கம்யூனிசம் என்றால் என்ன ? அதை படிக்காத பாமரருக்கும் புரியும் படி எப்படி விளக்குவீர்கள் -4


பொருள் முதல் வாதம்













கண்ணால் காணக்கூடிய இந்த உலகமும் மைக்ரோஸ் கோப்பால் 









காணும் மிக மிக நுண் உலகமும் கூட பொருட்களால் ஆனவை 









முறையே ஒரு அணு முதல் பல் அணு வரை அனைத்தும் 









பொருட்களால் ஆனவை .















பொருட்களும் அவற்றிடையே யான உறவும் அதன் விளைவு









இவற்றை பேசுவது பொருள் முதல் வாதம்











சரி அதென்ன வரலாற்று பொருள்முதல் வாதம் 










அப்போ வரலாற்று கருத்துமுதல் வாதம் இருக்கா 










என்ற கேள்வி வரும் ?














மதம் அதன் கருத்துக்கள் எல்லாமே வரலாற்று கருத்து முதல்வாதம்









தான் . இந்த உலகை கடவுள் ஒரு நாள் உக்கார்ந்து படைத்தார்









அதாவது பொழுது போகாம உக்கார்ந்து இருந்த போது 










ஒரு விளையாட்டுக்காக இந்த உலகம் படைக்கப்பட்டது 









எனவே கடவுளை தினமும் கும்பிடு இல்லாட்டி நீ 










அவ்ளோதான் உனக்கு விமோசனமே கிடையாது 










பிறவி எடுத்து எடுத்து தண்டனை அனுபவிக்க வேண்டியதுதான்









இதை சொல்லவே இராமர் முதல் இயேசு வரை அனைவரும்









இந்த உலகத்துக்கு வந்தாங்கன்னு நீட்டி முழக்கி எழுதப்பட்ட









அனைத்து புத்தகங்களும் பேசுவது கருத்துதான் முதலில் 









தோன்றியது என்கிற வாதமே 


-will continue




எங்கெல்ஸ் கூற்று படி 























“அங்கக இயற்கையின் (organic nature)வளர்ச்சி விதியை டார்வின் கண்டு பிடித்ததைப் போல,

 மனித சமூக வரலாற்றின் வளர்ச்சி விதியை மார்க்ஸ் கண்டுபிடித்தார், மனிதன் அரசியல், 

அறிவியல், கலை, மதம், இதரவற்றில் ஈடுபடும் முன்னர் முதலில் உண்ண உணவையும், 

இருக்க இருப்பிடத்தையும், உடுக்க உடையையும் பெற்றிருக்க வேண்டும் என்னும் 


சாதாரணமான உண்மை இதுவரை சித்தாந்த மிகை வளர்ச்சியினால் மூடி மறைக்கப்பட்டிருந்தது, 














ஆகவே உடனடியான பொருளாதார வாழ்க்கைச் சாதனங்களை உற்பத்தி செய்தல், அதன் காரணமாக 
ஒரு குறிப்பிட்ட மக்களினம் அல்லது குறிப்பிட்ட சகாப்தத்தின் போது அடைந்திருக்கின்ற 

பொருளாதார வளர்ச்சியின் அளவு என்னும் அடிப்படையின் மீது சம்பந்தப்பட்ட 


அரசு நிறுவனங்கள், சட்டவியல் கருத்தாக்கம், கலை மற்றும் மதக் கருத்துக்கள் கூட வளாச்சியடைகின்றன,
 ஆகவே அதன் ஒளியில் அவற்றை விளக்க வேண்டுமே அல்லாது இதுவரை 


செய்யப்பட்டதைப் போல மறுதலையாக விளக்கக் கூடாது.













Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post