விளம்பரத்தினால் ஜொலிக்கிறது உண்மையில் அதில் சுவை இல்லை,காக்கா முட்டையில்தான் சுவை இருக்கிறது என திரும்பும் இரண்டு காக்க முட்டைகளும் உங்களுக்கு வாழ்வின் எதார்த்தை சொல்லவில்லை என்றால் நீங்கள் இந்த படத்தை பார்க்க வேண்டாம் .



வறுமையை கொண்டாடவோ அல்லது இரக்கத்தோடு நோக்கவோ சொல்லவில்லை மாறாக பெரும் இலக்கிய படைப்பாளிகளுக்கு வறுமைதான் 

ஊக்கம் கொடுத்து இருக்கிறது
// எனது பருவகாலத்தை வறுமைத் தேவன் கபளீகரம் செய்து விட்டான் என்று கார்க்கி அடிக்கடி சொல்வார். என்றாலும் அவர் அதற்காக வேதனைப்படுவதே இல்லை. 24 வயது நிரம்பும் வேளையில், ஆறு மாதங்களுக்கு அதிகமாகவே கார்க்கி மயானத்தில் பிணங்களின் தலைமாட்டில் இருந்து விடியும் வரை 25 ரூபிள் கூலிக்கு பிராத்தனை செய்துள்ளார். இந்தத் தொழிலை கார்க்கி ஆறு மாதங்கள் தான் செய்தார் என்ற போதிலும், அவரின் வாழ்க்கை வஜ்ர உறுதியும் தெம்பும் மிக்கதாக உரம் பெற இது ஒரு காரணமாக இருந்தது. செத்த பிணங்களின் வாடையை ஆறு மாதம் பக்கத்திலிருந்து நுகர்ந்த கார்க்கி, வெளியெ தன்னைச் சுற்றியும் வாழ்ந்த உயிருள்ள மக்கள் மத்தியில் நிலவிய வறுமையால் பெருந்துயரால் ஏற்பட்ட பிணவாடையை நீக்கும் லட்சியத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டார்.1//

எப்போதுமே ஒரு கலைபடைப்பை உதாசீனமாக பேச கூடாது
அதில் செலுத்தப்பட்டுள்ள உழைப்பை மதிக்க கற்று கொள்ள வேண்டும்

//கார்க்கிக்கு புத்தகங்கள் பற்றிய அவரது எண்ண ஓட்டம் இவ்வாறு பிரவாகம் கொண்டிருந்தது.
அச்சு கோர்ப்பவன் என்கின்ற அத்துறையின் உழைப்பு நாயகன் ஒருவனால் பிறிதொரு உழைப்பு நாயகனால் கண்டுபிடிக்கப்பட்ட அச்சு யந்திரத்தின் உதவியுடன், ஒரு அச்சகத்தில் உருவாக்கப்பட்ட ஒரு புதிய புத்தகத்தை நான் கையில் எடுக்கும் போது அது ஒரு மனிதனால் தன்னைப்பற்றியும், உலகிலே எல்லாவற்றையும் விட மிகவும் சிக்கலானதும், மிகவும் மர்மமானதும், மிகவும் நேசிக்க கூடியதுமான ஒன்றினைப் பற்றியும், உலகத்திலேயே அழகும் மேன்மையும் பொருந்திய அனைத்தையும் தன் உழைப்பாலும் கற்பனையாலும் படைத்த ஒன்றினைப் பற்றியும் எழுதப்பட்ட அற்புதமான என்னுடன் பேசும் ஆற்றல் படைத்த ஜீவனுள்ள என்னுடைய ஆன்மாவொடு கலந்துவிட்ட ஒன்றாக நான் உணருகிறேன்.3//

ஆகா இந்தமாதிரி காக்கா முட்டை படங்களை முன்மாதிரியாக கொண்டு அவற்றில் இருந்து கற்று கொண்டுதான் பாட்டாளிவர்க்கத்தின் கதைகளை சிருஸ்டிக்க முடியும் லெனின் சொல்வதை போல
/ சமகாலத்திய பண்பாட்டின் சிறந்த முன்மாதிரிகள் மரபுகள், விளைவுகள் ஆகியவற்றை மார்க்சிய உலக கண்ணோட்டத்தின் வழிநின்று கண்டறிந்த வளர்ச்சி நிலையாகவே புதிய பாட்டாளிவர்க்க கலை அமையுமே தவிர அது புதிய கண்டுபிடிப்பு அல்ல என்பதை பாட்டாளிவர்க்க கலை பற்றிப் பேசுகின்ற நாம் மனதிற் கொள்ள வேண்டும். மனிதவர்கத்தின் வளர்ச்சி பற்றிய துல்லியமான அறிவும் அதனை மாற்றக் கூடிய ஆற்றலும் சாத்தியமானால் தான் பாட்டாளிவர்க்க கலை படைக்க முடியும். இக்கலை வானத்திலிருந்து குறிப்பது அல்ல. பாட்டாளி வர்;க்கக் கால நிபுணர்கள் என அழைத்துக் கொள்பவர்களின் கண்டு பிடிப்பும் அல்ல. அப்படிச் சொல்வதெல்லாம். சுத்த அபத்தம். பாட்டாளிவர்க்க கலை என்பது முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம் அதிகாரத்துவ சமூகம் ஆகியவற்றில் சேகரிக்கப்பட்ட மனித குல அறிவின் தர்க்க ரீதியிலான வளர்ச்சியாகும். 9//

.
மாறாக உதிரி பாட்டாளிகளை கம்பெடுக்க சொன்னால் அவர்கள் அரசியலற்ற மொழியில் துப்பாக்கிகளை வைத்து வரலாற்றை எழுத துணிபவர்களாகவே ஆவார்கள் .

சில தவறான கருதுகோள்களும் முடிவுகளும் (ஒரு இணைய தளம் தன்னை பாட்டாளிகளின் தோழன் என சொல்லி கொண்டு மக்களின் உணர்வு எப்போதெல்லாம் கூர்மை அடைகிறதோ அப்போதெல்லாம் நீர்த்து போக செய்கிறது) சில சாம்பில்

1.மல்டி பிளக்ஸ் தியேட்டரில் பீட்சா சாப்பிட்டு கிட்டே இந்த படம் பார்க்க கூடாது - எதோ சபரிமலைக்கு மாலை போட்டவன் செருப்பு போட்டு நடக்க கூடாது தொணி ஒலிக்குது இந்த விமர்சனத்தில்

2.சின்ன முதலாளிகளை விமர்சிக்க கூடாது (முக்கூர் சுப்ரமணியன் போன்றோர் அம்மாதிரி குட்டி முதலாளிகள் ) அவர்கள் புரட்சியில் இவர்களது பங்காளிகள் என்பது கூடுதல் கவனம் பெற வேண்டிய விசயம்.

3.காமராஜசை ஏற்று கொள்வதும் இவர்களது குட்டி முதலாளித்துவ கூட்டுக்குதான் (தனியானதும் சிறப்பானதும்)

4.ஜெயா அமைச்சரவையில் இருக்கும் மற்ற தமிழர்கள் எப்படி வேண்டுமானாலும் கொள்ளை அடிக்கலாம் ஆனால் ஜெயா (பிராமணர்) என்பதால் கொள்ளையை நாங்கள் வெளிச்சம் போடுவோம் என்பது
அடுத்த திரிபு வேலை

எந்த ஒரு விசயத்திலும் ஆழமாகவும் அகலமாகவும்
திரிபுவாதம் பேசுவது இப்படித்தான் .

ஒரு விமர்சனத்தை ஒருத்தர் எப்படி செய்கிறார் என்பதை பொறுத்தே உலகலாவிய பிரச்சனைகளை அவர் எப்படி அணுகுகிறார் என்பதை அறிந்து கொள்ளலாம்

எந்த கட்டத்திலும் காந்தம் வடக்கை காட்டுவதை போல
எந்த விசயத்திலும் விமர்சணம் செய்வதே இடதுசாரித்தனம் என நினைத்து
எழுதுவதும்

தானே சுயம்புவாக வளர்ந்து தானே எழுதி தானே அதை ரசித்து
மக்களின் மனநிலைக்கு திரம்பட எழுதி இருக்கிறோமா என நினைத்து நினைத்து உருகி உருவாகும் ஒரு வகையான வக்ரமான மனநிலை என்பது

ஆஸ்பத்திரியில் காட்டி சுகப்படுத்த வேண்டிய விசயம் மாறாக அதை தத்துவம் கித்துவம் என்றெல்லாம் சொல்லி மழுப்ப கூடாது

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post